இந்தியாவில் இன்னும் அதிக எண்ணிக்கையிலான காசநோய் வழக்குகள் உள்ளன. ஆனால், மக்கள் முன்கூட்டியே கண்டறியப்பட்டு, அனைவரும் எளிதில் அணுகக்கூடிய நிலையான சிகிச்சையைப் பெற்றால் நிலைமை மேம்படும்.
ஒவ்வொரு நாளும், உலகம் முழுவதும் 3,500 பேர் காசநோயால் (tuberculosis (TB)) இறக்கின்றனர், சுமார் 30,000 பேர் காசநோய் பாக்டீரியாவால் பாதிக்கப்படுகிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பு (World Health Organization (WHO)) கூறுகிறது. உலக அளவில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 27 சதவீதம் பேர் இந்தியாவில் மட்டுமே உள்ளனர். காசநோய் எளிதாக கண்டறியக்கூடிய மற்றும் குணப்படுத்தக் கூடிய நோயாகும், காசநோயைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிப்பதற்கான முறைகள் பல ஆண்டுகளாக சுகாதார அமைப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன.
உலக காசநோய் தினம் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது 1882 ஆம் ஆண்டு டாக்டர் ராபர்ட் கோச் (Dr. Robert Koch), காசநோயை (TB) உண்டாக்கும் பாக்டீரியாவான மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸைக் (Mycobacterium tuberculosis) கண்டுபிடித்த நாளைக் குறிக்கிறது. 19 ஆம் நூற்றாண்டில் கோச் பாக்டீரியாவைக் கண்டுபிடித்தாலும், ஸ்ட்ரெப்டோமைசின் (streptomycin) போன்ற சிகிச்சைகள் 1943 இல் கண்டுபிடிக்கப்பட்டன, அதைத் தொடர்ந்து 1950கள் மற்றும் 1960 களில் ஐசோனியாசிட் மற்றும் ரிஃபாம்பிசின் (isoniazid and rifampicin) போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன, காசநோய்க்கு எதிரான போராட்டம் இன்னும் தொடர்கிறது. இந்த நோயை எதிர்த்துப் போராடுவதில் பல சவால்கள் உள்ளன.
1. காசநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்:
காசநோயைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா பல சவால்களை எதிர்கொள்கிறது. காசநோய் மற்றும் எச்.ஐ.வி நோயாளிகள், சமூக ஆர்வலர்களுடன் சேர்ந்து, காசநோய் எதிர்ப்பு மருந்துகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு பிரதமரிடம் வலியுறுத்துகின்றனர்.
2. விழிப்புணர்வை ஏற்படுத்துதல்:
சென்னை விமான நிலையத்தின் முனையங்களில் காசநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
3. விரிவான காசநோய் சேவைகள்:
அனைத்து காசநோய் சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்க ஒரு மாதிரி முன்மொழியப்பட்டுள்ளது.
4. பாலினம் மற்றும் காசநோய் பராமரிப்பு:
இந்தியாவில் வீடற்ற பெண்கள் பாலின விதிமுறைகள் மற்றும் பொருளாதார உறுதியற்ற தன்மையால் பாதிக்கப்பட்ட காசநோய் பராமரிப்பைப் பெறுகிறார்கள்.
5. இந்தியாவின் காசநோய் நிலை:
அதிக எண்ணிக்கையிலான காசநோய் தொற்றுகள் கொண்ட இந்தியா உள்ளது. இந்தியாவில் காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் 1962 முதல் உருவாகியுள்ளது, மருந்தியல், நுண்ணுயிரியல், தொற்றுநோயியல், சமூக அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளின் பனிகளை ஒருங்கிணைக்கிறது.
உலக காசநோய் தினம் 2024, 'ஆம்! காசநோயை ஒழிக்க முடியும்!' (Yes! We can end TB!) என்ற கருப்பொருளில் அனுசரிக்கப்பட்டுகிறது. தற்போதுள்ள வளங்கள், பயிற்சி மற்றும் அரசியல் ஆதரவுடன் காசநோயை ஒழிக்கும் திறனை வலியுறுத்துகிறது.
மருந்து-எதிர்ப்பு (drug-resistant (DR-TB)), முற்றிலும் மருந்து-எதிர்ப்பு (totally drug-resistant (TDR-TB)), விரிவான மருந்து-எதிர்ப்பு (extensively drug-resistant (XDR-TB)), நுரையீரல் TB (pulmonary TB (P-TB)) மற்றும் நுரையீரல் அல்லாத (non-pulmonary TB) உட்பட பல்வேறு வகையான காசநோய் பரவுகிறது.
பொது சுகாதாரம் என்பது விவாதத்தின் முக்கிய தலைப்பாக இருக்கும் ஒரு நம்பிக்கையான காலத்தில் நாம் வாழ்கிறோம். பல சவால்களை சமாளிக்க தொழில்நுட்பம் நமக்கு உதவியுள்ளது. COVID-19 தொற்றுநோய், கடினமாக இருந்தாலும், நோய்களைத் தடுப்பதில் நம்மை அதிக கவனம் செலுத்த வைத்துள்ளது. சமூக காரணிகள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இது நமக்குக் காட்டுகிறது. உலக காசநோய் தினம் 2024 கடந்துவிட்டாலும், நகரங்கள் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகின்றன, மக்கள் எவ்வாறு நகர்கிறார்கள் மற்றும் சுகாதார அமைப்புகளின் அழுத்தம் ஆகியவற்றை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். காசநோயை முடிவுக்குக் கொண்டுவர 10 அம்ச திட்டத்தை (10-point plan) நான் பரிந்துரைக்கிறேன்.
முதலாவதாக, காசநோய் நோயாளிகளை முன்கூட்டியே கண்டறிய வேண்டும். காசநோயை அடையாளம் காண்பது சிக்கலாக இருக்கலாம். ஏனெனில், அதன் அறிகுறிகள் மற்ற பொதுவான நோய்களைப் போலவே இருக்கும். இதன் பொருள் மக்கள் பெரும்பாலும் உதவி பெற வேண்டிய நேரத்தில் கிடைக்காது. காசநோய் உள்ளவர்களின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய தொடர்புகளை பரிசோதனை செய்வது மிகவும் முக்கியம். இதற்காக, நல்ல ஆய்வக வசதிகள் மற்றும் மக்களுக்குத் தேவையான தொடர் கவனிப்பைப் பெறுவதை உறுதி செய்யும் ஒரு அமைப்பு தேவை.
இரண்டாவதாக, துல்லியமான சிகிச்சை வகைகள் தேவை. மருந்து-எதிர்ப்பு TB (DR-TB) மிகவும் பொதுவானதாக இருப்பதால், காசநோய் கண்டறியப்பட்ட உடனேயே மருந்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறதா என்பதைக் கண்டறிவது மிகவும் முக்கியம். இதன் மூலம், நோயாளிகளுக்கு காசநோய் வகையின் அடிப்படையில் சரியான சிகிச்சையை வழங்க முடியும்.
மூன்றாவதாக, சிகிச்சை மற்றும் பின்தொடர்வுகளை வைத்திருப்பது மிக முக்கியமானது. காசநோய்க்கு சிகிச்சையளிக்க நீண்ட காலம் எடுக்கும். மக்கள் பெரும்பாலும் தங்கள் சிகிச்சையை நிறுத்துகிறார்கள். ஏனெனில், அவர்கள் நன்றாக இருப்பதாக உணரத் தொடங்குகிறார்கள் அல்லது அவர்கள் வேறு இடத்திற்குச் செல்கிறார்கள். காசநோய் கட்டுப்பாட்டு திட்டம் நோயாளிகளைக் கண்காணிக்க முயற்சிக்கிறது, ஆனால் எல்லோரும் தங்கள் சிகிச்சையை முழுமையாக முடிக்கவில்லை. மக்கள் தங்கள் சிகிச்சையுடன் முன்னேற்றத்தை உறுதிசெய்ய தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்த வேண்டும்.
நான்காவதாக, காசநோயினால் இறப்புகள் இல்லை என்பதை நாம் இலக்காகக் கொள்ள வேண்டும். மருந்துகளை எதிர்க்கும் காசநோய் மற்றும் நுரையீரலைத் தவிர உடலின் மற்ற பாகங்களை பாதிக்கும் காசநோய் ஆகியவை இதில் அடங்கும்.
மருந்து எதிர்ப்பு பிரச்சினை
ஐந்தாவதாக, மருந்து எதிர்ப்பைக் (drug resistance) கட்டுப்படுத்துவது முக்கியம். காசநோயில் மருந்து எதிர்ப்பு என்பது மக்களின் செயல்களால் ஏற்படுகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பிகளை அதிகமாகப் பயன்படுத்தும்போது அல்லது சரியாக எடுத்துக் கொள்ளாவிட்டால், காசநோய் பாக்டீரியா உயிர்வாழ மாறுகிறது. இது மருந்துகளை குறைந்த செயல்திறன் மிக்கதாக ஆக்குகிறது. மருந்துகளைக் கட்டுப்படுத்துவதற்கான மோசமான விதிகள் மற்றும் சிகிச்சை திட்டங்களைப் பின்பற்றாதது மருந்து எதிர்ப்பை மோசமாக்குகிறது.
ஆறாவது, மருந்து-எதிர்ப்பு காசநோய் (Drug resistance in TB) எவ்வளவு பரவலாக உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். காசநோயால் கண்டறியப்பட்ட எத்தனை பேர் ரிஃபாம்பிசின் (rifampicin (RR-TB))க்கு எதிர்ப்புத் திறன் கொண்டவர்கள் மற்றும் எத்தனை பேருக்கு பல மருந்து எதிர்ப்பு காசநோய் (multidrug-resistant TB (MDR-TB)) உள்ளது என்பதை அறிவது முக்கியம். MDR-TB என்பது காசநோய் ரிஃபாம்பிகின் மற்றும் ஐசோனியாசிட் (rifampicin and isoniazid) ஆகிய இரண்டிற்கும் எதிர்ப்புத் திறன் கொண்டது. MDR/RR-TB நோயாளிகளின் எண்ணிக்கையை அறிந்துகொள்வது, காசநோய் கட்டுப்பாட்டு திட்டத்தை திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்பதை மேம்படுத்த உதவுகிறது. காசநோயைக் கண்டறிவதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் நிதி ஆதாரங்களை எவ்வாறு ஒதுக்குவது என்பதைத் தீர்மானிக்கவும் இது உதவுகிறது, மேலும் மருந்து-எதிர்ப்பு காசநோயைக் கையாள போதுமான பயிற்சி பெற்ற ஊழியர்கள் இருப்பதை உறுதிசெய்கிறது.
ஏழாவதாக, சரியான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். காசநோய் கட்டுப்பாட்டு திட்டத்தில் போதுமான மருந்துகள் இருக்க வேண்டும். ஆனால் பெடாகுலைன் (bedaquiline) மற்றும் டெலாமனிட் (delamanid) போன்ற மருந்து எதிர்ப்பு காசநோய்க்கான மருந்துகளைப் பெறுவதில் உள்ள சிக்கல்களையும் நாம் தீர்க்க வேண்டும். மருத்துவமனையில் தங்க வேண்டிய அனைத்து மருந்து எதிர்ப்பு காசநோய் நோயாளிகளுக்கும் போதுமான சிகிச்சை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
உள் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு
எட்டாவது, காசநோய் சிகிச்சையை பரந்த சுகாதார அமைப்புகளின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும். பொது மற்றும் தனியார் சுகாதார அமைப்புகளுக்குள் மற்றும் இடையில் நோயாளிகள் எவ்வாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள் என்பதை மேம்படுத்துவது மிக முக்கியமானது. அறிகுறிகளுடன் யாரும் தவறவிடவில்லை என்பதை உறுதிப்படுத்த இது உதவுகிறது, ஒவ்வொருவரும் அவரவர்களுக்கான மருந்தை அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும், மேலும், காசநோயாளிகளுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதிக்கப்படுவார்கள். இது, மருந்து-எதிர்ப்பு அல்லது மருந்து-எதிர்ப்பு இல்லாவிட்டாலும், அனைத்து காசநோய் வகைகளுக்கும் முக்கியமானது.
ஒன்பதாவதாக, காசநோய் பற்றி தெரிவிக்க நமக்கு ஒரு சிறந்த அமைப்பு தேவை. ஒரு நல்ல அறிவிப்பு அமைப்பு (robust notification system) சுகாதாரப் பணியாளர்களின் பணிகளை எளிதாக்குகிறது. காசநோயாளிகளை நிர்வகிக்க உதவும் நி-க்ஷய் (Ni-Kshay-(Ni=End, Kshay=TB)) என்று ஒரு அமைப்பு உள்ளது. இது தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் (National Tuberculosis Elimination Programme (NTEP)) ஒரு பகுதியாகும். ஆனால் இந்த அமைப்பு காசநோய் தரவை நிகழ் நேரக் கண்காணிப்பில் சிறந்து விளங்க வேண்டும். இதில் பல்வேறு பகுதிகள், சுகாதாரப் பணியாளர்கள், நேரங்கள் மற்றும் இடங்கள் பற்றிய தரவு அடங்கும்.
பத்தாவதாக, மக்கள் எவ்வாறு நகர்கிறார்கள் மற்றும் இடம்பெயர்கிறார்கள் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். காசநோய் போன்ற நோய்களைப் பற்றி பேசும்போது, அது மக்களின் வேலை செய்யும் மற்றும் அவர்களின் வாழ்க்கையை வாழும் திறனை எவ்வாறு பாதிக்கிறது என்பதை நாம் அடிக்கடி மறந்துவிடுகிறோம். காசநோய் அதனுடன் நிறைய சமூக மற்றும் கலாச்சார களங்கத்தைக் கொண்டுள்ளது. உதாரனமாக, காசநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சையைத் தொடங்கியவுடன், அவர்கள் பொதுவாக விரைவாக குணமடைவார்கள். இதன் பொருள் அவர்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளுக்குத் திரும்பலாம். எனவே, நாட்டில் எல்லா இடங்களிலும் காசநோய் சிகிச்சை அணுகப்படுவதை உறுதி செய்வது அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியம்.
இந்தியாவையும், உலகையும் காசநோயிலிருந்து விடுவிக்க உறுதி ஏற்போம். காசநோயை முன்கூட்டியே கண்டறிந்து, ஒவ்வொருவருக்கும் தேவையான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்தால், காசநோயை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர முடியும்.
அருணா பட்டாச்சார்யா கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி, மனித மேம்பாட்டு பள்ளி, மனித குடியேற்றங்களுக்கான இந்திய நிறுவனம் (Academics and Research, School of Human Development, Indian Institute for Human Settlements) அமைப்பின் தலைமை நிர்வாகி.