காலநிலை சவால்களை எதிர்கொள்வதில் நிதி ஆணையத்தின் பங்கு -மது வர்மா, ஸ்வபன் மெஹ்ரா

 நிதி ஆணையம் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். காலநிலை சவால்களுக்கு இந்தியாவை தயார்படுத்துவதில் ஒரு நிலையான நிதி முடிவெடுப்பதில்  ஒரு தலைவராக மாற வேண்டும். இந்தியாவுக்கு நிதித் திட்டம் தேவை. இத்திட்டம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தேவையுடன் பொருளாதார வளர்ச்சியை சமநிலைப்படுத்த வேண்டும். 


காடுகளை அதிகரிப்பதற்கும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் உலகளாவிய முயற்சிகளில் இந்தியா முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்த நடவடிக்கைகள், சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளை வலுப்படுத்த உதவியது. தற்போதுள்ள காடுகளைப் பாதுகாப்பது மற்றும் காடுகளின் அடர்த்தியை அதிகரிப்பது கார்பனை நிலத்தடியில் சேமிக்க உதவுகிறது. இது புவி வெப்பமயமாதலை குறைக்க உதவுகிறது.


வன வளங்களும் அவற்றின் பாதுகாப்பும் இந்திய மாநிலங்களின் நிதித் திறன்களையும் தேவைகளையும் பாதிக்கிறது. இருப்பினும், காடுகளைப் பாதுகாப்பது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். இங்குதான் நிதி கூட்டாட்சி என்ற கருத்து ஒரு பாத்திரத்தை வகிக்கிறது. நிதிக் கூட்டாட்சி முறையை நிர்வகிக்கும் இந்திய நிதி ஆணையம் (Finance Commission (FC)) முன்பு மாநிலங்கள் தங்கள் காடுகளை நிதிச் சலுகைகளுடன் பராமரிக்கவும் விரிவுபடுத்தவும் ஊக்குவித்துள்ளது.


12வது நிதி ஆணையம் 2005-2010 வரை பல்வேறு மாநிலங்களின் வனப் பாதுகாப்புக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்தது. 13வது நிதி ஆணையம் 2010-2015 இதை மேலும் ரூ.5,000 கோடியாக உயர்த்தியது. 14வது நிதி ஆணையம் 2015 முதல் 2020 வரை ஒரு ஆய்வின் பரிந்துரைகளைப் பின்பற்றி காடுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பங்கிற்கு கவனம் செலுத்தியது. ஒவ்வொரு மாநிலத்தின் வனப் பரப்பின் அடிப்படையில், வகுக்கக்கூடிய மத்திய வரிக் குழுவில் 7.5% சூழலியல் மற்றும் காடுகளுக்கு ஒதுக்கப்பட்டது. 15வது நிதி ஆணையம் 2021–22 முதல் 2025–26 வரை இந்த பங்கை 10% மாக உயர்த்தியது. மாநிலங்களின் வனப்பகுதி மற்றும் அடர்த்தியின் அடிப்படையில் ரூ. 4.5 லட்சம் கோடிக்கு மேல் விநியோகித்ததன் மூலம், 15வது நிதி ஆணையம் உலகிலேயே சுற்றுச்சூழல் சேவைகளுக்கான மிகப்பெரிய கட்டணமாக (payment for ecosystem services (PES)) மாறியது. காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராட ஆணையம் மானியங்களையும் வழங்கியது.


கடந்த ஆண்டு நவம்பரில், இந்திய அரசாங்கம் 2026-31 ஆண்டுகளுக்கான வரி விநியோகத்தைப் பற்றி விவாதிக்க 16வது நிதிக் குழுவை அமைத்தது. இந்தியாவிற்கு இது ஒரு முக்கியமான நேரம், குறிப்பாக பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் அதன் கடமைகளை கருத்தில் கொண்டு. இந்தியா தனது பசுமை இல்ல வாயுக்கள் (Greenhouse gases(GHG)) உமிழ்வை 33-35% குறைத்து, 2030 ஆம் ஆண்டிற்குள் 2.5 முதல் 3 பில்லியன் டன்கள் வரை கார்பன் டை ஆக்சைடின் கூடுதல் கார்பன் உறிஞ்சிகளை (carbon sink) உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் அரசாங்கம் தேசிய கார்பன் சந்தை (National Carbon Market) மற்றும் தேசிய பசுமைக் கடன் சந்தையை (National Green Credit Market) அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த சந்தை கருவிகளின் வெற்றியை உறுதி செய்வதில் 16வது நிதி ஆணையம் முக்கிய பங்கு வகிக்க முடியும்.


நிதி ஆணையம் பின்வரும் வழிகளில் பங்களிக்க முடியும்:

முதலாவதாக, வரிப் பகிர்வு சூத்திரத்தில் (tax devolution formula) காலநிலை பாதிப்பு மற்றும் மாநிலங்களின் உமிழ்வு தீவிரம்  (mission intensity) ஆகியவற்றைச் சேர்ப்பது; இந்த அணுகுமுறை பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளுடன் (Nationally Determined Contributions (NDCs)) இணைந்த நடவடிக்கைகளை ஊக்குவிக்கும். செயல்திறனை திறம்பட ஊக்குவிக்கும் ஒரு சூத்திரத்தை உருவாக்குவதில் சவாலாக இருக்கும். 


இரண்டாவதாக, பல்வேறு துறைகளுக்கான செயல்திறன் அடிப்படையிலான மானியங்களை (performance-based grants) நிதி ஆணையம் பரிசீலிக்கலாம். இந்தியாவின் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (Nationally Determined Contributions (NDCs)) மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals (SDGs)) அடைவதற்கு இத்தகைய துறை சார்ந்த மானியங்கள் இன்றியமையாதவை. உமிழ்வைக் குறைப்பது என்பது ஆற்றல் மற்றும் போக்குவரத்துத் துறைகளில் கார்பன் நீக்கம் (decarbonisation) செய்வது, நிலம் மற்றும் காடுகளை நிலையான முறையில் நிர்வகித்தல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை ஊக்குவித்தல். கடுமையான மாசு சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, தூய்மையான ஆற்றலுக்கு முன்னுரிமை அளிப்பது நிதி ஆணையத்தின் நோக்கங்களில் ஒன்றாக இருக்க வேண்டும்.  


வெள்ள அபாயங்களை நிர்வகிப்பதற்கு, முக்கியமாக பயிர்களை எரித்தல் மற்றும் சதுப்புநிலங்களை மீட்டெடுப்பது போன்ற தொடர்ச்சியான பிரச்சினைகளுக்கு கணிசமான நிதி தேவைப்படுகிறது. இதேபோல், பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் காட்டுத் தீயின் நிகழ்வுகள், நீண்ட கால வறட்சியால் உந்தப்பட்டு, இயற்கை மீளுருவாக்கம் சுழற்சியின் ஒரு பகுதியாக இல்லாமல், மாறிவரும் காலநிலை வடிவங்களின் விளைவாகும். இந்த சுற்றுச்சூழல் சவால்களுக்கு நிதி ஆணையம் தீர்வு காண வேண்டும்.


இந்தியாவில் பல்வேறு பகுதிகளின் காலநிலை பாதிப்பை விவரிக்கும் பல ஆய்வுகள் உள்ளன. கொள்கை வகுப்பாளர்களுக்கு பல்வேறு நிலைகளில் உள்ள மாசுபாடு இருப்புக்களுக்கான அணுகல் உள்ளது. சுற்றுச்சூழல் சீரழிவை மதிப்பிடுவதற்கும் காட்டுத் தீயின் இயக்கவியலைப் புரிந்துகொள்வதற்கும் தொலை உணர்வு (Remote sensing) தரவு பயனுள்ளதாக இருக்கும். 16வது நிதி ஆணையத்தின் வல்லுநர்கள் இந்த அறிவியல் தரவைப் பயன்படுத்தி மாநிலங்களின் பாதிப்பு மற்றும் தணிப்பதில் அவர்கள் எடுக்கும் முயற்சிகள் இரண்டையும் தீர்மானிக்க முடியும். நிதி ஒதுக்கீடு செய்வதற்கான செயல்திறன் அடிப்படையிலான அமைப்பை உருவாக்க இந்தத் தகவல் அவர்களுக்கு உதவும். நிதி ஆணையத்தின்  பங்கு ஒரு நிதி நடுவராக இருந்து இந்தியாவின் காலநிலை தயார்நிலையின் ஊக்குவிப்பாளராக மாற வேண்டும். சுற்றுச்சூழல் தேவைகளுடன் பொருளாதார வளர்ச்சியை சமநிலைப்படுத்தும் நிதித் திட்டம் இந்தியாவுக்குத் தேவை. 16வது நிதி ஆணையம்,  மிகவும் பொருத்தமான நிறுவனமாக, காலநிலை சவால்களை எதிர்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.


இந்தக் கட்டுரையின் ஆசிரியர்கள், வர்மா மூத்த பொருளாதார ஆலோசகராகவும், மெஹ்ரா புது தில்லியின் ஐயோரா சுற்றுச்சூழல் சொல்யூஷன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். 14வது மற்றும் 15வது நிதிக் கமிஷன்களுக்கு சுற்றுச்சூழல் சூத்திரத்தை பரிந்துரைப்பதற்கான ஆய்வுக்கு தலைமை தாங்கினர். 




Original article:

Share: