பீகாரின் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர மறுஆய்வு குறித்து…

 பிஹாரின் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறுகியகால புலம்பெயர் வாக்காளர்களை விலக்கும் அபாயம் உள்ளது.


பிஹாரில் இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India (ECI)) மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR)) அரசியல் கட்சிகளிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. அது சரியான விமர்சனம் என்றே சொல்ல வேண்டும். இந்த பணியின் மகத்தான அளவு, குறுகிய காலம், மற்றும் சரிபார்ப்புக்கான கடுமையான நிபந்தனைகள் ஆகியவை லட்சக்கணக்கான வாக்காளர்கள் தவறாக விலக்கப்படுவதற்கு வழிவகுக்கலாம். தேர்தல் ஆணையத்தின் விதியின்படி, வாக்காளர் பட்டியலில் வழக்கமான குடியிருப்பாளர்கள் மட்டுமே இருக்க முடியும் என்ற தேர்தல் ஆணையத்தின் விதி பலரை, குறிப்பாக எதிர்க்கட்சிகளை கவலையடையச் செய்துள்ளது. பீகாரின் வாக்காளர்களில் சுமார் 20% பேர் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஜூலை 31 காலக்கெடுவிற்கு முன்பு சரிபார்ப்புக்காக திரும்பி வருவது கடினம் என்று அவர்கள் கூறுகிறார்கள். இது பலரை பட்டியலிலிருந்து நியாயமற்ற முறையில் நீக்க வழிவகுக்கும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1950 (The Representation of the People Act, 1950)-ன்படி "ஒருவர் தனது வீட்டை விட்டு சிறிது காலம் தொலைவில் இருந்தாலும், அவர் அந்த இடத்தின் வழக்கமான குடியிருப்பாளராகவே கருதப்படுவர்" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் பட்டியல்கள் குறித்த கையேடுகளில் (electoral rolls) இப்படிப்பட்ட நபர்கள் திரும்பி வரும் திறனும் எண்ணமும் கொண்டிருக்கும் வரை அவர்கள் வழக்கமான குடிமக்களாகவே கருதப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதன் அர்த்தம், குறுகியகாலத்திற்கு தங்களது வசிப்பிடத்திலிருந்து வெளியே இருக்கும் புலம்பெயர்ந்தவர்களின் (migrants) பெயர்களை நீக்குவதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதாகும்.


நீண்டகால புலம்பெயர்ந்தவர்களுடன் (long-term migrants) பிரச்சனை இன்னும் சிக்கலானதாக மாறுகிறது. பீகாரின் விவகாரத்தில், வாக்களிக்கும் வயதுடைய மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க பகுதி, ஆண்கள், வேலைக்காக புலம்பெயர்கிறார்கள். அந்த மாநிலத்தில் 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் வாக்களிப்பு தகவல்களை பார்க்கும்போது இது தெளிவாக தெரிகிறது. இது ஒரு தனித்துவமான தேர்தல் இயக்கத்தை வெளிப்படுத்துகிறது. பீகார் மாநிலத்தில்  பெண்கள் ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில்  உள்ளனர். ஒவ்வொரு 1,000 ஆண்களுக்கு 1,017.5 பெண்கள் உள்ளனர். பதிவு செய்யப்பட்ட ஆண் வாக்காளர்கள் பட்டியலில் அதிகமாக இருந்த போதிலும் (ஒவ்வொரு 1,000 ஆண்களுக்கு 917.5 பெண்கள் மட்டுமே உள்ளனர்). இந்த வாக்களிப்பு பிரச்சினை ஜார்க்கண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் காணப்பட்டது. ஆனால், பீகாரில் இது அதிகமாக உள்ளது. பீகாரில் வாக்களிக்கப் பதிவு செய்த பல ஆண்கள் தேர்தல் நாளில் வீடு திரும்ப முடியவில்லை. இது ஆண்களுக்கான ஒட்டுமொத்த வாக்குப்பதிவு விகிதத்தை வெகுவாகக் குறைத்தது என்று நம்புவதற்கு ஒரு காரணமாக உள்ளது. இந்த ஆண்கள் பெரும்பாலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிலர் நீண்ட காலமாக வெளியூர் சென்றுவிட்டனர். தேர்தல் ஆணையத்தின் மதிப்பாய்வு வாக்காளர் பட்டியலில் இருந்து யாரை நீக்குவது என்பதை கவனமாக சரிபார்க்க வேண்டும். நிரந்தரமாக புலம்பெயர்ந்தவர்களை மட்டுமே நீக்க வேண்டும். நீண்ட காலமாக புலம் பெயர்ந்தவர்கள் இப்போது அவர்கள் வசிக்கும் மற்றும் வேலை செய்யும் இடத்தில் வாக்களிக்க நடவடிக்கை வேண்டும். பல மாநிலங்களின் பொருளாதாரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். அவர்களின் வாக்குகள், உள்ளூர் தலைவர்களை அவர்கள் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இடங்களில் மட்டுமல்ல, அவர்களின் அன்றாட பிரச்சினைகளுக்குப் பொறுப்பேற்கச் செய்ய உதவும். தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் மதிப்பாய்வு இதை மனதில் கொள்ள வேண்டும். அத்தகைய, செயல்முறை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள ஒரு மாதத்தைவிட அதிக நேரம் எடுக்க வேண்டும்.



Original article:

Share: