2024-25ஆம் ஆண்டிற்கான தூய்மைக் கணக்கெடுப்பு விருதுகள் -குஷ்பு குமாரி

 புதுப்பிக்கப்பட்ட தூய்மைக் கணக்கெடுப்பு 2024-25-ஆம் ஆண்டிற்கான விருதுகளில் நாட்டின் தூய்மையான பெரிய நகரமாக அகமதாபாத் அறிவிக்கப்பட்டது.


தற்போதைய செய்தி:


தூய்மைக் கணக்கெடுப்பு 2024-25-ஆம் ஆண்டிற்கான விருதுகளில் இந்தியாவின் தூய்மையான பெரிய நகரமாக அகமதாபாத் அறிவிக்கப்பட்டது. போபால் இரண்டாவது இடத்தையும், லக்னோ மூன்றாவது இடத்தையும் பிடித்தன. புது டெல்லியில் விஞ்ஞான் பவானில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், 10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்களில் முதலிடம் பிடித்ததற்காக அகமதாபாத்திற்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு விருதை வழங்கினார்.


வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மைக் கணக்கெடுப்பு விருதுகள் 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. இதில் 73 நகரங்கள் மட்டுமே இருந்தன. இந்த ஆண்டு, ஏப்ரல் 2024 முதல் மார்ச் 2025 வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 4,589 நகரங்கள் சேர்க்கப்பட்டன.


முக்கிய அம்சங்கள்:


1. இந்த கணக்கெடுப்பின் நோக்கம், குடிமக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதும், சுத்தமான நகரங்கள் மற்றும் வசிப்பதற்கான நகரங்களை உருவாக்குவதில் ஒன்றிணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவம் குறித்து சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமாகும். இது தூய்மை இந்தியா திட்டத்தின் (நகர்ப்புறம்) வரம்பின் கீழ் நடத்தப்படுகிறது.


2. 9வது தூய்மைக் கணக்கெடுப்பு (Swachh Survekshan (SS)) விருதுகளை குடியரசுத்தலைவர் புதிய வடிவத்தில் அறிவித்தார். இந்தூர் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக தூய்மையான நகரத்திற்கான பட்டத்தை வென்ற நிலையில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் மனோகர் லால் கட்டார் கடந்த ஆண்டு, அடுத்த சுற்று தூய்மை தரவரிசையில் கடந்த காலங்களில் முதலிடத்தில் உள்ள நகரங்களுக்கு தனிப்பிரிவு இருக்கும் என்றும் இதனால் புதிய வெற்றியாளர்களுக்கு போட்டி இருக்கும் என்று தெரிவித்தார்.


3. இதைச் சரிசெய்ய, தூய்மைக் கணக்கெடுப்பின் 9வது பதிப்பு, சிறந்த தூய்மை நகரங்கள் பிரிவு (Super Swachh League) என்ற புதிய வகையை அறிமுகப்படுத்தியது. இந்த சிறப்புக் குழுவில் கடந்த மூன்று ஆண்டுகளில் தூய்மைக்கான முதல் மூன்று இடங்களைப் பிடித்த நகரங்கள் அடங்கும். இது இந்த சிறப்பாகச் செயல்படும் நகரங்களுக்கு அவற்றின் சொந்தப் பிரிவை வழங்குகிறது மற்றும் புதிய நகரங்கள் முக்கிய போட்டியில் வெற்றி பெற இடமளிக்கிறது.


4. இந்தப் புதிய பிரிவில், சிறந்த தூய்மை நகரங்கள் பிரிவு, முந்தைய வெற்றியாளர்களான இந்தூர், சூரத் மற்றும் நவி மும்பை ஆகியவை அடங்கும். கடந்த ஆண்டு, இந்தூர் மற்றும் சூரத் ஆகியவை கூட்டாக தூய்மையான நகரங்களாக அங்கீகரிக்கப்பட்டன. இந்தூர் தொடர்ந்து ஏழாவது முறையாக முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.


5. முதல் முறையாக, நகரங்கள் அவற்றின் மக்கள்தொகை அடிப்படையில் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டன:


(i) மிகச் சிறிய நகரங்கள் என்பது 20,000-க்கும் குறைவான மக்கள் தொகைக் கொண்ட நகரங்களாகும்.


(ii) சிறிய நகரங்கள் என்பது 20,000 முதல் 50,000 மக்கள் தொகைக் கொண்ட நகரங்களாகும்


(iii) நடுத்தர நகரங்கள் என்பது 50,000 முதல் 3 லட்சம் மக்கள் தொகைக் கொண்ட நகரங்களாகும்.


(iv) பெரிய நகரங்கள் என்பது 3 முதல் 10 லட்சம் மக்கள் தொகைக் கொண்ட நகரங்களாகும்.


(v) மில்லியனுக்கும் அதிகமான நகரங்கள் என்பது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகைக் கொண்ட நகரங்களாகும்.


மேலும், குறிகாட்டிகள் எளிமைப்படுத்தப்பட்டு, நகர்ப்புற சுகாதாரம் மற்றும் தூய்மையின் முழு வரம்பையும் உள்ளடக்கிய பத்து விரிவான பிரிவுகளாக கட்டமைக்கப்பட்டுள்ளன. முக்கிய பொது இடங்களில் சுகாதார தரத்தை பராமரிக்க, சுற்றுலா இடங்கள் மற்றும் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.


6. குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி (Reduce, Reuse and Recycle (3R)) என்ற கருப்பொருளுடன், குறைந்தபட்ச வளங்களை பயன்படுத்தி வீணாக்குவதை குறைப்பதிலும், அதே நோக்கத்திற்காக அல்லது பிற நோக்கங்களுக்காக அவற்றை மறுபயன்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. இது இந்த ஆண்டு மார்ச் மாதம் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் 12-வது பிராந்திய 3R மற்றும் சுழற்சி பொருளாதார மன்றத்தில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜெய்ப்பூர் பிரகடனத்துடனும் இது ஒத்துப்போகிறது.


ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் பிராந்திய 3R மற்றும் வட்டப் பொருளாதார மன்றம் என்றால் என்ன?


ஐக்கிய நாடுகள் பிராந்திய வளர்ச்சி மையத்தால் (United Nations Centre for Regional Development (UNCRD)) 2009-ல் தொடங்கப்பட்ட, பிராந்திய 3R மற்றும் சுழற்சி பொருளாதார மன்றம், ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் அரசாங்க அதிகாரிகளுக்கு 3R மற்றும் சுழற்சித்தன்மையை முக்கிய நீரோட்டமாக்குவதற்கு ராஜதந்திர கொள்கை உள்ளீடுகளை வழங்குவதையும், 3R-ல் சிறந்த நடைமுறைகளை பரப்புவதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு மன்றமாக செயல்படுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 12-வது மன்றம் ஜெய்ப்பூரில் 3 மார்ச் 2025 முதல் 5 மார்ச் 2025 வரை ஏற்பாடு செய்யப்பட்டது.


ஜெய்ப்பூர் பிரகடனத்தின் ஒரு பகுதியாக, உலகளாவிய கூட்டணியாக C-3 நகரங்களின் சுழற்சித்தன்மை கூட்டணி (Cities Coalition for Circularity)) என்ற கூட்டு அறிவுத் தளமும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் பிரகடனம் வெவ்வேறு கழிவு ஓட்டங்கள் மற்றும் அவை ஒவ்வொன்றிற்கும் சுழற்சி பொருளாதார இலக்குகளைப் பற்றி பேசுகிறது என்று தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Mission) இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


7. விருதுகள் நான்கு பிரிவுகளில் வழங்கப்பட்டன. சிறந்த தூய்மை நகரங்கள் பிரிவு (Super Swachh League) ஐந்து மக்கள் தொகை பிரிவுகளில் முதல் மூன்று சுத்தமான நகரங்கள், சிறப்பு வகை மற்றும் மாநில அளவிலான விருதுகள் - மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் உறுதியளிக்கும் சுத்தமான நகரம்.


சிறப்பு பிரிவில்:


தூய்மையான கங்கா நகர விருது பிரயாக்ராஜுக்கு வழங்கப்பட்டது.


மிகவும் சுத்தமான ராணுவப் பகுதிக்கான விருது செகந்திராபாத் ராணுவப் பகுதிக்கு வழங்கப்பட்டது.


சஃபைமித்ரா சுரக்ஷித் ஷெஹர் விருதுகள் ஜிவிஎம்சி விசாகப்பட்டினம், ஜபல்பூர் மற்றும் கோரக்பூருக்கு வழங்கப்பட்டன.


2025-ஆம் ஆண்டுக்கான தூய்மை மகா கும்பமேளாவின் சிறப்பு முயற்சியை அங்கீகரிக்கும் வகையில் சிறப்புப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


தூய்மை இந்தியா இயக்கம்


1. கடந்த ஆண்டு, தூய்மை இந்தியா இயக்கம் அக்டோபர் 2 அன்று அதன் 10 ஆண்டுகளை நிறைவு செய்தது. இது பிரதமர் நரேந்திர மோடி 2014-ல் பதவியேற்ற பிறகு அறிவித்த முதல் திட்டங்களில் ஒன்றாகும்.


2. இந்த பணி கிராமங்களுக்கான தூய்மை இந்தியா இயக்கம் (SBM-Gramin) மற்றும் நகரங்களுக்கான தூய்மை இந்தியா இயக்கம் (SBM-Urban) எனப் பிரிக்கப்பட்டு, குடிநீர் மற்றும் சுகாதாரம் அமைச்சகம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அலுவல்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டது. இதனுடன், "இந்த நோக்கத்தை நோக்கி நற்பணி நிதியுதவி மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibility (CSR)) நிதிகளை திட்டமிட்ட வழியில் பெறுவதற்கு ஸ்வச் பாரத் கோஷ் (Swachh Bharat Kosh) நிதியம் என்பதும் தொடங்கப்பட்டது.


3. தூய்மை இந்தியா இயக்கத்தின் முக்கியப் பகுதிகள் தனிநபர் கழிப்பறைகள், சமூக கழிப்பறைகள், திடக்கழிவு மேலாண்மை மற்றும் நடத்தை மாற்றங்களை இலக்காகக் கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரங்களை வழிநடத்துதல் ஆகியவை ஆகும்.


4. அக்டோபர் 2, 2019-க்குள் இந்தியாவை "திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத" (Open defecation-free (ODF)) நாடாக மாற்றுவதே தூய்மை இந்தியா திட்டத்தின் முக்கிய குறிக்கோள் என்றும், இதற்காக கோடிக்கணக்கான வீடுகள் மற்றும் சமூகக் கழிப்பறைகள் கட்டப்பட வேண்டும் என்றும் பிரதமர் அறிவித்தார். அமைச்சகத்தின்படி, "ஒரு நபர்கூட திறந்தவெளியில் மலம் கழிக்கவில்லை என்றால், ஒரு நகரம்/வார்டு வெளிப்புற மலம் கழித்தல் இல்லாத நகரம்/ வெளிப்புற மலம் கழித்தல் இல்லாத வார்டாக அறிவிக்கலாம் என்று கூறியது.


5. 2021-ஆம் ஆண்டில், இந்த பணி ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்த பிறகு, குப்பை இல்லாத நகரங்கள், மலக் கழிவுகள் (fecal sludge), நெகிழிக் கழிவுகள், திறன் மேம்பாடு மற்றும் கழிவுநீர் மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, தூய்மை இந்தியா திட்டம்- நகர்ப்புற 2.0-ஐ அரசாங்கம் தொடங்கியது.


6. திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத (ODF) நிலையை அடைந்த பிறகு, அரசாங்கம் 2020-21 முதல் மத்திய நிதியுதவி திட்டமான தூய்மை இந்தியா திட்டம் - கிராமீனின் இரண்டாம் கட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஜல் சக்தி அமைச்சகத்தின் கூற்றுப்படி, SBM-G கட்டம் II-ன் நோக்கம் "முழுமையான தூய்மையை (Sampoorn Swachhata) அடைதல் என்பது, 2024-25ஆம் ஆண்டுக்குள் திறந்தவெளி கழிப்பைத் தவிர்க்கும் நிலையை (ODF) தக்கவைத்து, திட மற்றும் திரவ கழிவுகளை நிர்வகித்து, எல்லா கிராமங்களையும் ODF நிலையிலிருந்து ODF Plus நிலைக்கு மாற்றுவதை குறிக்கிறது.



Original article:

Share: