விருப்பப்படியான செலவினங்களின் அதிகரிப்பு, வளர்ச்சிக்கு சாதகமானதாக அமையும்
குடும்ப நுகர்வு செலவினக் கணக்கெடுப்பின் (Household Consumption Expenditure Survey (HCES)) சமீபத்திய விரிவான தகவல் அறிக்கை (ஆகஸ்ட் 2022 முதல் ஜூலை 2023 வரை) பலவீனமான நுகர்வுத் தேவை மற்றும் வளர்ச்சியில் அதன் தாக்கம் குறித்து அக்கறை கொண்டவர்களுக்கு நேர்மறையான நுண்ணறிவுகளை வழங்குகிறது. கிராமப்புறத் தேவை அதிகரித்து வருவதாகவும், இது வீட்டு நுகர்வு செலவுக் கணக்கெடுப்பின் (HCES) சில கண்டுபிடிப்புகளுடன் ஒத்துப்போகிறது என்றும ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டார்.
குடும்ப நுகர்வு செலவினக் கணக்கெடுப்பின் (Household Consumption Expenditure Survey (HCES)) முக்கிய கண்டுபிடிப்பு என்னவென்றால், கிராமப்புற குடும்பங்களில் உணவுக்கான மாதாந்திர தனிநபர் நுகர்வு செலவின் பகுதி முதன்முறையாக 50-சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளது. இது இப்போது கிராமப்புற தனிநபர்களுக்கான சராசரி மாத தனிநபர் செலவினமான ₹3,773 (தற்போதைய விலை) 46 சதவீதமாக உள்ளது. தற்போது உணவுப் பொருட்களுக்கு 54 சதவீதத்தை ஒதுக்கும் நுகர்வோர் விலைக் குறியீடு (கிராமப்புறம்) அதற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.
இலவச உணவு தானியங்களின் தாக்கம் பற்றாக்குறையைக் குறைத்து, விருப்பப்படியான செலவினங்களை அதிகரித்துள்ளது. கிராமப்புற மாதாந்திர தனிநபர் நுகர்வு செலவு போக்குவரத்து, மருத்துவ செலவுகள் மற்றும் நுகர்வோர் சேவைகளின் பங்கு தானியங்களைவிட 4.91% அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உணவுக் கூடைக்குள், தானியங்களின் பங்கு பத்தாண்டுகளுக்கு முன்பு தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம்) National Sample Survey Office (NSSO)) 68-வது சுற்றின் போது 10.69% ஆக இருந்தது. கிட்டத்தட்ட ஆறு சதவீதப் புள்ளிகள் குறைந்துள்ளது என்பதை குடும்ப நுகர்வு செலவினக் கணக்கெடுப்பு (Household Consumption Expenditure Survey (HCES)) காட்டுகிறது. பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பால், இறைச்சி மற்றும் முட்டை விலைகள் அதிகரித்துள்ளன. இவை மேம்பட்ட வருமானத்தைக் குறிக்கின்றன. போக்குவரத்து 4.2% முதல் 7.55% வரை கணிசமான உயர்வைக் கண்டுள்ளன. பணவீக்கத்தைவிட வருமானத்தால் இயக்கப்படும் இந்த மாற்றம், தொழில்துறைக்கு சாதகமானவை.
கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் இடையிலான இடைவெளி குறைவதற்கான அறிகுறிகள் உள்ளன. தற்போது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையேயான மாதாந்திர தனிநபர் செலவினத்தின் (monthly per capita expenditure (MPCE)) வேறுபாடு 71.2 சதவீதமாக உள்ளது. இது 2011-12-ல் 83.9 சதவீதமாக இருந்தது.
நகர்ப்புற இந்தியாவில், உணவுப் பொருட்களிலிருந்து, குறிப்பாக தானியங்களின் பயன்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து, நீடித்த பொருட்கள் மற்றும் பால் பொருட்களுக்கான செலவு அதிகரித்துள்ளது. இருப்பினும், சராசரியாக ₹6,459 மாதாந்திர தனிநபர் நுகர்வுச் செலவுடன் (தற்போதைய விலைகள்) வருமான நிலைகளில் செலவு முறைகள் வேறுபடுகின்றன. கிராமப்புறங்களுடன் ஒப்பிடும்போது நகர்ப்புறங்களில் மருத்துவச் செலவுகளின் விகிதம் குறைவாக இருப்பது, சிறந்த சுகாதார வசதிகள் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
நுகர்வுப் போக்குகளை நன்கு புரிந்துகொள்ள, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிட ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர். குடும்ப நுகர்வு செலவினக் கணக்கெடுப்பு (Household Consumption Expenditure Survey (HCES)) தரவு அடிப்படைக் கொள்கைகளை கேள்வி எழுப்புகிறது. உதாரணமாக, நுகர்வு குறைந்தாலும் தானியங்களின் பணவீக்கம் ஏன் தொடர்கிறது?. வருமானம், கடன் மற்றும் பணவீக்கம் எவ்வாறு நுகர்வுத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள பல்வேறு தரவுத்தொகுப்புகளை இணைக்க வேண்டிய அவசியம் உள்ளது. இது துல்லியமான நலன் மற்றும் பிற கொள்கைகளை உருவாக்க உதவுகிறது.