இருப்பினும், இந்தியாவின் தொழிலாளர் சந்தைகளில் உள்ள பிரச்சினைகளுக்கு ஆழமான மற்றும் தொலைநோக்குப் பார்வைகொண்ட கொள்கை மாற்றங்கள் தேவைப்படுகின்றன.
ஒவ்வொரு வருடமும், பல லட்சம் பேர் குடிமைப் பணி முதல் நிலை தேர்விற்கு தயாராகுகிறார்கள். எடுத்துக்காட்டாக, 2024-ல், ஜூன் 16ஆம் தேதி நடைபெற்ற தேர்விற்கு 9.9 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களில், 5.8 லட்சம் பேர் தேர்வில் தேர்ச்சியடைந்தனர். இருப்பினும், தேர்வெழுதிய அனைவரிலும், 14,627 விண்ணப்பதாரர்கள் மட்டுமே எழுத்துத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். அதில் 1,009 பேர் மட்டுமே ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் பணிகளுக்கு நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டனர். ஒவ்வொரு வருடமும் பட்டியலில் இடம் பெறாத லட்சக்கணக்கானவர்கள் மற்றொரு முயற்சியை தேர்ந்தெடுக்கிறார்கள் — விண்ணப்பதாரர்களுக்கு ஆறு முயற்சிகள் உள்ளன — அவர்கள் பெரும்பாலும் தாமதமாக தங்கள் தொழில் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். வேலைச் சந்தையில் தாமதமான நுழைவு பல சவால்களை முன்வைக்கிறது. சில விண்ணப்பதாரர்கள் இளையவர்களிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்கின்றனர். மேலும், குறைந்த பணி அனுபவம் அவர்களுக்கு விஷயங்களை கடினமாக்குகிறது. இதன் விளைவாக, பலர் தங்கள் தகுதிகளுடன் பொருந்தாத அல்லது தகுதி குறைந்த பணிகளுக்கு செல்கிறார்கள். இது அவர்களின் வாழ்நாள் வருவாயைப் பாதிக்கிறது. இப்போது, தோல்வியுற்ற விண்ணப்பதாரர்கள் நல்ல வேலை வாய்ப்புகளைக் கண்டறிய உதவும் ஒரு புதிய திட்டத்தை UPSC தொடங்கியுள்ளது.
பிரதிபா சேது என்ற புதிய பொது வெளிப்படுத்தல் திட்டத்தின் (Public Disclosure Scheme) கீழ், எழுத்துத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று நேர்காணலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்படாத விண்ணப்பதாரர்களின் விவரங்களை UPSC இப்போது பகிர்ந்து கொள்கிறது. இது இந்திய வன சேவை, இந்திய பொருளாதார மற்றும் புள்ளிவிவர சேவைகள் மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் போன்ற பல UPSC தேர்வுகளுக்கும் பொருந்தும் - குடிமை பணி தேர்வுக்கு மட்டுமல்ல. பரிந்துரைக்கப்படாத வேட்பாளர்கள் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள். பிரதிபா சேது தளத்தில் இந்த விண்ணப்பதாரர்களின் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இது நிறுவனங்கள் பாடங்கள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களைத் தேட அனுமதிக்கிறது. இந்த செய்தித்தாளில் வெளியான ஒரு செய்தியின்படி, இது நிறுவனங்களுக்கு பாடம் மற்றும் துறை வாரியான தேடல் வசதிகளையும் வழங்குகிறது, இதனால் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். இந்த அமைப்பு வேலை தேடுபவர்களை வேலைக்கு அமர்த்த விரும்பும் முதலாளிகளுடன் இணைக்க உதவுகிறது.
2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், ஆரம்பத்தில் அரசு மற்றும் பொதுத்துறை வேலைகளில் விண்ணப்பதாரர்களை நியமிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தியது. தனியார்துறை முதலாளிகளை உள்ளடக்கியதாக இதை விரிவுபடுத்துவது வாய்ப்புகளை விரிவுபடுத்துகிறது மற்றும் வேட்பாளர்கள் வேலை தேடும் வாய்ப்புகளை மேம்படுத்துகிறது. இப்போது, பொதுத்துறை அலகுகள், தன்னாட்சி அரசு அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் விண்ணப்பதாரர்களை இந்தத் திட்டத்தின் மூலம் பணியமர்த்தலாம். இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இருப்பினும், இந்தியாவில் தொழிலாளர் சந்தைகளில் உள்ள பிரச்சினைகளுக்கு ஆழமான மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட கொள்கை மாற்றங்கள் தேவைப்படுகின்றன.