முக்கிய அம்சங்கள் :
பாலகிருஷ்ணனுடனான சந்திப்பிற்குப் பிறகு, இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் "இதயத்தில்" சிங்கப்பூர் இருப்பதாக ஜெய்சங்கர் கூறினார். சிங்கப்பூரில் இருந்து, சீனாவுக்கு அவர் பயணம் மேற்கொள்கிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் போது இந்தியா-சிங்கப்பூர் உறவுகள் (India-Singapore relations) ஒரு விரிவான இராஜதந்திர கூட்டுறவாக (strategic partnership) உயர்த்தப்பட்டது. "உலகம் தவிர்க்கமுடியாமல் பன்முகத்தன்மைக்கு மாறும்போது, இதுபோன்ற வாய்ப்புகளின், முக்கிய துருவங்களில் ஒன்றாக இந்தியா பங்கு வகிக்கும்" என்று பாலகிருஷ்ணன் ஒரு சமூக ஊடகப்பதிவில் கூறினார்.
இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்டமேசையின் மூன்றாவது கூட்டத்தை விரைவில் புதுதில்லியில்(இந்தியா) நடத்த இரு தரப்பினரும் முடிவு செய்தனர். பிரதமர் மோடியின் வருகைக்குப் பிறகு ஏற்பட்ட முன்னேற்றத்தின் மதிப்பாய்வு மற்றும் இரண்டாவது இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்டமேசையின் விளைவுகள் பற்றி மதிப்பாய்வு செய்ததாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மோடியின் வருகையின் போது இந்தியா-சிங்கப்பூர் உறவுகளின் கவனம் மற்றும் அமைச்சர்களின் வட்டமேசை அமர்வில் முதலீடுகள், தொழில் பூங்காக்கள், குறைக்கடத்திகள், உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு மற்றும் இணைப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதாகும்.
உங்களுக்குத் தெரியுமா? :
சிங்கப்பூரின் நான்காவது பெரிய சுற்றுலாத்தலமாக இந்தியா உருவெடுத்துள்ளது. இது, 2006இல் 6,50,000க்கும் அதிகமான இந்தியர்கள் சிங்கப்பூருக்குச் சென்றுள்ளனர். இந்தியாவும் சிங்கப்பூரும் பல துறைகளில் இணைந்து செயல்படுகின்றன. இவற்றில் விமானப் போக்குவரத்து, விண்வெளி பொறியியல், விண்வெளித் திட்டங்கள், தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் ஆற்றல் ஆகியவை அடங்கும்.
சிங்கப்பூர் ஒரு வலுவான குறைக்கடத்தித் தொழிலைக் கொண்டுள்ளது. சிங்கப்பூர் இந்தத் துறையில் ஆரம்பத்தில் தொடங்கியதே இந்த வெற்றிக்குக் காரணம் ஆகும். மேலும், இது அதன் முதல் பிரதமர் லீ குவான் யூவின் தொலைநோக்குப் பார்வையாலும் நிகழ்ந்தது.
1980ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், எலக்ட்ரானிக்ஸ் துறையானது சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7% மற்றும் அதன் உற்பத்தி வேலைகளில் கால் பங்காக ஏற்கனவே இருந்தது, மில்லர் குறிப்பிடுகிறார்.
இன்று, சிங்கப்பூர் உலகின் குறைக்கடத்திகளில் சுமார் 10% உற்பத்தி செய்கிறது. சிலிக்கான் வேஃபர்களை (silicon wafer) உருவாக்கும் உலகளாவிய திறனில் 5% ஐயும் கொண்டுள்ளது. (சிலிக்கான் வேஃபர் என்பது மிகவும் தூய சிலிக்கானின் ஒரு வட்டத் துண்டு, பொதுவாக 8 முதல் 12 அங்குல அகலம் கொண்டது, சிப்புகள் (chips) தயாரிக்கப் பயன்படுகிறது). சிங்கப்பூர் உலகின் குறைக்கடத்தி உபகரணங்களில் 20% உற்பத்தி செய்கிறது.
உலகின் தலைசிறந்த 15 குறைகடத்தி நிறுவனங்களில் ஒன்பது நிறுவனங்கள் சிங்கப்பூரில் அலுவலகங்களை அமைத்துள்ளன. மேலும், குறைக்கடத்தி துறை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.
குறைக்கடத்தி மதிப்புச் சங்கிலியின் அனைத்துப் பகுதிகளிலும் சிங்கப்பூர் ஈடுபட்டுள்ள நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இந்த பாகங்களில் ஒருங்கிணைந்த சுற்று (integrated circuit (IC)) வடிவமைப்பு, அசெம்பிளி, பேக்கேஜிங் மற்றும் சோதனை ஆகியவை அடங்கும். அவை வேஃபர் உற்பத்தி மற்றும் உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்களின் உற்பத்தியிலும் செயல்படுகின்றன.
விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Comprehensive Economic Cooperation Agreement (CECA)) என்பது சிங்கப்பூருக்கும், இந்தியாவிற்கும் இடையிலான ஒரு தடையில்லா வர்த்தக ஒப்பந்தமாகும். இது ஜூன் 29, 2005 அன்று கையெழுத்தானது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரிப்பதே இதன் முக்கிய குறிக்கோளாகும்.
CECA பல துறைகளிலும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது. இதில் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அறிவுசார் சொத்து, விமான போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆகியவை அடங்கும்.
சிங்கப்பூர் இந்தியா தனது உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவியுள்ளது. துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை மேம்படுத்துதல் போன்ற திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. சிங்கப்பூர் இந்தியாவில் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலத்தையும் (Special Economic Zone (SEZ)) அமைத்துள்ளது.