இஸ்ரேல்-ஈரான் நெருக்கடியின் மீதான முப்பரிமாணப் பார்வை -ஸ்டான்லி ஜானி

 பல ஆண்டுகளாக, இஸ்ரேலுடனான  ரகசிய போரில் ஈரான் இராஜதந்திர பொறுமை காத்து வருகிறது. ஆனால், டமாஸ்கஸ் (Damascus) மீதான இஸ்ரேலின் குண்டுவீச்சு ஈரானின் சிந்தனையை  மாற்றியமைத்துள்ளது.


மார்ச் 2018 இல், ஒரு நேர்காணலின் போது, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலுக்கு எதிராக உள்ள மூன்று  அச்சறுத்தல்களை பட்டியலிட்டார் : "ஈரான், ஈரான், ஈரான்." மத்திய கிழக்கில் ஈரான் ஒரு ஆக்கிரமிப்பு சாம்ராஜ்யத்தை உருவாக்கி வருகிறது” என்று பிரதமர் கூறினார். இஸ்ரேலின் பிரதமராக  நெதன்யாகு நீண்டகாலமாக பணியாற்றி வருகிறார். ஈரான் மீதான தனது நிலைப்பாட்டில் அவர் எப்போதும் தெளிவாக இருக்கிறார். இந்த ஒப்பந்தம் ஒபாமா ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது.  பின்னர், டொனால்ட் டிரம்ப்பால் ரத்து செய்யப்பட்டது. 2015 ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை அவர் கடுமையாக எதிர்த்தார். ஈரான் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் திறன் கொண்ட ஒரு வலுவான தலைவராக நெத்தனியாகு தன்னை நிலை நிறுத்தி கொண்டார். இருப்பினும், அவரது தலைமையின் கீழ், ஈரான் ஏப்ரல் 14 அன்று இஸ்ரேலைத் தாக்கியது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேல் மீது  ஈரான்  நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும்.


இஸ்ரேலை நேரடியாக தாக்கியதன் மூலம் ஈரான் ஒரு எல்லையைத் தீவிரமாகக்   கடந்தது. அச்சுறுத்தல்களைத் தடுக்கும் இஸ்ரேலின் திறனை பலவீனப்படுத்தியது. இருந்த போதிலும், அமெரிக்கா இஸ்ரேலை கடுமையாக பதிலடி கொடுக்காமல் தடுத்தது. ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேலின் பதிலடி அதன் தேசிய பாதுகாப்பு அமைச்சர்  இதமர் பென் ஜிவிரால் (Itamar Ben Gvir) பலவீனமாகக் கருதப்பட்டது. முதல் சுற்றுக்குப் பிறகு, இரு தரப்பினரும் பின்வாங்கும்போது, ​​​​நெருக்கடியானது மிகவும் ஆபத்தான மேற்கு ஆசியாவில் ஈரானின் அதிகரித்து வரும் அபாயத்தை வலுப்படுத்துகிறது. அமெரிக்காவின் தயக்கம் மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக அமெரிக்காவை நம்பியிருப்பதும் தெளிவாகத் தெரிகிறது.

 

பைடன் கோட்பாடு


அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பின்னர், பைடன் நிர்வாகம் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் ஒரு பிராந்திய போராக மாறுவதைத் தடுப்பதில் எச்சரிக்கையாக உள்ளது. காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை ஜனாதிபதி ஜோ பைடன் ஆதரித்துள்ளார். அதே நேரத்தில் இஸ்ரேலுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த ஒரு இராஜதந்திர முயற்சியையும் தொடங்கியுள்ளார். இந்த முயற்சி இஸ்ரேலுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையே பதட்டத்தை குறைக்கும் நோக்கத்தை கொண்டது. இருப்பினும், இந்த அணுகுமுறை இரண்டு முக்கிய சவால்களைச் சந்தித்தது. முதலாவதாக, பைடன் நிர்வாகம் இஸ்ரேல்-அரபு உறவுகளை நிலையானதாக வைத்திருப்பதை நோக்கமாக கொண்டிருந்தது. இருப்பினும், ஈரான் மீது வாஷிங்டன் தனது ஆதிக்கத்தை செலுத்தியது. இரண்டாவதாக, இஸ்ரேல் இரண்டு பகுதிகளில் மோதல்களில் ஈடுபட்டது. ஒன்று காஸாவில் இருந்தது. மற்றொன்று ஈரானிய செல்வாக்கை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்ட அதன் சுற்றியுள்ள பகுதியில் இருந்தது. இந்த நிலை இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் ஏற்படும் அபாயத்தை அதிகரித்தது.


ஏப்ரல் 1, 2024 அன்று டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியதில் மூத்த புரட்சிகர காவலர் அதிகாரிகள் கொல்லப்பட்டபோது இந்த ஆபத்து உருவானது. ஈரானின் பதிலடி மற்றும் அதன் தாக்கங்களை அறிந்திருந்த அமெரிக்கா, முன்கூட்டியே உளவுத் தகவல்களை ஊடகங்களுக்கு கசியவிட்டது. ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் எந்தவொரு பதிலடி நடவடிக்கைகளையும் அமெரிக்கா ஆதரிக்காது என்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவிடம் தெரிவித்ததாக அதிபர் பைடன் கூறினார். பதற்றத்தைத் தணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். கிழக்கு ஐரோப்பா மற்றும் இந்தோ-பசிபிக் பகுதிகளில் அமெரிக்கா முக்கியமான இலக்குகளைக் கொண்டுள்ளது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இஸ்ரேலை இலக்காகக் கொண்ட பெரும்பாலான ஈரானிய "99%" ஏவுகணைகளை இடைமறித்தனர். இதனால் போர் விரிவாக்கம் தடுக்கப்பட்டது. அமெரிக்கா நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.  


நெதன்யாகுவின் குழப்பம்


இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஈரானிய நலன்களை குறிவைத்து சிரியாவில் மட்டும் இஸ்ரேல் 400க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. நவம்பர் 2020 இல் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டது உட்பட ஈரானிலும் அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கைகளுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. இது இஸ்ரேலை போர் நடவடிக்கைகளைத்  தொடர ஊக்குவித்தது. 


அக்டோபர் 7 க்குப் பிறகு இஸ்ரேல் அதன் இரகசிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. டிசம்பர் 25 அன்று, அவர்கள் சிரியாவில் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் உயர்நிலை ஆலோசகரான சையத் ராஸி மௌசவியை கொன்றனர். ஈரான் கடுமையாக பதிலடி கொடுக்கவில்லை. பின்னர், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (Islamic Revolutionary Guard Corps  (IRGC)) முக்கிய தளபதியான முகமது ரேசா ஜாஹேதி டமாஸ்கஸில் உள்ள தூதரகத்தில் இருப்பதை இஸ்ரேல் அறிந்தது. டமாஸ்கஸில் ஈரான் நடத்திய தாக்குதலால் தாங்கள் ஆச்சரியமடைந்ததாக இஸ்ரேலிய அதிகாரிகள் அமெரிக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

ஈரானின் பதிலடிக்குப் பிறகு திரு.நெதன்யாகு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். அவர் பொதுவாக தெஹ்ரானுக்கு எதிராக பலத்தை பயன்படுத்த விரும்பினார். இந்த தாக்குதல் அவருக்கு பலமாக பதிலடி கொடுக்க ஒரு வாய்ப்பு என்று பலர் நினைத்தனர். ஆனால் சூழ்நிலை அவருக்கு சாதகமாக இல்லை. அவர் ஈரானுக்கு எதிராக பலத்தை பயன்படுத்த விரும்பினாலும், அவர்களுடன் தனியாக போராட விரும்பவில்லை. அமெரிக்கா வழிநடத்தவும் ஆதரவளிக்கவும் அவர் விரும்புகிறார். இருப்பினும், இஸ்ரேலின் பதிலடியில் அமெரிக்கா சேராது என்று திரு. பிடன் கூறியபோது, ​​அது திரு. நெதன்யாகுவின் விருப்பங்களை குறைத்து. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரில் இருந்து விலகி இருக்க அமெரிக்காவின் விருப்பத்தை அவர் இன்னும் சோதித்திருக்கலாம். காசாவில் இஸ்ரேலின் போர் இன்னும் முடிவடையவில்லை. அதன் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி பைடனனின் தொடர்ச்சியான ஆதரவு தேவைப்பட்டது. எனவே, பிரதமர் நெதன்யாகு ஈரானின் மீதான நடவடிக்கைகளின் வேகத்தைக் குறைத்தார். அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தபடி, அவர் ஒரு ரேடார் அமைப்பைக் குறிவைத்தார். இந்த தாக்குதலை நெதன்யாகு அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொள்ளவில்லை. இந்த நடவடிக்கை பைடன் நிர்வாகத்திற்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்பட்டது. இது ஒரு பரந்த பிராந்திய மோதலைத் தடுக்க உதவியது. இருப்பினும், இஸ்ரேலின் கண்ணோட்டத்தில், இந்த பதில் பலவீனமாக இருந்தது. 


அயதுல்லாவின் கணக்கீடு


இஸ்ரேலுடனான போரில் ஈரான் பல ஆண்டுகளாக  பொறுமையாக உள்ளது. ஏனென்றால், காலப்போக்கில் ஈரான் பிராந்தியத்தில் தனது இருப்பை வளர்க்க விரும்புகிறது. பல முக்கியமான ஈரானிய அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், ஈரானின் சக்தி அதிகம் பலவீனமடையவில்லை. ஈரானின் அணுசக்தி திட்டம் இன்னும் பெரிதாகி வருகிறது. மேலும், பிராந்தியத்தில் அதன் நட்பு நாடுகளும் வலுவடைந்து வருகின்றனர். ஆனால், ஈரானின் தூதரக அமைப்பின் மீது இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியபோது, ​​மீண்டும் போரிட வேண்டிய நேரம் இது என்று ஈரான் முடிவு செய்தது. குண்டுவெடிப்பு தவிர, மற்ற விஷயங்கள் ஈரான் தனது வியூகத்தை மாற்றியது. ஈரான் இப்போது ரஷ்யா மற்றும் சீனாவுடன் நெருக்கமாக உள்ளது. சீனாவுடனான அதன் பிணைப்பு பெரும்பாலும் பணத்தைப் பற்றியது. ஆனால் ரஷ்யாவுடன் அது ஆழமானது. உக்ரைனில் போரிட ரஷ்யாவிற்கு ஈரான் ட்ரோன்களை வழங்கியது. மத்திய கிழக்கில், குறிப்பாக சீனா மற்றும் ரஷ்யா பிரச்சனைகளை ஏற்படுத்துவதால், அமெரிக்கா அதிக போர்களை விரும்பவில்லை என்பதையும் ஈரான் காண்கிறது.


மேற்கு ஆசியாவில் ஆறு மாதங்களாக ஹமாஸுடன் இஸ்ரேல் போரிட்டு வருகிறது. இருந்த போதிலும் இஸ்ரேல் தனது இலக்குகளை அடையவில்லை. இந்த இலக்குகளில் ஹமாஸை அகற்றுவது. பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் அதன் இராணுவத் தடுப்பை வலுப்படுத்துவது ஆகியவை முக்கியமானவை ஆகும். காசாவில் இஸ்ரேல் தனது  படைகளை  பயன்படுத்தியுள்ளது. இந்த படை வடக்கு மற்றும் மத்திய காசாவில் உள்ள பகுதிகளை அழித்துள்ளது. இந்த   போரில் 34,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இஸ்ரேல் இப்போது சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை வழக்கை எதிர்கொள்கிறது. அக்டோபர் 7 தாக்குதலும் பின்வரும் யுத்தமும் இஸ்ரேலை பலவீனப்படுத்திவிட்டதாக ஈரான் நம்புகிறது. அமெரிக்க பாதுகாப்பு உறுதிமொழிகளை முன்பு போல் நம்பகமானதாக பிராந்தியங்கள் பார்க்கவில்லை. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஈரான் இஸ்ரேலை வெளிப்படையாக தாக்கி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜோர்டான் மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பு முயற்சிகள் இருந்தபோதிலும், சில ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் இன்னும் இஸ்ரேலைத் தாக்கியுள்ளன.


ஏப்ரல் 14-ம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. அதற்கு முன்பு, ஈரான் 2019 இல் சவுதி அரேபியாவைத் தாக்கியது. இந்த தாக்குதல் அதன் எண்ணெய் உற்பத்தியில் பாதியைக் குறைத்தது. 2020 இல், அது ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானத் தளத்தைத் தாக்கியது. கடுமையான விளைவுகளை சிந்திக்காமல் ஈரான் இவற்றைச் செய்தது. இது மேற்கு ஆசியாவில் ஈரானின் நடவடிக்கைகள் கட்டுப்பாடின்றி நடக்கும் புதிய சூழ்நிலையைக் காட்டுகிறது. ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேல் வலுவாக பதிலளிக்கவில்லை. திருப்பித் தாக்கியதை ஒப்புக் கொள்ளவில்லை. மேற்கத்திய நட்பு நாடுகள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டன. ஆபத்து குறித்த ஈரானின் மதிப்பீடு சரியானது என்று பரிந்துரைத்தது. இது ஈரானுக்கு மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தலாம். இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை ஏவுகணைகள் அல்லது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்கும் ஒரே நாடு ஈரான் மட்டுமே.




Original article:

Share: