CROPIC மற்றும் வேளாண்மையில் செயற்கை நுண்ணறிவின் பங்கு -குஷ்பூ குமாரி

 சமீபத்தில், அரசாங்கம் விவசாயத் துறைக்காக, பயிர்களின் நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் புகைப்பட சேகரிப்பு (Collection of Real Time Observations & Photo of Crops (CROPIC)) திட்டத்தை தொடங்கியுள்ளது. இது விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவின் ஒருங்கிணைப்புடன் எவ்வாறு தொடர்புடையது?


தற்போதைய செய்தி:


கடந்த மாதம், விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் CROPIC திட்டத்தை தொடங்கியது. இது வயல் புகைப்படங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மாதிரிகளைப் பயன்படுத்தி பயிர் தகவல்களைச் சேகரிக்கும் ஆய்வு ஆகும். இந்த ஆய்வு பிரதான் மந்திரி பஸல் பீமா யோஜனா (Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY)) திட்டத்திற்காக நடத்தப்படுகிறது. இது பயிர் கையெழுத்துகளின் வளமான அடைவு உருவாக்க உதவுவதையும், பிரதான் மந்திரி பஸல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு இழப்பு மதிப்பீடு மற்றும் இழப்பீடு வழங்குதலை தானியங்கு படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


1. CROPIC என்பது பயிர்களின் நேர நிலை கண்காணிப்பு மற்றும் புகைப்பட சேகரிப்பு என்பதைக் குறிக்கிறது. இதன் கீழ், பயிர்கள் அவற்றின் சுழற்சியின் போது நான்கு அல்லது ஐந்து முறை புகைப்படம் எடுக்கப்படும். மேலும், படங்கள் அவற்றின் கால அளவு மற்றும் பருவகாலத்தின் நடுப்பகுதியில் ஏற்படும் இழப்புகளை மதிப்பிடுவதற்கு படங்கள் பகுப்பாய்வு செய்யப்படும்.


2. வயல் புகைப்படங்களைச் சேகரிப்பதற்காக, ஒன்றிய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகம் CROPIC திறன்பேசி செயலியை உருவாக்கியுள்ளது. வயலில் இருந்து எடுக்கப்படும் புகைப்படங்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாகப் பெறப்படும். பின்னர், அவை பயிர் வகை, பயிர் நிலை, பயிர் சேதம் மற்றும் அதன் அளவு உள்ளிட்ட தகவல்களுக்காக பகுப்பாய்வு செய்யப்படும்.


3. இந்த அமைப்பு புகைப்படங்களை பகுப்பாய்வு செய்து பயனுள்ள தகவல்களைப் பெற செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும். ஒரு வலை தரவுத்தளம் முடிவுகளைத் தெளிவாகக் காண்பிக்கும். விவசாயிகளுக்கு இழப்பீடு அல்லது காப்பீடு வழங்க இந்த திறன்பேசி செயலி பயன்படுத்தப்படும்.


விவசாயம், சுகாதாரம், கல்வி, அடுத்த தலைமுறை நகர்ப்புற உள்கட்டமைப்பு உருவாக்குதல் மற்றும் நகர்ப்புற பிரச்சனைகளைத் தீர்ப்பதில் செயற்கை நுண்ணறிவுக்கு ஒரு பெரிய பங்கு இருப்பதாக நான் காண்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.


4. CROPIC பயிர் கால அளவு மற்றும் அழுத்தத்தை கண்காணிக்கும் இரட்டை நோக்கத்தை வழங்கும் மற்றும் கணினி பார்வை தொழில்நுட்பம் மற்றும் புகைப்பட பகுப்பாய்வு மாதிரிகளைப் பயன்படுத்தி பயிர் இழப்பு மதிப்பீடு மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குதலை தானியங்கு படுத்தும். இந்த முயற்சி நிதி மீள்தன்மையை வளர்ப்பதற்கான, விவசாயத்தில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் ஒரு பகுதியாகும்.


5. CROPIC முதலில் ஒவ்வொரு பருவத்திலும் குறைந்தது 50 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்படும். இந்த மாவட்டங்கள் வெவ்வேறு வேளாண்-காலநிலை மண்டலங்களில் (agro-climatic zones) நன்கு பரவியிருக்கும். ஆரம்பத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பருவத்திற்கும் மூன்று முக்கிய அறிவிக்கப்பட்ட பயிர்களை உள்ளடக்கும். (அறிவிக்கப்பட்ட பயிர்கள் PMFBY போன்ற காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் உள்ளடக்கப்பட்டவை) 


6. PMFBY-ன் கீழ் உள்ள கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பத்திற்கான நிதியம் (FIAT) CROPIC-க்கு நிதியுதவி செய்யப் பயன்படுகிறது. FIAT பயிர் காப்பீட்டு திட்டங்களின் கீழ் பல்வேறு தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கு சுமார் ரூ.825 கோடி மொத்த ஒதுக்கீட்டைக் கொண்டுள்ளது.


புதுமை மற்றும் தொழில்நுட்பத்திற்கான நிதி (Fund for Innovation and Technology (FIAT)) 


புதுமை மற்றும் தொழில்நுட்பத்திற்கான நிதிக்கு, ஒன்றிய அமைச்சரவை ஜனவரி 1, 2025 அன்று ஒப்புதல் அளித்தது. இதன் மூலதனம் ரூ.824.77 கோடி ஆகும். இந்த நிதி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் விளைச்சல் மதிப்பீட்டு அமைப்பு (Yield Estimation System using Technology (YES-TECH)), வானிலை தகவல் மற்றும் வலையமைப்பு தரவு அமைப்புகள் (Weather Information and Network Data Systems (WINDS)) போன்ற திட்டங்களின் கீழ் தொழில்நுட்ப முயற்சிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்கும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.


பிரதான் மந்திரி பஸல் பீமா யோஜனா (Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY))


1. பிரதான் மந்திரி பஸல் பீமா யோஜனா 2016-ஆம் ஆண்டில் ஏற்கனவே இருந்த தேசிய விவசாய காப்பீட்டு திட்டம் (National Agricultural Insurance Scheme (NAIS)) மற்றும் மாற்றப்பட்ட தேசிய விவசாய காப்பீட்டு திட்டத்தை (Modified National Agricultural Insurance Scheme (MNAIS)) மாற்றுவதற்காக தொடங்கப்பட்டது. இது ஒரு நாடு, ஒரு பயிர், ஒரு காப்பீடு (One Nation, One Crop, One Premium) என்ற அடிப்படையில் செயல்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், "அறிவிக்கப்பட்ட பகுதிகளில்" (notified areas) "அறிவிக்கப்பட்ட பயிர்களை" (notified crops)  வளர்க்கும் பங்கு விவசாயிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் காப்பீட்டுக்கு தகுதியுடையவர்கள் ஆவார்.


2. பிரதான் மந்திரி பஸல் பீமா யோஜனா  திட்டத்தின் கீழ், ஒரு விவசாயி அனைத்து காரீஃப் உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களுக்கும் காப்பீட்டுத் தொகையில் 2% அல்லது காப்பீட்டு விகிதத்தில், எது குறைவாக இருக்கிறதோ அதையும்; அனைத்து ரபி உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களுக்கும் காப்பீட்டுத் தொகையில் 1.5% அல்லது காப்பீட்டு விகிதத்தில், எது குறைவாக இருக்கிறதோ அதையும்; தோட்டக்கலைப் பயிர்களுக்கு 5% காப்பீட்டிற்காகச் செலுத்த வேண்டும்.



விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு


1. கிசான் இ-மித்ரா (Kisan e-Mitra) : இது பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் குறித்த விவசாயிகளின் கேள்விகளுக்கு உதவ செயற்கை நுண்ணறிவால் இயங்கும் chatbot பயன்பாடாகும். இது பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் செயல்திறன் மற்றும் பரவலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் விவசாயிகளுக்கு அவர்களின் கேள்விகளுக்கு "உடனடி, தெளிவான மற்றும் துல்லியமான" பதில்களை வழங்குகிறது. இது 11 பிராந்திய மொழிகளை ஆதரிக்கிறது மற்றும் பிற அரசாங்க திட்டங்களுக்கு உதவுவதற்காக உருவாகி வருகிறது.


2. தேசிய பூச்சி கண்காணிப்பு அமைப்பு (National Pest Surveillance System (NPSS)) : NPSS, ஆகஸ்ட் 2024-இல் தொடங்கப்பட்டது, இது பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் விவசாயிகளை விவசாய விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களுடன் இணைக்க உதவும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தளமாகும். இது விவசாயிகளுக்கு நிகழ்நேர பயிர் பாதுகாப்பு ஆலோசனை வழங்குவதன் மூலம் பூச்சித் தாக்குதல், பயிர் நோய்கள், பயிர் சேதம் போன்றவற்றுக்கு விரைவான மற்றும் உடனடி தீர்வுகளை வழங்க செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலை பயன்படுத்துகிறது.


3. நிதி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் விளைச்சல் மதிப்பீட்டு அமைப்பு (Yield Estimation System using Technology (YES-TECH)) : பயிர் விளைச்சலை மதிப்பிடுவதற்கு இது தொலை உணர்வு தொழில்நுட்பத்தைப் (Remote Sensing Technology) பயன்படுத்துகிறது. மதிப்பீட்டில் குறைந்தது 30% இந்த தொழில்நுட்பத்திலிருந்து வருகிறது. ஆந்திரப் பிரதேசம், அசாம், ஹரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய ஒன்பது மாநிலங்கள் இந்த முறையைப் பயன்படுத்துகின்றன.


4.வானிலை தகவல் மற்றும் வலையமைப்பு தரவு அமைப்புகள் (Weather Information and Network Data Systems (WINDS)) : இது மாவட்ட மட்டத்தில் தானியங்கு வானிலை நிலையங்களையும் (Automatic Weather Stations (AWS)) பஞ்சாயத்து மட்டத்தில் தானியங்கு மழை அளவீட்டு கருவிகளையும் (Automatic Rain Gauges (ARGs)) அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. WINDS திட்டத்தின் கீழ், மிகவும் விரிவான உள்ளூர் வானிலை தரவுகளைச் சேகரிக்க வானிலை வலையமைப்பு ஐந்து மடங்கு பெரிதாக்கப்படும். ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தரவுகளை வாடகைக்கு எடுப்பதற்கு மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என்று வேளாண் அமைச்சகம் கூறுகிறது.


5. டிஜிட்டல் விவசாய இயக்கம் (Digital Agriculture Mission) : செப்டம்பர் 2, 2024 அன்று அங்கீகரிக்கப்பட்ட ஒன்றிய அரசின் பட்ஜெட்டில், விவசாயத்திற்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை (Digital Public Infrastructure (DPI)) உருவாக்க ரூ. 2,817 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் மூன்று முக்கிய பகுதிகள் அடங்கும்: AgriStack (விவசாயிகளுக்கான டிஜிட்டல் தரவுத்தளம்), பண்ணை திட்டமிடலுக்கு உதவும் (Krishi Decision Support System (DSS)), மற்றும் மண் ஆரோக்கியத்தை நன்கு புரிந்துகொள்ள மண் சுயவிவர வரைபடங்களாகும்.


6. SATHI : விதை அங்கீகாரம், கண்காணிப்பு மற்றும் முழுமையான பண்டகக் கணக்கு (Seed AUthentication, Traceability, and Holistic Inventory (SATHI)) என்பது இந்திய அரசின் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகத்தால் தேசிய தகவல்நுட்ப மையத்துடன் (National Informatics Centre (NIC)) இணைந்து உருவாக்கப்பட்ட ஒரு தேசிய தரவுத்தளம் ஆகும். இது விதை உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியை திறம்பட கண்காணிக்கவும், விதைகள் தோன்றிய இடத்திலிருந்து அவை விவசாயியைச் சென்றடையும் வரை முழுமையான கண்காணிப்புத்தன்மையை வழங்கவும் ஒரு டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதல் என்ற நோக்கத்துடன் உள்ளது. SATHI கட்டம் 1 ஏப்ரல் 19, 2023 அன்று விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்களால் தொடங்கப்பட்டது.


நமோ ட்ரோன் தீதிகள் (Namo Drone didis)


1. நமோ ட்ரோன் தீதி என்பது விவசாய சேவைகளுக்கு உதவுவதற்கு ட்ரோன் தொழில்நுட்பத்துடன் பெண்கள் தலைமையிலான சுய உதவிக் குழுக்களை (Self-Help Groups (SHGs)) அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஒன்றிய அரசின் திட்டமாகும். இது 2024-25 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் 15000 தேர்ந்தெடுக்கப்பட்ட சுய உதவிக் குழுகளுக்கு ட்ரோன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுய உதவிக்குழுக்கள் மூலம் குறைந்தது 2 கோடி கிராமப்புற பெண்கள் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க உதவுவதே இலக்கு என்று மோடி அறிவித்தார்.


2. மே 25 அன்று தனது மாதாந்திர ‘மனதின் குரல்’ வானொலி உரையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த "பெண்கள் வயல்களில் உழைப்பதோடு, வானத்தின் உயரங்களையும் தொடுகிறார்கள்" என்று புகழ்ந்தார். அவர்களை "வான வீராங்கனைகள்" என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, "தொழில்நுட்பமும் உறுதியும் ஒன்றிணையும்போது மாற்றம் வருகிறது என்பதை இந்தப் பெண்கள் நமக்கு உணர்த்துகிறார்கள்" என்று கூறினார்.


3. இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பெண்ணும் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள ட்ரோனை ரூ. 2 லட்சத்திற்கு பெறுகிறார். ட்ரோன் செலவில் 80% மானியமாக 8 லட்சம் வரை வழங்கப்படுகிறது. ட்ரோன் பைலட் பயிற்சியும் ட்ரோன் தொகுப்பின் ஒரு பகுதியாகும்.


ட்ரோன் தீதிகளின் நன்மைகள்:


(a) விவசாய செயல்திறனை மேம்படுத்துதல் : ட்ரோன் தொழில்நுட்பத்தின் பயன்பாடு பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களின் துல்லியமான பயன்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேம்பட்ட உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்பு (Global Positioning System (GPS)) மற்றும் உணர் கருவி தொழில்நுட்பத்தின் பயன்பாடு வயல்களில் துல்லியமான பறக்கும் பாதைகளைப் பின்பற்றவும், சமமான மற்றும் இலக்கு பயன்பாட்டை உறுதி செய்யவும், ரசாயனங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும் ட்ரோன்களை திட்டமிட அனுமதிக்கும்.


(b) பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் திறன் மேம்பாடு : பயிற்சி மூலம் ட்ரோன் தீதிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு தொழில்நுட்பம், அவர்களுக்கு மேம்பட்ட திறன்களை வழங்கும். இது பயிர் கண்காணிப்பு, மண் பகுப்பாய்வு மற்றும் துல்லியமான விவசாயம் போன்ற பணிகளை மிகவும் திறம்படச் செய்ய அவர்களுக்கு உதவும். பெண்கள் அதிகம் அல்லது குறைந்த தண்ணீர் தேவைப்படும் பகுதிகளைக் கண்டறிவதன் மூலம், கசிவுகளைக் கண்டறிவதன் மூலம் மற்றும் நீர் வளங்களை திறம்பட நிர்வகிப்பதன் மூலம் நீர்ப்பாசன மேலாண்மையை மேம்படுத்தலாம்.


(c) சமூக மற்றும் வலையமைப்பிற்கான வாய்ப்புகள் : இது பெண்களுக்கு பங்கேற்பாளர்களின் ஆதரவான வலையமைப்புகளுடன் இணைக்க உதவியது, சமூக உணர்வு மற்றும் ஒத்துழைப்பை வளர்த்தது. இது அவர்களின் அனுபவங்கள், சவால்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு உதவுகிறது. இந்த திட்டம் தொழில்துறை நிபுணர்கள் மற்றும் விவசாய வல்லுநர்களுக்கான அணுகலையும் வழங்குகிறது, வழிகாட்டல் மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கான வழிகளை உருவாக்குகிறது.


Original article:

Share: