புள்ளிவிவர அமைச்சகம் (Statistics Ministry) சிறந்த கொள்கைகளை உருவாக்க உதவும் வகையில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தரவை உருவாக்கி வருகிறது.
தரவு என்பது பொதுவாக எல்லா இடங்களிலும் நிரம்பியுள்ளது. ஆனால், நம் காலத்தில் பெரும்பாலும் இவை கவனிக்கப்படுவதில்லை. தரவு உண்மைகளைக் காட்டுவது மட்டுமல்லாமல், முக்கியமான நுண்ணறிவுகளையும் கொண்டுள்ளது. இந்தியாவானது சமூகத்தின் அனைத்து பகுதிகளிலும், வேகமான டிஜிட்டல் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக, அரசாங்கம் சிறந்த சேவைகளை வழங்க வேண்டும் என்றும் சிறந்த கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை சேகரித்தல், செயலாக்குதல் மற்றும் பரப்புதல் தொடர்பான கொள்கைகளை உருவாக்குவதிலும் மேற்பார்வையிடுவதிலும் MoSPI முக்கியப் பங்கு வகித்து வருகிறது. இது தொடர்ந்து பெரிய மாதிரி ஆய்வுகளை (large-scale sample surveys) மேற்கொள்கிறது. இது முக்கிய பேரியல்-பொருளாதார குறிகாட்டிகளையும் (macro-economic indicators) தொகுத்து வருகிறது. MoSPI நுண் மற்றும் பேரியல் மட்டங்களில் (micro and macro levels) விரிவான தரவுகளின் பெரிய தொகுப்பை வைத்திருக்கிறது. இந்தத் தரவு முக்கியமான சமூக-பொருளாதார தகவல்களை வழங்குகிறது. இந்தத் தகவல் கொள்கைகளை வடிவமைக்கவும், பொருளாதாரத்தை கண்காணிக்கவும், பொது விவாதங்களை வழிநடத்தவும் உதவுகிறது.
தரவு இயக்க மாற்றம்
நாம் ஒரு தரவு புரட்சியின் (data revolution) யுகத்தில் இருக்கிறோம். இது அதிக தரவுகளை வைத்திருப்பது மட்டுமல்ல, தரவை சிறப்பாகப் பயன்படுத்துவதும் ஆகும். வலுவான வளர்ச்சிக்கான முடிவுகளை அடைய தரவை சிறப்பாகப் பயன்படுத்துவது முக்கியம். இதற்கான மதிப்பை உருவாக்க தரவின் பெரும் திறனைப் பயன்படுத்துவதே இதன் முக்கிய குறிக்கோள் ஆகும். இந்த மதிப்பானது, கொள்கைகள் மற்றும் திட்டங்களை மேம்படுத்த முடியும். இது சமூக-பொருளாதார வளர்ச்சிக்கும் குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கவும் உதவும்.
இந்த புரட்சியின் காரணமாக சமூக-பொருளாதார நிலப்பரப்பும், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக (விக்சித் பாரத்) மாற விரும்புகிறது. இந்த இலக்கு, புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (Ministry of Statistics and Programme Implementation(MoSPI)) பங்கில் மாற்றத்தின் அவசியத்தைக் காட்டுகிறது. MoSPI தேசிய புள்ளிவிவர அமைப்பை நவீனமயமாக்கி எதிர்காலத்திற்குத் தயார்படுத்த வேண்டும்.
இந்த இலக்கை அடைய, MoSPI தேசிய புள்ளிவிவர அமைப்பை மாற்றுகிறது. இதற்கான சான்றுகள் சார்ந்த கொள்கை வகுப்பிற்கான தரவுகளின் பயன்பாட்டை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். எதன் அடிப்படையில், தரவானது சரியான நேரத்தில், திரும்பத்திரும்ப, உயர்தரம் மற்றும் பன்முகத்தன்மை கொண்டது என்பதை மேம்படுத்துவதன் மூலம் MoSPI இதை மேற்கொள்கிறது. புள்ளிவிவர தரநிலைகள் மற்றும் தரவு தரத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், பாதுகாவலராகவும் அதன் பங்கை வலுப்படுத்துகிறது.
தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்
கணக்கெடுப்பு தீர்வுகளை (survey results) வெளியிடுவதை விரைவுபடுத்த அமைச்சகம் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது. முன்னதாக, அவற்றை வெளியிட 8 முதல் 9 மாதங்கள் ஆனது. இப்போது, 45 முதல் 90 நாட்கள் மட்டுமே ஆகும். இது கொள்கை வகுப்பாளர்களுக்கும், மற்றவர்களுக்கும் சரியான நேரத்தில் தரவைப் பெற உதவுகிறது. அமைச்சகமானது புதிய முயற்சிகளையும் தொடங்கியது. இதில், PLFS-ன் கீழ் தொழிலாளர் குறிகாட்டிகளின் மாதாந்திர மதிப்பீடுகளும் இதில் அடங்கும். இணைக்கப்படாத நிறுவனங்களின் கணக்கெடுப்பின் கீழ் காலாண்டு மதிப்பீடுகளும் உள்ளன. இவை MoSPI-ன் முதன்மை ஆய்வுகளின் கீழ் தேவையான அளவு திரும்பத்திரும்ப தரவுகளை வழங்கும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி, நுகர்வோர் விலைக் குறியீடு மற்றும் IIP போன்ற முக்கியமான பொருளாதார குறிகாட்டிகளின் புதிய தொடர் 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் கிடைக்கும்.
பயனர்களின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, அமைச்சகத்தின் புள்ளிவிவர வெளியீடுகளும் உருவாகி வருகின்றன. கடந்த ஆண்டு, இது முதலீட்டுச்செலவு (CAPEX) கணக்கெடுப்பைத் தொடங்கியது. விரைவில், ஒருங்கிணைந்த சேவைகள் துறையின் இயக்கவியலை ஆய்வு செய்ய ASSSE-ஐ அறிமுகப்படுத்தும். தொழில்துறை உற்பத்திக் குறியீட்டை (Index of Industrial Production (IIP)) ஒத்த சேவைகள் உற்பத்திக் குறியீட்டையும் (Index of Services Production (ISP)) அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது. இந்த முயற்சிகள் மூலம், அமைச்சகம் வழங்க திட்டமிட்டுள்ள புள்ளிவிவர தயாரிப்புகளின் வரம்பை விரிவுபடுத்துகிறது. இது சிறந்த முடிவெடுப்பதை ஆதரிக்க உதவும்.
டிஜிட்டல் புரட்சி மற்றும் மின்-ஆளுமை முயற்சிகள் அமைச்சகங்கள் மற்றும் துறைகள் முழுவதும் அதிக அளவிலான தரவை உருவாக்குகின்றன. இதனால், தரவு சார்ந்த கொள்கை வகுப்பின் எதிர்காலம், பல தரவு மூலங்களிலிருந்து தகவல்களை இணைப்பதைப் பொறுத்தது. இது இந்த தரவுத்தொகுப்புகளின் மதிப்பை வெளிப்படுத்தவும் உதவும். இதற்கு ஒரு ஆதரவான சூழலை உருவாக்குவது மிகவும் முக்கியம். இந்த சூழலானது, அமைப்பு முழுவதும் ஒத்துழைப்பை ஊக்குவிக்க வேண்டும். மேலும், பயனர்கள் தரவை பயனுள்ள நுண்ணறிவுகளாக மாற்றவும் இது உதவ வேண்டும். இதுவே தொலைநோக்கின் (vision) மையமாக உள்ளது.
அரசாங்கத்தின் முக்கிய புள்ளிவிவர நிறுவனமாக அமைச்சகம், வலுவான நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைப்பை உருவாக்கி வருகிறது. இது நிர்வாக தரவுத்தொகுப்புகளை மிகவும் திறமையாகப் பயன்படுத்தவும் கொள்கை வகுப்பை மேம்படுத்தவும் உதவும்.
MoSPI-ன் முன்முயற்சிகளில் 2024 தரவுத்தொகுப்புகளின் தொகுப்பு, தனித்துவமான அடையாளங்காட்டிகளை அடையாளம் காணுதல் (identification of unique identifiers), புள்ளிவிவர தர கட்டமைப்பை உருவாக்குதல் (development of a statistical quality framework) மற்றும் கருத்துகள் மற்றும் வரையறைகளை ஒத்திசைத்தல் (harmonisation of concepts) ஆகியவை அடங்கும். இது அனைத்து தரவு தயாரிப்பாளர்களும் நிலையான வகைப்பாடுகளைப் பின்பற்றுவதை உறுதி செய்கிறது. இந்த படிகள் நிர்வாக தரவுத்தொகுப்புகளின் தரம், கண்டறியும் தன்மை மற்றும் பொருந்தக்கூடிய தன்மையை மேம்படுத்தும்.
தேசிய புள்ளிவிவர அமைப்பின் இராஜதந்திர ரீதியான மாற்றத்தில் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் (UTகள்) முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) மாநிலங்களில் புள்ளிவிவரங்களை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கிறது. இது குறிப்பாக அவர்களின் கணக்கெடுப்பு மற்றும் தரவு செயலாக்க திறன்களின் வளர்ச்சியை ஆதரிக்கிறது. இந்த ஆதரவு அவர்களுக்கு விரிவான, நுண்ணிய-நிலை புள்ளிவிவரங்களை (micro-level statistics) உருவாக்க உதவும். இத்தகைய தரவு மாநில மற்றும் யூனியன் பிரதேச மட்டத்தில் மேலும் உள்ளூர்மயமாக்கப்பட்ட தீர்வுகளை உருவாக்க உதவும்.
செயற்கை நுண்ணறிவு/இயந்திர கற்றல் (AI/ML) தொடர்பான பெரிய தரவு
இன்றைய உலகில், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் வேகமாக முன்னேறி வருகின்றன. AI/ML (செயற்கை நுண்ணறிவு/இயந்திர கற்றல்) மற்றும் பெரிய தரவுகளின் பயன்பாட்டைக் குறிப்பிடாமல் நவீனமயமாக்கல் பற்றிய எந்தவொரு விவாதமும் முழுமையடையாததாக உணர்கிறது. இந்த நிலையில் செல்ல, அமைச்சகம் ஒரு எதிர்கால நோக்கில் நடவடிக்கை எடுத்துள்ளது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களுக்காக இந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த புதுமை மற்றும் பரிசோதனைகளை நிறுவனமயமாக்கத் தொடங்கியுள்ளது.
அமைச்சகத்திற்குள் ஒரு முழுமையான செயல்பாட்டு தரவு கண்டுபிடிப்பு ஆய்வகம் (Data Innovation Lab) அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகம் பல்வேறு நிறுவனங்களுடன் தீவிரமாக செயல்படுகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை புள்ளிவிவர மதிப்புச் சங்கிலியில் ஒருங்கிணைப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதே இதன் குறிக்கோள் ஆகும். இது செயல்திறனை மேம்படுத்தவும் சிறந்த புள்ளிவிவர தயாரிப்புகளை உருவாக்கவும் உதவும்.
இருப்பினும், தரவின் அளவானது அதிகரிப்பது என்பது தானாகவே அது அதிகமாகப் பயன்படுத்தப்படும் என்று அர்த்தமல்ல. முடிவெடுப்பதற்கான தரவிலிருந்து அதிக மதிப்பைப் பெற, பயனர்கள் அதைப் புரிந்துகொண்டு திறம்பட பயன்படுத்த முடியும். அவர்கள் சிறந்த மற்றும் அதிகமான தரவைக் கேட்க வேண்டும். தரவு எவ்வாறு பகிரப்படுகிறது என்பதை மேம்படுத்துதல், நன்கு தொடர்புகொள்வது மற்றும் காலப்போக்கில் பயனர்களை ஈடுபாட்டுடன் வைத்திருப்பதன் மூலம் இதைச் செய்யலாம். பயன்படுத்த எளிதான e-Sankhyiki போர்டல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட மைக்ரோடேட்டா போர்ட்டலைத் (updated microdata portal) தொடங்குவதன் மூலம் தரவை அணுகுவதை அமைச்சகம் எளிதாக்குகிறது. அவர்கள் வழக்கமான தரவு பயனர் மாநாடுகள் மற்றும் பங்குதாரர்களுடன் சந்திப்புகளையும் நடத்துகிறார்கள். இந்த படிகள் தயாரிக்கப்பட்ட தரவில் பயனர்களின் கண்ணோட்டம் (user perspectives) சேர்க்க உதவுகின்றன.
பொதுத்துறை, கொள்கை வகுப்பிற்கான ஒரு இராஜதந்திர ரீதியிலான சொத்தாக தரவைப் பார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. தரவை ஒரு அதிகாரத்துவ துணைப் பொருளாக மட்டும் பார்க்கக்கூடாது. வளர்ந்த இந்தியாவை (Viksit Bharat) அடைவதற்கு தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பது அவசியம். தரவைப் பயன்படுத்த முழு அரசாங்க அணுகுமுறையைப் பயன்படுத்துவது முக்கியப் பகுதிகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்தும். இந்த பகுதிகளில் உள்ளடக்கிய வளர்ச்சி, நிலையான முன்னேற்றம் மற்றும் பயனுள்ள நிர்வாகம் ஆகியவை அடங்கும். இதை ஆதரிக்க, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) அதன் பங்கை மாற்றி வருகிறது. இது வெறும் தரவுகளைச் சேமிப்பதில் இருந்து கொள்கை நுண்ணறிவின் முக்கிய ஆதரவாளராக மாறும்.
கட்டுரையாளர் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் இணை அமைச்சர் (Minister of State) / (தனிப்பொறுப்பு).