எழுபது ஆண்டுகளுக்கு முன், நேரு மக்களவையில் ஆற்றிய உரை, உலக அணு ஆயுத ஒழிப்பில் இந்தியாவை ஒரு தலைவராக நிலைநிறுத்தியது. இந்த உரை, பகுதி சோதனை தடை ஒப்பந்தத்தை (Partial Test Ban Treaty) கொண்டு வர உதவியது. மேலும், அணு ஆயுதங்களின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இது ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.
ஏப்ரல் 2, 1954 அன்று, பிரதமர் ஜவஹர்லால் நேரு மக்களவையில் ஒரு முக்கியமான உரையை நிகழ்த்தினார். இந்த உரை அணு ஆயுத ஒழிப்பு குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டிற்காக உலக அளவில் அறியப்பட்டது. 'கேஸ்டில் பிராவோ' (Castle Bravo) என்ற மிக சக்திவாய்ந்த அணுகுண்டு சோதனையை அமெரிக்கா நடத்திய பின்னர் இந்த உரை நிகழ்த்தப்பட்டது. இந்த சோதனை மிகவும் வலுவாக இருந்தது. அது, அனைத்து அளவீட்டு கருவிகளையும் உடைத்தது. நேரு தனது உரையில், அணு ஆயுத சோதனையை நிறுத்த "நிலையான ஒப்பந்தத்தை" (a standstill agreement) பரிந்துரைத்தார். அவரது பேச்சு நடைமுறை சிந்தனை, தொலைநோக்கு அணுகுமுறையில் நம்பிக்கையை ஏற்படுத்தியது.
இந்தியா அப்போதுதான் சுதந்திரம் அடைந்து தேசத்தை கட்டியெழுப்புவதில் பல சவால்களை எதிர்கொண்டது. வலுவான இராணுவம் அல்லது பொருளாதாரம் போன்ற அதிகாரத்தின் வழக்கமான அறிகுறிகள் அதற்கு இல்லை, மேலும் இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் இல்லை. இப்படி பல சவால்கள் இருந்தபோதிலும், நேரு உலகளவில் இந்தியாவிற்கான இடத்தை உறுதியாக நம்பினார். அணு ஆயுத சோதனைகளை நிறுத்த வேண்டும் என்று ஆலோசனை கூறியது மட்டுமல்லாமல், இந்த யோசனையை தன்னால் முடிந்த எல்லா இடங்களிலும் பரப்ப கடுமையாக செயலாற்றினார். நேரு தனது உரையின் மூலம் அணு ஆயுதங்களுக்கு எதிரான உலகளாவிய இயக்கத்தின் தலைவராக இந்தியாவின் நிலையை உறுதிப்படுத்தினார். பகுதி சோதனை தடை ஒப்பந்தத்தை (Partial Test Ban Treaty (PTBT)) உருவாக்க வழிவகுத்த முயற்சிகளை அவர் தூண்டினார். அணு ஆயுதங்களை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று வாதிடுவதன் மூலம், அவர் அவற்றின் பரவலைக் குறைக்கவும் முடியும் என் நம்பினார்.
முடங்கிய உடன்பாடு
பனிப்போரின் போது ஆயுதக் குறைப்பு பிரச்சினையில் அதன் படிப்படியான அணுகுமுறைக்காக இந்த நிலையான ஒப்பந்தம் குறிப்பிடத்தக்கது. நேரு நான்கு முக்கிய விஷயங்களை முன்மொழிந்தார்: முதலில், அணு ஆயுத சோதனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. இரண்டாவதாக, ஐக்கிய நாடுகளின் ஆயதக்குறைப்பு ஆணையம் (Disarmament Commission) குறுகிய கால சோதனை தடை மற்றும் அணு ஆயுதங்களின் உற்பத்தி மற்றும் சேமிப்பை தடை செய்யும் நீண்ட கால நோக்கம் ஆகிய இரண்டையும் சமாளிக்க பரிந்துரைத்தது. மூன்றாவதாக, இந்த ஆயுதங்களின் அழிவு சக்தி மற்றும் விளைவுகள் குறித்து அதிக வெளிப்படைத்தன்மையைக் கோருவதன் மூலம் அணுசக்தி நாடுகள் மீது பொது அழுத்தத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது. கடைசியாக, அணு ஆயுதங்கள் அச்சுறுத்தலை உலகளவில் அங்கீகரிக்க அழைப்பு விடுத்தது. ஆயுதக் குறைப்பு பற்றிய விவாதத்தை நேரு, ஐக்கிய நாடுகள் சபையின் ஆயதக்குறைப்பு ஆணையத்திற்கு அப்பால் விரிவுபடுத்தினார்.
நேருவின் நடவடிக்கைகள், அணு சக்தி நாடுகள் மற்றும் அவற்றின் சோதனைகளால் உலகளவில் ஏற்படுத்தும் ஆபத்தை உணர்த்தியது. தங்கள் சோதனைகளால் ஏற்படும் தீங்குகளை அவர்கள் காண வேண்டும் மற்றும் ஆயதக்குறைப்பிற்க்கு வேண்டிய அழுத்தத்தை அவர்கள் உணர வேண்டும் என்று அவர் விரும்பினார். ஐ.நா.வில் இந்தியா தனது முயற்சிகளைத் தொடர்ந்தது, இதனால் 1955 ஆம் ஆண்டில், நேரு அணுசக்தி சோதனையை நிறுத்த வேண்டும் என்று வாதிட்டார். மேலும், இந்த பிரச்சினையில் முன்னேற்றத்தை ஐ.நா. ஆயுதக் குறைப்பு ஆணையத்திற்கு (UN Disarmament Commission) தெரிவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
இதனுடன், அணு ஆற்றல் மற்றும் அணு வெடிப்புகளின் தாக்கத்தை ஆராய விஞ்ஞானிகளுக்காக 1954 இல் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தார். இருப்பினும், 1956 இல் சூயஸ் நெருக்கடி (Suez Crisis) மற்றும் ஹங்கேரியப் புரட்சி (Hungarian Revolution) ஆகியவை அறிவியல் மற்றும் உலக விவகாரங்கள் மீதான பக்வாஷ் மாநாடு (Pugwash Conferences on Science and World Affairs) முதல் சந்திப்பைத் தாமதப்படுத்தியது. இருந்த போதிலும், கூடி இருந்த விஞ்ஞானிகளுக்கு ஏற்கனவே பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் (Bertrand Russell) மற்றும் ஜோசப் ரோட்ப்ளாட் (Joseph Rotblat) ஆகியோரால் அழைப்பு விடுக்கப்பட்டது.
தார்மீக சக்தி
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் (Nuclear Non-Proliferation Treaty) மற்றும் விரிவான சோதனை தடை ஒப்பந்தம் (Comprehensive Test Ban Treaty) போன்ற அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தைகளில் இந்தியா தீவிரமாக பங்கேற்று 70 ஆண்டுகள் ஆகிறது. தேசிய நலன்களுக்காக இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திடவில்லை என்றாலும், அணு ஆயுதக் குறைப்பில் இந்தியாவின் பங்கை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. 1954 இல், இந்தியா பொருளாதார ரீதியாக பலவீனமாக இருந்தது மற்றும் பாண்டுங் மாநாட்டில் இருந்ததைப் போன்ற அணிசேரா நாடுகளின் ஆதரவைப் பெறவில்லை. இருப்பினும், இந்தியாவுக்கு தார்மீக பலம் இருந்தது. 1948 ஆம் ஆண்டு தனது முதல் ஐ.நா உரையில் நேரு கூறியது போல், இந்தியாவின் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், பெரிய படைகள் மற்றும் அணு குண்டுகளைக் கொண்ட சக்திவாய்ந்த நாடுகளைப் பார்த்து நாங்கள் பயப்படவில்லை. இந்த பின்னடைவு அணு ஆயுதக் குறைப்பு தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை வரையறுத்தது.
ஹைதராபாத் மற்றும் கோவாவில் படைகளைப் பயன்படுத்துவதில் இந்தியா பின்னர் சவால்களை எதிர்கொண்டாலும், சீனா போன்ற அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒழுக்கம் மட்டுமே பாதுகாக்காது என்பதை உணர்ந்தது. உலகளாவிய செல்வாக்கைப் பெற அறநெறியைப் பயன்படுத்துவது புத்திசாலித்தனமானது. நேரு ஆயுதக் குறைப்பை ஆதரித்தார். ஏனென்றால், இந்தியாவின் வளர்ச்சிக்கு வளங்கள் தேவை, ஆயுதங்கள் அல்ல. இருப்பினும், ஒரு பாதுகாப்புத் திட்டம் இருந்தது: 1948 ஆம் ஆண்டின் அணுசக்தி சட்டம் ஆயுத மேம்பாட்டுத் தேவைகளின் போது அணுசக்தி திட்டத்தை பயன்படுத்த அனுமதித்தது. இந்தியாவின் அணுசக்தி திட்டத்தின் சிற்பியான ஹோமி பாபா அணு ஆயுதங்களை விரும்பினார். அதை நேரு நேரடியாக அங்கீகரிக்கவில்லை, ஆனால் முற்றிலும் ஊக்கப்படுத்தவும் இல்லை.
இந்தியாவின் உலகளாவிய பங்கை கோடிட்டுக் காட்டிய மக்களவையில் நேருவின் உரையின் தாக்கம் குறிப்பிடத்தக்கது. இது அணுசக்தி நாடுகளின் பகுதி சோதனை தடை ஒப்பந்தத்தின் (PTBT) பேச்சுவார்த்தையில் செல்வாக்கு செலுத்தியது. 1963 ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது, இந்தியா இதில் கையெழுத்திட்ட நான்காவது நாடாகும். அணுக் கதிர்வீச்சின் விளைவுகள் பற்றிய கூடுதல் தகவலின் அவசியத்தை இந்த உரை வலியுறுத்தியது மற்றும் அணு ஆயுதங்களுக்கு எதிராக உலகளாவிய கருத்தைத் திரட்டியது. இது அணுசக்தி பயன்பாட்டிற்கு எதிரான ஒரு விதிமுறையை நிறுவ உதவியது. 1945 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இன்றுவரையில் அணுசக்தியின் அழிவுகரமான பயன்பாட்டைத் தடுத்தது. அமைதி மற்றும் ஒழுக்கத்திற்கான குரல் என்ற இந்தியாவின் உலகளாவிய நற்பெயரை இந்தப் பேச்சு உயர்த்தியது, அமைதி மற்றும் உலகளாவிய நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான நேருவின் பார்வையை எதிரொலித்தது.
பிரியஞ்சலி மாலிக் 'India's Nuclear Debate: Exceptionalism and the Bomb' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.