இருப்பினும், திருமணமாகாத நபர்கள், இரண்டு அல்லது அதற்கும் குறைவான குழந்தைகளைக் கொண்ட நபர்கள் மற்றும் 55 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கருத்தடை செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை மாநில அரசு வழங்கவில்லை.
இந்தியாவில் பிரபலமற்ற, அவசரநிலையின் (1975-77) மிகவும் கவலைக்குரிய அம்சங்களில் ஒன்று, மக்கள்தொகை கட்டுப்பாட்டை அமல்படுத்த நாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்தடை (sterilisation) இயக்கம் ஆகும். பல மாநிலங்களில், ஆண்கள் குழந்தை பெற்றவர்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் கட்டாயமாக கருத்தடை செய்யப்பட்டதாக புகார்கள் இருந்தன.
தமிழ்நாட்டில் கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை எதுவும் நடக்கவில்லை. இருப்பினும், மாநிலம் தனது இலக்குகளை எட்டுவதில் சிறப்பாக செயல்பட்டது. நாட்டில் அவசரகால மீறல்களை விசாரிக்க மொராஜி தேசாய் அரசால் அமைக்கப்பட்ட ஷா ஆணையம், 1975-76-ஆம் ஆண்டில், தமிழ்நாடு இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட கருத்தடை இலக்குகளை தாண்டியதாகக் குறிப்பிட்டது. 1975-76-ஆம் ஆண்டில் 2,11,300 என்ற இலக்குக்கு எதிராக 2,70,691 ஆண் கருத்தடை அறுவை சிகிச்சைகள் (vasectomy surgeries) செய்யப்பட்டன. 1976-77ஆம் ஆண்டில், ஐந்து லட்சம் என்ற நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 5,69,756 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.
அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஏழு மாதங்களுக்குப் பிறகு, 1976ஆம் ஆண்டு ஜனவரி மு. கருணாநிதி அரசு கலைக்கப்பட்டது.
"1976-77ஆம் ஆண்டிற்கு இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஐந்து லட்சம் இலக்கை மாநில அரசு ஆறு லட்சமாக உயர்த்தியது. மாநிலத்தின் இலக்கு வெவ்வேறு மாவட்டங்களுக்கு இடையே பகிர்ந்தளிக்கப்பட்டது. மேலும், வட்டங்கள், நகராட்சிகள் போன்றவற்றுக்கான இலக்குகளாக பிரிக்கப்பட்டன. குடும்ப நல பணிக்காக மட்டுமே மாநில அரசால் நியமிக்கப்பட்டகளப்பணியாளர்களுக்கு குறிப்பிட்ட மாதாந்திர இலக்குகள் வழங்கப்பட்டன. உதாரணமாக, ஒவ்வொரு தொகுதி விரிவாக்கக் கல்வியாளர் /குடும்ப நல சுகாதார ஆய்வாளருக்கு (Block Extension Educator/Family Welfare Health Inspector) 10 கருத்தடை நபர்கள், ஒவ்வொரு சுகாதார பார்வையாளருக்கு 5 நபர்கள் மற்றும் ஒவ்வொரு துணை செவிலியருக்கும் 1 கருத்தடை நபர் என்ற இலக்கு இருந்தது என்று ஷா ஆணையம் தனது மூன்றாவது மற்றும் இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியது. மாவட்ட ஆட்சியருக்கு மாவட்டத்தில் முழு குடும்ப கட்டுப்பாடு திட்டத்தின் ஒட்டுமொத்த பொறுப்பும் கட்டுப்பாடும் வழங்கப்பட்டது மற்றும் குடும்ப கட்டuப்பாடு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் களப்பணியாளர்கள் மீது நிர்வாக கட்டுப்பாட்டை செலுத்த அதிகாரம் வழங்கப்பட்டது.
ஊக்கமின்மைகள்
அரசு ஊழியர்கள், உள்ளூர் அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்களுக்கான சில தடைகள் செப்டம்பர் 17, 1976 தேதியிட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப கட்டுப்பாடு துறையின் அரசாணை [G.O.] மூலம் அறிமுகப்படுத்தப்பட்டன. உத்தரவில் குறிப்பிடப்பட்ட விதிவிலக்குகளுக்கு உட்பட்டு, இலவச மருத்துவ சிகிச்சை, பெண் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு மற்றும் ஆண் ஊழியர்களின் மனைவிகளுக்கு மகப்பேறு சலுகைகள் போன்ற சலுகைகளை முதல் மூன்று குழந்தைகளுக்கு மட்டுமே வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஆணையம் குறிப்பிட்டது.
இரண்டு அல்லது அதற்கும் குறைவான குழந்தைகளைக் கொண்ட அரசு ஊழியர்கள் அல்லது கருத்தடை செய்யப்பட்டவர்கள் அல்லது அவர்களின் மனைவி கருத்தடை செய்யப்பட்டவர்கள் ஆகியோருக்கு சிறப்பு சலுகைகள் உறுதியளிக்கப்பட்டன. இதில் அரசு வீட்டுக் கடன்கள், வாகனங்கள் வாங்குவதற்கான கடன்கள், வீடு கட்டுவதற்கான நிலம் மற்றும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் வீடுகள் ஒதுக்கீடு செய்தல் போன்றவைகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.
மேலும், அரசுப் பணியில் புதிதாகச் சேருபவர்களிடமிருந்து, ஒரே பாலினத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளையும் கொண்ட அரசு ஊழியர்கள் தவிர, குழந்தைகளின் எண்ணிக்கையை இரண்டாகக் கட்டுப்படுத்துவதாக உறுதிமொழி பெறப்படும் என்றும் இந்த உத்தரவு கருதியது. அந்தச் சூழ்நிலையில், அவர்களுக்கு இன்னும் ஒரு குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. அவர்கள் தங்கள் குடும்ப அளவு குறித்த வருடாந்திர அறிக்கையையும் தங்கள் அலுவலகத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. இருப்பினும், இந்த ஊக்கமின்மைகளில் சில, இருப்பினும், ஏப்ரல் 1977 இல் திரும்பப் பெறப்பட்டன, மற்றவை செப்டம்பர் 1977 இல் திரும்பப் பெறப்பட்டன.
பள்ளி ஆசிரியர்களின் பங்கு
ஆணையம் பொதுமக்களிடையே ஊக்க பணிக்காக பள்ளி ஆசிரியர்களின் சேவைகளைப் பயன்படுத்த முயற்சி செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டியது. 1976ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், கல்வித் துறை பள்ளிக் கல்வி இயக்குநரிடம், ஒவ்வொரு ஆசிரியரும் ஆண்டு முழுவதும் கருத்தடை அறுவை சிகிச்சைக்காக குறைந்தது இரண்டு பேரை அழைத்து வர வேண்டும் என்று கூறியது. யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், ஆசிரியர்கள் இந்தத் திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு இலக்கைத் தாண்டிச் செல்ல முயற்சிக்க வேண்டும் என்று கல்வித் துறை கூறியது.
உத்தரவின்படி, இலக்குகளின் நிறைவேற்றம் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் குணநலன் பதிவேடுகளில் பாராட்டு பதிவுகளுக்கு வழிவகுக்கும். மற்ற வெகுமதிகளில் தகுதிச் சான்றிதழ்கள், ரொக்கப் பரிசுகள், நல்ல வேலைக்கு கூடுதல் சம்பள உயர்வுகள் மற்றும் அதிக கருத்தடை இலக்குகளை எட்ட உதவியர்களுக்கு மாநில அளவிலான விருதுகள் ஆகியவை அடங்கும்.
தண்டனை நடவடிக்கை
அதே நேரத்தில், குடியசுத்தலைவர் ஆட்சியின் போது டிசம்பர் 7, 1976 அன்று மதுரையில் நடைபெற்ற பாராளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில் மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது என்னவென்றால், பஞ்சாயத்து ஒன்றிய ஆணையர்கள் மற்றும் பிறரால் நிர்ணயிக்கப்பட்ட குடும்ப கட்டுப்பாடு இலக்குகளை அடையத் தவறியதற்காக சுகாதாரம் மற்றும் குடும்ப கட்டுப்பாடு ஊழியர்களைத் தவிர மற்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக மொத்தமாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கருத்தடை அறுவை சிகிச்சை தொடர்பான வழக்குகளை கொண்டு வரத் தவறியதற்காக ஆசிரியர்களை இடைநீக்கம் செய்ய / பணிநீக்கம் செய்ய பஞ்சாயத்து ஆணையர்கள் அதிக ஆர்வத்துடன் சுற்றறிக்கைகளை வெளியிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் அப்போது எழுந்தன.
எனவே, சுகாதாரம் மற்றும் குடும்ப கட்டுப்பாடு துறையின் ஆணையர் மற்றும் செயலாளர், டிசம்பர் 8, 1976 அன்று சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்களுக்கு எழுதி, பஞ்சாயத்து ஒன்றிய ஆணையர்கள் மற்றும் பிற நிர்வாக அதிகாரிகளுக்கு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கி, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலக்குகளை நிறைவேற்றாததற்காக ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகக் கூறப்படும் அனைத்து அறிக்கைகளையும் திரும்பப்பெற வேண்டும் என்று உத்தரவிட்டார் என்று ஆணையம் குறிப்பிட்டது. குடும்பக் கட்டுப்பாடு இலக்குகளை (family planning targets) அடையத் தவறியதன் காரணமாக இடைநிறுத்தத்தில் வைக்கப்பட்ட அல்லது சேவையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட நபர்கள் அவர்களின் இடைநிறுத்தம்/பணிநீக்கத்திற்கு முன்னர் பணியாற்றிய பதவிகளில் உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்றும் அவர் விரும்பினார்.
அவசரநிலையின்போது குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை யாரும் தீவிரமாக எதிர்க்கவில்லை என்றும், அதை எதிர்த்ததற்காக உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம் (Maintenance of Internal Security Act (MISA)) இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு விதிகள் (The Defence and Internal Security of India Rules (DISIR)) போன்ற எந்தச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்படவில்லை என்றும் மாநில அரசு தெரிவித்ததாக ஷா ஆணையம் கூறியது.
எனினும், திருமணமாகாத நபர்கள், இரண்டு அல்லது அதற்கும் குறைவான குழந்தைகளைக் கொண்ட நபர்கள் மற்றும் 55 வயதுக்கு மேற்பட்ட நபர்களின் கருத்தடை வழக்குகளின் எண்ணிக்கை குறித்த தகவல்களை மாநில அரசு வழங்கவில்லை. இருப்பினும், அவசரநிலை காலத்தில் கருத்தடைக்குப் பிறகு 90 மரண வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஆணையம் தெரிவித்தது.