இந்த ஆண்டும் பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. ஜூன் 1-ஆம் தேதி வழக்கமான தேதிக்கு 8 நாட்கள் முன்னதாக, மே 24 அன்று பருவமழை கேரளாவை எட்டியது.
ஜூன் 29 அன்று தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் பரவியது. தென்மேற்கு பருவமழை ஜூலை 8-ஆம் தேதி வழக்கமான அட்டவணையைவிட 9 நாட்கள் முன்னதாகவே தொடங்கியது. 1960-ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஜூன் மாதத்தில் பருவமழை தேசிய அளவில் முழுமையாகப் பரவியது இது பத்தாவது முறையாகும்.
பருவமழையின் விரைவான முன்னேற்றத்திற்கு என்ன காரணம்?
இந்த ஆண்டு, பருவமழை தொடக்கமும் முன்னதாகவே தொடங்கியது. பருவமழை மே 24 அன்று கேரளாவை அடைந்தது, வழக்கமான ஜூன் 1 தேதி அட்டவணையை விட எட்டு நாட்கள் முன்னதாக தொடங்கியது. இது மே மாதத்தின் நடுப்பகுதியில் மேடன்-ஜூலியன் அலைவு (Madden-Julian Oscillation (MJO)) செயலில் உள்ள கட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் நடந்தது. MJO என்பது காற்று, மேகம் மற்றும் அழுத்தத்தின் நகரும் அமைப்பு ஆகும். இது பூமத்திய ரேகையைச் சுற்றி வரும்போது மழையைக் கொண்டு வருகிறது.
தொடக்கத்திற்குப் பிறகு, பருவமழை முன்னேற்றம் பெரும்பாலும் தென் தீபகற்பம், கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் அதன் சாதாரண அட்டவணையைவிட முன்னதாகவே இருந்தது மற்றும் வடமேற்குப் பகுதியில் பருவமழை தொடக்கம் இயல்பானதாக இருந்தது. இருப்பினும், மத்திய இந்தியப் பகுதியில் பருவமழை தொடக்கம் சற்று தாமதமானது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, பருவமழையின் விரைவான முன்னேற்றத்திற்கு பின்வருபவை முக்கிய காரணிகளாக இருந்தன:
குறைந்த அழுத்த அமைப்புகள் (LOW PRESSURE SYSTEMS): ஜூன் மாதத்தில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஐந்து குறைந்த காற்றழுத்தப் பகுதிகள் உருவாகின. இந்த அமைப்புகள் சுற்றியுள்ள இடங்களைவிட காற்றழுத்தம் குறைவாக உள்ள பகுதிகளாகும். காற்று அதிக அழுத்தத்திலிருந்து குறைந்த அழுத்தத்திற்கு நகரும் என்பதால், அவை ஈரப்பதமான காற்றை காந்தம் போல உள்ளே இழுக்கின்றன. இது மழை பெய்ய உதவுகிறது மற்றும் பருவமழையை நாட்டிற்குள் மேலும் நகர்த்துகிறது.
மேடன்-ஜூலியன் அலைவின் செயலில் உள்ள கட்டம் (ACTIVE PHASE OF MJO): மே மாதத்தைப் போலவே, ஜூன் மாதமும் MJO-வின் செயலில் உள்ள கட்டத்தைக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில், MJO தென்னிந்தியாவிற்கு அதிக மேகங்களைக் கொண்டுவருகிறது. பின்னர், பருவக்காற்று இந்த மேகங்களை வடக்கு நோக்கி எடுத்துச் சென்று அதிக மழைப்பொழிவை ஏற்படுத்துகிறது.
பருவமழை காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி (MONSOON TROUGH’S POSITION): வடமேற்கு இந்தியாவிலிருந்து வங்காள விரிகுடா வரை நீண்டு காணப்படும் ஒரு நீளமான குறைந்த அழுத்தப் பகுதியே பருவமழை காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஆகும். இதன் நிலை நாட்டின் மீது பருவமழை நிலைமைகளைப் பாதிக்கிறது. ஜூன் மாதத்தில், பருவமழை மிதமான வானிலை பெரும்பாலும் அதன் வழக்கமான நிலைக்கு தெற்கே இருந்தது. இது ஈரப்பதமான காற்றை இழுத்து, நாடு முழுவதும் பருவமழையை வேகமாக பரவ வர உதவியது.
எல் நினோ-தெற்கு அலைவு (El Niño-Southern Oscillation (ENSO)) மற்றும் இந்தியப் பெருங்கடல் துருவம் (Indian Ocean Dipole (IOD)) மற்றும் நடுநிலை கட்டம்: தென்மேற்கு பருவமழை வேறு இரண்டு காரணிகளால் பாதிக்கப்படுகிறது, எல் நினோ-தெற்கு அலைவு மற்றும் இந்தியப் பெருங்கடல் துருவம் ஆகும். ENSO - மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் கடல் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களால் வகைப்படுத்தப்படும் ஒரு காலநிலை நிகழ்வாகும். மேலே உள்ள வளிமண்டலத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுடன் - மூன்று கட்டங்களைக் கொண்டுள்ளது. எல் நினோ, லா நினா மற்றும் நடுநிலை போன்றவை முக்கிய கட்டங்களாகும். எல் நினோ பருவமழையை கட்டுப்படுத்தும் என்றாலும், லா நினா மற்றும் நடுநிலை முறையே வலுவான மற்றும் சாதாரண மழைப்பொழிவுக்கு வழிவகுக்கின்றன. ஜூன் மாதத்தில், ENSO நடுநிலை கட்டத்தில் இருந்தது.
IOD, இது இந்தியப் பெருங்கடலின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கு இடையே கடல் மேற்பரப்பு வெப்பநிலையில் (sea surface temperatures (SSTs)) உள்ள வேறுபாடு, மூன்று கட்டங்களைக் கொண்டுள்ளது. நேர்மறை, எதிர்மறை மற்றும் நடுநிலை ஆகும். நேர்மறை IOD அதிக மழைப்பொழிவுக்கு வழிவகுக்கும் என்றாலும், எதிர்மறை IOD கட்டம் குறைந்த மழைப்பொழிவுக்கு விளைவாகிறது. நடுநிலை IOD குறைந்தபட்ச தாக்கத்தைக் கொண்டுள்ளது. ஜூன் மாதத்தில், IOD நடுநிலை கட்டத்தில் இருந்தது.
ஜூன் மாதத்தில் மழைப்பொழிவு செயல்திறன் எப்படி இருந்தது?
ஜூன் மாதத்தில், இந்திய சராசரி மழைப்பொழிவு 180 மி.மீ. ஆக இருந்தது. இது இயல்பைவிட 9% அதிகமாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு, 2022 முதல் ஜூன் மாதத்தில் காணப்பட்ட குறைந்த மழைப்பொழிவு போக்கு தொடரவில்லை.
மத்திய இந்தியாவில், ஜூன் மாதத்தின் சராசரி மழைப்பொழிவு இயல்பைவிட 24.8% அதிகமாக இருந்தது - இது 2022 ஆண்டிற்குப்பிறகு முதல் முறையாகும். இந்த பகுதி 212.6 மி.மீ. மழைப்பொழிவைப் பெற்றது.
எனினும், கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மழைப்பொழிவு பற்றாக்குறையை எதிர்கொண்டது. அது 272.9 மி.மீ. மழைப்பொழிவைப் பதிவு செய்தது. இது இயல்பை விட 16.9% குறைவான அளவாகும்.
ஜூன் மாதத்திற்கான தீபகற்ப மற்றும் வடமேற்கு இந்தியா பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு எதுவும் காணப்படவில்லை.
மாநில வாரியான மழைப்பொழிவு புள்ளிவிவரங்கள் பரிந்துரைத்தன என்னவென்றால், 2019 மற்றும் 2020ஆண்டிற்குப்பிறகு முதல் முறையாக, மணிப்பூர் (242.7 மி.மீ.) மற்றும் மிசோரம் (466.9 மி.மீ.) முறையே இந்த ஜூன் மாதத்தில் இயல்பான மழைப்பொழிவைப் பதிவு செய்தன. எனினும், அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, சிக்கிம், பீகார், டெல்லி, சத்தீஸ்கர், ஆந்திர பிரதேசம், தெலங்கானா மற்றும் லட்சத்தீவு முழுவதும் சாதாரணத்தைவிட குறைவான மழைப்பொழிவுடன் மாதம் முடிந்தது.
ஜூன் மாதத்தில் 80%-க்கும் மேற்பட்ட வானிலைப் பகுதிகள் இயல்பான மழைப்பொழிவைப் பெற்றன அல்லது இயல்பைவிட அதிக மழைப் பொழிவை பெற்றன. இதில் காரீஃப் பயிர்களை நடவு செய்வதற்கான முக்கியமான பகுதிகளும் அடங்கும்.