குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களின் (PVTGs) எண்ணிக்கை குறித்து… - குஷ்பு குமாரி

 பழங்குடியினர் விவகார அமைச்சகம், இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையரிடம் (Registrar General and Census Commissioner of India (RGI)) வரவிருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மிகவும் ஒதுக்கப்பட்ட குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களை (PVTGs) சேர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு ஏன் முக்கியமானது? இதுவரை அவை எவ்வாறு கணக்கிடப்பட்டுள்ளன? இந்திய தலைமைப் பதிவாளரின்  பங்கு என்ன?


தற்போதைய செய்தி?


ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாக, வரவிருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடவடிக்கையில் மிகவும் ஓரங்கட்டப்பட்ட, குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களை சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு பழங்குடி விவகார அமைச்சகம் (Ministry of Tribal Affairs (MoTA)), இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையரை கேட்டுக் கொண்டுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


1. ஒப்புதல் அளிக்கப்பட்டால், மக்கள் தொகை கணக்கெடுப்பில் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள் தனித்தனியாக பட்டியலிடப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்தியாவில் 18 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் (அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்) முழுவதும் 75 பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கள் உள்ளன. பழங்குடி குழுக்கள் குறைந்த எழுத்தறிவு நிலைகள், புவியியல் தொலை தூரத்தன்மை, விவசாயத்திற்கு முந்தைய நிலைகள் மற்றும் பொருளாதார பின்தங்கிய நிலை ஆகியவற்றின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டன.


2. 1951ஆம் ஆண்டில்  நடத்தப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இருந்து, பட்டியல் சாதிகள் (Scheduled Castes (SCs)) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes (STs)) மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் மற்றும் தொடர்புடைய சமூக-பொருளாதார மற்றும் மக்கள்தொகை பண்புகள், அட்டவணைப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது.


3. அரசியலமைப்பின் பிரிவுகள் 341 மற்றும் 342-ன்படி, அரசியலமைப்பு (பட்டியல் சாதிகள்) ஆணை 1950 மற்றும் அரசியலமைப்பு (பட்டியல் பழங்குடியினர்) ஆணை 1950-ல் அறிவிக்கப்பட்ட பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர்  பட்டியல்களின்படி அவை கணக்கிடப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திற்கும் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர்களின் பட்டியல்கள் வேறுபட்டவை மற்றும் அவை அவ்வப்போது புதுப்பிக்கப்படும்.


4. முந்தைய 2011-ஆம் ஆண்டு  மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், பட்டியல் பழங்குடியினர் பிரிவின் கீழ் சுமார் 40 பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கள் 'ஒற்றை நுழைவு' (single entry) எனக் கணக்கிடப்பட்டன. ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரியும், பழங்குடி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஒடிசா மாநில பழங்குடி அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குநருமான பேராசிரியர் ஏ பி ஓட்டா கூறுகையில், மீதமிருக்கும் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள், பெரும்பாலும் பெரிய பட்டியல் பழங்குடியின சமூகங்களுக்குள் இருக்கும் துணைக்குழுக்கள், மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் தனித்தனியாக கணக்கிடப்படவில்லை. இது முக்கிய மக்கள்தொகைக் குறிகாட்டிகள் குறித்த குறிப்பிட்ட தரவு இல்லாததற்கு வழிவகுக்கிறது.


5. பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் திட்டம் (Pradhan Mantri Janjati Adivasi Nyaya Maha Abhiyan (PM-JANMAN)) போன்ற சமீபத்திய முயற்சிகள் பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கள் குறித்த சில தரவுகளைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது, குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களின் மதிப்பிடப்பட்ட மக்கள் தொகை 28 லட்சம் என்று ஒன்றிய கூறியது.


6. இருப்பினும், இந்த மாதம் மக்களவையில் பழங்குடி விவகார அமைச்சகம் (Ministry of Tribal Affairs (MoTA)) வழங்கிய பதிலின்படி, பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களின் மக்கள்தொகை 45.56 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம் (12.28 லட்சம்), மகாராஷ்டிரா (6.2 லட்சம்) மற்றும் ஆந்திரப் பிரதேசம் (4.9 லட்சம்) ஆகிய குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள்  மக்கள்தொகை அடிப்படையில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.


7. 2016-ஆம் ஆண்டில், மக்களவையில் பழங்குடி விவகார அமைச்சகம் வழங்கிய பதிலில், நாடு முழுவதும் பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களை அடையாளம் காண அமைச்சகத்தால் எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை என்று கூறியது. அமைச்சகத்தின் கூற்றுப்படி, சம்பந்தப்பட்ட மாநில அரசின் பரிந்துரைகள், ஒரு முழுமையான முன்மொழிவுடன், மாநிலத்தில் உள்ள சமூகத்தை குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களாக அடையாளம் காண்பதற்கான திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்நிபந்தனைகள் ஆகும்.


8. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்தியப் பதிவாளர் ஜெனரல் (RGI) சேகரித்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவு, ஒற்றைப் பதிவாகப் பட்டியலிடப்பட்டுள்ள 40 பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களின் மக்கள்தொகை விவரங்களை மட்டுமே உள்ளடக்கியது என்று பழங்குடி விவகார அமைச்சகம் விளக்கியது. எனவே, அனைத்து 75 பாதிக்கப்படக்கூடிய குறிப்பாக பழங்குடி குழுக்களுக்கான முழுமையான மக்கள்தொகைத் தரவு கிடைக்கவில்லை. இதனால், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களின் மாநில வாரியான மக்கள்தொகை சதவீதத்தைக் கணக்கிட இயலாது.


ஏன் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முக்கியமானது?


9. தனிமைப்படுத்தல், குறைந்த மக்கள்தொகை மற்றும் தனித்துவமான சமூக-பொருளாதார மற்றும் கலாச்சார பண்புகள் காரணமாக, குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அடிப்படை சேவைகளுக்கான வரையறுக்கப்பட்ட அணுகல், சமூக பாகுபாடு மற்றும் வளர்ச்சி மற்றும் இயற்கை பேரழிவுகளிலிருந்து இடம்பெயர்வதற்கான பாதிப்பு ஆகியவற்றுடன் அவர்கள் போராடுகிறார்கள். அவர்களுக்கு சிறிய அரசியல் பிரதிநிதித்துவம் உள்ளது. முடிவெடுப்பதில் அவர்கள் பங்கேற்பதைத் தடுக்கிறது.


10. மக்கள்தொகை கணக்கெடுப்பில் அவற்றைக் கணக்கிடுவது, அடிப்படைக் கட்டமைப்புகளை வழங்குவது முதல் கல்வி வரையிலான வளங்களை சிறந்த முறையில் ஒதுக்குவதில் அரசாங்கத்திற்கு உதவும். அரசாங்கங்கள் இலக்கு வைக்கப்பட்ட நலன் மற்றும் எதிர்காலத்திற்கான சிறந்த திட்டங்களை வழங்க இந்த கணக்கெடுப்பு பெரிதும் உதவும். இது நீதித்துறை, திட்டமிடுபவர்கள் மற்றும் அறிஞர்கள் இடம்பெயர்வு, நகரமயமாக்கல், வேலைவாய்ப்பு மற்றும் கருவுறுதல் ஆகியவற்றின் போக்குகளைப் புரிந்துகொள்ள உதவும்.


01. தேபார் ஆணையம் (Dhebar Commission) என்பது என்ன?


தேபர் ஆணையம், 1960ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அரசியலமைப்பின் பிரிவு 339-இன் கீழ் அமைக்கப்பட்டது. இது பழங்குடியினரின் பிரச்சினைகளை விசாரித்து அறிக்கை அளிக்கும் பல்வேறு பணிகளை மேற்கொண்டது. 1961ஆம் ஆண்டில் ஆணையம் தனது அறிக்கையில், பழங்குடியினரிடையே, மிகவும் பின்தங்கிய பழங்குடி குழுக்களுக்கு அரசாங்கத்திடமிருந்து அதிக உதவி தேவை என்று ஆணையம் தனது 1961 அறிக்கையில் கூறியது. இது ‘பழமையான பழங்குடி குழுக்கள்’ (Primitive Tribal Groups (PTG)) வகையை உருவாக்க வழிவகுத்தது. 2006-ஆம் ஆண்டில், இந்த வகை குழுக்கள் பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கள் (Particularly Vulnerable Tribal Groups (PVTGs)) என மறுபெயரிடப்பட்டது.


02. PM JANMAN திட்டம் என்றால் என்ன?


இது 75 பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களை இலக்காகக் கொண்டு ஜார்க்கண்டின் குந்தியில் ஜன்ஜாதிய கௌரவத் திவாஸ் தினத்தின் போது நவம்பர் 15, 2023 அன்று பிரதமரால் தொடங்கப்பட்டது. பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களுக்கு வீடுகள் மற்றும் குடியிருப்புகளுக்கு பாதுகாப்பான வீடு, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துக்கான மேம்பட்ட அணுகல், சாலை மற்றும் தொலைத்தொடர்பு இணைப்பு மற்றும் நிலையான வாழ்வாதார வாய்ப்புகள் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் (Registrar General and Census Commissioner of India (RGI)) குறித்து..


1. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தும் பொறுப்பு, இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்திடம் உள்ளது.


2. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இந்தியா இணையதளத்தின்படி, 1951-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரை ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கும் தற்காலிக அடிப்படையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அமைப்பு அமைக்கப்பட்டது. 1948-ஆம் ஆண்டில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அதிகாரிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகளுடன் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதற்கான திட்டத்தை வழங்குவதற்காக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு சட்டம் (Census Act) இயற்றப்பட்டது.


3. மக்கள்தொகையின் அளவு, அதன் வளர்ச்சி போன்றவற்றின் முறையான புள்ளிவிவரங்களை சேகரிப்பதற்காக, இந்திய அரசு, மே 1949-ல் உள்துறை அமைச்சகத்தில் தலைமைப் பதிவாளர் மற்றும் முன்னாள் அதிகாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையரின் கீழ் ஒரு அமைப்பை உருவாக்க முடிவு செய்தது.


4. முக்கிய புள்ளியியல் மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு உள்ளிட்ட மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் குறித்த தரவுகளை உருவாக்குவதற்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பின்னர், இந்த அலுவலகத்திற்கு நாட்டில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டத்தை, (Registration of Births and Deaths Act, 1969) செயல்படுத்தும் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது.


5. ஸ்ரீ மிருதுஞ்சய் குமார் நாராயண் தற்போதைய இந்திய தலைமைப் பதிவாளர் ஆவார். அவர் நவம்பர் 1, 2022 அன்று பதவியேற்றார். கடந்த ஆண்டு, அவரது காலம் ஆகஸ்ட் 4, 2026 அல்லது மறு அறிவிப்பு வரும்வரை, எது முதலில் வருகிறதோ அதுவரை நீட்டிக்கப்பட்டது.



Original article:

Share: