உச்ச நீதிமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப்படும் சட்டப்பிரிவு 361-ன் கீழ் ஆளுநரின் விலக்கு என்ன? -அஜோய் சின்ஹா ​​கற்பூரம்

 மேற்குவங்க ராஜ் பவனில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ்க்கு எதிராக அளித்த மனுவைத் தொடர்ந்து, மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இந்த வழக்கை விசாரிக்கவுள்ளது. 


 ஜூலை 19-ஆம் தேதி அன்று, மாநில ஆளுநர்களுக்கு இருக்கும் அரசியலமைப்பு விலக்கு உரிமையை மறுவரையறை செய்வதற்கான கோரிக்கையை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. 


அரசியலமைப்பின் 361-வது பிரிவு (Article 361) குடியரசுத் தலைவரையும் ஆளுநரையும்  குற்றவியல் வழக்குகளில் இருந்து பாதுகாக்கிறது. இது அவர்களின் நடவடிக்கைகளை நீதிமன்றம் மறு ஆய்வு செய்வதையும் தடுக்கிறது. இந்த வழக்கு மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவரின் பொறுப்புகளை பெரிதும் பாதிக்கும் என்பதால், இந்தியாவுக்கான அட்டர்னி ஜெனரல் ஆர் வெங்கடரமணி தனது கருத்தை தெரிவிக்குமாறு  நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. 


மேற்குவங்க ராஜ் பவனில் பணிபுரியும் ஒப்பந்தப் பெண் ஊழியர்  ஒருவர் தாக்கல் மனுவைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்தப் பிரச்னையை எடுத்துரைத்தது. கவர்னர் சிவி ஆனந்த போஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பெண் குற்றம் சாட்டி இருந்தார். 


ஆளுநர்களுக்கு என்ன விலக்கு அளிக்கப்படுகிறது, அது ஏன் ஆய்வுக்கு உட்பட்டது? 


அரசியலமைப்பில் அளிக்கப்பட்டுள்ள சட்ட பாதுகாப்பு  


அரசியலமைப்பின் 361-வது பிரிவு குடியரசுத் தலைவர் அல்லது மாநில ஆளுநர்கள் பதவியில் இருக்கும் போது, பாராளுமன்றம் அவர்களை பதவி நீக்கம் செய்ய முடிவு செய்யும் வரை அவர்களை நிதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்கிறது. அவரது அலுவலகத்தின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளின்  செயல்பாட்டிற்காக அல்லது அவர் செய்த  எந்தவொரு தவறான  செயலுக்கும் எந்த நீதிமன்றத்திற்கும் பதிலளிக்க மாட்டார். நாடாளுமன்றத்தில் பதவி நீக்கம் செய்யப்படும் வரை அவர் அப்பதவியில் தொடர்வார். 


குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநருக்கு எதிராக அவர்கள் பதவியில் இருக்கும் போது குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர முடியாது. அவர்களைக் கைது செய்யவோ அல்லது சிறையில் அடைக்கவோ முடியாது என்றும் அரசியலமைப்பின் 361-வது பிரிவு கூறுகிறது.


361-(2) மற்றும் 361-(3)-ல் உள்ள "குற்றவியல் நடவடிக்கைகள்" மற்றும் "கைது அல்லது சிறையில் அடைப்பதற்கான செயல்முறை" ஆகியவற்றின் அர்த்தத்தை உச்சநீதிமன்றம் இப்போது ஆய்வு செய்து வருகிறது. இந்த விதிமுறைகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது, தேவையான விசாரணையைத் தொடங்குவது அல்லது குற்றவியல் வழக்கின் முறையான தொடக்கத்தைக் குறிக்கும் குற்றத்தின் மீது குற்றவியல் நீதிபதி நடவடிக்கை எடுப்பது பற்றி நீதிமன்றம் முடிவு செய்யும்.


மேற்கு வங்க வழக்கில், ஆளுநர் போஸ் பதவி விலகும் வரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், அது உரிமைகளை மீறுவதாகவும், வழக்கின் சாட்சியங்களை பாதிக்கும் என்றும் மனுதாரர் வாதிடுகிறார்.


சட்டப்பிரிவு 361-ன் பிரிவு (2)-ன் கீழ் அதிகாரப்பூர்வமாக குற்றவியல் நடவடிக்கைகள் எப்போது தொடங்கப்பட்டன என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியது. 


ஆளுநருக்கு  அளிக்கப்பட்டுள்ள சட்ட பாதுகாப்பின் தோற்றம் 


குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கான பாதுகாப்பு என்பது லத்தீன் மொழியான (maxim rex non potest peccare) என்ற சொல்லில் இருந்து உருவானது. இதன் பொருள் "நாட்டில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் எந்த தவறும் செய்யக்கூடாது". இது ஆங்கில சட்ட மரபுகளிலிருந்து வருகிறது. செப்டம்பர் 8, 1949 அன்று அரசியல் நிர்ணய சபை விவாதங்களின் போது, ​​பிரிவு 361 (அப்போது வரைவு விதி 302) விவாதிக்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸைச் சேர்ந்த எச்.வி.காமத், கிரிமினல் நடவடிக்கைகளிலிருந்து விலக்கு பற்றி முக்கியமான கேள்விகளை எழுப்பினார்.


361-வது பிரிவு என்பது குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநருக்கு எதிராக அவர்களின் பதவிக் காலத்திலோ அல்லது அவர்கள் பதவியில் இருக்கும் போது மட்டும் நடவடிக்கை எடுக்கக் கூடாதா என்று எச் வி காமத் கேள்வி எழுப்பினார். குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட ஆளுநர் மீது  நேரடியாக வழக்கு தொடரப்பட்டால்  குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் எச் வி காமத் பரிந்துரைத்தார்.


இருப்பினும், குற்றவியல் நடவடிக்கையிலிருந்து விலக்கு பற்றி மேலும் விவாதிக்காமல் பிரிவு 361 ஏற்றுக்கொள்ளப்பட்டது. சமீபத்திய ஆண்டுகளில், ஆளுநருக்கு எதிராக குற்றவியல் வழக்கு உறுதிப்பட்டதாக கருதப்படும்போது மற்றும் பிரிவு 361(2)-ன் கீழ் பாதுகாப்பு எப்போது முடிவடைகிறது என்பதை நீதிமன்றங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.


நீதித்துறை விளக்கம்


 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தொடர்பான 2017-ஆம் ஆண்டு  தொடரப்பட்ட அரசு vs கல்யாண் சிங் & மற்றவர்கள் (State vs Kalyan Singh & Ors) என்ற கிரிமினல் வழக்கில் உச்ச நீதிமன்றம் இதைக் குறிப்பிட்டது.  குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான அப்போதைய ராஜஸ்தான் கவர்னர் கல்யாண் சிங்கிற்கு எதிரான விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது. 


கல்யாண் சிங் ஆளுநராக இருக்கும் வரை, அவர் அரசியலமைப்பின் 361-வது பிரிவின் கீழ் பாதுகாக்கப்படுவார் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர் ஆளுநராக பதவி விலகியதும் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.  


2015-ஆம் ஆண்டில், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், 361-(2) சட்டப்பிரிவு, பதவியின் கண்ணியத்தை பாதுகாக்க, ஒரு மாநிலத்தின் ஆளுநருக்கு  எதிரான எந்தவொரு தீங்கிழைக்கும் பிரச்சாரங்கள் அல்லது விளம்பரங்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை வழங்குகிறது என்று தெளிவாகக் கூறியது. வியாபம் ஊழல் தொடர்பான வழக்கில் இந்த தீர்ப்பு வந்தது. அப்போது மத்தியப் பிரதேச ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் இந்த ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவராக இருந்தார். யாதவ் பதவியில் இருக்கும் போது அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்வது குற்றவியல் நடவடிக்கையாக இருக்காது என்று உயர்நீதிமன்றம் முடிவு செய்தது. நவம்பர் 2016-ல் யாதவ் இறந்த பிறகு, உயர்நீதிமன்றம் மேல்முறையீட்டில் தீர்ப்பளிக்கவில்லை.


2006-ஆம் ஆண்டு, ராமேஷ்வர் பிரசாத் vs யூனியன் ஆஃப் இந்தியா  (Rameshwar Prasad vs Union of India) வழக்கில், உச்ச நீதிமன்றம் 2005-ஆம் ஆண்டில் பீகார் சட்டமன்றத்தை கலைக்க பரிந்துரைத்த பின்னர், குற்றவியல் வழக்குகளில் ஆளுநர்களின் விலக்குரிமையை உறுதி செய்தது. 


சட்டப்பிரிவு 361(1)ன் கீழ் ஆளுநர்கள் தங்கள் கடமைகளைச் செய்யும்போது "முழுமையான பாதுகாப்பு" இருப்பதை நீதிமன்றம் உறுதி செய்தது. எவ்வாறாயினும், அவர்களின் செயல்களின் செல்லுபடியாகும் தன்மையை, குறிப்பாக மோசமான நம்பிக்கையின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றத்தை மதிப்பாய்வு செய்வதிலிருந்து இந்த பாதுகாப்பு தடுக்காது. 


அந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தும் போது ஆளுநரின் நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்தது. இது அவர்களின் அதிகாரப்பூர்வ கடமைகள் அல்லது அரசியலமைப்பு பொறுப்புகளுக்கு அப்பாற்பட்ட செயல்களை விட உயர்ந்த தரத்தில் உள்ளது. 


மறுபரிசீலனை செய்வதற்கான வழக்கு

நிறைவேற்று அதிகாரம் பற்றிய விவாதம் பல்வேறு நாடுகளில் விவாதிக்கப்பட்டது. சமீபத்தில், அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஜூலை 1-அன்று தீர்ப்பளித்தது.  முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மற்ற முன்னாள் அமெரிக்க அதிபர்களைப் போலவே, அதிகாரப்பூர்வ செயல்களுக்கு குற்றவியல் வழக்குகளில் இருந்து முழுமையான விலக்கு பெறுகிறார். ஆனால், அதிகாரப்பூர்வமற்ற அல்லது தனிப்பட்ட செயல்களுக்கு அல்ல எனக் கூறியது. 2020-ஆம் ஆண்டு  அமெரிக்க அதிபர் தேர்தலின் போது தனது நடவடிக்கைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள டிரம்பிற்கு இந்த தீர்ப்பு குறிப்பிடத்தக்க நிவாரணமாக இருந்தது.


இந்தியாவில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே நடந்து வரும் மோதல்களையும் இந்த விவாதம் கருத்தில் கொள்கிறது. ஆளுநர்கள் அரசியல் நோக்கத்துடன் செயல்பட்ட சம்பவங்களை உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெற இருக்கிறது. 



Original article:

Share: