உலக வங்கியின் சமத்துவமின்மை எண்கள் முற்றிலும் துல்லியமாக இல்லாவிட்டாலும், இந்தியாவின் சர்வதேச தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது
இந்திய ஜனநாயகத்தில் சமத்துவமின்மை (Inequality) ஒரு முக்கிய பிரச்சினையாகும். இருப்பினும், இதை பற்றிய விவாதங்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தரவுகளையே சார்ந்துள்ளன. இது சிறந்த புரிதலுக்குப் பதிலாக தவறான புரிதலுக்கு வழிவகுக்கும் மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகளை உருவாக்குகிறது. ஏப்ரல் 2025-ல் இந்தியாவில் வறுமை மற்றும் சமத்துவமின்மை (India Poverty and Equity Brief: April 2025) பற்றிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டது. மக்கள் இந்த அறிக்கைக்கு மிகவும் கடுமையாக எதிர்வினையாற்றினர்
உலக வங்கி அறிக்கை, இந்தியாவில் தீவிர வறுமை நீங்கிவிட்டது என்று கூறுகிறது. மேலும், மக்கள் பணத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள் என்பதில் உள்ள சமத்துவமின்மை 2011-12 முதல் வெகுவாகக் குறைந்துள்ளது என்றும் கூறுகிறது. சமத்துவமின்மையை அளவிடுவதற்கான பொதுவான வழியாகும் கினி குணகத்தின் (Gini coefficient) அடிப்படையில், இந்த அறிக்கை இந்தியாவை முதல் நான்கு மிகக் குறைந்த சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றாகக் தரவரிசைப்படுத்துகிறது. ஆனால், இந்தியாவில் சமத்துவமின்மை மிக அதிகமாக உள்ளது என்று மக்களும் ஊடகங்களும் கேள்விப்பட்டுப் பழகிவிட்டதால், இந்தக் கண்டுபிடிப்புகள் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. என்ன நடந்தது?
இந்தியாவில் சமத்துவமின்மையின் நிலை என்ன?
இந்திய சமத்துவமின்மை பற்றிய உலக வங்கியின் கூற்றுகள் 2022-2023-க்கான அதிகாரப்பூர்வ வீட்டு நுகர்வு செலவு ஆய்வு (Household Consumption Expenditure Survey (HCES)) தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. இந்த தகவல் மாற்றியமைக்கப்பட்ட கலவை குறிப்பு காலம் (modified mixed reference period (MMRP)) முறையைப் பயன்படுத்தி சேகரிக்கப்பட்டது. இது மிகச் சிறந்த புள்ளியியல் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. உலக வங்கி அறிக்கை சரியாகக் குறிப்பிடுவது போல, MMRP ஒரு முன்னேற்றம் மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைகளுடன் ஒத்துப்போவதாக கருதப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவசப் பொருட்கள் மற்றும் சேவைகள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், சிலவற்றைக் கணக்கிடும் வகையில் உலக வங்கி இந்தியத் தரவை மாற்றியமைத்துள்ளது.
உலக வங்கி 2011-12 மற்றும் 2022-23 காலத்தில், இந்தியா நுகர்வு சமத்துவமின்மையில் பெரும் சரிவு ஏற்பட்டதாக உலக வங்கி கண்டறிந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில், நுகர்வு அடிப்படையிலான கினி குணகம் 28.8-இலிருந்து 25.5-ஆக குறைந்துள்ளது.
உலக வங்கி அறிக்கை சமத்துவமின்மையை குறைத்து மதிப்பிடுகிறது என்று சில விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏனெனில், அது பயன்படுத்திய கணக்கெடுப்பு பணக்காரர்கள் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதை முழுமையாகப் பார்க்கவில்லை. இந்த வரம்பு அனைத்து நாடுகளிலும் உள்ள அனைத்து கணக்கெடுப்பு தரவுகளுக்கும் பொருந்தும். மேலும், நாடுகளின் பரந்த தரவரிசையை கேள்விக்குள்ளாக்குவதில்லை. உலக வங்கியின் சமத்துவமின்மை மதிப்பீடுகளின் துல்லியத்தை நாம் குறைத்து மதிப்பிட்டாலும், இந்தியாவின் சர்வதேச தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது. நுகர்வு சமத்துவமின்மையை (consumption inequality) வருமான சமத்துவமின்மையுடன் நாம் குழப்பிக் கொள்ளக்கூடாது.
இந்தியாவின் நுகர்வு சமத்துவமின்மையின் குறைவு கணிசமானது மற்றும் மறுக்க முடியாதது. தரவு சிக்கலை நிவர்த்தி செய்ய, இந்தியாவில் உள்ள 5% பணக்கார குடும்பங்களின் எந்த செலவினமும் கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை என்று கற்பனை செய்து பாருங்கள். அது உண்மையாக இருந்தால், நுகர்வு செலவினத் தரவுகளின்படி, HCES தரவுகளில் உள்ளடக்கப்பட்ட மீதமுள்ள 95% மக்கள்தொகைக்கு 2011-12 மற்றும் 2022-23க்கு இடையில் நுகர்வு சமத்துவமின்மை குறைந்துள்ளது என்பது மறுக்க முடியாதது.
HCES தகவல்கள் நாட்டின் நுகர்வு கூடை (consumption basket) இன்று எப்போதையும்விட ஆரோக்கியமானது என்பதைக் காட்டுகின்றன. 2012 முதல் 2023 வரை தனி நபருக்கு கிடைக்கும் இந்தியாவின் உணவுமுறை ஆரோக்கியமானதாக மாறியுள்ளது என்பதை HCES தரவு காட்டுகிறது. இப்போது ஒரு நபருக்கு 45% அதிக பால் மற்றும் 63% அதிக முட்டைகளைப் பெறுகிறார்கள். பழங்கள், காய்கறிகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளுக்கான அணுகலும் அதிகமாக உள்ளது. உணவுச் செலவு மற்றும் கலோரி உட்கொள்ளலில் தானியங்கள் சிறிய பகுதியை உருவாக்குகின்றன. அதே நேரத்தில் அனைத்து குழுக்களுக்கும் ஆரோக்கியமான உணவுகள் அதிகரித்துள்ளன. இவை அனைத்தும், உலகின் சிறந்த உணவு வகைகளுடன் ஒப்பிடும் பணக்கார குழுக்களைவிட, 95% மக்களின் உணவை மேம்படுத்துகின்றன.
கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழ்மையான 20% குடும்பங்கள், இலவச உணவு அல்லது பண உதவி கிடைக்க விட்டாலும் தங்கள் உணவுமுறையை கணிசமாக மேம்படுத்தியுள்ளனர். புதிய பழங்களை நுகரும் கிராமப்புற குடும்பங்களின் பங்கு 2011-12-ல் 63.8%-லிருந்து 2023-ல் 90%ஆக அதிகரித்துள்ளது.
2022-23 மற்றும் 2023-24-ஆம் ஆண்டுகளின் தரவுகள் இந்தியாவில் தீவிர வறுமை ஒழிந்துவிட்டதாகத் தெளிவாகக் காட்டுகின்றன. ரங்கராஜன், டெண்டுல்கர் அல்லது நிதி ஆயோக்கின் குறியீடு என எந்த முறையைப் பயன்படுத்தினாலும், வறுமை மிகவும் குறைந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. 2011 மற்றும் 2023-க்கு இடையில், $3 சர்வதேச வறுமைக் கோட்டின் அடிப்படையில், இந்தியாவில் சுமார் 27 கோடி மக்கள் தீவிர வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்.
தனித்தனியாக, இரவு விளக்கு தரவுகள் பிரதான் மந்திரி கிராமின் அவாஸ் யோஜனா (Pradhan Mantri Gramin Awas Yojana) மற்றும் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனாக்களின் (Pradhan Mantri Gram Sadak Yojana) காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புற பகுதிகளில் நிலைத்தடிப்பான வீடுகள் (pucca homes) மற்றும் அமைக்கப்பட்ட சாலைகளின் உரிமை விகிதங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகின்றன. 2011-12-ஆம் ஆண்டில் வெறும் 6%-ஆக இருந்த ஏழ்மையான 20% குடும்பங்களில், இன்று 40%-க்கும் அதிகமானோர் வாகனம் வைத்திருக்கின்றனர். இது கிராமப்புற தொழிலாளர்கள் இடம்பெயராமல் அருகிலுள்ள நகரங்களில் பகுதிநேர வேலை செய்ய உதவுகிறது. இவற்றையும், ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்களையும் ஏழைகளுக்கான பிற திட்டங்களையும் நாம் சேர்த்தால், ஒட்டுமொத்த நன்மைகள் இன்னும் சிறப்பாக இருக்கும்.
வருமான நிலைகளை ஆராய்தல்
உண்மையில், நுகர்வு சமத்துவமின்மையிலிருந்து தனித்தனியாக வருமான சமத்துவமின்மையை ஆராய்வது முக்கியம். இன்னும் அதிகாரப்பூர்வ வருமான ஆய்வு தகவல்கள் இல்லை. முக்கிய ஊடகங்களும் வர்ணனையாளர்களும் உலக சமத்துவமின்மை ஆய்வகத்தால் (World Inequality Lab (WIL)) மதிப்பிடப்பட்ட முதல் 1% பேரின் வருமான பங்குகளைப் பயன்படுத்தி இந்தியாவில் வருமான சமத்துவமின்மை மிக அதிகம் என்று வாதிடுகின்றனர். இந்த மதிப்பீடுகளின் முக்கியமான வரம்புகளைப் புறக்கணித்து.
வருமான விநியோகம் பற்றிய தகவல் இல்லாததால், சமத்துவமின்மை ஆய்வகம் உயர் வருமான நிலைகளை மதிப்பிட வருமான வரி தகவல்களைப் பயன்படுத்துகிறது. அவர்கள் பழைய நுகர்வு தகவல்களையும் வருமான-நுகர்வு உறவின் மதிப்பீடுகளையும் பயன்படுத்தி குறைந்த மற்றும் நடுத்தர வருமான குடும்பங்களுக்கு வருமானை மதிப்பிடுகின்றனர். இந்த மதிப்பீடுகள் 70–80% குடும்பங்கள் தாங்கள் சம்பாதிப்பதைவிட அதிகமாகச் செலவிடுவதாக நம்பத்தகாத முறையில் கருதுகின்றன. ஆனால், பணக்காரர்களில் 20–30% பேரைத் தவிர, பெரும்பாலான குடும்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வருமானத்தைவிட அதிகமாகச் செலவு செய்வது எப்படி சாத்தியமாகும்?
இத்தகைய நம்பத்தகாத அனுமானத்தைப் பயன்படுத்துவதன் தவிர்க்க முடியாத விளைவாக, கீழ் 80% பேரின் வருமானம் குறைத்து மதிப்பிடப்படுகிறது. இது தேசிய வருமானத்தில் அவர்களின் மதிப்பிடப்பட்ட பங்கைக் குறைக்கிறது. மாறாக, உயர் வருமானக் குழுக்களின் பங்குகள் மிகைப்படுத்தப்படுகின்றன.
இந்த வரம்புகளை நாம் புறக்கணித்தாலும், வருமான சமத்துவமின்மையில் அதிகரிப்பைக் காணவில்லை. WIL மதிப்பீடுகளை அவை உள்ளபடியே எடுத்துக்கொண்டால், கீழ் 50% பேரின் தேசிய வருமானப் பங்குகள் 2017-ல் 13.9%-லிருந்து 2022-ல் 15% ஆக அதிகரித்துள்ளன. அதே காலத்தில், முதல் 10% பேரின் பங்கு 58.8%-லிருந்து 57.7%-ஆகக் குறைந்துள்ளது.
இந்தியாவின் வருமானத்தில் பெரும் பங்கை மேல்தட்டு 1% பேர் ஈட்டுவது கவலையளிக்கிறது. இருப்பினும், 2017 முதல், முதல் 1% பேரின் வருமானப் பங்குகள் 0.3 சதவீத புள்ளிகள் மட்டுமே அதிகரித்துள்ளன. இந்த எழுத்தாளரின் ஆராய்ச்சி, 2016-17 முதல் மத்திய அரசின் வரி ஏய்ப்பு எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, பணக்கார குழுக்களின் மேம்பட்ட வருமான அறிக்கையே இந்த அதிகரிப்பின் ஒரு பகுதியாகும் என்பதைக் குறிக்கிறது. சிறந்த அறிக்கையிடலை அதிகரித்த சமத்துவமின்மை என்று தவறாகக் கருதக்கூடாது.
மேலும், ஊடகங்களும் வர்ணனையாளர்களும் பயன்படுத்தும் WIL சமத்துவமின்மை மதிப்பீடுகள் வரி-முன் வருமான நிலைகளின் அடிப்படையிலானவை. எவ்வாறாயினும், மக்களுக்கு முக்கியமானது வரி-பின் மற்றும் மானியம்/பரிமாற்றத்திற்குப் பிந்தைய வருமானமே மக்களுக்கு முக்கியமானது. எனவே, சமத்துவமின்மையை நன்கு புரிந்துகொள்ள, வரிக்கு முந்தைய வருமானத்தை அல்ல, வரிக்குப் பிந்தைய வருமானத்தைப் பார்க்க வேண்டும். உதாரணமாக, 2023-24 மதிப்பீட்டு ஆண்டில், அனைத்து வரி செலுத்துவோரில் முதல் 1% பேர் மொத்த வரியில் 72.77% செலுத்தியுள்ளனர். தனிநபர் பிரிவில், முதல் 1% பேர் மொத்த வரியில் 42% செலுத்தியுள்ளனர்.
பணக்காரர்கள் அதிக வரிகளை செலுத்த வேண்டும் என்பது விவாதத்திற்குரியது. ஆனால், தற்போதுள்ள வரி விகிதங்களில், அதிக வருமான வரி செலுத்துவோரின் உண்மையான வரிக்குப் பிந்தைய வருமானம், தலைப்புச் செய்திகளில் பயன்படுத்தப்படும் அளவுகளில் 65%-75% வரை மட்டுமே உள்ளன. குறைந்த வருமானக் குழுக்களுக்கு, அவர்களின் உண்மையான வருமானம் அறிவிக்கப்பட்டதைவிட அதிகமாக உள்ளது. ஏனெனில், பொருளாதாரத்தில் 8%-க்கும் அதிகமான நலன்புரி கொடுப்பனவுகள் சாதனை அளவில் அதிகமாக உள்ளன. வரிகள் மற்றும் மானியங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது, சமீபத்திய ஆண்டுகளில் வருமான சமத்துவமின்மை குறைந்துள்ளது.
இந்தியாவைப் பற்றிய மற்றொரு கதை
சமத்துவ சமூகம் (egalitarian society) என்று கூறுவதற்கு முன்பு நாம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. நல்ல சுகாதாரம் மற்றும் கல்விக்கான சமமற்ற அணுகல் ஒரு பெரிய பிரச்சினையாகும். நமது பெரிய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட மக்கள்தொகையுடன், மக்கள் பல வேறுபட்ட யதார்த்தங்களை அனுபவிக்கின்றனர். ஆனால், இந்தியாவின் கதை இனி வறுமை மற்றும் சமத்துவமின்மை பற்றியது மட்டுமல்ல. இது முன்னேற்றம் மற்றும் லட்சியத்தைப் பற்றியது. தற்போதைய, சவால்களை நாம் எதிர்கொள்ளும் அதே வேளையில், நாட்டின் சாதனைகளையும் நாம் கொண்டாட வேண்டும்.
ராம் சிங் டெல்லி பொருளாதார பள்ளியின் இயக்குநர், இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர் மற்றும் இந்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்டம் செயல்படுத்தல் அமைச்சகத்தின் முதல் வீட்டு வருமான ஆய்விற்கான தொழில்நுட்ப நிபுணர் குழுவின் உறுப்பினர்.