பொது சுகாதார மேம்பாட்டிற்கு தடையாக இருக்கும் சவால்களை நாம் திறம்பட எதிர்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து எட்டாவது ஆண்டாக தூய்மை கணக்கெடுப்புக்கான விருதுகளை (Swachh Survekshan awards) மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் நிகழ்வானது, பொது சுகாதாரத்தின் பல்வேறு அம்சங்களில் சிறந்து விளங்கும் நகரங்களுக்கு விருதுகளை வழங்குகிறது. இந்த ஆண்டு இந்தியாவின் தூய்மையான நகரமாக மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் ஏழாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தூர் இப்போது இந்த பெருமையை குஜராத்தின் சூரத்துடன் பகிர்ந்து கொள்கிறது. கடந்த ஆண்டு சூரத் இரண்டாம் இடத்தில் இருந்தது. கடந்த வருடங்களில் சூரத் தொடர்ந்து உயர்ந்த இடத்தில் இருப்பதால் ஆச்சரியப்படுவதற்கில்லை. போபால், இந்தூர், சூரத் மற்றும் விசாகப்பட்டினம் ஆகியவை பல ஆண்டுகளாகத் தங்கள் உயர் நிலைகளைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. இதில், முதல் 10 இடங்களுக்கு அப்பால் சில மாற்றங்கள் உள்ளன. அகமதாபாத், சண்டிகர் மற்றும் குவாலியர் போன்ற நகரங்கள் ஏற்ற இறக்கங்களைக் காட்டுகின்றன. ஆனால் சிறந்த நகரங்களின் நிலைத்தன்மை ஓரளவு தேக்க நிலையைக் குறிக்கிறது.
தூய்மை கணக்கெடுப்பு (Swachh Survekshan) ஒரு சுவாரஸ்யமான அம்சத்தைக் கொண்டுள்ளது: இது பல துணை வகைகளைக் கொண்டுள்ளது. இது குறைந்த பட்சம் ஒரு பிரிவில் அதிக மதிப்பெண் பெற அதிக நகரங்களை அனுமதிக்கிறது. மக்கள்தொகை அடிப்படையில் நகரங்களைப் பிரிப்பது அர்த்தமுள்ளதாக இருந்தாலும், சில வகைப்பாடுகள் நம்பத்தகுந்தவை அல்ல. மத்தியப் பிரதேசத்தில் உள்ள மோவ், ‘தூய்மையான இராணுவ முகாம் நகரமாக’ (Cleanest cantonment town) வென்றது. வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் ஆகியவை 'கங்கையில் தூய்மையான நகரம்' (Cleanest Ganga town) என்ற பெருமையை பெற்றுள்ளன. சண்டிகர், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான நகரம் (Cities safest for sanitation workers) என்ற பெருமையைப் பெற்றுள்ளது . இந்த அணுகுமுறைக்கு விமர்சனங்கள் உள்ளன. காவிரி அல்லது நர்மதை போன்ற மற்ற நதிகளை ஒட்டிய தூய்மையான நகரங்களுக்கு ஏன் வகைகள் இல்லை என்பது ஒரு கேள்வி.
இந்த தரவரிசைகளின் முக்கிய குறிக்கோள், நகரங்கள், கிராமங்கள் மற்றும் பள்ளிகளை மேம்படுத்த ஊக்குவிப்பதாகும். இது விளையாட்டில் நன்றாக வேலை செய்கிறது. ஆனால் பொது சுகாதாரத்தில் வேறுபட்டது. இது ஒரு நகரம் சோம்பேறியாக அல்லது உழைப்பாளியாக இருப்பதைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல. வரலாறு, பொருளாதார நிலைமைகள் மற்றும் அதிகாரத்தின் அருகாமை ஆகியவற்றால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. அதே சில நகரங்கள் எப்போதும் முதலிடத்தில் இருப்பதால், சுகாதாரத்தை மேம்படுத்துவதில் மற்றவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு குறைவான கவனம் செலுத்தப்படுகிறது.
எதிர்கால கருத்துக்கணிப்புகளுக்கான ஒரு பரிந்துரையானது, தொடர்ந்து சிறந்து விளங்குபவர்களை சில ஆண்டுகளுக்கு ஓய்வு பெறச்செய்வதாகும். அவர்கள் ஏற்கனவே பயனுள்ள அமைப்புகளை நிறுவியுள்ளனர். இது மற்ற நகரங்களுக்கும் அவற்றின் குறிப்பிட்ட சவால்களுக்கும் கவனம் செலுத்தும். குடிமைச் சுகாதாரம் (civic sanitation) நிலையானதாக இருக்க, அது வெறும் எண்களின் விளையாட்டாக மாறாமல் இருப்பதை உறுதிசெய்து அரசாங்கம் தலையீடு செய்வது முக்கியம்.