இதற்கு முன்னர் யானைகளின் உரிமை மற்றும் இடமாற்றம் தொடர்பான ஏற்பாடுகள் என்ன? யானைகளை கடத்தலில் இருந்து பாதுகாப்பது தொடர்பான சட்டம் தளர்த்தப்பட்டதாக நிபுணர்களும் ஆர்வலர்களும் ஏன் கூறுகிறார்கள்?
வளர்ப்பு யானை பரிமாற்றம் அல்லது போக்குவரத்து விதிகள், 2024 (Captive Elephant (Transfer or Transport) Rules, 2024) எனப்படும் விதிகளின் தொகுப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது, யானைகளை மாநிலங்களுக்குள் அல்லது மாநிலங்களுக்கு இடையில் இடம் மாற்றுவதற்கான நிபந்தனைகளை எளிதாக்குகிறது.
யானைகளின் இடமாற்றம் மற்றும் போக்குவரத்து தொடர்பான விதிகள் என்ன?
வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், யானைகள் அட்டவணை 1 இனமாக பட்டியலிடப்பட்டுள்ளன. இதன் பொருள், அவை மிகவும் பாதுகாக்கப்பட்டவை, மேலும் அவற்றை கைப்பற்றுவது அல்லது வர்த்தகம் செய்வது எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்கப்படாது. இருப்பினும், சட்டத்தின் பிரிவு 12, குறிப்பிட்ட காரணங்களுக்காக அட்டவணை 1 (Schedule 1 ) விலங்குகளை இடமாற்றம் செய்ய அனுமதிக்கிறது. இந்த காரணங்களில் கல்வி நோக்கங்கள் (education), அறிவியல் ஆராய்ச்சி (scientific research), வனவிலங்குகளின் எண்ணிக்கையை எந்த விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்காமல் நிர்வகித்தல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட உயிரியல் பூங்காக்கள் அல்லது அருங்காட்சியகங்களுக்கு (recognised zoos/museums) வளர்ப்பதற்க்காக பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும். இந்த கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், வளர்ப்பு யானைகள் தனித்துவமான அந்தஸ்தைக் கொண்டுள்ளன. அவைகள் வரலாற்று ரீதியாக வன மேலாண்மை, மரங்களை சுமந்து செல்வது, முன்னாள் அரச குடும்பங்களின் சொத்துக்களில் ஒன்று மற்றும் மத நோக்கங்களுக்காக கோவில் சடங்குகளில் பங்கேற்பதற்காக பயன்படுத்தப்பட்டது. இந்த வரலாறு அவற்றைச் சொந்தமாக்க அனுமதிக்கிறது மற்றும் ஒரு சிறப்பு ஏற்பாட்டின் கீழ் அவற்றை வகைப்படுத்துகிறது.
வளர்ப்பு யானைகளை இடமாற்றம் செய்வது கடுமையான விதிகளைப் பின்பற்றுகிறது. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 40 (2) (Section 40 (2) of the Wildlife Protection Act, 1972) இன் படி, வளர்ப்பு யானைகளை கையகப்படுத்தவோ, வைத்திருக்கவோ அல்லது மாற்றவோ தலைமை வனவிலங்கு பாதுகாவலரிடமிருந்து (Chief Wildlife Warden of the State) எழுத்துப்பூர்வ அனுமதி தேவைப்படுகிறது. 2021 வரை, இந்த பரிவர்த்தனைகள் வணிகரீதியாக இருக்க முடியாது. இருப்பினும், 2021 இல், சுற்றுச்சூழல் அமைச்சகம் இதை மாற்றியது. மத அல்லது பிற நோக்கங்களுக்காக யானைகளை இடமாற்றம் செய்ய அனுமதித்தனர். சமூக ஆர்வலர்கள், மற்றும் ஆராய்ச்சியாளர்கள், இந்த மாற்றம் கடத்தல் மற்றும் சட்டவிரோத வர்த்தகத்தை அதிகரிக்கும் என்று கவலைப்படுகிறார்கள். முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையிலான குழு இந்த மாற்றத்தை எதிர்த்தது, ஆனால் அது சட்டமாக மாறியது.
புதுப்பிக்கப்பட்ட விதிகள் என்ன சொல்கின்றன?
இந்த விதிகள் வளர்ப்பு யானைகளுக்கு உரிமையாளர்களை மாற்றுவதையோ அல்லது புதிய இடங்களுக்குச் செல்வதையோ எளிதாக்குகின்றன. உதாரணமாக, ஒரு உரிமையாளரால் யானையை இனி கவனித்துக்கொள்ள முடியாவிட்டால் அல்லது, மாநிலத்தின் தலைமை வனவிலங்கு காப்பாளர் யானையின் இட மாற்றம் அதன் நல்வாழ்வுக்கு சிறந்தது என்று முடிவு செய்தால் இடமாற்றம் நிகழலாம். யானையை அதே மாநிலத்திற்குள் இட மாற்றம் செய்வதற்க்கு முன், கால்நடை மருத்துவர் அதன் ஆரோக்கியத்தை சரிபார்க்க வேண்டும். மேலும், யானையின் தற்போதைய மற்றும் எதிர்கால இடங்கள் இரண்டும் பொருத்தமானவை என்பதை துணை வனப் பாதுகாவலர் உறுதிப்படுத்த வேண்டும். இந்த ஆவணங்களை மதிப்பாய்வு செய்த பிறகு, தலைமை வனவிலங்கு காப்பாளர் இடமாற்றத்தை அங்கீகரிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.
வளர்ப்பு யானையை வேறு மாநிலத்திற்கு இட மாற்றம் செய்யும் போது, அதே வகையான நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இடமாற்றம் நிகழும் முன், யானையின் "மரபணு விவரம்" (genetic profile) சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் (Ministry of Environment, Forest and Climate Change) பதிவு செய்யப்பட வேண்டும். முந்தைய விதிகளின்படி, அசாமில் இருந்து குஜராத்திற்கு யானையை மாற்றினால், அது சாலையில் செல்லும் ஒவ்வொரு மாநிலத்தின் தலைமை வனவிலங்கு காவலர்களின் (Chief Wildlife Wardens) அனுமதி பெற வேண்டும். இருப்பினும், புதிய விதிகளின்படி, யானை இருக்கும் மாநிலம் மற்றும் யானையைப் பெறும் மாநிலத்தின் அனுமதி மட்டுமே தேவை.
புதுப்பிப்புகள் எதைக் குறிக்கின்றன?
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் (Wildlife Protection Act) என்பது விதிகளை அமைத்து வன விலங்குகளின் வர்த்தகத்தை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சட்டமாகும். இருப்பினும், சில நிபுணர்கள், குறிப்பாக, யானைகளுக்கான சட்டத்தைப் பொறுத்தவரையில் சட்டமானது கடுமையானதாக இல்லை என்று வாதிடுகின்றனர். சமீபத்தில், குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளையுடன் தொடர்புடைய ஒரு பெரிய தனியார் உயிரியல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது இது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. காயமடைந்த யானைகள் மற்றும் பிற வனவிலங்குகளை மீட்டு பராமரிப்பதாக கூறும் இந்த பூங்காவில் சுமார் 200 யானைகள் பராமரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஹிமால் சவுதாசியாவின் சமீபத்திய விசாரணையில், ஆரோக்கியமான விலங்குகளையும் வைத்திருப்பது சர்ச்சையைத் தூண்டியது. மேலும், இவற்றில் சில யானைகள் காட்டில் இருந்து பிடிக்கப்பட்டுள்ளதாக கவலை எழுந்துள்ளது.