சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்தங்களில் முன்னேற்றம் தேவை

 சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) ஆணையம்  நிலுவையில் உள்ள சீர்திருத்தங்களை இனியும் தாமதப்படுத்தக் கூடாது.

சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) ஆணையம் இம்மாத இறுதியில் ஏழு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. ஏப்ரல் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் புதிய உச்சமாக ₹2.1 லட்சம் கோடியைத் தொட்டது. நிதியாண்டின் இறுதி மாதத்திற்கு அடுத்த மாதமாக இருப்பதால் ஏப்ரல் மாதம் அதிக வரிவருவாயை ஈட்டியுள்ளது.  ஏப்ரல் மாத பரிவர்த்தனைகளுக்கான மே மாத சரக்கு மற்றும் சேவை வரி ரசீதுகள் ₹1,72,739 கோடியாகும். இது இதுவரை இல்லாத அளவிற்கு ஐந்தாவது அதிகபட்ச வரி வருவாய் இதுவாகும். இது கடந்த ஆண்டைவிட 10% அதிகமாகும். ஆனால், முந்தைய மாதத்தில் இருந்த 12.4% அதிகரிப்பைக் காட்டிலும் குறைவு. ஜூலை 2021 முதல் சரக்கு மற்றும் சேவை வரி வருவாயில்  மெதுவான வளர்ச்சியிருந்தது.  ஜூலை 2021-ல், இரண்டாவது கொரோனா அலை பொருளாதார நடவடிக்கைகளை கடுமையாகப் பாதித்தது. கடந்த மூன்று ஆண்டுகளில், சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் பொதுவாக குறைந்தது. இருப்பினும், சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் 11% அதிகரித்துள்ளது. 2023-24-க்கான சராசரி மாத சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ₹1.68 லட்சம் கோடியாக உள்ளது. இந்த நிதியாண்டின் முதல் மாதத்தில் இந்த சராசரியைவிட 3% அதிகமாக வரி வருவாய் கிடைத்துள்ளது. 
 
உள்நாட்டு பரிவர்த்தனைகளின் மொத்த வருவாய் 15.3% அதிகரித்துள்ளது. இது முந்தைய மாதத்தைவிட  13.4% அதிகமாகும். சரக்கு இறக்குமதியின் வருவாய் மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக குறைந்துள்ளது. உள்நாட்டு வருவாய் வளர்ச்சி மாநிலங்கள் முழுவதும் வேறுபட்டது. ஐந்து மாநிலங்கள் மே மாதத்தில் சரிவைக் கண்டன. எட்டு மாநிலங்கள் தேசிய சராசரியைவிட மிகவும் மெதுவாக வளர்ந்தன. 2021-ஆம் ஆண்டின் பிற்பகுதியில்  ஒன்றிய  நிதியமைச்சர் அவர்கள்  எழுப்பிய குறைந்த சரக்கு மற்றும் சேவை வரிவருவாய் குறித்த கவலைகள் இப்போது குறைந்துள்ளது. 

சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) ஆணையம் நிலுவையில் உள்ள சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்ல இது ஒரு சிறந்த நேரம். முதலில் எதிர்பார்த்தபடி, நல்ல மற்றும் எளிமையான வரியாக மாற்றுவதே குறிக்கோள். கடந்த அக்டோபர் மாதத்துக்குப் பிறகு முதன்முறையாக இந்தக் கவுன்சில் சனிக்கிழமை கூடுகிறது. இணைய விளையாட்டுகள் மற்றும் சூதாட்ட விடுதிகள் (casinos) மீதான 28% வரி போன்ற கடந்த கால முடிவுகளை தெளிவுபடுத்துதல் மற்றும் மதிப்பாய்வு செய்வது மிகவும் முக்கியம்.

 இருப்பினும், ஆணையம் பெரிய பிரச்சினைகளிலும் கவனம் செலுத்தும் என்று நம்பப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரியின் சிக்கலான, பல-விகிதக் கட்டமைப்பை எளிதாக்குவது ஒரு முக்கியமானப் பணியாகும். 2021-ஆம் ஆண்டிலிருந்து ஒரு அமைச்சர் குழு இதற்கான வேலைகளை செய்து வருகிறது, அதன் பணிகளை விரைவாக மீண்டும் தொடங்க வேண்டும். புதிய விகிதக் கட்டமைப்பில் சிமெண்ட் மற்றும் காப்பீடு போன்ற பொருட்களுக்கு குறைவான வரிகளை விதிக்கலாம். கூடுதலாக, மின்சாரம், இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் போன்ற விலக்கப்பட்ட பொருட்களை சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பிற்குள் கொண்டு வருவதற்கு ஒரு திட்டம் தேவைப்படுகிறது. இந்த உள்ளீடுகளுக்கான கடன்களைப் பெற வணிகங்களை இது அனுமதிக்கும்.

பாரதீய ஜனதா கட்சியின் (Bharatiya Janata Party) தேர்தல் அறிக்கையில் சிறிய நிறுவனங்களுக்கு வரிவிகிங்தகளை எளிதாக்குவதாக வாக்குறுதியளித்துள்ளது. பெரிய வணிகங்கள் உட்பட அனைத்து வணிகங்களுக்கான அமைப்பை எளிமைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. பெரிய வணிகங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் பதிவு செய்ய வேண்டும் மற்றும் வெவ்வேறு இணக்க விதிகளை எதிர்கொள்ள வேண்டும். எல்லாப் பிரச்சினைகளையும் ஒரே நேரத்தில் தீர்க்க முடியாது. எனவே, ஆணையம் ஒவ்வொரு காலாண்டிலும் கூட்டத்தை நடத்த வேண்டும். ஆனால், 2022-ஆம் ஆண்டு  முதல் சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) ஆணையம் ஆறு முறை மட்டுமே கூட்டத்தை நடத்தியுள்ளது. அடிக்கடி கூட்டத்தை நடத்துவது மிகவும் முக்கியமானது.

original link:


Share: