பல்வேறு அரசியலமைப்பு வரைவுகள் இந்தியாவை எவ்வாறு உருவகம் செய்தன -பிரத்மேஷ் கேர்

 1895 மற்றும் 1948ஆம் ஆண்டிற்கு இடையில், ஆரம்பகால தாராளமயம் முதல் காந்திய அதிகாரப் பரவல் வரை தீவிர சமூக உடைமை வரை மாறுபட்ட சித்தாந்தங்களை பிரதிபலிக்கும் பல்வேறு அரசியலமைப்பு வரைவுகள் முன்மொழியப்பட்டன.


1950ஆம் ஆண்டு அரசியலமைப்புடன் இந்தியா ஒரு குடியரசாக மாறுவதற்கு முன்பு, பல்வேறு அரசியல் சிந்தனையாளர்களும் இயக்கங்களும் 1895 மற்றும் 1948ஆம் ஆண்டிற்கு இடையில் பல்வேறு அரசியலமைப்பு வரைவுகளை முன்மொழிந்தன. இந்த வரைவுகள் ஆரம்பகால தாராளமயம், காந்திய அதிகாரப் பரவல் (decentralism) மற்றும் தீவிர சமூக உடைமை உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை பிரதிபலித்தன. இறுதி அரசியலமைப்பிற்கு முன்னர் இந்த ஐந்து முக்கிய அரசியலமைப்பு வரைவுகள் இறையாண்மை, நிர்வாகம், பொருளாதார நீதி மற்றும் கலாச்சார அடையாளம் குறித்த வெவ்வேறு கருத்துக்களை எடுத்துக்காட்டின.


ஆரம்பகால அரசியலமைப்பு பார்வைகள்


இந்திய அரசியலமைப்பு மசோதா (Constitution of India Bill) 1895, பெயர் தெரியாமல் எழுதப்பட்டது. ஆனால், பாலகங்காதர திலக் போன்ற ஆரம்பகால தேசியவாதிகளுடன் அடிக்கடி தொடர்புபடுத்தப்படுகிறது. இது பிரிட்டிஷ் பேரரசுக்குள் சுயஆட்சிக்கான அரசியலமைப்பை வடிவமைக்கும் ஆரம்பகால முயற்சிகளில் ஒன்றாகும். 110 பிரிவுகளைக் கொண்ட இந்த வரைவு பிரதிநிதித்துவ அரசாங்கம், தனிநபர் உரிமைகள், சட்ட சமத்துவம் மற்றும் அதிகாரங்களின் தெளிவான பிரிவினையை முன்மொழிந்தது. இது பேச்சுரிமை, சொத்துரிமை மற்றும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளில் கவனம் செலுத்தியது. அது முழுமையான சுதந்திரத்தைக் கோருவதை விட பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குள் சுயராஜ்யத்தை விட ஆதிக்கத்திற்கான ஒரு விருப்பமாக இருந்தது.


இதற்கு நேர்மாறாக, 1944ஆம் ஆண்டு எம்.என். ராயின் வரைவு சுதந்திர இந்தியாவுக்கான அரசியலமைப்பு (M.N. Roy’s Constitution of Free India), தீவிர மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் பங்கேற்பு ஜனநாயகத்தை மையமாகக் கொண்டது. மொழியால் ஒழுங்கமைக்கப்பட்ட மாகாணங்களைக் கொண்ட ஒரு கூட்டாட்சி இந்தியாவை ராய் முன்மொழிந்தார். மக்கள் அதிகாரத்தை நிர்வாகத்தின் மையமாக வலியுறுத்தினார். அவரது வரைவில் கொடுங்கோன்மையை எதிர்க்கும் உரிமை, குடிமை மற்றும் பொருளாதார பாதுகாப்புகளுடன் கூடிய வலுவான உரிமைகள் மசோதா மற்றும் உள்ளூர் ஈடுபாட்டை ஊக்குவிக்க குடிமக்கள் ஆகியவை அடங்கும். உள்ளூர் மக்களை முடிவெடுப்பதில் ஈடுபடுத்துமாறு குடிமக்கள் குழுக்களை ராய் பரிந்துரைத்தார். அதிகாரப் பரவலாக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வலியுறுத்துவதில் ராயின் தொலைநோக்குப் பார்வையை அதன் காலத்திற்கு முந்தையதாக மாற்றும் வகையில், அடிமட்ட மக்களின் பங்களிப்பை உறுதி செய்வதற்காக குடிமக்கள் குழுக்கள் முன்மொழியப்பட்டன. இந்த ஆவணம் பாரம்பரிய தாராளமயத்திற்கு (liberalism) அப்பாற்பட்டது. நேரடி ஜனநாயகக் கட்டுப்பாடு மற்றும் பொருளாதார சமத்துவத்தை (economic equity) ஊக்குவித்தது.


ராயின் வரைவில் ஒரு முக்கிய யோசனை என்னவென்றால், நாடாளுமன்ற இறையாண்மை கொண்ட உண்மையான அதிகாரம் சட்டமியற்றுபவர்களுக்கு மட்டுமல்லாமல், அது மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்பதாகும். இதை தெளிவுபடுத்தும் ஒரு வலுவான அரசியலமைப்பை அவர் விரும்பினார். குடிமக்கள் குழுக்கள் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி மக்களுக்கு அரசியல் பற்றி கற்பிப்பதிலும் ராய் நம்பிக்கை கொண்டிருந்தார். இதனால் சாதாரண மக்கள் நாட்டை நிர்வாகம் செய்வதில் தீவிர பங்கு வகிக்க முடியும். இந்த வரைவின் தெளிவு மற்றும் துல்லியத்திலும் தனித்துவமானது: முகவுரையானது நாட்டை, "சுதந்திரமான, மதச்சார்பற்ற, கூட்டாட்சி, ஜனநாயக மற்றும் குடியரசு" என்று வரையறுத்தது. மேலும், அரசாங்கத்தின் அமைப்பு மாகாண சுயாட்சி மற்றும் பொது பங்கேற்பு மூலம் அதிகாரத்துவ மையவாதத்திற்கு எதிரான தடைகளை கற்பனை செய்தது. முக்கியமாக, ராயின் வரைவு பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை குடிமை உரிமைகளுடன் சமமான நிலையில் வைத்தது.  1950ஆம் ஆண்டு அரசியலமைப்பில் இறுதியில் அடிப்படை உரிமைகள்– அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடுகள் (Directive Principles) பிரிக்கப்படும் என்று எதிர்பார்த்தது. இருப்பினும், அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடுகள் நியாயப்படுத்த முடியாத தன்மையைப் போல் இல்லாமல், ராயின் சமூக-பொருளாதார உரிமைகள் செயல்படுத்தக்கூடியவை மற்றும் கட்டமைப்பு கொண்டவையாக இருந்தன.


ஒரே மாதிரியான ஆனால் மதச்சார்பற்றவை


இந்து மகாசபா போன்ற வலதுசாரி குழுக்களுடன் இணைக்கப்பட்ட இந்துஸ்தான் சுதந்திர மாநிலச் சட்டம் (Hindusthan Free State Act, 1944) அரசியலமைப்பு, மற்ற வரைவுகளிலிருந்து மிகவும் மாறுபட்ட பார்வையை வழங்கியது. அது ஒரு வலுவான மத்திய அரசாங்கத்தை விரும்பியது மற்றும் இந்தியாவை "இந்துஸ்தான் சுதந்திர மாநிலம்" (“Hindusthan Free State,”) என்று அழைத்தது. இந்த வரைவு ஒரு மொழி, ஒரு சட்டம் மற்றும் ஒரு பகிரப்பட்ட கலாச்சாரம் மூலம் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தியது. இருப்பினும், பலர் கருதுவதைப் போல் இல்லாமல், இந்த வரைவு அனைத்து சாதிகள் மற்றும் சமூகங்களுக்கும் மத சுதந்திரம் மற்றும் சம உரிமைகளை தெளிவாக ஆதரித்தது. பொது ஒழுங்கு அல்லது ஒழுக்கத்தை சீர்குலைக்காத வரை, எந்தவொரு மதத்தையும் நம்புவதற்கும், பின்பற்றுவதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் உள்ள உரிமையை இந்த வரைவு ஆதரித்தது. அரசாங்கம் எந்த மதத்தையும் ஆதரிக்கவோ அல்லது அவர்களின் நம்பிக்கையின் காரணமாக மக்களை நியாயமற்ற முறையில் நடத்தவோ முடியாது என்று அது கூறியது. அதிகாரப்பூர்வ அரசு மதம் இருக்காது என்றும், பொது பணத்தை மத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த முடியாது என்றும் வரைவு தெளிவுபடுத்தியது. வரைவு கலாச்சார ஒற்றுமையில் வலுவாக கவனம் செலுத்தியிருந்தாலும், இந்த விதிகள் நியாயம் மற்றும் மதத்தை அரசாங்கத்திலிருந்து பிரித்து வைத்திருப்பதற்கான உறுதிப்பாட்டைக் காட்டின. தேசிய ஒற்றுமைக்கு அழுத்தம் கொடுக்கும் அதே வேளையில் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இந்த கலவை வரைவின் பின்னணியில் உள்ள கருத்துக்களில் சில முரண்பாடுகளைக் காட்டுகிறது.


கூடுதலாக, 1944ஆம் ஆண்டு வரைவு பிரிவினை உரிமையை (right of secession) வெளிப்படையாகக் குறிப்பிட்ட சில வரைவுகளில் ஒன்றாகும். மாகாணங்கள் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் யூனியனில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்று கூறியது.  இது அதன் மற்றபடி ஒற்றையாட்சி நோக்குநிலையைக் கருத்தில் கொண்டு ஒரு அசாதாரண அம்சமாகும். இது ‘தார்மிக மற்றும் ஆன்மீக மதிப்புகளை’ (moral and spiritual values) மேம்படுத்த அரசுக்கு கட்டாயமாக்கியது. இதனால் அதன் அரசியலமைப்பு தர்க்கத்தில் ஒரு நாகரிக பணியை (civilisational mission) ஏற்படுத்திக்கொண்டது. அவசரகால அதிகாரங்கள் மற்றும் குடிமக்களின் கடமைகளுக்கான அதன் ஏற்பாடுகள் வலுவான அரசு-மைய மனப்பான்மையை (state-centric ethos) எதிரொலித்தன. அதே நேரத்தில் சட்டமன்றத்திற்கு நேரடி தேர்தல் மற்றும் வழக்கமான நீதித்துறை மறுஆய்வு (judicial review) போன்ற ஜனநாயக செயல்முறைகளையும் உள்ளடக்கியது.


தன்னாட்சி முறையிலிருந்து சமூக உடைமை ஜனநாயகம் வரை


மிகவும் வேறுபட்ட குறிப்பில், காந்தியத் தாராள இந்தியாவின் அரசியலமைப்பு (Gandhian Constitution for Free India), 1946இல் சீமான் நாராயண் அகர்வால் என்பவரால் மகாத்மா காந்தியின் முன்னுரையுடன் உருவாக்கினார். இது இந்திய மரபுகள் மற்றும் காந்தியின் அகிம்சை, வளங்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் சுயசார்பு கிராமங்கள் பற்றிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. இது ஆட்சியின் அடிப்படை அலகாக தன்னிறைவு கொண்ட கிராம குடியரசுகளின் (gram swaraj) கூட்டமைப்பை முன்மொழிந்தது. தொழில்துறை முதலாளித்துவம் மற்றும் மேற்கத்திய சட்டவாதம் இரண்டையும் நிராகரித்து. காந்திய மாதிரியானது சட்ட அமலாக்கத்தை விட நெறிமுறை சுய-ஒழுங்குமுறையால் வழிநடத்தப்படும் பரவலாக்கப்பட்ட  நிர்வாகத்தை கற்பனை செய்தது. இந்தியாவை தன்னம்பிக்கை மற்றும் ஆன்மீக ரீதியாக வலிமையாக்க காதி, விவசாயம் மற்றும் சிறு தொழில்களில் கவனம் செலுத்தியது. இருப்பினும், ஒரு பெரிய, நவீன நாட்டிற்கு இது வேலை செய்யாது என்று பலர் நினைத்தனர்.


சுவாரஸ்யமாக, இந்த வரைவில் ஆயுதம் ஏந்துவதற்கான உரிமை சேர்க்கப்பட்டுள்ளது. இது காந்திய அகிம்சையால் ஈர்க்கப்பட்ட அரசியலமைப்பில் முரண்பாடாகத் தெரிகிறது. வரைவின் பிரிவு 6, சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்ட விதிகளைப் பின்பற்றி ஒவ்வொரு குடிமகனும் ஆயுதங்களை வைத்திருக்கவும் எடுத்துச் செல்லவும் முடியும் என்று கூறியது. இந்த வரைவு காந்தியின் அகிம்சை யோசனையை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், தற்காப்பை அனுமதிக்கும் நடைமுறைத் தேர்வை இது காட்டுகிறது. அமைதியான நம்பிக்கைகளுக்கும் பாதுகாப்பின் தேவைக்கும் இடையிலான இந்த மோதல், ஒரு நாட்டை நடத்துவதன் யதார்த்தங்களுடன் நெறிமுறைகளை சமநிலைப்படுத்துவதன் சவாலைக் காட்டுகிறது.


1948ஆம் ஆண்டிற்குள், ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையிலான சமூக உடைமை கட்சி, இந்திய குடியரசின் வரைவு அரசியலமைப்பை அரசியல் நிர்ணய சபையால் தயாரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வரைவுக்கு எதிர் முன்மொழிவாக வழங்கியது. இந்த ஆவணம் மார்க்சியம் மற்றும் ஜனநாயக சமதர்ம சிந்தனையில் உறுதியாக வேரூன்றியது, அனைத்து முக்கிய தொழில்கள், வங்கிகள் மற்றும் முக்கிய சேவைகளின் தேசியமயமாக்கலை ஆதரித்தது. இது உற்பத்தி சாசனங்களின் தனியார் உரிமையை நீக்குவதற்கு அழைப்பு விடுத்தது மற்றும் நில சீர்திருத்தங்கள் மற்றும் தொழிலாளர்களின் தொழிற்சாலைகள் மீதான கட்டுப்பாட்டை முன்மொழிந்தது. இந்த சமூக உடைமை வரைவு முக்கிய சமூக குழுக்களிலிருந்து தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பிரதிநிதிகளைக் கொண்ட ஒற்றை சட்டமன்றத்தை (unicameral legislature) கற்பனை செய்தது. இதனால், வர்க்க அடிப்படையிலான அமைப்புக்கு சார்பாக பாரம்பரிய தாராள்வாத பிரதிநிதித்துவ மாதிரியை நிராகரித்தது. அனைத்து நிலம் மற்றும் இயற்கை வளங்களும் தேசிய சொத்து என்றும், திட்டமிடல் சட்டமன்றத்துக்கு பொறுப்புடைய மத்திய திட்டமிடல் ஆணையத்தால் (Central Planning Commission) நடத்தப்படும் என்றும் வலியுறுத்தப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், வரைவு பாலின சமத்துவத்திற்கான ஆரம்பகால அர்ப்பணிப்பையும் வழங்கியது மற்றும் எந்த வடிவத்திலும் சாதி பாகுபாட்டைத் தடை செய்தது. குடிமை சுதந்திரங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டன. ஆனால், ஆவணம் பொருளாதார ஜனநாயகத்திற்கு முன்னுரிமை அளித்தது. செயல்முறை பாதுகாப்புகளை விட சமூக-பொருளாதார உரிமைகள் முன்னுரிமை பெற்றன. இது அதன் மறுபங்கீட்டு அர்ப்பணிப்புகளில் தைரியமானது என்றாலும், வரைவு அதன் நிர்வாக மற்றும் நீதித்துறை கட்டமைப்பில் குறைவான விவரங்களைக் கொண்டிருந்தது. தீவிர பொருளாதார மாற்றம் அரசியல் ஜனநாயகத்தை இயல்பாகவே ஆதரிக்கும் என்று கருதியது.


ஒப்பீட்டு பகுப்பாய்வு


ஒப்பீட்டு அடிப்படையில் பார்க்கும்போது, இந்த வரைவுகளை ஒன்றாகப் பார்க்கும்போது, அவை இந்தியாவின் எதிர்காலத்திற்கான வெவ்வேறு கருத்துக்களைக் காட்டுகின்றன. 1895ஆம் ஆண்டு மசோதா மற்றும் எம். என். ராயின் வரைவு இரண்டும் ஜனநாயகத்தை ஆதரித்தன. ஆனால், ராயின் வரைவு மிகவும் மேம்பட்டதாக இருந்தது. மக்கள் நேரடியாக பங்கேற்கவும் கிளர்ச்சி செய்ய உரிமையும் கூட இருந்தது. பழைய, மிகவும் முறையான மற்றும் உயரடுக்கை மையமாகக் கொண்ட 1895 மசோதாவைப் போலல்லாமல். மற்றொரு பெரிய வித்தியாசம் என்னவென்றால், மத்திய அரசுக்கு எவ்வளவு அதிகாரம் வழங்கப்படுகிறது. இந்துஸ்தான் சுதந்திர மாநிலச் சட்டமும் சமூக உடைமை கட்சி வரைவும் நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க அல்லது பொருளாதாரத்தை நிர்வகிக்க ஒரு வலுவான மத்திய அரசாங்கத்தை விரும்பியது. இதற்கு நேர்மாறாக, ராயின் மற்றும் காந்தியின் வரைவுகள் அதிகாரத்தை சமமாகப் பரப்புவதில் கவனம் செலுத்தின. அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுக் கட்டுப்பாட்டுடன் கூடிய கூட்டாட்சி அமைப்பை ராய் விரும்பினார். அதே, நேரத்தில் காந்தி கிராமங்கள் தார்மீக விழுமியங்களின் அடிப்படையில் தங்களைத் தாங்களே ஆள வேண்டும் என்று விரும்பினார்.


பொருளாதார ரீதியாக, காந்தியின் எளிமையான மற்றும் விவசாய அடிப்படையிலான மாதிரியிலிருந்து, ராயின் ஜனநாயக பொருளாதார திட்டமிடல் மீதான முக்கியத்துவம் வரை, சோசலிஸ்ட் கட்சியின் முழுமையான அரசு சோசலிசம் (state socialism) வரை பல்வேறு மாதிரிகள் இருந்தன. இந்துஸ்தான் சுதந்திர அரசு வரைவு (Hindusthan Free State draft), பொருளாதார மறுவிநியோகம் குறித்து பெரும்பாலும் அமைதியாக இருந்தாலும், பொதுவாகக் கருதப்படுவதை விட சிக்கலான பார்வையை வழங்கியது. இது தேசிய ஒற்றுமையை முன்னுரிமையாகக் கொண்டிருந்தாலும், மத சுதந்திரம் மற்றும் சமத்துவம் (religious freedom and equality) ஆகியவற்றைச் சுற்றிய குறிப்பிட்ட தாராளவாத பாதுகாப்புகளை (liberal protections) உறுதி செய்தது. இதற்கிடையில், 1895ஆம் ஆண்டு மசோதா பொருளாதார தீவிரவாதம் இல்லாததை பிரதிபலித்தது. முதன்மையாக குடிமை உரிமைகள் (civil liberties) மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் (political representation) ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. கலாச்சார மற்றும் அடையாள அரசியலும் (cultural and identity politics) குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டு வெளிப்பட்டது.  இந்துஸ்தான் சுதந்திர அரசு வரைவு ஒரே மாதிரியான, பெரும்பான்மைவாத கலாச்சார அடையாளத்தை (majoritarian cultural identity) முன்னிறுத்தியது. இது ராயின் வரைவு மற்றும் சமூக உடைமை கட்சியின் பார்வையில் உள்ள பன்முகத்தன்மை மற்றும் மதச்சார்பின்மை (pluralistic and secular ethos) கொள்கைகளுக்கு மாறாக இருந்தது. காந்திய மாதிரி, இந்திய பாரம்பரியங்களில் வேரூன்றியிருந்தாலும், கலாச்சார ஒருமைப்பாட்டை விட (cultural uniformity) தார்மீக மற்றும் சமூக நல்லிணக்கத்தின் (moral and communal harmony) மூலம் ஒற்றுமையை வலியுறுத்தியது.


குடிமை உரிமைகள் (civil liberties) குறித்து, 1895ஆம் ஆண்டு மசோதா (1895 Bill) மற்றும் ராயின் வரைவு மிகவும் வலுவானவையாக இருந்தன. இரண்டுமே விரிவான உரிமைகள் கட்டமைப்பை (rights frameworks) உள்ளடக்கியிருந்தன. சமூக உடைமை கட்சி வரைவு (Socialist Party draft) அரசியல் உரிமைகளை விட பொருளாதார உரிமைகளுக்கு (economic rights) முன்னுரிமை அளித்தது. ஆனால் காந்திய வரைவு முறையான உரிமைகளை விட கடமைகள் மற்றும் சமூக மதிப்புகளுக்கு அதிக கவனம் செலுத்தியது. இந்துஸ்தான் சுதந்திர அரசு வரைவு, தேசியவாத சித்தாந்தத்தை (ideologically nationalist) அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், மத சுதந்திரம் (religious freedom) மற்றும் பாகுபாடு இன்மை (non-discrimination) ஆகியவற்றுக்கு வலுவான அரசியலமைப்பு உத்தரவாதங்களை (constitutional guarantees) வழங்கியது. இது தாராளவாதக் கொள்கைகள் (liberal principles) இல்லாதது என்ற கருதுகோளை எதிர்த்தது. மொத்தத்தில், இந்த அரசியலமைப்பு வரைவுகள் இந்திய அரசின் தன்மை குறித்து சுதந்திரத்துக்கு முந்தைய உயிரோட்டமான விவாதத்தைப் பிரதிபலிக்கின்றன. ஆளுகை, சமூகம் மற்றும் குடியுரிமை (governance, society, and citizenship) குறித்த பல்வேறு சித்தாந்த பன்முகத்தன்மையையும் வெவ்வேறு கருதுகோள்களையும் காட்டுகின்றன. இந்த வரைவுகள் எதுவும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும், ஒவ்வொன்றிலிருந்தும் சில கூறுகள் 1950ஆம் ஆண்டு அரசியலமைப்பில் இடம்பெற்றன. ராயின் பரவலாக்கம் (decentralisation) மற்றும் உரிமைகள் குறித்த யோசனைகள், காந்தியின் பஞ்சாயத்து ராஜ் கருத்து, சோசலிஸ்ட்டுகளின் பொருளாதார நீதி (economic justice) மீதான அர்ப்பணிப்பு, மற்றும் 1895ஆம் ஆண்டு மசோதாவின் சட்டப்பூர்வ கட்டமைப்பு (legalistic structure) ஆகியவை அனைத்தும் தங்கள் தடயங்களை விட்டுச் சென்றன. இருப்பினும், அவர்களின் மிகப்பெரிய பங்களிப்பு, குடியரசு பிறப்பதற்கு முன்பே ஜனநாயக கற்பனையை வெளிப்படுத்தியதில் இருக்கலாம். இது இந்தியாவின் வளமான அரசியலமைப்பு மரபுக்கும் அது ஒரு காலத்தில் சிந்தித்த ஏராளமான எதிர்காலங்களுக்கும் ஒரு சான்றாகும்.



Original article:

Share: