2024ல் இந்தியப் பொருளாதாரம் : குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு தயாராக உள்ளது -மதன் சப்னாவிஸ்

 2024 ஆம் ஆண்டில்,  தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம் உருவாகலாம். இதில், நாம் கவனிக்க வேண்டியவை என்ன? 


2024 இந்தியாவிற்கு மிக முக்கியமான ஆண்டாக இருக்கும்.  தேசிய தேர்தல்கள் ஏப்ரல்-மே மாதங்களில் நடக்க வாய்ப்புள்ளது. இதனால், அவற்றின் முடிவுகளின் கொள்கைகளை பாதிக்கும். இந்தியா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதில், நாம் எதைக் கவனிக்க வேண்டும்? 

 

முதலில், இவற்றில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை வட்டி விகிதங்கள் ஆகும். சிலர் அவற்றைக் குறைக்க பரிந்துரைக்கின்றனர். ஆனால், அது எப்போது, ​​எவ்வளவு என்பது பற்றி முக்கியமாக பார்க்கப்படுகிறது. 2024-25 முதல் காலாண்டு வரை பணவீக்கம் 5% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விகிதங்களைக் குறைப்பது கடினமாக இருக்கும். இதில், பணவீக்கம் 5% க்கு கீழே குறையும் போது இதற்கான வாய்ப்பு உருவாகலாம், இது புதிய அரசாங்கம் பதவியேற்ற பிறகு இரண்டாவது காலாண்டில் இருக்கலாம். இருப்பினும், கடந்த பத்தாண்டுகளில் வழக்கமான ரெப்போ விகிதம் (repo rate) 6-6.5% ஆக உள்ளது. அதை 4% ஆகக் குறைப்பது வழக்கமான நடைமுறைக்குத் திரும்புவதாகும். எதிர்பார்க்கப்படும் 5% பணவீக்க விகிதத்துடன், 1% உண்மையான ரெப்போ விகிதத்தை பராமரிப்பது என்பது கொள்கை விகிதத்தில் அதிகபட்சம் 50 அடிப்படை புள்ளிகள் (Basis Points (BPS)) குறைப்பதாகும். 

 

இரண்டாவதாக, பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் ஒன்றிய பட்ஜெட்டால் குறிப்பிடத்தக்க வாக்கெடுப்பு முடிவை எடுக்க முடியாது. புதிய அரசாங்கம் அமைந்தவுடன் அவர்கள் மேற்கொள்ளப்படும் திட்டமானது அவற்றின் வளர்ச்சிக் கணிப்பு, நிதிப் பற்றாக்குறையைத் தொடர்ந்து கண்காணிக்கப்படும் முதல் செயல்பாடாக இருக்கும். இதில், 3 சதவீத இலக்குடன் ஒப்பிடும்போது 5.9 சதவீத பற்றாக்குறை இன்னும் அதிகமாக உள்ளது. இதனால் 4.5 சதவீத இலக்கு என்பது 2025-26க்கு ஒரு சமநிலையாக இருக்கும். செலவினங்களின் தரமும் கூர்ந்து கண்காணிக்கப்படும் மூலதனச் செலவின் அதிகரிப்பு  (capex momentum) நீடிக்குமா என்பதுதான் கேள்வி.     


மூன்றாவதாக, பருவமழை முக்கியமானதாக இருக்கும். பெருநிறுவனங்கள், பெரும்பாலும் நகர்ப்புற தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், அதே காரணத்தை கிராமப்புற தேவைகளுக்கு கூற முடியாது என்று புகார் கூறுகின்றன. விவசாயம் கணிசமான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் அதே வேளையில், அது பொருளாதாரத்திற்கு குறைவான பங்களிப்பை அளிக்கிறது. இருப்பினும், விவசாயத்திற்கும், மற்ற தொழில்களுக்கும் இடையே தொடர்புகள் உள்ளன. 2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டில் காரீஃப் அறுவடை (kharif harvest) சிறப்பாக இருந்தால், அது தொழில் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு நல்லது. இரு சக்கர வாகனம், அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருட்கள் (Fast-moving consumer goods (FMCG)) மற்றும் டிராக்டர் துறைகள் மழையின் முன்னேற்றத்தை நெருக்கமாக கண்காணிக்கும்.


நான்காவதாக, இதுவரையிலான பொருளாதாரத்தின் செயல்திறனைக் கருத்தில் கொண்டு, 2023-24க்கான கணிப்புகள் மேல்நோக்கி திருத்தப்பட்டுள்ளன (revised upwards). ஆரம்பத்தில் பழமைவாத மதிப்பீடுகள் இருந்தபோதிலும், உலகப் பொருளாதார நிலைமை மேம்பட்டுள்ளது. மேலும் போரின் தாக்கங்கள் நாடுகளால் உள்வாங்கப்பட்டு வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சிக்கு எந்த காரணமும் இல்லை. தற்போதைய வளர்ச்சி விகிதத்தை பராமரிப்பது நேர்மறையானது. ஆனால் 7%க்கு மேல் செல்வது மன உறுதியை அதிகரிக்கும்.


ஐந்தாவது, தனியார் முதலீடு தொடர்பானது, இது முன்னேற்றத்தின் அறிகுறிகளைக் காட்டுகிறது. ஆனால் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் அதிக நடவடிக்கை எடுக்காமல் முதலீடுகளைப் பற்றி விவாதித்து வருகின்றனர். முதலீட்டு விகிதங்கள் நிலையானதாக உள்ளதால்,  விமான போக்குவரத்து, விருந்தோம்பல், எஃகு மற்றும் சிமென்ட் போன்ற உள்கட்டமைப்பு தொடர்பான தொழில்களிலும் முதலீடுகள் உள்ளன. தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் அரசு செலவினங்களைப் பற்றி பேசினாலும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை.


ஆறாவது, பெருநிறுவன துறையின் செயல்திறனை கணிப்பது கடினம். கடந்த ஆண்டு, தேவை காரணமாக, நிறுவனங்கள் விற்பனை வளர்ச்சியைக் கண்டன.  ஆனால், உள்ளீடு செலவுகள் கடுமையாக உயர்ந்ததால் லாபம் அழுத்தத்திற்கு உள்ளானது. இந்த ஆண்டு, நிறுவனத்தின் விற்பனை குறைந்திருந்தாலும், உள்ளீட்டு விலைகள் (input prices) சாதகமானதால் அதிக லாபம் கிடைத்துள்ளது. இரண்டு வேறுபாடுகளும் அடுத்த ஆண்டு நிலையானதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயமானது. இது மேலும் பங்குச் சந்தையை பாதிக்கும்.    


பொருளாதாரம் வளர்ச்சியின் விளிம்பில் தயாராக இருப்பதைக் கருத்தில் கொண்டு, இது ஒரு சுவாரஸ்யமான ஆண்டாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. 


எழுத்தாளர் பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர், மற்றும் ’Corporate Quirks: The darker side of the sun’ என்ற நூலின் ஆசிரியர்.




Original article:

Share: