கருப்பை வாய் புற்றுநோய்க்கு (cervical cancer) எதிராக தடுப்பூசி வரவேற்கத்தக்கது. இது, இந்திய பெண்களை பெரிதும் பாதிக்கும் ஒரு பெரிய நோயை ஒழிக்க உதவும்.
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான (cervical cancer) தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்கத் தொடங்கும். முதல் கட்ட தடுப்பூசிக்கு 6.5-7 கோடி டோஸ்கள் அரசாங்கத்திடம் கையிருப்பில் உள்ளதும் பிரச்சாரம் தொடங்கும். இது பொது சுகாதாரத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் சாதகமான படியாகும். இந்தியாவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் (cervical cancer) அதிக சுமை உள்ளது, இது மார்பகப் புற்றுநோய்க்குப் (breast cancer) பிறகு இந்தியப் பெண்களிடையே இரண்டாவது மிகவும் பரவும் பொதுவான புற்றுநோயாகும்.
செர்வாக் (Cervac) என்பது இந்தியத் தயாரிப்பான தடுப்பூசி, இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் (Serum Institute of India (SII)) உருவாக்கப்பட்டது. இது சுமார் ஒரு வருடமாக சந்தையில் கிடைக்கிறது.
புனேவை தளமாகக் கொண்ட நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் 20-30 லட்சம் தடுப்பூசிகளை தயாரிக்க முடியும். ஆனால் தடுப்பூசியின் விலை 2,000 ரூபாய், இது இந்தியாவில் பலருக்கு மிகவும் விலை உயர்ந்தது ஆகும். மேலும், மனித பாப்பிலோமா வைரஸால் (human papilloma virus (HPV)) ஏற்படும் நோயைப் பற்றி பெரும்பாலான மக்களுக்கு அதிகம் தெரியாது, இது கிட்டத்தட்ட 85% கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் (cervical cancer) நிகழ்வுகளுக்கு காரணமாகும். இதை நிவர்த்தி செய்ய, 9 முதல் 14 வயதுடைய சிறுமிகளை இலக்காகக் கொண்ட ஒரு தீவிர தடுப்பூசி முயற்சி குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) ஒரு பொதுவான நுண்ணுயிர். தடுப்பூசிகள் மற்றும் பரிசோதனை காரணமாக பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் இது குறைவான தீங்கு விளைவிக்கும். உலகளாவிய உத்தியானது பெண்களின் 35 வயதிற்குள் மற்றும் மீண்டும் 45 வயதிற்குள் குறைந்தபட்சம் இரண்டு பரிசோதனைகளை ஊக்குவிக்கிறது. இது இந்தியாவில் அடிக்கடி நடப்பதில்லை. 2018 ஆம் ஆண்டில், நோய்த்தடுப்புக்கான இந்தியாவின் தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (National Technical Advisory Group) மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசிகளை உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டத்தில் (Universal Immunisation Programme (UIP)) சேர்க்க பரிந்துரைத்தது. இருப்பினும், தடுப்பூசிகள் விலை உயர்ந்தவையாக இருந்தன. மெர்க் மற்றும் கிளாக்ஸோ ஸ்மித்க்லைன் (Merck and Glaxo Smithkline) தயாரிக்கப்பட்ட தடுப்பூசியின் விலை ரூ.4,000 க்கு மேலாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் 2.5 கோடி புதிதாகப் பிறந்த குழந்தைகளுடனும், 3 கோடி கர்ப்பிணிப் பெண்களுடனும் உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டத்தில் (Universal Immunisation Programme (UIP)) செயல்படுகிறது. இளம் பெண்களுக்கு தடுப்பூசி போடும் திறன்களை நிரூபித்துள்ளது. இது இந்தியாவின் பாரம்பரிய பொது சுகாதாரப் பாதுகாப்பில் உள்ள சிக்கல்களைக் கையாண்டுள்ளது. கோவிட் நோய்க்கு எதிராக மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த நேரத்தில் தடுப்பூசிகள் பற்றிய கட்டுக்கதைகளை அகற்றுவதற்கான முயற்சிகள் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசிகளுக்கும் உதவக்கூடும்.
செர்வாக் (Cervac), மருத்துவ பரிசோதனைகளில் நல்ல முடிவுகளின் காரணமாக, 2022-ல் இந்தியாவின் பொது மருந்துக் கட்டுப்பாட்டாளரிடமிருந்து (Drugs Controller General of India) அனுமதியைப் பெற்றது. இது அனைத்து மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) வகைகளுக்கும் எதிராக தேவையானதை விட 1,000 மடங்கு அதிகமான ஆன்டிபாடிகளை உருவாக்கியது. இந்தியாவின் சீரம் நிறுவனம் தடுப்பூசியைக் கொண்டுவந்துள்ளது ஒரு பாராட்டத்தக்க சாதனை அகும். இது தொற்றுநோய்களின் போது உற்பத்தியை அதிகரிக்கும் திறனைக் காட்டியது. அடுத்த சில மாதங்களில், மக்கள் சுகாதார அதிகாரிகளையும் புனேவை தளமாகக் கொண்ட நிறுவனத்தையும் உன்னிப்பாகக் கவனிப்பார்கள். நம்பிக்கையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.