Showing posts with label சரக்கு மற்றும் சேவை வரி. Show all posts
Showing posts with label சரக்கு மற்றும் சேவை வரி. Show all posts

விளம்பரங்களுக்கான தன்னுறுதிச் சான்று (Self-declaration certificate) செயல்முறை மெருகேற்றப்பட வேண்டும்.

     இணையதளங்கள் மெதுவாக இருப்பதால், செயல்முறை சிக்கலானது மற்றும் பதிவேற்றம் செய்ய நீண்டநேரம் எடுப்பதால் விளம்பரதாரர்கள் விரக்தியடைந்துள்ளனர். 


உச்சநீதிமன்றம் ஒளிபரப்பாளர்கள் மற்றும் அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களுக்கு அவர்களின் விளம்பரங்கள் தற்போதுள்ள விதிகளின் கீழ் உறுதியாக செயல்பட வேண்டும் மே 7, 2024 அன்று உத்தரவிட்டது. பதஞ்சலி ஆயுர்வேதம் தங்கள் விளம்பரங்களில் தவறான கூற்றுக்களை வெளியிட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எதிர்காலத்தில் மற்ற விளம்பரதாரர்கள் இந்த தவறை மீண்டும் செய்யாமல் இருப்பதை இந்த உத்தரவு நோக்கமாக கொண்டிருந்தது. 


இந்த உத்தரவைத் தொடர்ந்து, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் விளம்பரதாரர்கள் தங்கள் விளம்பரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று கோரியது. பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தளத்தில் (Press Council of India site) அச்சு மற்றும் டிஜிட்டல் விளம்பரங்களும், ஒளிபரப்பு சேவா வலைத்தளத்தில் தொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களும் இதில் அடங்கும். இதுவரை, 28,000-க்கும் மேற்பட்ட தன்னுறுதிச் சான்றிதழ்கள் (self-declaration certificates (SDCs)) பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தளத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சேவா தளத்தில் எண் தெளிவாக இல்லை. விளம்பரதாரர்கள் இந்த தளங்களில் தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். தளங்கள் அடிக்கடி செயலிழந்து பதிவேற்றும் செயல்முறை மெதுவாக இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இது விளம்பரங்களை வெளியிடுவதில் தாமதமாகிறது. ஊடக நிறுவனங்களுக்கு நிதி சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சினைகள் வருமான வரி மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி வலைத்தளம் (GST portal)  தொடங்கப்பட்டபோது இருந்த சிக்கல்களைப் போலவே உள்ளன.

 

இது போன்ற பெரிய அளவிலான திட்டங்களை மேற்கொள்வதற்குமுன் வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பின் அவசியத்தை இது எடுத்துக்காட்டுகிறது. இந்திய செய்தித்தாள் சங்கம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், அனைத்து விளம்பரங்களும் தன்-உறுதிச் சான்றிதழ்களை பெறுவதற்கு எதிராக வாதிடுகிறது. பதஞ்சலி விளம்பரங்களில் தவறான உரிமைகோரல்களால் சிக்கல் எழுந்ததால், எந்த உரிமைகோரல்களும் இல்லாத விளம்பரங்களுக்கு விலக்கு அளிக்குமாறு அவர்கள் பரிந்துரைக்கின்றனர். கூடுதலாக, அரசு மற்றும் பொதுத்துறை விளம்பரங்கள் அல்லது சட்டப்பூர்வ விளம்பரங்களுக்கு தன்னுறுதிகள் தேவையில்லை. பல்வேறு விளம்பர அளவுகள், பதிப்புகள் மற்றும் மொழிகளுக்கான தன்னுறுதிச் சான்றிதழ்கள் நிர்வகிப்பது பணிச்சுமையை அதிகரிக்கிறது.


டிஜிட்டல் ஊடகம், இப்போது அச்சு ஊடகத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. அது பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. டிஜிட்டல் விளம்பரங்கள் பெரும்பாலும் அச்சு விளம்பரங்களுடன் வருகின்றன.  தன்னுறுதிச் சான்றிதழ்களை ஒரே நேரத்தில் கையகப்படுத்த வேண்டும். டிஜிட்டல் விளம்பரங்கள் காணொளிகள் முதல் பதாகை விளம்பரங்கள் வரை பரவலாக வேறுபடுவதால் இது சவாலானது. விளம்பரதாரர்கள் தங்களது முழு மீடியா திட்டத்தையும் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றால், போட்டித்தன்மையை இழக்க நேரிடும். தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் நடவடிக்கை, தவறான விளம்பரங்களில் இருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்கும்போது, ​​செயல்படுத்துவதில் அதிக கவனம் தேவைப்படுகிறது. விளம்பரத் துறையுடன் கூடுதல் விவாதங்களும் தேவைப்படுகிறது.



Share:

சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்தங்களில் முன்னேற்றம் தேவை

 சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) ஆணையம்  நிலுவையில் உள்ள சீர்திருத்தங்களை இனியும் தாமதப்படுத்தக் கூடாது.

சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) ஆணையம் இம்மாத இறுதியில் ஏழு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. ஏப்ரல் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் புதிய உச்சமாக ₹2.1 லட்சம் கோடியைத் தொட்டது. நிதியாண்டின் இறுதி மாதத்திற்கு அடுத்த மாதமாக இருப்பதால் ஏப்ரல் மாதம் அதிக வரிவருவாயை ஈட்டியுள்ளது.  ஏப்ரல் மாத பரிவர்த்தனைகளுக்கான மே மாத சரக்கு மற்றும் சேவை வரி ரசீதுகள் ₹1,72,739 கோடியாகும். இது இதுவரை இல்லாத அளவிற்கு ஐந்தாவது அதிகபட்ச வரி வருவாய் இதுவாகும். இது கடந்த ஆண்டைவிட 10% அதிகமாகும். ஆனால், முந்தைய மாதத்தில் இருந்த 12.4% அதிகரிப்பைக் காட்டிலும் குறைவு. ஜூலை 2021 முதல் சரக்கு மற்றும் சேவை வரி வருவாயில்  மெதுவான வளர்ச்சியிருந்தது.  ஜூலை 2021-ல், இரண்டாவது கொரோனா அலை பொருளாதார நடவடிக்கைகளை கடுமையாகப் பாதித்தது. கடந்த மூன்று ஆண்டுகளில், சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் பொதுவாக குறைந்தது. இருப்பினும், சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் 11% அதிகரித்துள்ளது. 2023-24-க்கான சராசரி மாத சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ₹1.68 லட்சம் கோடியாக உள்ளது. இந்த நிதியாண்டின் முதல் மாதத்தில் இந்த சராசரியைவிட 3% அதிகமாக வரி வருவாய் கிடைத்துள்ளது. 
 
உள்நாட்டு பரிவர்த்தனைகளின் மொத்த வருவாய் 15.3% அதிகரித்துள்ளது. இது முந்தைய மாதத்தைவிட  13.4% அதிகமாகும். சரக்கு இறக்குமதியின் வருவாய் மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக குறைந்துள்ளது. உள்நாட்டு வருவாய் வளர்ச்சி மாநிலங்கள் முழுவதும் வேறுபட்டது. ஐந்து மாநிலங்கள் மே மாதத்தில் சரிவைக் கண்டன. எட்டு மாநிலங்கள் தேசிய சராசரியைவிட மிகவும் மெதுவாக வளர்ந்தன. 2021-ஆம் ஆண்டின் பிற்பகுதியில்  ஒன்றிய  நிதியமைச்சர் அவர்கள்  எழுப்பிய குறைந்த சரக்கு மற்றும் சேவை வரிவருவாய் குறித்த கவலைகள் இப்போது குறைந்துள்ளது. 

சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) ஆணையம் நிலுவையில் உள்ள சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்ல இது ஒரு சிறந்த நேரம். முதலில் எதிர்பார்த்தபடி, நல்ல மற்றும் எளிமையான வரியாக மாற்றுவதே குறிக்கோள். கடந்த அக்டோபர் மாதத்துக்குப் பிறகு முதன்முறையாக இந்தக் கவுன்சில் சனிக்கிழமை கூடுகிறது. இணைய விளையாட்டுகள் மற்றும் சூதாட்ட விடுதிகள் (casinos) மீதான 28% வரி போன்ற கடந்த கால முடிவுகளை தெளிவுபடுத்துதல் மற்றும் மதிப்பாய்வு செய்வது மிகவும் முக்கியம்.

 இருப்பினும், ஆணையம் பெரிய பிரச்சினைகளிலும் கவனம் செலுத்தும் என்று நம்பப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரியின் சிக்கலான, பல-விகிதக் கட்டமைப்பை எளிதாக்குவது ஒரு முக்கியமானப் பணியாகும். 2021-ஆம் ஆண்டிலிருந்து ஒரு அமைச்சர் குழு இதற்கான வேலைகளை செய்து வருகிறது, அதன் பணிகளை விரைவாக மீண்டும் தொடங்க வேண்டும். புதிய விகிதக் கட்டமைப்பில் சிமெண்ட் மற்றும் காப்பீடு போன்ற பொருட்களுக்கு குறைவான வரிகளை விதிக்கலாம். கூடுதலாக, மின்சாரம், இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் போன்ற விலக்கப்பட்ட பொருட்களை சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பிற்குள் கொண்டு வருவதற்கு ஒரு திட்டம் தேவைப்படுகிறது. இந்த உள்ளீடுகளுக்கான கடன்களைப் பெற வணிகங்களை இது அனுமதிக்கும்.

பாரதீய ஜனதா கட்சியின் (Bharatiya Janata Party) தேர்தல் அறிக்கையில் சிறிய நிறுவனங்களுக்கு வரிவிகிங்தகளை எளிதாக்குவதாக வாக்குறுதியளித்துள்ளது. பெரிய வணிகங்கள் உட்பட அனைத்து வணிகங்களுக்கான அமைப்பை எளிமைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. பெரிய வணிகங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் பதிவு செய்ய வேண்டும் மற்றும் வெவ்வேறு இணக்க விதிகளை எதிர்கொள்ள வேண்டும். எல்லாப் பிரச்சினைகளையும் ஒரே நேரத்தில் தீர்க்க முடியாது. எனவே, ஆணையம் ஒவ்வொரு காலாண்டிலும் கூட்டத்தை நடத்த வேண்டும். ஆனால், 2022-ஆம் ஆண்டு  முதல் சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) ஆணையம் ஆறு முறை மட்டுமே கூட்டத்தை நடத்தியுள்ளது. அடிக்கடி கூட்டத்தை நடத்துவது மிகவும் முக்கியமானது.

original link:


Share: