சங்க இலக்கியம் என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


• கலாச்சாரச் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அறிக்கையில் குறிப்பிடப்பட்ட முதல் காலகட்டத்திற்கு (Period 1), கி.மு. 5ஆம் முதல் 8ஆம் நூற்றாண்டு என்ற கால அளவு முற்றிலும் நியாயமற்றது” என்று கூறினார். நமக்குத் தெரிந்தவற்றின் அடிப்படையில்,  மிகவும் பழமையான காலகட்டத்தை அதிகபட்சமாக கி.மு. 300க்கு முந்தையதாக கருதலாம் என்று அவர் திமுக நாடாளுமன்ற உறுப்பினரின் சுமதியின் கேள்விக்கு அவர் அளித்த பதிலுடன் இணைக்கப்பட்ட குறிப்பில் அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார்.


• கீழடி என்பது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், மதுரையிலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ள ஒரு பழமையான இடமாகும். பத்தாண்டுகளுக்கு முன்னர், அப்போதைய தொல்லியல் துறையின் (ASI - Archaeological Survey of India) மேற்பார்வை தொல்லியலாளரான அமர்நாத் ராமகிருஷ்ணா, இந்த இடத்தில் மேற்கொண்ட அகழ்வாய்வுகளில் நவீன நகர சமூகத்தின் ஆதாரங்களை கண்டறிந்தார்.


• கீழடி அறிக்கையின்படி, கார்பன் கணிப்பு மூலம் தமிழர் வரலாற்றில் சங்க காலத்துக்கு இணையான 2,160 ஆண்டுகள் பழமையான பொருள்கள் கண்டறியப்பட்டன. இது வரலாற்றை மூன்று காலகட்டங்களாக வகைப்படுத்தியது. முன் தொடக்க வரலாற்று காலம் (கிமு 8-5 ஆம் நூற்றாண்டு), முதிர்ந்த ஆரம்ப வரலாற்று  காலம் (கிமு 5-1 ஆம் நூற்றாண்டு) மற்றும் ஆரம்ப வரலாற்று காலம் (கிமு 1 ஆம் நூற்றாண்டு - கிபி 3 ஆம் நூற்றாண்டு) வரை இருந்தன.


உங்களுக்குத் தெரியுமா?:


• தமிழ்நாட்டில், தொல்பொருள் தளம் 2014ஆம் ஆண்டு இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் தொல்பொருள் ஆய்வாளர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் தொடங்கப்பட்டது. இந்த தளம் செங்கல் கட்டிடங்கள், உலைகள், வடிகால் அமைப்புகள், சின்னங்களுடன் கூடிய மட்பாண்டங்கள் மற்றும் சுடுமண் பொருட்கள் (terracotta artefacts) உள்ளிட்ட மேம்பட்ட பண்டைய நகரத்தின் அடையாளங்களைக் கண்டறிந்தது.


• ராமகிருஷ்ணா தனது இறுதி அறிக்கையை ஜனவரி 2023இல் சமர்ப்பித்தார். இந்த தளம் கிமு 8 மற்றும் 3 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இருந்ததாகக் கூறினார். இது அடுக்கு பகுப்பாய்வு (stratigraphic analysis) மற்றும் AMS தேதியிட்ட கலைப்பொருட்களின் அடிப்படையில் இருந்தது.


• குறிப்பிடத்தக்க வகையில், இந்த கண்டுபிடிப்புகள்  வணிகத்தின் ஆதாரமாக கார்னீலியன் மணிகள் (carnelian beads) மற்றும் தமிழ்-பிராமி எழுத்துக்கள் (Tamil-Brahmi inscriptions) பொறிக்கப்பட்ட மட்பாண்டங்களில் காணப்படும் எழுத்தறிவு  தென்னிந்தியாவில் முன்பு நம்பப்பட்டதை விட மிகவும் பழமையான செழிப்பான நாகரிகத்தை விவரிக்கின்றன.


• கீழடியில் கண்டறியப்பட்டவை தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், அவை நீண்டகால வரலாற்று தகவல்களை சவால் செய்கின்றன மற்றும் இந்திய துணைகண்டத்தில் பல்வேறு பகுதிகளில் நகரமயமாக்கல் ஒரே நேரத்தில் உருவாகியிருக்கலாம் என்பதற்கு ஆதாரமாக உள்ளன.


• சங்க இலக்கியம் (Sangam Literature): தென்னிந்தியாவின் மிகப் பழமையான இலக்கியமாக அங்கீகரிக்கப்பட்ட சங்க இலக்கியம், பழைய தமிழில் எழுதப்பட்ட உரைகளின் தொகுப்பைக் குறிக்கிறது. இதில் 8 கவிதைத் தொகுப்புகள், 10 புலவர் பாடல்கள், ஒரு இலக்கண நூல் மற்றும் 18 சிறு படைப்புகள் உள்ளன. மொத்தமாக, 473 கவிஞர்களால் 2,381 கவிதைகளும், பெயர் தெரியாத எழுத்தாளர்களின் 102 கவிதைகளும் உள்ளன. சங்க உரைகளின் சரியான தேதிகள் குறித்து அறிஞர்கள் வேறுபட்டாலும், அவை பொதுவாக கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை இயற்றப்பட்டவை என்று ஒரு பொதுவான புரிதல் உள்ளது.  சங்க கவிதைகள் அகம் (akam) மற்றும் புறம் (puram) என இரு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அகமானது காதலை மையமாகக் கொண்டவை. புறமானது போர், மரணம், சமூகம் மற்றும் அரசு போன்ற தலைப்புகளை ஆராய்கின்றன.



Original article:

Share: