இணையதளங்கள் மெதுவாக இருப்பதால், செயல்முறை சிக்கலானது மற்றும் பதிவேற்றம் செய்ய நீண்டநேரம் எடுப்பதால் விளம்பரதாரர்கள் விரக்தியடைந்துள்ளனர்.
உச்சநீதிமன்றம் ஒளிபரப்பாளர்கள் மற்றும் அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களுக்கு அவர்களின் விளம்பரங்கள் தற்போதுள்ள விதிகளின் கீழ் உறுதியாக செயல்பட வேண்டும் மே 7, 2024 அன்று உத்தரவிட்டது. பதஞ்சலி ஆயுர்வேதம் தங்கள் விளம்பரங்களில் தவறான கூற்றுக்களை வெளியிட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எதிர்காலத்தில் மற்ற விளம்பரதாரர்கள் இந்த தவறை மீண்டும் செய்யாமல் இருப்பதை இந்த உத்தரவு நோக்கமாக கொண்டிருந்தது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் விளம்பரதாரர்கள் தங்கள் விளம்பரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று கோரியது. பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தளத்தில் (Press Council of India site) அச்சு மற்றும் டிஜிட்டல் விளம்பரங்களும், ஒளிபரப்பு சேவா வலைத்தளத்தில் தொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களும் இதில் அடங்கும். இதுவரை, 28,000-க்கும் மேற்பட்ட தன்னுறுதிச் சான்றிதழ்கள் (self-declaration certificates (SDCs)) பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தளத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சேவா தளத்தில் எண் தெளிவாக இல்லை. விளம்பரதாரர்கள் இந்த தளங்களில் தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். தளங்கள் அடிக்கடி செயலிழந்து பதிவேற்றும் செயல்முறை மெதுவாக இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இது விளம்பரங்களை வெளியிடுவதில் தாமதமாகிறது. ஊடக நிறுவனங்களுக்கு நிதி சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சினைகள் வருமான வரி மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி வலைத்தளம் (GST portal) தொடங்கப்பட்டபோது இருந்த சிக்கல்களைப் போலவே உள்ளன.
இது போன்ற பெரிய அளவிலான திட்டங்களை மேற்கொள்வதற்குமுன் வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பின் அவசியத்தை இது எடுத்துக்காட்டுகிறது. இந்திய செய்தித்தாள் சங்கம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், அனைத்து விளம்பரங்களும் தன்-உறுதிச் சான்றிதழ்களை பெறுவதற்கு எதிராக வாதிடுகிறது. பதஞ்சலி விளம்பரங்களில் தவறான உரிமைகோரல்களால் சிக்கல் எழுந்ததால், எந்த உரிமைகோரல்களும் இல்லாத விளம்பரங்களுக்கு விலக்கு அளிக்குமாறு அவர்கள் பரிந்துரைக்கின்றனர். கூடுதலாக, அரசு மற்றும் பொதுத்துறை விளம்பரங்கள் அல்லது சட்டப்பூர்வ விளம்பரங்களுக்கு தன்னுறுதிகள் தேவையில்லை. பல்வேறு விளம்பர அளவுகள், பதிப்புகள் மற்றும் மொழிகளுக்கான தன்னுறுதிச் சான்றிதழ்கள் நிர்வகிப்பது பணிச்சுமையை அதிகரிக்கிறது.
டிஜிட்டல் ஊடகம், இப்போது அச்சு ஊடகத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. அது பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. டிஜிட்டல் விளம்பரங்கள் பெரும்பாலும் அச்சு விளம்பரங்களுடன் வருகின்றன. தன்னுறுதிச் சான்றிதழ்களை ஒரே நேரத்தில் கையகப்படுத்த வேண்டும். டிஜிட்டல் விளம்பரங்கள் காணொளிகள் முதல் பதாகை விளம்பரங்கள் வரை பரவலாக வேறுபடுவதால் இது சவாலானது. விளம்பரதாரர்கள் தங்களது முழு மீடியா திட்டத்தையும் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றால், போட்டித்தன்மையை இழக்க நேரிடும். தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் நடவடிக்கை, தவறான விளம்பரங்களில் இருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்கும்போது, செயல்படுத்துவதில் அதிக கவனம் தேவைப்படுகிறது. விளம்பரத் துறையுடன் கூடுதல் விவாதங்களும் தேவைப்படுகிறது.