உலக இளைஞர் திறன் தினம் (World Youth Skills Day), ஜூலை 15, இந்தியாவின் பெண்களுக்கான அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மற்றும் கணிதம் (Science, technology, engineering, and mathematics (STEM)) தொழில்களில் முதலீடு செய்யாததால் தொழில்துறை இழப்பைச் சந்திக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15, 2025 அன்று, நாம் உலக இளைஞர் திறன் தினத்தை அனுசரிக்கும்போது, வேலையின்மையை குறைக்கவும் கண்ணியமான வேலையை ஊக்குவிக்கவும் திறன் மேம்பாடு அடிப்படையானது என்பதை நினைவூட்டுகிறது. இந்தியா ஒரு முக்கியமான முரண்பாட்டை எதிர்கொள்கிறது. இந்தியாவின் STEM பட்டதாரிகளில் 43% பெண்கள் ஆவார். இது உலகளவில் முக்கிய பொருளாதாரங்களில் மிக உயர்ந்த விகிதம் ஆகும். ஆனால், STEM வேலைகளில் 27% மட்டுமே பெண்களால் நடத்தப்படுகின்றன. பல பெண்கள் இந்தத் துறையில் தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்கள்.
கால இடைவெளி தொழிலாளர் நலன் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey (PLFS)) 2023-24இன் படி, இந்தியாவின் ஒட்டுமொத்த பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (labour force participation rate (FLFPR)) 41.7% ஆக உயர்ந்துள்ளது. பல ஆண்டுகளாக தேக்கத்திற்குப் பிறகு இது அர்த்தமுள்பயனுள்ள முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், நகர்ப்புறங்களில் (25.4%) விட கிராமப்புற பெண்களுக்கு (47.6%) அதிகரிப்பு அதிகமாக உள்ளது. இது முறையான வேலைவாய்ப்பு, பணியிட பாதுகாப்பு மற்றும் சமூக எதிர்பார்ப்புகளின் தடைகளை பிரதிபலிக்கிறது. STEMஇல், இந்த முரண்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. யுனெஸ்கோ புள்ளியியல் நிறுவனத்தின் (2021) கூற்றுப்படி, உலகளவில் ஆராய்ச்சியாளர்களில் 31.5% மட்டுமே பெண்கள் உள்ளனர். இந்த கல்வி-வேலைவாய்ப்பு இடைவெளி, தொழில்துறை தனித்துவமாக நிவர்த்தி செய்ய நிலைநிறுத்தப்பட்ட முறையான தடைகளை பிரதிபலிக்கிறது. பொருளாதார பங்குகள் தெளிவாக உள்ளன. மெக்கின்சி குளோபல் இன்ஸ்டிடியூட்டின் மதிப்பீடுகளின்படி, இந்தியாவின் பணியாளர்களில் 68 மில்லியன் பெண்கள் பங்கேற்க அனுமதிப்பது 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை $700 பில்லியன்களாக உயர்த்தக்கூடும். இதேபோல், 50% பெண் பணியாளர் பங்கேற்பு விகிதத்தை அடைவது மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 1% உயர்த்தக்கூடும் என்று உலக வங்கி அறிவுறுத்துகிறது.
அரசாங்க பார்வை மற்றும் STEM திறன் மேம்பாடு
புதிய கல்வி கொள்கை (New Education Policy (NEP)) 2020இன் படி STEM துறைகளில் அதிக வாய்ப்புகளைப் பெற உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது முக்கிய கல்வி அமைச்சகம் (Ministry of Education (MoE)) கல்வியை திறன் மேம்பாடு மற்றும் வாழ்க்கை திறன் பயிற்சியுடன் இணைத்துள்ளது. அரசாங்கம் தொழில்துறை பயிற்சி நிறுவனங்களை (Industrial Training Institutes (ITIs)) மேம்படுத்தி, திறன் பயிற்சியை விரிவுபடுத்தி, கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் நல்ல தொழில்நுட்பக் கல்வி கிடைக்கச் செய்து, கிராமப்புற இந்தியாவில் அதிகமான இளைஞர்கள் அதை அணுகும் வகையில் உறுதி செய்கிறது.
இந்த முன்னேற்றம் பிரதமரின் வளர்ந்த இந்தியா (Viksit Bharat) பார்வையுடன் ஒத்துப்போகிறது. இதில் பெண்களின் பொருளாதார இயக்கம் உள்ளடக்கிய மேம்பாட்டின் மூலக்கல்லாக அமைகிறது. மொத்த தேசிய வரவு செலவுத் திட்டத்தில் பாலின வரவு செலவுத் திட்டத்தின் பங்கு 2024-25இல் 6.8%-இலிருந்து 2025-26இல் 8.8%-ஆக அதிகரித்துள்ளது. பாலின-குறிப்பிட்ட திட்டங்களுக்கு ரூ.4.49 லட்சம் கோடி ஒதுக்கீடு உள்ளது.
மேலும், ஒன்றிய அரசின் வரவு செலவுத் திட்டத்தில் 2025-26 பெண் தொழில்முனைவோர்களுக்கான கால கடன்கள், புதிய தேசிய திறன் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப-உந்துதல் திறன் மேம்பாட்டில் முதலீடுகளை அறிமுகப்படுத்தியது. டிஜிட்டல் இந்தியா முதல் திறன் இந்தியா வரை, மற்றும் பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் (Beti Bachao, Beti Padhao) முதல் பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா (PM Vishwakarma Yojana) போன்ற பல நல்ல திட்டங்கள் உள்ளன. இருப்பினும், அரசாங்கக் கொள்கையால் மட்டுமே கல்வி-வேலைவாய்ப்பு இடைவெளியைக் குறைக்க முடியாது. பெண்கள் சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெற நிறுவனங்கள் செயலில் உள்ள உதவியாளராக மாற வேண்டும்.
காணாமல் போன இணைப்பாக தொழில்துறை
பெண்கள் திறன்களைக் கற்றுக்கொள்வதிலிருந்து வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் தொழில்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் "இயந்திர வேலை ஆண்களுக்கானது" அல்லது "பெண்களால் செய்ய முடியாது" போன்ற சமூக நம்பிக்கைகள் தொழில்நுட்பத் துறைகளில் பெண்களுக்கு இன்னும் கண்ணுக்குத் தெரியாத தடைகளை உருவாக்குகின்றன. உலக வங்கி மற்றும் யுனெஸ்கோவின் ஆய்வுகள், இந்த கருத்துக்கள் பல பெண்கள் STEM தொழில்களில் சேருவதையோ அல்லது தங்குவதையோ தடுக்கின்றன என்பதைக் காட்டுகின்றன. பணியிடங்கள் பெரும்பாலும் நட்பற்றவை, குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்புகள் பற்றித் தெரியாது, வேலைகள் இன்னும் பாலின ரீதியாகக் காணப்படுகின்றன என்பதாலும் அவர்கள் வெளியேறுகிறார்கள். STEMஇல் அதிகமான பெண்களை வைத்திருக்க, நாம் இந்த யோசனைகளை மாற்ற வேண்டும், பணியிடங்களை பாதுகாப்பாக மாற்ற வேண்டும், நியாயமான ஊதியம் வழங்க வேண்டும், மேலும் திருமணம் மற்றும் மகப்பேறு பராமரிப்பு காரணமாக ஏற்படும் வேலை மாற்றங்களை நிர்வகிக்க பெண்களுக்கு உதவ வேண்டும்.
இந்தியாவின் தனியார் துறை படிப்படியாக முன்னேறுகிறது. பல நிறுவனங்கள் கட்டமைக்கப்பட்ட வழிகாட்டுதல் திட்டங்கள், தொழில்துறை-இணைந்த பயிற்சி முயற்சிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுடனான கூட்டாண்மைகள் மூலம் வகுப்பறைகளிலிருந்து தொழில்களுக்கு நேரடி பாதைகளை உருவாக்க முன்னிலையில் நிற்கின்றன. அத்தகைய ஒரு முயற்சி UN Womenஇன் WeSTEM திட்டம் ஆகும். இது மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் அரசாங்கங்களுடன் ஒத்துழைப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டு, Micron Foundationஇன் ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் திறன்களுக்கான அணுகலை வழங்குகிறது மற்றும் திறமை இடைவெளியை குறைக்கிறது. குடும்பங்கள் மற்றும் சமூக தலைவர்களை ஈடுபடுத்துவதன் மூலமும், பணியிட பாதுகாப்பு அமர்வுகளை நடத்துவதன் மூலமும் மற்றும் வகுப்பறைகளில் பெண் முன்மாதிரிகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும், திறன் மேம்பாடு திறம்பட செயல்பட மனநிலையில் மாற்றம் தேவை என்பதை இந்தத் திட்டம் அங்கீகரிக்கிறது.
தொழில்துறை தலைமைத்துவத்திற்கான வரைபடம்
கல்வி நிறுவனங்களுடன் தொழில்துறை கூட்டாண்மைகள், மாணவர்களுடன் தொழில் வல்லுநர்களை இணைக்கும் வழிகாட்டுதல் வலையமைப்புகள் மற்றும் வாழ்க்கை மாற்றங்களுக்கு இடமளிக்கும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும். பணியிட கொள்கைகள், கல்வி-வேலைவாய்ப்பு இடைவெளியைக் குறைக்கும். பெண்களின் STEM தொழில்களில் முதலீடு செய்ய இந்தியாவால் முடியுமா என்பது கேள்வி அல்ல. தொழில்துறையால் முடியாது என்பதுதான் முக்கியமான கேள்வியாக உள்ளது. STEM வேலைகளுக்குத் தேவையான திறன்களை பெண்கள் மற்றும் இளம்பெண்களுக்கு வழங்குவது ஒரு வலுவான மற்றும் நியாயமான சமூகத்தை உருவாக்க உதவுகிறது. ஒரு பெண் வருவாய் ஈட்டும் போது, அவருடைய செல்வாக்கு அவருடைய குடும்பம், பணியிடம், அரசாங்க முடிவுகள் மற்றும் முழுத் தொழில்களுக்கும் பரவுகிறது. அவளுடைய குரல் இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கிறது.
கான்தா சிங், ஐ.நா. பெண்கள் இந்தியாவின் பிரதிநிதியாகவும், இந்தியாவில் உள்ள Team UN-இன் ஒரு பகுதியாகவும் உள்ளார். அந்தாரா லஹிரி, மைக்ரான் அறக்கட்டளையின் ஆசியா மற்றும் ஐரோப்பாவின் இயக்குநராக உள்ளார்.