2023ஐ வெப்பமான ஆண்டு என இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளமுடியவில்லை. புவி வெப்பமடைதலுக்கு எல் நினோ (El Niño) நாம் எதிபார்த்தை விட அதிக வெப்பத்தை ஏற்படுத்தியது.
புவி வெப்பமடைதல் உள்ளூர் வானிலையை சிக்கலான வழிகளில் பாதிக்கிறது. நாம் உலகம் முழுவதையும் கண்காணிக்க வேண்டும், ஆனால் குறிப்பிட்ட இடங்களுக்கான கணிப்புகளையும் அதிகப்படுத்த வேண்டும்.
2023இல், வலுவான எல் நினோ முடிவுக்கு வந்தது, உலகம் முழுவதும் அதிக வெப்பநிலையைக் ஏற்படுத்தியது. ஆனால், மார்ச் மாதத்தில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் மேற்கு வங்கம் வரை மிதமான வெப்பநிலை நீடித்தது. மற்ற இடங்களில் வரலாறு காணாத அதிக அளவு வெப்பநிலை இருந்தபோதிலும், 2023 முழுவதும் இந்தப் பகுதிகள் குளிர்ச்சியாகவே இருந்தன.
வெப்ப அலைகளுக்கும் புவி வெப்பமடைதலுக்கும் என்ன சம்பந்தம்?
புவி வெப்பமடைதல் இந்தியா போன்ற சில நாடுகளில் வெப்ப அலைகளை வலுப்படுத்துகிறது, இங்கு மக்களவை தேர்தல் நடைபெருவதால் பெரும் சிரமம் ஏற்படுகிறது சில வானிலை முறைகள் இந்த வெப்ப அலைகளை ஏற்படுத்துகின்றன, இதை நாம் சிறப்பாகக் கணிக்க கவனம் செலுத்த வேண்டும்.
மார்ச் மாதத்தில், வட இந்தியப் பெருங்கடலில் எதிர்ச் சூறாவளி (anticyclonic) சுழற்சியால் ஒடிசாவில் அசாதாரண மழை பெய்தது. இந்த சுழற்சிகள் காற்றை வெப்பமடைய செய்கின்றன மற்றும் அதிக அழுத்தம் மற்றும் வெப்பத்தை ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் துபாயில் ஏற்பட்ட வெள்ளம் இதேபோல் ஏற்பட்டது.
இந்த சுழற்சிகள் வட இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்திய துணைக் கண்டத்தில் ஏற்படுகின்றன.
எதிர்ச் சூறாவளியை வெப்பத்துடன் இணைப்பது எது?
பருவமழைக்கு முந்தைய காலங்களில் இப்பகுதியில் எதிர்ச் சூறாவளிகள் ஏற்படுவது ஒரு சாதாரண காலநிலை நிகழ்வாகும். பருவமழைக்கு முந்தைய காலம் நெருங்கும் போது, மேல் நிலை இந்திய ஈஸ்டர்லி ஜெட் (upper-level Indian Easterly Jet (IEJ)) உருவாகத் தொடங்குகிறது, இது அரேபிய கடல், தீபகற்ப இந்தியா மற்றும் வங்காள விரிகுடா முழுவதும் சுமார் 10 டிகிரி வட அட்சரேகையில் பரவுகிறது. அதே நேரத்தில், மேற்கிலிருந்து காற்றைக் கொண்டு செல்லும் ஒரு வலுவான மேற்கு ஜெட்காற்று, வடக்கே 30 டிகிரியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஜெட் காற்றுகளுக்கிடையே உள்ள தொடர்பு இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்திய துணைக்கண்டத்தின் மீது ஒரு எதிர்ச் சூறாவளியை ஏற்படுத்த முடியும்.
வானிலையின் அடிப்படையில், ஒரு ஜெட்காற்று கிழக்கிலிருந்து வரும் வலுவான காற்றைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் மேற்கு ஜெட்காற்று மேற்கில் இருந்து வரும் காற்றைக் கொண்டுள்ளது. இந்த ஜெட் காற்றுகள் பிராந்திய வானிலை முறைகளை பாதிக்கும் குறிப்பிடத்தக்க பருவகால வளிமண்டல அம்சங்களாகும். பருவமழையின் போது, மேற்கத்திய ஜெட்காற்று வடக்கு நோக்கி நகர்கிறது, இது இந்திய துணைக்கண்டத்தின் வானிலையில் இந்திய ஈஸ்டர்லி ஜெட் (Indian Easterly Jet (IEJ)) ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கிறது. பருவமழைக்கு முந்தைய பருவத்தில், எதிர் சூறாவளி வலிமை பெற்று ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது: வலுவான எதிர்சூறாவளி இந்தியாவின் பெரிய பகுதிகளில் வறண்ட மற்றும் வெப்பமான நிலைமைகளுக்கு வழிவகுக்கும், அதேசமயம் பலவீனமான எதிர்சூறாவளி மிதமான வானிலைக்கு வழிவகுக்கும்.
இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, எதிர்சூறாவளியின் தற்போதைய வலிமை மற்றும் புவி வெப்பமடைதலுக்கான அதன் சாத்தியமான கூறுகள் ஆகியவை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். எதிர்சூறாவளி வழக்கத்திற்கு மாறாக வலுவாக இருந்தால், அது பிராந்தியம் முழுவதும் வெப்ப அலைகளை அதிகப்படுத்தும் காரணியாக இருக்கும். புவி வெப்பமடைதல் இந்த பாரம்பரிய காலநிலை முறைகளை பாதிக்கலாம் மற்றும் வெப்ப அலைகள் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளையும் தீவிரப்படுத்தும் என்பதை ஆராய வேண்டியதன் அவசியத்தை இது எடுத்துக்காட்டுகிறது.
வெப்ப அலைகள் எவ்வாறு அதிகரிக்கின்றன?
இந்தியாவின் பருவமழைக்கு முந்தைய காலத்தில், இது மிகவும் வெப்பமாக இருக்கும் மற்றும் வெப்ப அலைகள் பொதுவானவை. அவற்றைத் துல்லியமாகக் கணித்து, மக்களையும் அவர்களின் உடைமைகளையும் பாதுகாக்க ஆரம்பகட்ட எச்சரிக்கைகளை வழங்குவது மிக முக்கியம். வெப்ப அலைகளுக்கு என்ன காரணம், அவை எவ்வளவு காலம் நீடிக்கும், அவை எவ்வளவு தீவிரமானவை, அவை எவ்வாறு அடிக்கடி நிகழ்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது, அவை எங்கு கடுமையாகத் தாக்கும் என்பதை அடையாளம் காண உதவுகிறது.
2023 இல், வெப்பநிலை மிகவும் அதிகரித்தது. எல் நினோ மற்றும் புவி வெப்பமடைதலில் கூட, ஏன் அதிக வெப்பம் ஏற்பட்டது என்பது இன்னும் சரியாக அறியமுடியவில்லை. ஆனால் பருவமழை காலத்திற்க்கு முன், எல் நினோ ஒரு எதிர்ச்சூறாவளியை வலிமையாக்குகிறது, இது நீண்ட மற்றும் கடுமையான வெப்ப அலைகளுக்கு வழிவகுக்கிறது.
எல் நினோ மற்றும் 2023 இல் விவரிக்கப்படாத வெப்பமயமாதல் காரணமாக இந்த ஆண்டின் அதிக வெப்ப அலை மற்றும் வெப்பநிலையை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமான குளிர்கால வெப்பநிலை மற்றும் வலுவான நீடித்த எதிர்சூறாவளியை அறிவது மிக முக்கியம். இது இந்திய வானிலை ஆய்வுத் துறைக்கு துல்லியமான கணிப்புகளைச் கண்டறியவும் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்கவும் உதவுகிறது.
ஆரம்ப எச்சரிக்கைகளின் நிலைகள் என்ன?
புவி வெப்பமயமாதலின் உள்ளூர் விளைவுகள், உலக காலநிலை ஆராய்ச்சித் திட்டம் மற்றும் உலக வானிலை அமைப்பு ஆகியவற்றின் தலைமையிலான 'துணை பருவகாலம் முதல் பருவகால கணிப்புகள்' (Subseasonal-to-Seasonal Predictions) திட்டத்தின் ஒரு பகுதியான 'தயாராகு-அமைத்துக்கொள்-செல்' (ready-set-go) அமைப்பு எனப்படும் மூன்று-படி அணுகுமுறை மூலம் தீர்க்கப்படுகிறது, இது உலக வானிலை அமைப்பின் கீழ் உள்ள உலக காலநிலை ஆராய்ச்சி திட்டத்தின் 'துணை பருவகால கணிப்புகள்' திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதில் இந்தியா ஈடுபட்டுள்ளது மற்றும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் அடைந்துள்ளது.
திறமையான செயல்பாட்டிற்கு, தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (National Disaster Management Agency (NDMA)) இந்த மூன்று படி அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. நடைபெற்று வரும் பொதுத் தேர்தலுக்காக 1.2 மில்லியனுக்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் இருப்பதால், இடம் சார்ந்த தகவல்களைக் கொண்டிருப்பது முக்கியம்.
'தயார்' (ready) நிலையில், புவி வெப்பமடைதல் மற்றும் எல் நினோ போன்ற காரணிகளைப் பயன்படுத்தி நீண்டகால கணிப்புகளை மேம்படுத்த பருவகால கண்ணோட்டம் வழங்கப்படுகிறது. இது தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் மற்றும் உள்ளூர் ஏஜென்சிகள் தயாராக இருக்க உதவுகிறது.
'அமைத்துக்கொள்' (set) நிலையில், துணை பருவகால கணிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை இரண்டு முதல் நான்கு வாரங்களை உள்ளடக்கியது. அவை வளங்களை ஒதுக்கவும், பேரிடர் தயார்நிலைக்கு சாத்தியமான இடங்களைக் கண்டறியவும் உதவுகின்றன.
'செல்' (go) பேரிடர் மேலாண்மையில் 'செல்' என்பது ஒரு முக்கியமான கட்டமாகும், இது குறுகிய தூர நாட்கள் 1-3 மற்றும் நடுத்தர தூர நாட்கள் 3-10 வானிலை முன்னறிவிப்புகளை பெரிதும் நம்பியுள்ளது. இந்த நடவடிக்கையின் போது, அனைத்து ஆயத்த திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு, பேரழிவை திறம்பட நிர்வகிக்க பல்வேறு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக் குழுக்களை அனுப்புதல், வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்க நீரேற்றம் மையங்களை நிறுவுதல் மற்றும் தீவிர வெப்பநிலையிலிருந்து பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்க வெப்ப உறைவிடங்களை அமைத்தல் ஆகியவை இதில் அடங்கும். பேரழிவின் தாக்கங்களைக் குறைப்பதற்கும், பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சமூகத்தில் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்கும் இந்த நடவடிக்கைகள் அவசியம்.
தயார்நிலை மற்றும் மீட்பு எவ்வாறு செயல்படுகிறது?
அனைத்து ஆதாரங்களின்படியும் இந்தியாவின் தேசிய பேரிடர் மேலான்மை வாரியம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தேசிய பேரிடர் மேலான்மை வாரியம் இந்த மேம்பாடுகளை 'தயாராகு-அமைத்துக்கொள்-செல்' (ready-set-go) அமைப்பில் ஒருங்கிணைத்துள்ளது.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இடத்திற்கும் வானிலையை மிகவும் துல்லியமாக கணிப்பது, எதிர்காலத்திற்கு தயார்படுத்துவது ஆகியவை முக்கிய சவாலாகும். ஆனால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு வானிலை முறைகளை கணிக்கும் சமீபத்திய முயற்சிகள் முன்னேற்றத்தைக் காட்டுகின்றன.
தேசிய அளவில் இருந்து அண்டை நிலை வரை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகள் மற்றும் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரிக்கைகளை வழங்குவதற்கான முயற்சிகள் முன்னேறி வருகின்றன. இந்த வெற்றியை நீடிக்க, அரசாங்கங்கள், அவற்றின் துறைகள் மற்றும் பொதுமக்களுக்கு போதிய பயிற்சியும் ஈடுபாடும் தேவை. இந்தியாவின் நீண்ட கால பொருளாதார வளர்ச்சி இதை நம்பியிருக்கிறது.
ரகு முர்துகுடே ஐஐடி பாம்பேயில் வருகைப் பேராசிரியராகவும், மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் எமரிட்டஸ் பேராசிரியராகவும் உள்ளார்.