பள்ளியில் மொத்த சேர்க்கை விகிதம் குறைவாக இருந்தாலும், போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள்
தெலுங்கானாவில் கல்வியில் தனித்துவமான சூழ்நிலை உள்ளது. அதன் மாணவர்கள் அகில இந்திய கூட்டு நுழைவுத் தேர்வு போன்ற தேசியத் தேர்வுகளில் சிறந்து விளங்குகிறார்கள். 2023 ஆம் ஆண்டில், 43 மாணவர்களில் 11 பேர் 100 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றனர் இது நாட்டிலேயே மிக உயர்ந்தது. ஆனால் 2022 ஆண்டு கல்வி நிலை அறிக்கை 14-18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாத அதிக எண்ணிக்கை கொண்ட மாநிலமாக தெலுங்கான உள்ளது. ஆனால் தேசியத் தேர்வுகளில் வெற்றிபெறும் மாணவர்களும் இதே வயதைச் சேர்ந்தவர்கள்.
மோசமான சமூகக் குறியீடுகளைக் கொண்ட பிற மாநிலங்கள் தெலுங்கானாவை விட சிறப்பாக உள்ளன. தெலுங்கானாவில் 14-18 வயதுடையவர்களில் 22.1% பேர் பள்ளிக்கு செல்லவில்லை, பள்ளி செல்ல குழந்தைகளின் தேசிய சராசரி 13.2% ஆகும். நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது தெலுங்கானாவில் உள்ள மாணவர்களுக்கும் அடிப்படை கணிதத் திறன்கள் இல்லை. உதாரணமாக, தேசிய அளவில், 43.3% மாணவர்கள் அடிப்படை எண்கணிதத்தை செய்ய முடியும், ஆனால் தெலுங்கானாவில், அதே வயதுக்குட்பட்டவர்களில் 19.75% மட்டுமே செய்ய முடியும்.
அடுத்தடுத்த அரசாங்கங்கள் கல்விக்கு ஒதுக்கிய குறைந்த முதலீடுதான் பிரச்சினையின் மையமாக உள்ளது. தெலுங்கானாவில் 3,274 ஜூனியர் கல்லூரிகள் உள்ளன, ஆனால் 420 மட்டுமே அரசால் நிர்வகிக்கப்படுகின்றன. 1,349 தனியார் ஜூனியர் கல்லூரிகள், பெரும்பாலும் நகரங்களில் உள்ளன. இதன் பொருள் பல மாணவர்கள் கல்லூரியில் சேர வெகுதூரம் பயணிக்க வேண்டும். மேலும் அரசு விடுதிகளுடன் கூடிய ஜூனியர் கல்லூரிகள் பிற வசதிகளையும் வழங்குகிறது. இருப்பினும், இவற்றில் சேருவதற்க்கு போட்டித்தேர்வு உள்ளது. இந்த போட்டித்தேர்வு பல மாணவர்களை கல்வி அமைப்பிலிருந்து விலக்கிவைக்கிறது.
பதவியில் இருந்த காங்கிரஸ் அரசின் இடைக்கால பட்ஜெட் சிறந்த கல்விக்காக அதிக நிதி தேவை என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. நிதியமைச்சர் மல்லு பாட்டி விக்ரமார்கா தனது முதல் பட்ஜெட் உரையில் பள்ளிக் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் கூறினார். வசதிகள் மற்றும் திட்டங்களுக்கான வழக்கமான நிதி டிஜிட்டல் வகுப்பறைகளை அமைப்பது ஆகியவை திட்டத்தில் அடங்கும். மேலும் கல்விக்கான நிதி 2023-24ல் ₹18,955 கோடியிலிருந்து ₹21,839 கோடியாக 15.21% உயர்த்தப்பட்டது. இருப்பினும், இந்த அதிகரிப்பு போதுமானதாக கருதப்படவில்லை. தெலுங்கானா மாநிலத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக கல்விக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை. 2014-15ல் கல்விக்காக 10.89% நிதி ஒதுக்கப்பட்டது. அதே விகிதத்தில் மாநிலம் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்திருந்தால், 2024-25 ஆம் ஆண்டிற்கான கல்விக்கான பட்ஜெட் ₹30,044.53 கோடியாக இருக்க வேண்டும்.
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (Telangana Rashtra Samithi) ஆட்சிக்கு வந்தபோது, ஏழைகளுக்கு மழலையர் பள்ளி முதல் முதுகலை வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உறுதியளித்தது. ஆனால், போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. முன்னாள் அமைச்சர் கே.டி.ராமராவின் தொகுதியான சிர்சிலாவில் ஒரு காட்சிக்கூட வசதியை மட்டுமே அரசால் கட்ட முடிந்தது, மேலும் இது அரசு நிதி இல்லாமல் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (Corporate Social Responsibility) திட்டம் மூலம் நிதியளிக்கப்பட்டது.
மாநிலத்தில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பள்ளி வசதிகளின் மோசமான நிலை குறித்து கவனத்தை ஈர்க்கின்றன. சுவர்கள் இல்லாத பள்ளி வகுப்பறைகள், பழுதடைந்த கழிவறைகள் மற்றும் பள்ளிகளுக்குள் சுற்றித் திரியும் கால்நடைகளின் படங்களை அவர்கள் சமூக வலைதலங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள். மேலும் சுத்தமான கழிப்பறைகள் இல்லாதது 14-18 வயதுடைய சிறுமிகளிடையே அதிக இடைநிற்றல் விகிதத்தை நேரடியாக பாதிக்கிறது.
கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் மெதுவாக நிரப்பப்படுவதால் கல்வியின் தரம் பாதிக்கப்பட்டு, படித்த பல ஆசிரியர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. 2019 ஆம் ஆண்டில், முந்தைய துணைவேந்தர்கள் வெளியேறிய பின்னர், எட்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை மாநில அரசு தற்காலிக துணைவேந்தர்களாக நியமித்தது. இது காகதியா பல்கலைக்கழகம் மற்றும் உஸ்மானியா பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களை பாதித்தது. மே 2021 வரை பல்கலைகழகங்களில் நிரந்தர துணைவேந்தர்களாக நியமிக்கப்படவில்லை. இது அரசாங்கத்திற்கு கல்வி நிறுவனங்களின் மீது சிறிதும் அக்கறையின்மையை காட்டுகிறது.
அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவது ஐக்கிய நாடுகள் சபையின் குறிக்கோள்களில் ஒன்றாகும். தெலுங்கானா இந்த இலக்கை அடைவதில் பின்தங்கியுள்ளது, மேலும் 2030 க்குள் உயர்கல்வியில் 50% சேர்க்கை என்ற மத்திய அரசின் இலக்கை அடைய முடியாது. தெலுங்கானா அரசு தனது கல்வி வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய நேரம் இது.