முக்கிய அம்சங்கள்:
• தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) மூத்த உறுப்பினர்கள், கடந்த ஆண்டு அங்கு நடந்த பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு புதிய அரசியல் கூட்டணி உருவானதைத் தொடர்ந்து, முக்கிய மூல நாடான தென்னாப்பிரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் மந்தமாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
• அதே நேரத்தில், போட்ஸ்வானா நான்கு சிறுத்தைகளை அனுப்ப முறையாக உறுதியளித்துள்ளது. மேலும், காலவரையறையை முடிவு செய்ய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. கென்யாவில், பேச்சுவார்த்தைகள் பொதுவான நிலையில் உள்ளன. உடனடி இடமாற்றத்தைவிட (mmediate translocation) நீண்டகால ஒத்துழைப்பை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றன.
• நாட்டின் லட்சிய இடமாற்றத் திட்டங்களின் ஒரு பகுதியாக ஏற்கனவே 20 சிறுத்தைகள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றில், 8 சிறுத்தைகள் 2022-ல் நமீபியாவிலிருந்தும், 12 சிறுத்தைகள் 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவிலிருந்தும் கொண்டு வரப்பட்டன. அவை அனைத்தும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன.
• இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், மத்தியப் பிரதேச அரசு போட்ஸ்வானாவிலிருந்து 8 புதிய சிறுத்தைகள் கொண்டு வரப்படும் என்றும், முதல் நான்கு மே மாதத்திற்குள் வரும் என்றும் அறிவித்தது. அது இன்னும் நடக்கவில்லை.
• தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) மூத்த அதிகாரி ஒருவர், இந்தத் திட்டத்திற்கான விவரங்களைத் திட்டமிட்டு வருவதாகவும், பொருத்தமான தேதிகளை நிர்ணயிக்க உயர் தூதரகம் மூலம் மற்ற நாட்டோடு தொடர்பில் இருப்பதாகவும் கூறினார். சம்பந்தப்பட்ட, ஒன்றிய அமைச்சர் மற்ற நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துவதில் பணியாற்றி வருகிறார்.
• சிறுத்தைப்புலி திட்ட வழிகாட்டுதல் குழுவின் கூட்ட பதிவுகள், டிசம்பர் 13, 2023-க்குள், கென்யா, தான்சானியா, சூடான் மற்றும் பிற நாடுகளிலிருந்து அதிகமான சிறுத்தைகளை கொண்டு வருவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகக் காட்டுகின்றன. இருப்பினும், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், தற்போது சூடான் அல்லது தான்சானியாவுடன் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
• 2023-ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவிலிருந்து 12 சிறுத்தைகள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டன. மேலும், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நிபுணர்கள் இந்தியாவின் சிறுத்தை திட்டத்திற்கு உதவி வருகின்றனர். ஆனால், தென்னாப்பிரிக்க அரசாங்கத்தில் சமீபத்திய மாற்றங்கள் அதிக சிறுத்தைகளைக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளன.
• 2022-ஆம் ஆண்டில் நமீபியாவிலிருந்து 8 சிறுத்தைகளையும், தென்னாப்பிரிக்காவிலிருந்து 12 சிறுத்தைகளையும் குனோ தேசிய பூங்காவிற்கு இடமாற்றம் செய்வதன் மூலம் சிறுத்தைப்புலித் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த சிறுத்தைகளில் 8 மற்றும் குனோவில் பிறந்த 5 குட்டிகள் இறந்ததன் மூலம் இந்தத் திட்டம் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது.
• இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கும் கண்காணிப்பதற்கும், ஆலோசனை அமைப்பாகவும் செயல்படுவதற்காக தேசிய புலி பாதுகாப்பு ஆணையத்தால் மே 2023-ல் சிறுத்தைப்புலி திட்ட வழிகாட்டுதல் (Project Steering Committee) குழு அமைக்கப்பட்டது.
• சிறுத்தைகள் மிகப் பழமையான பெரிய பூனை இனங்களில் ஒன்றாகும். அவற்றின் மூதாதையர்கள் சுமார் 8.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தனர். அவை "பாதிக்கப்படக்கூடியவை" (vulnerable) என்று பட்டியலிடப்பட்டுள்ளன. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றிய (International Union for Conservation of Nature (IUCN)) சிவப்புப் பட்டியலின்படி அவை அழிந்து போகும் அபாயத்தில் உள்ளன. ஆசிய சிறுத்தை மற்றும் வடமேற்கு ஆப்பிரிக்க சிறுத்தை என இரண்டு வகையான சிறுத்தைகள் உள்ளன. மேலும், அவை ‘மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன’’ (critically endangered) என்று பட்டியலிடப்பட்டுள்ளன.