உலக நன்மைக்காக பாலின சமத்துவம் மற்றும் சமநிலைக் கூட்டணியை இந்தியா தொடங்கியுள்ளது. இது 'சமநிலை' மற்றும் 'சமத்துவத்தை' அடைவதற்க்கான ஒரு படியாகும்.
இந்தியாவின் முன்னேற்றம் சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெற்ற G20 மாநாட்டிலிருந்து புது தில்லி தலைவர்களின் பிரகடனம் இந்த உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது. முக்கிய பகுதிகளில் சேர்ப்பதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. சமூக-பொருளாதார அதிகாரமளித்தல், டிஜிட்டல் இடைவெளியைக் குறைத்தல், காலநிலை நடவடிக்கைகளை ஊக்குவித்தல் மற்றும் உணவு, ஊட்டச்சத்து, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான அணுகலை உறுதி செய்தல் ஆகியவை இதில் அடங்கும். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிப்பதை இந்த பிரகடனம் வலியுறுத்துகிறது.
இந்த ஆண்டு ஜனவரியில், உலகப் பொருளாதார மன்றத்தில், (World Economic Forum) பாலின சமத்துவத்தை இந்தியா முன்னெடுத்தது. இது 'உலக நன்மைக்கான கூட்டணி - பாலின சமத்துவம் மற்றும் சமநிலை' (Alliance for Global Good – Gender Equity and Equality) என்ற அமைப்பைத் தொடங்கியது. இந்த முயற்சி பல பங்குதாரர்களை உள்ளடக்கியது மற்றும் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்துவதில் இந்தியாவை முன்னணியில் வைக்கிறது. இது ஒரு நீடித்த உலகளாவிய விளைவை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கூட்டணியின் மூலம், இந்தியா சமத்துவம் மற்றும் சமநிலை பற்றிய கருத்துக்களை உலகளாவிய பங்குதாரர்களுக்கான நடைமுறை இலக்குகளாக மாற்றியுள்ளது.
ஆட்சியை வலுப்படுத்துதல்
பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்தை முதன்மைப்படுத்துதல் என்பது இந்திய அரசாங்கத்தின் ஒரு முக்கிய வளர்ச்சிப் பகுதியாக தசாப்தத்திற்கும் மேலாக உள்ளது. கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை உறுதிசெய்த பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான ஒரு புரட்சிகர கருவியாகும். மேலும் இது இந்தியாவின் நிர்வாகத்தின் செயல்முறைகளை மேம்படுத்துவதற்கு விரிவான பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023-24 ஆம் ஆண்டில் பாலின வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட $27 பில்லியன் ஒதுக்கீடுகள் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் வெளிப்பாடாகும்.
இந்தியாவின் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 2017-18 இல் 23.3% இல் இருந்து 2022-23 இல் 37% ஆக அதிகரித்துள்ளது வருடாந்திர தொழிலாளர் படை ஆய்வுகளின் தரவு. கடந்த 10 ஆண்டுகளில் உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கை 28% அதிகரித்துள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் படிப்புகளில் சேருவதைப் பொறுத்தவரை, பெண்களின் பங்கு கணிசமான 43% ஆகும், இது உலகின் மிக உயர்ந்த சேர்க்கை விகிதங்களில் ஒன்றாகும். கிராமப்புற இந்தியாவில், 83 லட்சம் சுயஉதவி குழுக்களில் ஒன்பது கோடிக்கும் அதிகமான பெண்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த குழுக்கள் கிராமப்புறங்களில் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்த உதவுகின்றன. இந்த முன்னேற்றங்கள் இந்தியாவில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் முன்னேற்றத்தைக் காட்டுகின்றது.
டாவோஸில் இந்தியாவின் பங்களிப்பு
உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் நமது முயற்சிகளின் வெற்றியை அங்கீகரித்து, விண்வெளி ஆய்வு, விளையாட்டு, தொழில்முனைவு மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைதியை ஏற்ப்படுத்தும் பணிகள் போன்ற பல்வேறு துறைகளில் நமது சாதனைகளிலிருந்து கற்றுக்கொள்வதைக் நாம் மகிழ்ச்சியடைவோம். டாவோஸில் (Davos) பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் (Ministry of Women and Child Development) மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industry) ஆகியவற்றால் நடத்தப்பட்ட வீ-லீட் லவுஞ்ச் (We-Lead Lounge) உலகளாவிய கவனத்தைப் பெற்று ஆர்வத்தைத் தூண்டியது. உள்ளடக்கிய வளர்ச்சிக்கு உலகம் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்த முக்கியமான விவாதங்களுக்கு இது ஒரு தளத்தை வழங்கியது. உலகளாவிய நன்மைக்கான கூட்டணி - பாலின சமத்துவம் மற்றும் சமநிலை (Gender Equity and Equality) இப்போது உலகளவில் இந்த உற்சாகத்தையும் நோக்கத்தையும் செயல்பாட்டிற்கு மாற்றுவதற்கான ஒரு தளமாக செயல்படுகிறது.
பெண்கள் தலைமைத்துவத்திற்கான (Confederation of Indian Industry (CII)) மையத்தால் உருவாக்கப்பட்ட கூட்டணி, இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் (Ministry of Women and Child Development) வழிநடத்தப்படுகின்றன. இந்திய அரசாங்கம் மற்றும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் (Bill and Melinda Gates Foundation) ஆதரவுடன், வல்லுநர்கள், சிந்தனைக் குழுக்கள், தொழில்துறை மற்றும் நாட்டின் தலைமை ஆகியவற்றின் உலகளாவிய வலையமைப்பைக் கொண்டிருக்கும். பெண்களின் அதிகாரத்தை அதிகரிக்க கூட்டு நடவடிக்கைகளை எற்படுத்த தலைமை. இந்த முயற்சியில் உலகப் பொருளாதார மன்றத்தின் கூட்டாண்மை (World Economic Forum), அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நியாயமான வளர்ச்சியை மேம்படுத்துவதில் உலகளாவிய முக்கியத்துவமும் மற்றும் அர்ப்பணிப்புடன் இருப்பதைக் காட்டுகிறது.
எட்-டெக், (Educational technology) மருத்துவத் திறன் மேம்பாடு, பெண்கள் சுகாதாரம், கற்றல் திறன் மேம்பாடு, வேளாண் தொழில்நுட்பம் மற்றும் பெண் தொழில்முனைவோர் ஆகியவற்றில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை ஆதரிப்பதற்கான நடைமுறை தீர்வுகளைக் கண்டறிந்து உருவாக்குவதையே இந்த கூட்டணி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த துறைகளில் இந்தியா தனது தலைமைத்துவத்தை வெளிப்படுத்தி "உலகின் மருந்தகம்" (pharmacy of the world”) என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் திறமையும் நன்கு அறியப்பட்டதாகும். உலகளாவிய பங்குதாரர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதால், இந்த கூட்டணி இந்தியாவின் தலைமைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு.
ஒரு வாய்ப்பு
உலகெங்கிலும் உள்ள தொழில்களுக்கு, நேர்மறையாக பங்களிப்பதற்க்கு வாய்ப்பு உள்ளது. பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கவும் வளர உதவும் உத்திகளை அவர்கள் பகிர்ந்து கொள்ளலாம். தொழில்களில் வெற்றிகரமான திட்டங்கள் மற்றும் முயற்சிகளில் முதலீடு செய்யலாம். ஒன்றாக வேலை செய்வது வணிக விவாதங்களின் முக்கிய பகுதியாக சேர்க்கலாம். உலகளாவிய சமூகத்துடன் தீர்வுகளை கற்றுக்கொள்வதற்கும் உருவாக்குவதற்கும் இது ஒரு வாய்ப்பு. இந்த சமூகத்தில் வணிகங்கள், சிந்தனையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் உள்ளனர். பொருளாதாரத்தில் பெண்களால் அதிக ஈடுபாடு மற்றும் தலைமைத்துவத்தை ஆதரிப்பதே குறிக்கோள். சுகாதாரம், கல்வி வாய்ப்புகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதன் மூலம் இது நிகழலாம்.
'வசுதைவ குடும்பகம் (‘Vasudhaiva Kutumbakam )– ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' (One Earth, One Family, One Future) என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. அதன் முயற்சிகள் சப்கா சாத் (Sabka Saath), அனைவரின் முயற்சிகள் சப்கா பிரயாஸ்( Sabka Prayaas,), மற்றும் அனைவரின் மேம்பாடு (Sabka Vikaas) ஆகியவற்றிலும் இது கவனம் செலுத்துகிறது. இந்த உறுதிப்பாட்டின் அடிப்படையில், பாலினம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உலகளாவிய நன்மை - பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்திற்கான கூட்டணி ஒரு குறிப்பிடத்தக்க சக்தியாக அமைகிறது.
சந்திரஜித் பானர்ஜி, இயக்குநர் ஜெனரல் இந்திய தொழில் கூட்டமைப்பு.