அதிகரித்து வரும் பட்டினி அலையை எதிர்த்துப் போராடுவோம்

 போரிடும் கட்சிகள் பசியை ஆயுதமாகப் பயன்படுத்தி புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளன. சர்வதேச உதவி மற்றும் நிவாரண நடவடிக்கைகளை தடுப்பதன் மூலம் அவர்கள் இதைச் செய்கிறார்கள்.


உலகளவில் உணவுப் பாதுகாப்பின்மை தொடர்ந்து மோசமடைந்து வருவதால், 2030 ஆம் ஆண்டுக்குள் பசியற்ற உலகு என்ற இலக்கு கிட்டத்தட்ட கைவிடப்பட்டதாகத் தெரிகிறது. உணவுப் பாதுகாப்புத் தகவல் வலையமைப்பு (Food Security Information Network (FSIN)) என்பது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல மேம்பாட்டுக் குழுக்களுக்கும் இடையிலான ஒரு கூட்டணியாகும். 2023 ஆம் ஆண்டில், உலகளவில் 282 மில்லியன் மக்கள் கடுமையான பசியை எதிர்கொண்டதாக உணவுப் பாதுகாப்புத் தகவல் வலையமைப்பு தெரிவித்துள்ளது. இந்த பிரச்சனை பெரும்பாலும் மோதல் மற்றும் காலநிலை நெருக்கடி காரணமாக உள்ளது. கடுமையான பட்டினியை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளது. இந்த நிலைமை உணவு கிடைப்பதிலும் அணுகுவதிலும் பெரும் ஏற்றத்தாழ்வைக் காட்டுகிறது. சில பொருளாதாரங்கள் பெரிய உணவு உபரிகளைக் கொண்டுள்ளன. சில பிராந்தியங்கள் கிட்டத்தட்ட முழுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.


2016-17 முதல் பட்டினி அதிகரிப்பதற்கு போர்கள் முக்கியமான காரணியாக உள்ளது. உணவுப் பாதுகாப்புத் தகவல் வலையமைப்பு (FSIN) அறிக்கை காசா மற்றும் சூடானில் உள்ள நிலைமைகளை காட்டுகிறது அங்கு நடக்கும் மோதல்கள் உணவு நெருக்கடிகளை அதிகரிக்க செய்கிறது. மோதல்கள் உணவுப் பாதுகாப்பை பல வழிகளில் பாதிக்கின்றன: அவை உள்ளூர் உணவு உற்பத்தியைக் குறைக்கின்றன, சேமிப்பு உள்கட்டமைப்பை அழிப்பதன் மூலம் விநியோகச் சங்கிலிகளை சீர்குலைக்கின்றன, போக்குவரத்து மற்றும் தளவாட செலவுகளை அதிகரிக்கின்றன மற்றும் உணவு விநியோகத்தில் ஈடுபடுபவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கின்றன. மேலும், இந்த சூழ்நிலைகளால் ஏற்படும் விரக்தி பெரும்பாலும் மேலும் மோதலுக்கு வழிவகுக்கிறது. சர்வதேச உதவி மற்றும் நிவாரண நடவடிக்கைகளை வேண்டுமென்றே தடுப்பது, காசா மற்றும் உக்ரேன் இரண்டிலும் காணப்படும் நிச்சயமற்ற சூழ்நிலை  உணவுப் பாதுகாப்பிற்கு மற்றொரு தீவிர அச்சுறுத்தலைப் மாறிவருகிறது. ஏனெனில், அது குடிமக்களுக்கு எதிராக பட்டினியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. 


பருவநிலை நெருக்கடியை எதிர்கொள்வதால், நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். முதலாவதாக, போரிடும் தரப்பினர் மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு போதுமான உணவு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். (காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் பஞ்சத்தை ஏற்படுத்தக்கூடாது). இரண்டாவதாக, காலநிலையை எதிர்க்கும் விவசாயம், கடினமான பயிர்களை வளர்ப்பது, குறைந்த தண்ணீரைப் பயன்படுத்துவது, உணவை அதிக சத்தானதாக மாற்றுவது மற்றும் கழிவுகளைக் குறைப்பது ஆகியவற்றில் நாடுகள் கவனம் செலுத்த வேண்டும். சில இடங்களில் அதிகமாக உணவு உட்கொள்வதால் மற்றவர்களுக்கு போதுமான உணவு இல்லை என்ற பிரச்சனையை சரிசெய்ய, உணவுக்கான வர்த்தக தடைகள் குறைக்கப்பட வேண்டும். இந்த இந்த வழியை பின்பற்றினால் அனைவரும் பசி என்ற பிணியில் இருந்து விடுபடலாம்.




Original article:

Share: