அண்டார்டிகா ஐந்தாவது பெரிய கண்டமாகும். இது 14 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. அண்டார்டிகா 98% அடர்த்தியான பனிக்கட்டிகளால் சூழப்பட்டுள்ளது. அண்டார்டிகா பூமியின் நன்னீர் இருப்புகளில் (freshwater reserves) 75%-ஐக் கொண்டுள்ளது.
கடந்த மாதம், கொச்சியில் 46-வது அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம் (Antarctic Treaty Consultative Meeting (ATCM)) இந்தியாவில் நடைபெற்றது. 2007-ஆம் ஆண்டு முதல் அண்டார்டிகாவில் கட்டுப்பாடற்ற சுற்றுலா பற்றிய கவலைகளை இந்தியா எழுப்பியது மற்றும் முதல் முறையாக அண்டார்டிக் சுற்றுலாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட புதிய பணிக்குழுவை அறிமுகப்படுத்தியது.
இந்த ஆண்டு அண்டார்டிகா ஆலோசனைக் கூட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
1. அனைத்தையும் உள்ளடக்கிய நிர்வாகத்தை (all inclusive governance)
ஊக்குவித்தல்.
2. முதல் சுற்றுலாக் கட்டமைப்பை (tourism framework) அறிமுகப்படுத்தி அதன்
வளர்ச்சியைத் தொடங்குதல்.
3. மைத்ரி-II (Maitri-II) ஆராய்ச்சி நிலையத்தை நிறுவுவதாக அறிவித்தல்.
2007-ஆம் ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்ற அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டத்தில், இந்தியா முதலில் அண்டார்டிகாவில் சுற்றுலாப் பயணிகள் குறித்த கவலைகளை வெளிப்படுத்தியது. பல ஆண்டுகளாக, அண்டார்டிக்காவிற்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்களால் (tour operators) நிர்வகிக்கப்படுகிறது. 2023-ல் அண்டார்டிகாவிற்கு ஒரு இலட்சம் சுற்றுலாப்பயணிகள் பார்வையிட சென்றதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
துருவ அறிவியலில் (polar sciences) உள்ள வல்லுநர்கள், சுற்றுலா அண்டார்டிகாவை எவ்வாறு பாதிக்கிறது என்பதை யாரும் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்று நம்புகிறார்கள். கொச்சியில் நடந்தக் கூட்டத்தில், அண்டார்டிகா ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் சுற்றுலாக் கட்டமைப்பை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து ஒப்புக்கொண்டனர்.
கொச்சியில், அண்டார்டிகாவின் செயல்பாடுகளுக்கான சுற்றுச்சூழல் பொறுப்பை மையமாகக் கொண்ட தீர்மானம் மற்றும் இணைப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டது. எந்தவொரு கட்டமைப்பையும் உருவாக்குவது சவாலானது. ஏனெனில், இது சட்ட பொறுப்பு மற்றும் பிற சிக்கலான சிக்கல்களை உள்ளடக்கியது. பல நாட்களுக்கு 50-க்கும் மேற்பட்ட தரப்பினரிடமிருந்து ஒப்பந்தம் தேவைப்படுகிறது.
2025-ல் இத்தாலியில் அடுத்த அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம் (Antarctic Treaty Consultative Meeting (ATCM)) சுற்றுலா கட்டமைப்பு பற்றிய கூடுதல் விவாதங்கள் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. கட்டமைப்பைப் பற்றி ஒருமித்த கருத்து எட்டப்பட்டவுடன், அண்டார்டிகாவில் சுற்றுலாவை கட்டுப்படுத்தும் கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படும்.
கொச்சியில் நடைபெற்ற கூட்டத்தில், ஏற்கனவே உள்ள 35 ஆண்டுகால மைத்ரி தளத்திற்கு பதிலாக புதிய மைத்ரி-II ஆராய்ச்சி தளத்திற்கான திட்டங்களை இந்தியா வெளிப்படுத்தியது. இந்த முடிவு நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது, இந்தியா தனது கட்டடக்கலை மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்புகளைத் திட்டமிடத் தொடங்கும், அவை அரசாங்கத்திற்கு வழங்கப்படும். தயாரானதும், மைத்ரி II-க்கான சுற்றுச்சூழல் அறிக்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும். 2030-ஆம் ஆண்டு முற்பகுதியில் இந்தியாவின் மைத்ரி-II செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொச்சியில் நடைபெற்றக் கூட்டத்தில், அண்டார்டிக் ஒப்பந்தக் கட்சிகளுடன் சவுதி அரேபியாவும் இணைந்தது.
கொச்சியில் உள்ள அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம் (Antarctic Treaty Consultative Meeting (ATCM)) 56 நாடுகளைச் சேர்ந்த 400 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கடல் பனி மாற்றங்கள், பேரரசப் பென்குயின்களைப் (Emperor penguin) பாதுகாத்தல், முக்கிய நடவடிக்கைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகளை மேம்படுத்துதல் மற்றும் அண்டார்டிகாவின் சுற்றுச்சூழலைக் கண்காணிப்பதற்கான சர்வதேச கட்டமைப்பை உருவாக்குதல் பற்றி விவாதித்தனர்.
"வசுதைவ குடும்பகம் - உலகம் ஒரு குடும்பம்" (Vasudhaiva Kutumbakam) என்ற நெறியைப் பின்பற்றுபவர்கள் என்ற முறையில், அண்டார்டிகாவையும் அதன் வளங்களையும் பாதுகாப்பதில் ஆர்வமுள்ள நாடுகளுடன் உள்ளடங்கிய அணுகுமுறையை விரும்புவதாக அண்டார்டிக் நாடாளுமன்றத்தில் இந்தியா தெரிவித்தது. ஆளுகை, ஆராய்ச்சி மற்றும் சட்டங்கள் மற்றும் கொள்கைகளை ஒன்றாக உருவாக்குவதற்கான பொறுப்புகளை பகிர்ந்துகொள்ள அண்டார்டிக் ஒப்பந்தத்தில் சேர அதிக நாடுகளை அழைப்பதன் முக்கியத்துவத்தை இந்தியா வலியுறுத்தியது.
புவிசார் அரசியல் அண்டார்டிக் நிர்வாகத்திற்கு தடையாக இருக்கக்கூடாது என்று இந்தியா வலியுறுத்தியது. கொச்சியில், அண்டார்டிக் ஒப்பந்தம் ஒரு சில நாடுகளின் பிரத்யேக மன்றமாக (‘exclusive club’) இருக்கக்கூடாது என்று ஆலோசனைக் கட்சிகளுக்கு (முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளவர்கள்) இந்தியா நினைவூட்டியது. கனடாவும் பெலாரஸும் ஆலோசனை உறுப்பினர்களாக மாற முயற்சி செய்துவருகின்றன. இன்னும் இந்த நிலையை இரு நாடுகளும் அடையவில்லை.
அண்டார்டிகா உலகின் ஐந்தாவது பெரிய கண்டமாகும். இது 14 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. அண்டார்டிகாவின் 98% தடிமனான பனிக்கட்டிகளால் சூழப்பட்டுள்ளது. இது பூமியின் நன்னீர் இருப்புகளில் 75%-ஐக் கொண்டுள்ளது. இந்தக் கண்டம் அதன் தனித்துவமான வனவிலங்குகள் மற்றும் அழகிய சூழலுக்கு புகழ் பெற்றது. தென் துருவத்திற்கு அருகில் அமைந்துள்ள அண்டார்டிகா மிகவும் குளிரான, வறண்ட மற்றும் காற்றுடன் கூடிய இதமான சூழல் நிலவுகிறது.
புவி வெப்பமடைதலின் கீழ், பூமியின் மூன்று துருவங்கள் - வடக்கு, தெற்கு மற்றும் இமயமலை - மிகவும் பாதிக்கப்படுகின்றன. கொச்சி கூட்டத்தில், அண்டார்டிகாவின் கூடுதல் பகுதிகள் 'பாதுகாக்கப்பட்ட' பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துருவப் பகுதிகளில் நிலத்தடி உறைபனி (permafrost) வேகமாகக் கரைவது ஒரு கவலையாக உள்ளது. நிலத்தடி உறைபனி (permafrost) என்பது செயலில் உள்ள பனிக்கட்டிக்கு அடியில் உறைந்த பாறை மற்றும் மண்ணாகும். வெப்பமான வெப்பநிலை, தாவரங்கள் போன்ற கரிமப் பொருட்களை வெளிப்படுத்தி, சிதைக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. இது கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் மீத்தேனை காற்றில் வெளியிடுகிறது. இது உலகளாவிய காலநிலை மாற்றத்திற்கு பங்களிக்கிறது. ஒரு காலத்தில் ஆரம்பகால அண்டார்டிக் பயணங்களால் ஆய்வு செய்யப்பட்ட பகுதிகளை இப்போது கரைக்கும் நிலத்தடி உறைபனி ஆபத்தில் உள்ள பகுதிகளைப் பாதுகாக்க, அண்டார்டிகாவின் பல பகுதிகள் 'பாதுகாக்கப்பட்டவை' என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கூட்டத்தின் போது, அண்டார்டிகா சிறப்புப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு 17 புதுப்பிக்கப்பட்ட மற்றும் புதிய மேலாண்மைத் திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டன.
வளர்ந்து வரும் சுற்றுலா மற்றும் அண்டார்டிகாவில் மனித இருப்பு அதிகரிப்பது அதிக நோய்க்கிருமி பறவைக் காய்ச்சல் (Highly Pathogenic Avian Influenza (HPAI)) அபாயத்தை ஏற்படுத்துகிறது. கொச்சி கூட்டத்தில், விஞ்ஞானிகள் அண்டார்டிகாவின் காற்று மற்றும் வளிமண்டலம் மாசுபட்டுள்ளது மற்றும் பூர்வீக வனவிலங்குகளுக்கு மனித இருப்பு அதிகரிப்பது அதிக நோய்க்கிருமி பறவைக் காய்ச்சல் பரவக்கூடும் என்ற சமீபத்திய கண்டுபிடிப்புகள் குறித்து விவாதித்தனர். அண்டார்டிகாவில் உள்ள மனிதர்கள் மற்றும் வனவிலங்குகளிடையே மனித இருப்பு அதிகரிப்பது அதிக நோய்க்கிருமி பறவைக் காய்ச்சல் (Highly Pathogenic Avian Influenza (HPAI)) பரவுவதைத் தடுக்கவும் குறைக்கவும் உயிர் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை நிறுவ வேண்டியதன் அவசியத்தை கூட்டம் வலியுறுத்தியது.
Original link : https://indianexpress.com/article/explained/explained-global/antarctic-parliament-meet-9394309/