இந்தியா-அமெரிக்க உறவுகள் ஒரு முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் முன்முயற்சிக்கான ஊக்கத்தைப் பெறுகின்றன -HT தலையங்கம்

    பதட்டத்தை ஏற்படுத்தும் பிற பிரச்சினைகள் இருந்தாலும், இந்தியாவும் அமெரிக்காவும் தங்களின் முக்கிய இராஜத்ந்திர சவால்களில் கவனம் செலுத்துகின்றன என்பதை ஜேக்.சல்லிவனின் வருகைக் காட்டுகிறது.


இந்த வாரம், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (US national security adviser (NSA)) ஜேக் சல்லிவன் மற்றும் வெளியுறவுத்துறை துணை செயலாளர் கர்ட் காம்ப்பெல் ஆகியோர் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் (India’s NSA) அஜித் தோவலை, முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்  மீதான முன்முயற்சியின் (initiative on critical and emerging technologies (iCET)) வருடாந்திர கூட்டத்திற்காக சந்தித்தனர். ஜேக்.சல்லிவன் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். ஜனவரி 2023-ல் முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்  மீதான முன்முயற்சியின் (iCET) வெளியீட்டின் போது HT எதிர்பார்த்தபடி, இது கணிசமான உறவில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த தொழில்நுட்பக் களத்தில் சீனாவின் வளர்ந்து வரும் விளிம்பு மற்றும் திறன்களை எதிர்கொள்ள வேண்டிய அவசியத்தால் இது இயக்கப்படுகிறது. ஆனால், இந்த செயல்முறையும் ஒரு நேர்மறையான செயல் திட்டத்தால் இயக்கப்படுகிறது. இந்தியாவும் அமெரிக்காவும் ஒருவருக்கொருவர் ஒப்பீட்டு நன்மைகள் மற்றும் திறன்களை மேம்படுத்துவதில் இது கவனம் செலுத்துகிறது.


முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மீதான முன்முயற்சியின் (iCET) ஆறு அம்சங்கள் தனித்து நிற்கின்றன. முதலாவதாக, இது இரண்டு தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்களால் (NSA) நடத்தப்படுகிறது. இது அதற்கு குறிப்பிடத்தக்க அரசியல் எடையைக் கொடுத்து, இரு நாடுகளிலும் உள்ள அமைப்புகள் மற்றும் அதிகாரத்துவங்களை ஒருங்கிணைக்க தள்ளுகிறது. இரண்டாவதாக, இது இணை உற்பத்தி மற்றும் இணை மேம்பாட்டில் கவனம் செலுத்துவதன் மூலம் பாதுகாப்பு உறவை தரமான முறையில் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, ஜெனரல் எலெக்ட்ரிக் ஜெட் என்ஜின் ஒப்பந்தம் (GE jet engine deal) மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு உதவுவதற்கான இண்டஸ்-எக்ஸ் முன்முயற்சி (Indus-X initiative) ஆகியவற்றால் எடுத்துக்காட்டப்பட்டது. மூன்றாவதாக, குஜராத்தில் உள்ள நுண்ணிய குறைக்கடத்தி ஆலை (Micron semiconductor plant) மற்றும் புதிய அறிவிக்கப்பட்ட கூட்டாண்மைகளால் சான்றளிக்கப்பட்டபடி, முக்கியமான தொழில்நுட்பங்களில் விநியோகச் சங்கிலிகளை பல்வகைப்படுத்துதல் மற்றும் இந்திய திறன்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது.


நான்காவதாக, இது எதிர்காலத் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) முதல் குவாண்டம் வரை, பல்கலைக்கழகங்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி அமைப்புகளுக்கு இடையே ஆழமான அறிவு கூட்டமைப்புத் தேவைப்படுகிறது. இந்த கூட்டுத் திட்டங்களுக்கான 90 மில்லியன் டாலர் நிதியின் அறிவிப்பு மற்றும் பல்வேறு இந்திய அமைச்சகங்களுடன் ஈடுபடுவதில் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (US’s National Science Foundation) பங்கு ஆகியவை முன்னேற்றத்தைக் குறிக்கின்றன. ஐந்தாவதாக, முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்  மீதான முன்முயற்சியின் (iCET) இந்த பதிப்பில் உயிரி தொழில்நுட்பம் (biotech) மற்றும் உயிரி உற்பத்தி ஒத்துழைப்பில் முக்கிய நோக்கங்கள் உள்ளன. இதில் செயலில் உள்ள மருந்து பொருட்களுக்கான விநியோகச் சங்கிலிகளை பல்வகைப்படுத்துவது அடங்கும். இறுதியாக, iCET அரசாங்கத்தால் வழிநடத்தப்பட்டாலும், இது தொழில்துறை அமைப்புகள், தனியார் துறை பணியாளர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சிந்தனைக் குழுக்களை முக்கிய பங்குதாரர்களாக உள்ளடக்கியது.


ஜேக்.சல்லிவனின் வருகை இந்திய-அமெரிக்க உறவுக்கான வலுவான அரசியல் உறுதிப்பாட்டையும் குறிக்கிறது. நியூயார்க்கில் ஒரு அமெரிக்கக் குடிமகனின் படுகொலை சதியில் ஒரு இந்திய அரசாங்க அதிகாரி சம்பந்தப்பட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டுகள் போன்ற சர்ச்சைகள் மற்றும் இந்த அதிகாரியை ஒரு பயங்கரவாதியாக கருதுவதால் அது உறவுகளை பாதித்துள்ளன. இந்த வாரம்தான், அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகள் தங்கள் குடிமக்களை மௌனமாக்கவோ அல்லது தீங்கு விளைவிக்கவோ எந்தவொரு முயற்சியையும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை தெளிவுபடுத்தினர். மேலும், குற்றம் சாட்டப்பட்ட நிகில் குப்தா செக் குடியரசில் இருந்து அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார். இரு அரசாங்கங்களும் இந்த பிரச்சினையை இரண்டாகப் பிரித்துள்ளன. மேலும், இது பரந்த இராஜத்ந்திர உறவைப் பாதிக்க அனுமதிக்கவில்லை. அந்த கவனத்தைத் தக்க வைத்துக் கொள்வது முக்கியம்.


Share: