கேள்விக்குறியான நடத்தை : ஆளுநர்களின் நடவடிக்கைகள் குறித்து . . .

 அரசியல் சாசனத்தை பின்பற்ற ஆளுநர்கள் தயக்கம் காட்டுவது குறித்து மத்திய அரசு கவலைப்பட வேண்டும்


தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல் சாசனத்தை கடைப்பிடிப்பது குறித்து கேள்வி எழுப்பும் வகையில் நடந்து கொள்கிறார். சமீபத்தில், கே.பொன்முடியை மீண்டும் தமிழக அமைச்சரவையில் சேர அனுமதிக்க அவர் மறுத்துவிட்டார். இந்த முடிவு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்முடி அவர்களுக்கு பதவி பிரமானம் செய்துவைத்தார். பொன்முடியின் மீதான ஊழல் வழக்கை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்ததால் இது நடந்தது. இதன் மூலம் திரு.பொன்முடி மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகும் தகுதி பெற்றார். திரு பொன்முடியின் தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதற்காக அவரை மீண்டும் அமைச்சரவையில் சேர அனுமதிப்பது "அரசியலமைப்பு தார்மீகத்தின்படி" சரியானதல்ல என்று ஆளுநர் திரு ரவி முன்பு கூறினார். தண்டனையை தற்காலிகமாக நிறுத்துவதற்கான உச்ச நீதிமன்றத்தின் முடிவு தண்டனை முழுமையாக அகற்றப்பட்டதற்கான அர்த்தமல்ல என்று அவர் நம்பினார்.  


சட்டத்தின் விளக்கம் கேள்விக்குரியது. ஊழல் வழக்கில் ஒருவர் தண்டிக்கப்பட்டால், அவர் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருப்பதற்கான தகுதியை இழக்கிறார். ஆனால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால், இந்த விளைவுகள் நிறுத்தி வைக்கப்படும். நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள் தண்டனை பெற்ற நபர்கள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டவுடன், அவர்கள் ஏற்கனவே தங்கள் பதவிகளை இழந்திருந்தாலும் கூட, தங்கள் உறுப்பினர் பதவியை மீண்டும் பெற அனுமதிக்கின்றது. ஆளுநர் "ஒழுக்கத்தையும்" நல்லாட்சியின் கோட்பாடுகளையும் சட்டபூர்வத்தன்மையுடன் வேண்டுமென்றே குழப்பிக் கொண்டதாகத் தெரிகிறது.


திமுக அரசுக்கு சவால் விடும் வகையில் ஆளுநர் ரவி அடிக்கடி புதுப்புது வழிகளை கண்டுபிடித்து வருகிறார். இரண்டு முக்கிய நிகழ்வுகள் கவனிக்கத்தக்கவை. முதலாவதாக, அவர் தனது பதவியின் வரம்புகளை ஏற்கவில்லை. இரண்டாவதாக, மத்திய அரசு ஆளுநர்களுடன் அடிக்கடி ஏற்படும் சட்ட சிக்கல்களை தீர்க்கவில்லை. முன்னதாக, ஆளுநர் திரு ரவி மசோதாக்களை மீது தாமதமாக நடவடிக்கை எடுக்கிறார் என்று நீதிமன்றம் சுட்டிக் காட்டடியிருந்தது. சமீபத்தில், ஆளுநர் அரசியலமைப்பை புறக்கணித்தால் அரசு என்ன செய்ய முடியும் என்று நீதிமன்றம் கேட்கும் வகையில் அவர் நடந்து கொண்டார். நீதிமன்றம் மட்டுமே இதற்கு தீர்வு காணும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. ஆளுநர்களின் நடவடிக்கைகள் குறித்து பல சட்ட வழக்குகள் உள்ளன. இதை சரி செய்யும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என்பது கவலையளிக்கிறது. அரசியலமைப்பை பின்பற்றாத ஆளுநர்களை அரசு மாற்ற வேண்டும். எவ்வாறாயினும், அவர்களின் நடவடிக்கைகள் அரசியலமைப்பு விதிகளால் அல்ல, அவர்களை நியமித்தவர்களால் வழங்கப்படும் அரசியல் பணிகளால் வழிநடத்தப்படுவதாகத் தெரிகிறது.




Original article:

Share: