இந்தியா-ஜப்பான் உறவில் உள்ள சவால்கள் யாவை? -ரோஷ்னி யாதவ், குஷ்பு குமாரி

 முக்கிய அம்சங்கள் :


மோடியும் அவரது ஜப்பானிய பிரதிநிதியான ஷிகெரு இஷிபாவும் 15-வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் (India-Japan Annual Summit) பங்கேற்பார்கள். மேலும், குறைகடத்தி திறமைக்கு (semiconductor prowess) பெயர் பெற்ற நகரமான சென்டாய்க்கு புல்லட் இரயிலில் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியாவும் ஜப்பானும் இருதரப்பு எரிசக்தி ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், டிஜிட்டல் ஒருங்கிணைப்பு தொடங்குதல் மற்றும் இந்தியா முழுவதும் இரயில்வே, சாலைகள் மற்றும் பாலங்களை உள்ளடக்கிய புதிய இயக்கமான கூட்டமைப்பைத் தொடங்குதல் ஆகியவற்றிலும் செயல்பட்டு வருகின்றன என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இது மோடியின் 8-வது ஜப்பான் நாட்டின் பயணம் என்றாலும், பிரதமர் இஷிபாவுடனான அவரது முதல் சந்திப்பு இதுவாகும். இந்த வருகை மூன்று முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது என்று வட்டாரங்கள் கூறுகின்றன. அவை பாதுகாப்பு; பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புதுமை; மற்றும் மக்களிடையே பரிமாற்றம் போன்றவை ஆகும்.


பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த 2008 கூட்டு பிரகடனத்தை மேம்படுத்துவதை நோக்கி இந்தியாவும் ஜப்பானும் நகரும். பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தையும் அவர்கள் மதிப்பாய்வு செய்வார்கள்.


மோடியும், இஷிபாவும் பொருளாதார பாதுகாப்பு முயற்சியை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி குறைக்கடத்திகள், முக்கியமான தாதுக்கள், AI, தொலைத்தொடர்பு மற்றும் சுத்தமான எரிசக்தி ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. 


இந்தியாவில் அதிக ஜப்பானிய முதலீடுகளை இரு நாடுகளும் ஊக்குவிக்கும். 2026-ம் ஆண்டுக்குள் பொது மற்றும் தனியார் முதலீடுகள் மற்றும் நிதியுதவியில் 5 டிரில்லியன் யென் (Yen) நாணயத்தின் இலக்கை அவர்கள் ஏற்கனவே நிர்ணயித்திருந்தனர்.


அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் திட்டத்தில் ஜப்பான் ஈடுபட்டுள்ளதால், இரு தரப்பினரும் ஒரு இயக்கக் கூட்டாண்மையைத் தொடங்குவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.


மக்களிடையேயான பரிமாற்றத்திற்காக, ஜப்பானின் வயதான மக்களை நிவர்த்தி செய்வதற்கான வழிகளையும், இந்தியாவின் இளையோர் மக்கள்தொகைக்குத் திறன் அளிப்பதற்கான தேவையையும் இரு தரப்பு நாடுகளும் ஆராய்வார்கள்.


இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை இரு பிரதமர்களும் மதிப்பாய்வு செய்வார்கள். இந்த மதிப்பாய்வு தற்காப்பு மற்றும் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் புதுமை மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்களை உள்ளடக்கும். அத்துடன் பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதிப்பார்கள்.


பிரதமர் நரேந்திர மோடியின் இந்த வாரம் ஆசிய சுற்றுப்பயணம் இந்திய இராஜதந்திரத்திற்கு இரட்டிப்பு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். சீனாவுடனான உறவுகளை எச்சரிக்கையுடன் முன்னெடுத்துச் செல்லும் அதே வேளையில், ஜப்பானுடனான இந்தியாவின் கூட்டாண்மைக்கு புதிய வேகத்தை வழங்க இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.


இந்தியாவின் உற்பத்தித் தொழில்கள் சீனாவுக்கு ஆபத்தான வகையில் பாதிக்கப்படக்கூடியவையாக உள்ளன. பெய்ஜிங்கின் அரிய பூமி காந்தங்களுக்கான தடைகள் மற்றும் ஆப்பிளின் ஐபோன் உற்பத்தியில் இருந்து சீன பொறியாளர்களின் விலகல் ஆகியவை, மூன்று தசாப்தங்களாக தொழில் கொள்கையில் புறக்கணிக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகளை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன.


"இந்தியாவில் தயாரிப்போம்" (Make in India) கொள்கையோ அல்லது "உள்ளூர் தயாரிப்புகளை வாங்குக" (buy swadeshi) என்ற தற்போதைய பிரச்சாரமோ டெல்லியின் இராஜதந்திர ரீதியில் சுயாட்சியை பெய்ஜிங்கைவிட மேம்படுத்தாது. குறிப்பிட்ட வர்த்தகத் தடைகள் தொடர்பாக சீனாவிடம் இருந்து நிவாரணம் பெற இந்தியா இப்போது நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது என்பது, எதிர்காலத்தில் பொருளாதார நம்பிக்கையின் தீவிரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் ரஷ்யாவின் பங்கு இப்போது ஒரு விவாதப் புள்ளியாக உள்ளது. ஜோ பைடன் நிர்வாகம் ஒரு காலத்தில் இந்தியா மலிவான ரஷ்ய எண்ணெயை வாங்குவதை ஒரு நிலைப்படுத்தும் நடவடிக்கையாகக் கருதியது. எவ்வாறாயினும், டிரம்பின் வெள்ளை மாளிகை, மாஸ்கோவுடனான எரிசக்தி உறவுகளை துண்டிக்க டெல்லியை நிர்ப்பந்திப்பதை அந்நியச் சக்தியாகக் கருதுகிறது.


SCO பெரும்பாலும் அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்த்து நிற்கும் உள்-ஆசிய மையமாகச் (inner-Asian club) சித்தரிக்கப்படுகிறது. முக்கிய காரணம் ஆழமான உள் முரண்பாடுகள். சீனாவுடனான இந்தியாவின் பதட்டமான உறவுகள் இதற்கு மேலும் சேர்க்கின்றன. பாகிஸ்தானுடனான அதன் சர்ச்சைகளும் சிரமங்களை உருவாக்குகின்றன.


தியான்ஜினில், பாகிஸ்தான் இந்தியாவுடனான உரையாடலுக்கு வலுவாக அழுத்தம் கொடுக்கலாம். இது ஆச்சரியமல்ல. சமீபத்திய ஆண்டுகளில், பாகிஸ்தானின் ராஜதந்திரம் மந்தமாகிவிட்டது. ஆனால், அமெரிக்காவுடனான சிறந்த உறவுகளும் சீனாவுடனான வலுவான கூட்டாண்மையும் அதற்கு புதிய சக்தியை அளித்துள்ளன.


தியான்ஜின் சந்திப்பு முக்கியமாக சீனாவுடனான இந்தியாவின் உறவுகளை உறுதிப்படுத்துவது பற்றியது. இதற்கு நேர்மாறாக, டோக்கியோ சந்திப்பு ஜப்பானுடனான இந்தியாவின் இராஜதந்திரக் கூட்டாண்மையை வலுப்படுத்துவது பற்றியது. பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புதிய திட்டங்கள் அங்கு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஜப்பானியத் தலைமையுடனான பிரதமர் மோடியின் பேச்சுவார்த்தைகள், வடகிழக்கு ஆசியாவில் நடக்கும் இடையூறுகள் குறித்த நேரடி புரிதலை இந்தியாவுக்கு வழங்கும்.


ஜப்பான், தென் கொரியா மற்றும் தைவான் ஆகியவை இப்போது அதிக வரிவிதிப்புகள், அதிக பாதுகாப்பு செலவினங்களுக்கான கடுமையான கோரிக்கைகள் மற்றும் செல்வத்தையும் தொழில்நுட்பத்தையும் அமெரிக்காவிற்கு மாற்றுவதில் ட்ரம்ப் நிர்வாகமானது கட்டாயப்படுத்துவதன் மூலம் அழுத்தங்களை எதிர்கொள்கின்றன.


இந்த நட்பு நாடுகள் இன்னும் அமெரிக்க பாதுகாப்பைச் சார்ந்துள்ளன. ஆனால் அவர்கள் இப்போது அதிக தன்னம்பிக்கை மற்றும் பன்முகத்தன்மையை ஆராய்ந்து வருகின்றனர். சமீபத்திய ஆண்டுகளில், ஆசியாவில் அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்றுவதில் கவனம் செலுத்தப்பட்டது. இப்போது, ​​இந்தியா ஆசியாவில் தனது சுயாதீன பங்கை வலுப்படுத்த விரும்புகிறது. இது ஜப்பான் மற்றும் பொதுவாக வடகிழக்கு ஆசியாவுடன் வலுவான இராஜதந்திர ஒத்துழைப்புக்கான இடத்தையும் உருவாக்கும்.


உங்களுக்குத் தெரியுமா? :


ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் இடையே முறையான உறவுகள் 1952-ல் தொடங்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பலதரப்பு சான் பிரான்சிஸ்கோ அமைதி ஒப்பந்தத்தில் (San Francisco Peace Treaty) கையெழுத்திடுவதற்குப் பதிலாக, ஜப்பான் மீண்டும் சர்வதேச சமூகத்தில் இணைவதற்கு மரியாதை மற்றும் சமத்துவம் உறுதி செய்யப்பட வேண்டும் என்று கருதி, ஜப்பானுடன் இருதரப்பு அமைதி ஒப்பந்தத்தை இந்தியா முடிவு செய்தது. 


1951-ல், இந்தியா முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் நடத்தியபோது, ​​அது ஜப்பானிய விளையாட்டு வீரர்களை பங்கேற்க அழைத்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பானியக் கொடி ஏற்றப்பட்ட முதல் நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்.


2024-ம் ஆண்டில் சமீபத்திய அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, ஜப்பானின் மொத்த மக்கள் தொகை 908,000-க்கும் அதிகமான மக்கள் குறைந்து 120.65 மில்லியனாக (அல்லது 12 கோடி) உள்ளது. 1968-க்குப் பிறகு இது மிகப்பெரிய மக்கள்தொகை வீழ்ச்சியாக இருந்தாலும், ஜப்பானிய மக்கள்தொகை குறைந்து வரும்  16-வது ஆண்டு இது என்று ஒரு DW அறிக்கை (DW report) கூறியது.


SCO-ன் தோற்றம் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகியவற்றை உள்ளடக்கிய "ஷாங்காய் ஐந்து" (Shanghai Five) 1996-ல் உருவாக்கப்பட்டது. 1991-ல் சோவியத் ஒன்றியம் 15 சுதந்திர நாடுகளாகக் கலைக்கப்பட்டவுடன், இப்பகுதியில் தீவிரவாத மதக் குழுக்கள் மற்றும் இனப் பதட்டங்கள் முன்னுக்கு வருவது பற்றிய கவலைகள் இருந்தன. இந்தச் சிக்கல்களை நிர்வகிக்க, பாதுகாப்பு விஷயங்களில் ஒத்துழைப்பதற்காக ஒரு குழு உருவாக்கப்பட்டது.


இதன் அடிப்படையில், SCO ஜூன் 15, 2001 அன்று ஷாங்காயில் ஒரு சர்வதேச அமைப்பாக நிறுவப்பட்டது. மேலும், உஸ்பெகிஸ்தானை 6-வது உறுப்பினராகவும் சேர்த்தது.


இன்று, இது 10 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. அவை இந்தியா, ஈரான், கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் பெலாரஸ் போன்றவை ஆகும். 2017-ல் இந்தியாவும் பாகிஸ்தானும் முழு உறுப்பினர்களாகின்றன. ஆப்கானிஸ்தானும் மங்கோலியாவும் பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றுள்ளன.



Original article:

Share: