முக்கிய அம்சங்கள்:
பல முன்மொழிவுகள் பரிசீலனையில் உள்ளன. அவற்றில் 12 சதவீத வரி வரம்பை (slab) நீக்கும் முன்மொழிவு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இதில் சில பொருட்களை குறைந்த 5 சதவீத வரி வரம்பிற்கும், சில பொருட்களை அதிக 18 சதவீத வரி வரம்பிற்கும் மாற்றுவது அடங்கும். இது பல விகித கட்டமைப்பை எளிமையாக்கும் என்றாலும், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஒருங்கிணைத்து ரூ.70,000-80,000 கோடி குறிப்பிடத்தக்க வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று உயர்மட்ட வட்டாரங்கள்தெரிவித்தன.
சரக்கு மற்றும் சேவை வரி கட்டமைப்பில் இப்போது ஏதேனும் மாற்றங்கள், குறிப்பாக எட்டு ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அது நிலைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எளிதானதாக இருக்கப்போவதில்லை. பல காரணிகள் பரிசீலனையில் இருக்கும் மற்றும் வருவாய் இழப்பு ஒரு பெரிய காரணியாகும். எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும் சரி, எந்த மாநிலமும் இந்த திட்டங்களை எளிதில் ஏற்றுக்கொள்ளாது. எனவே, உள்துறை அமைச்சர் முன்னதாகவே மாநிலங்களுடன் கலந்துரையாடல்களை நடத்த திட்டமிட்டுள்ளார் என்று குறிப்பிட்ட நபர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம் தெரிவித்தார்.
உள்துறை அமைச்சர் ஏற்கனவே கடந்த வாரம் நிதி அமைச்சக அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
உங்களுக்குத் தெரியுமா?:
சரக்கு மற்றும் சேவை வரி இந்தியாவின் மிகப்பெரிய மறைமுக வரி சீர்திருத்தமாகும். இது ஜூலை 2017இல் தொடங்கியது. இதில பல வரி விகிதங்கள் உள்ளன. அவை 0%, 5%, 12%, 18%, 28% என்ற விகிதங்களில் உள்ளது. மேலும், ஆடம்பர மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கான கூடுதல் வரிகள் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கான சிறப்பு விகிதங்கள் இதில் அடங்கும்.
பாஜக மற்றும் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் உட்பட பல மாநிலங்கள் இந்த பல விகிதங்களில் மகிழ்ச்சியடையவில்லை. தினசரி பயன்பாட்டு பொருட்களுக்கான விகிதங்களை எளிதாக்கவோ அல்லது குறைக்கவோ முயற்சிகள் ஜிஎஸ்டி கவுன்சிலில் தெரிவிக்கப்பட்டன. ஜிஎஸ்டி கவுன்சிலில் மத்திய மற்றும் மாநில உறுப்பினர்கள் உள்ளனர்.
ஜிஎஸ்டி விகிதங்களை நிர்ணயிப்பது குறித்த பேச்சுக்கள் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகின்றன. செப்டம்பர் 2021இல், லக்னோவில் நடந்த 45வது கூட்டத்தில், ஜிஎஸ்டி கவுன்சில் விகிதங்களை எளிதாக்குவது மற்றும் தலைகீழ் வரி அமைப்பு (inverted duty structure) போன்ற சிக்கல்களை சரிசெய்வது பற்றி பேசியது. இது சர்ச்சைகளைக் குறைக்கவும் ஜிஎஸ்டி வருமானத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. ஜனவரி 2022ஆம் ஆண்டு முதல் ஜவுளி மற்றும் காலணி போன்ற துறைகளுக்கான சில விகிதங்களை அவர்கள் மாற்றியுள்ளனர்.
2023-24ஆம் ஆண்டுக்கான தரவு, ஜிஎஸ்டி வருமானத்தில் 70-75% 18% விகிதத்திலிருந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது. 12% விகிதம் வருமானத்தில் 5-6% ஐ வழங்குகிறது. 5% விகிதம் 6-8% ஐ வழங்குகிறது, மேலும், 28% விகிதம் 13-15% ஐ வழங்குகிறது.
டிசம்பர் 2024இல் ஜெய்சால்மரில் நடந்த 55வது கூட்டத்தில், கவுன்சில் சில பொருட்களின் விகிதங்களைக் குறைப்பது பற்றிப் பேசியது. ஆனால் சுகாதாரம் மற்றும் ஆயுள் காப்பீட்டு கட்டணங்களுக்கான வரி விகிதங்களைக் குறைப்பதற்கான முக்கிய முடிவை அவர்கள் ஒத்திவைத்தனர்.
148 பொருட்களின் விகிதங்களில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு (GoM) கூடுதல் நேரம் கேட்டது. இது அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.