வெப்ப அலைகள் விளையாடுவதற்கான உரிமையைப் பாதிக்கிறது. -சுரபி மல்ஹோத்ரா, சுப்ராஜா

 பருவநிலை மாற்றம் குழந்தைகளின் விளையாட்டு நேரத்தைக் குறைக்கிறது. இது அவர்களின் நண்பர்களுடன் தொடர்புகொள்வதையும் உலகை ஆராயும் அவர்களின் திறமையையும் கட்டுப்படுத்துகிறது.


விளையாட்டு என்பது உலகளாவியது. இது தேசிய, கலாச்சார மற்றும் சமூக-பொருளாதார எல்லைகளைக் கடந்தது. ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (United Nations Children's Fund (UNICEF)) குழந்தைகளுக்கு விளையாட்டு மிகவும் முக்கியமானது என்று கூறுகிறது. இது அவர்களுக்கு சமூக தொடர்புகளை உருவாக்க உதவுகிறது. மேலும் அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, மற்றும் படைப்பாற்றலையும் அதிகரிக்கிறது. குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் 31 வது பிரிவில் கூறப்பட்டுள்ள விளையாடுவதற்கான உரிமையானது குழந்தையின் நல்வாழ்வு மற்றும் வளர்ச்சிக்கான அதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


விளையாட்டு என்பது பெற்றோர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் குழந்தைகளின் நேர்மறையான மன ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன மற்றும் பாதகமான அனுபவங்களிலிருந்து குழந்தைகளை  விலக்கி வைக்கின்றன. குழந்தைகள் உலக நடைமுறைகளை அறிந்து கொள்ளவும் ஆராய்வதற்கும் ஒரு சிறந்த வழிமுறையாகும். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 11, 2024 அன்று சர்வதேச விளையாட்டு தினமாக அறிவித்தது.


இருப்பினும், பல குழந்தைகள் விளையாடும் உரிமையைப் பயன்படுத்த முடியவில்லை. The Real Play Coalition (IKEA, the LEGO Foundation, National Geographic and Unilever) அமைப்பு வெளியிட்டுள்ள ‘விளையாட்டின் மதிப்பு' (Value of Play) என்ற அறிக்கை சில உண்மைகளைப் கூறுகிறது. உலக அளவில் ஐந்தில் ஒரு குழந்தைக்கு விளையாடுவதற்கு நேரமில்லை. 10 குழந்தைகளில் ஒருவர் திறந்தவெளியில் விளையாடுவதில்லை. இந்தியாவில் விளையாட்டு என்பது பல தடைகளை எதிர்கொள்கிறது. ஓய்வு மற்றும் பொது இடங்களுக்கான அணுகல் சமூக காரணிகளைப் பொறுத்தது மாறுபடுகிறது. இதில் சாதி, வகுப்பு, ஊனம், பாலினம் ஆகியவை அடங்கும்.


காலநிலை மாற்றம் இப்போது விளையாடுவதற்கு ஒரு புதிய அச்சுறுத்தலாக உள்ளது. தீவிர வானிலை மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு ஆகியவை முக்கிய பிரச்சனைகளாக உள்ளன. இவை குழந்தைகளின் வெளிப்புற விளையாட்டு நேரத்தை குறைக்கின்றன.


இந்தியாவின் தரவரிசை மற்றும்தெற்காசியாவின் பிரச்சனை


ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (UNICEF)  குழந்தைகளுக்கான காலநிலை அபாயக் குறியீடு (Children’s Climate Risk Index (CCRI)) அறிக்கை 2021 இல், 163 நாடுகளில் இந்தியா 26 வது இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் குழந்தைகள் அதிக காலநிலை அபாயங்களை எதிர்கொள்ளும் நாடுகளில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது. வெள்ளம், வெப்பம் மற்றும் வறட்சி ஆகியவை முன்பை விட குடும்பங்களையும் குழந்தைகளையும் அடிக்கடி பாதிக்கின்றன.


வெப்ப அலைகள் வெளிப்புறங்களில் விளையாடுவதைப் பாதுகாப்பற்றதாக மாற்றுகிறது. இந்தியா அடிக்கடி மற்றும் கடுமையான வெப்ப அலைகளை சந்தித்து வருகிறது. வெப்பநிலை அதிகபட்ச அளவை எட்டுகிறது. இந்த நிலைமைகளால் குழந்தைகளின் வெளிப்புற விளையாட்டைக் கட்டுப்படுத்துகின்றன மற்றும் உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகின்றன.


ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (UNICEF), கூற்றுப்படி, தெற்காசியாவில் அதிக வெப்பநிலை ஏற்படுவதால் குழந்தைகளின் பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இந்தியாவில், வெப்ப அலைகளினால் ஏற்படும் தாக்கத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது வெளிப்புறச் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகின்றன. இது அவர்களின் நீண்டகால உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றது.


விளையாடுவதற்கான பாதுகாப்பான வாய்ப்புகள் இல்லாததால், பின்தங்கிய குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. இது தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகளை மேலும் மோசமாக்குகிறது மற்றும் வறுமையின் சுழற்சியை அதிகரிக்கிறது. நகரமயமாக்கல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவை பாதுகாப்பான விளையாட்டு இடங்களை குறைக்கின்றன. விளையாட்டு மைதானங்கள் பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்படுகின்றன அல்லது மோசமாகப் பராமரிக்கப்படுவதால் குறைந்த வருமானம் உள்ள பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.


இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் பெரும்பாலும் சிறியதாகவும் நெரிசலாகவும் இருக்கின்றன. இது உட்புற விளையாட்டு விருப்பங்களைக் கட்டுப்படுத்துகிறது. பாதுகாப்பான விளையாட்டு இடங்களுக்கான கட்டுப்படுத்தப்பட்ட அணுகல் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. குறைந்த திறன் கொண்ட பணியாளர்கள் மற்றும் அதிக சமூக நலச் செலவுகள் போன்ற நீண்ட கால பொருளாதார தாக்கங்களுக்கு இது வழிவகுக்கும்.


இளைஞர்களிடையே காலநிலை கவலை குறித்த உலகளாவிய ஆய்வில் இது தொடர்பான முடிவுகள் தெரியவந்துள்ளன. குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பருவநிலை மாற்றத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள். அரசுகள் தங்களுக்கு ஆதரவளிப்பது குறித்து அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த உணர்வுகள் அவர்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கிறது.


தகவமைப்பு நடவடிக்கைகள்


நீண்ட கால பாதிப்புகளை தவிர்க்க, விளையாட்டு மைதான உள்கட்டமைப்பு மற்றும் நகர்ப்புற திட்டமிடல் உத்திகளில் உயிரியல் காலநிலை வடிவமைப்பு கொள்கைகளை செயல்படுத்த வேண்டும். இதன் பொருள் நகரங்களுக்குள் பசுமையான இடங்கள் மற்றும் குளிரூட்டும் விளையாட்டு மைதானங்களை  அறிமுகப்படுத்துவதாகும். இந்த மாற்றங்கள் கான்கிரீட் அடிப்படையிலான கட்டுமானத்தால் ஏற்படும் நகர்ப்புற வெப்பத் தீவின் விளைவைத் தணிக்க உதவும். மேலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான விளையாட்டு சூழலை வழங்கும்.


பூங்காக்களின் திறக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் மற்றும் தற்போதுள்ள உள்கட்டமைப்பு மற்றும் பூங்காக்கள் போன்ற பசுமையான இடங்களை அதிகம் ஏற்படுத்த வேண்டும். பல இந்திய நகரங்களில், விடுமுறை நாட்களில் பூங்காக்கள் அடிக்கடி மூடப்படுகின்றன. உள்ளூர் அரசாங்கள் சில நேரங்களில் இந்த மூடல்களைச் செயல்படுத்துகின்றன. பூங்கா அணுகலைக் கட்டுப்படுத்துவதற்கு நகராட்சி நிர்வாகங்களும் பொறுப்பாக இருக்கலாம். இந்த மூடல்கள் குழந்தைகள் விளையாடுவதற்கான வாய்ப்பைக் குறைக்கின்றன. பொது பூங்காக்கள் பல்வேறு பயனர் குழுக்களிடையே அடிக்கடி மோதல்களை அனுபவிக்கின்றன. வயதான குடிமக்களும் குழந்தைகளும் இடத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் உடன்படாமல் இருப்பதால். பல்வேறு சமூக-பொருளாதார வகுப்புகளைச் சேர்ந்தவர்களும் பூங்காவைப் பயன்படுத்துவதில் மோதல் ஏற்படுகிறது.


உள்ளூரிலேயே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதை நாம் பாகுபாடு இல்லாமல் செய்ய வேண்டும். உள்ளூர் சமூகங்கள் பூங்காக்களில் நிழலான பகுதிகளை உருவாக்கலாம். இந்தப் பகுதிகள் வெயில் காலங்களில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கும். நீண்ட கால தீர்வுகளிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். பாரம்பரிய கட்டிட முறைகளை வைத்து நாம் மாற்றியமைக்க வேண்டும். இந்த முறைகள் இயற்கையான வெப்பம் மற்றும் குளிர்ச்சிக்கு உதவும். இந்த வகையான திட்டமிடல் காலநிலை மாற்றம் குறித்த அரசின் செயல் திட்டங்களின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இது நகர்புற திட்டங்களிலும் இருக்க வேண்டும். குறைந்த வருமானம் பெறும் சமூகங்கள் மீது நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக, டெல்லியில் உள்ள குடிசை மறுவாழ்வு காலனிகளில் மிகக் குறைவான மரங்களே உள்ளன. விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் பகுதிகள் பெரும்பாலும் குப்பை கிடங்குகளாக மாறி வருகின்றன. இதனால் குழந்தைகள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. நண்பர்களை சந்திக்கவோ விளையாடவோ அவர்களுக்கு வாய்ப்புகள் குறைவு.


குழந்தைகளை வலுப்படுத்துதல்


குழந்தைகள் மாற்றத்தின் சக்திவாய்ந்த சாதனையாளர்களாக இருக்க முடியும். சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கும் அவற்றைத் தீர்ப்பதற்கும் நாம் மாணவர்களுக்கு அதிகாரம் அளிக்க முடியும். அவர்களுக்கு அளிக்க வேண்டிய வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இதைச் செய்யலாம். உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான தளங்களையும் நாம் வழங்க முடியும். அவர்கள் ஆலோசனை பதவிகளை வகிக்க முடியும். உதாரணமாக, அவர்கள் பல்லுயிர் வரைபடவியலில் (biodiversity mapping) பங்கேற்கலாம். அதனால் காற்று மாசுபாடு மற்றும் நீரின் தர மதிப்பீடுகளுக்கு உதவலாம்.


உள்ளூர் காலநிலை முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தலாம். கேரளாவில் உள்ள கார்பன் சமநிலைப் பஞ்சாயத்துகள் (carbon neutral panchayats) ஒரு சிறந்த உதாரணம். இது ஒரு நல்ல தொடக்க நிலையாக இருக்கலாம்.


முதல் சர்வதேச விளையாட்டு தினம் கடந்துவிட்டது. இருப்பினும், காலநிலை மாற்றம் குழந்தையின் விளையாடும் உரிமையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அங்கீகரிப்பது முக்கியம். இந்த பிரச்னைகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் நல்வாழ்வை நாம் ஆதரிக்கலாம். எதிர்கால சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் தலைமுறையை உருவாக்கவும் நாம் உதவ வேண்டும்.


சுரபி மல்ஹோத்ரா, Citizen Engagement at Young Leaders for Active Citizenship (YLAC) அமைப்பின் மேலாளர் மற்றும் சுப்ராஜா மூத்த அதிகாரியாக உள்ளனர்.


Original article:

Share: