பண மசோதா தொடர்பான முக்கியமான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது: பண மசோதா என்றால் என்ன? -அஜோய் சின்ஹா ​​கற்பூரம்

 ராஜ்யசபாவின் ஒப்புதல் தேவையில்லை என்பதால், பண மசோதாக்கள் (Money Bills) விரைவில் சட்டங்களாக மாறுகின்றன. 


நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய சட்டத்தை இயற்றுவதற்கு "பண மசோதா வழியை" (Money Bill route) அரசாங்கம் பயன்படுத்துவதை சவால் செய்யும் மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.


ஜூலை 23-ஆம் தேதி ஒன்றிய  பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி மற்றும் இந்திரா ஜெய்சிங் ஆகியோர், இந்த வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரி, திங்களன்று இந்திய தலைமை நீதிபதி. சந்திரசூட் அமர்வை அணுகினர். அரசியலமைப்பு அமர்வை எப்போது அமைப்பது என்பது குறித்து முடிவு எடுப்பதாக தலைமை நீதிபதி கூறினார். 


பண மசோதாக்கள் சட்டங்களை விரைவாக நிறைவேற்ற அனுமதிக்கின்றன. ஏனெனில், அவை ராஜ்யசபாவின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை. சமீபத்திய எடுத்துக்காட்டுகளில் பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 (Prevention of Money Laundering Act, 2002, (PMLA)), வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம், 2010 (Foreign Contributions Regulations Act, 2010, (FCRA)), மற்றும் ஆதார் சட்டம், 2016 (Aadhaar Act, 2016) ஆகியவற்றுக்கான திருத்தங்கள் அடங்கும். இந்தச் சட்டங்கள் பண மசோதா வழியைப் பயன்படுத்தி, சட்டங்களாக நிறைவேற்றப்பட்டன. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பொரும்பான்மைக்கு குறைவான உறுப்பினர்களே உள்ளனர். இதன் காரணமாக அவர்கள் சட்டங்கள் இயற்றுவதில் சவால்களை சந்திக்கலாம்.


நவம்பர் 2019-ல், அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, ரோஜர் மேத்யூ எதிராக சவுத் இந்தியன் பேங்க் லிமிடெட் (Rojer Mathew vs South Indian Bank Ltd.) வழக்கில் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு எந்த மசோதாக்களை பண மசோதாக்களாக நியமிக்கலாம் என்ற கேள்வியை பரிந்துரைத்தது. 2023-அக்டோபரில், ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு விரைவில் நிறுவப்படும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்தார். 


அரசியலமைப்பில் பண மசோதா (Money Bill)


பொதுவாக, ஒரு மசோதா சட்டமாக மாற மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் தேவை. இருப்பினும், பண மசோதாவிற்கு இந்த விதிகள் பொருந்தாது. 


சட்டப்பிரிவு 109-ன் படி, பண மசோதா மக்களவையில் மட்டுமே தாக்கல்செய்யப்படும் அது அங்கு நிறைவேற்றப்பட்ட பிறகு, அதன் பரிந்துரைகளுக்காக மாநிலங்களவைக்கு அனுப்பப்படுகிறது. மாநிலங்களவை பதிலளிக்க 14 நாட்கள் உள்ளன. ஆனால், மக்களவை அனைத்து பரிந்துரைகளையும் ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ தேர்வு செய்யலாம். 14- நாட்களுக்குள் ராஜ்யசபா பதிலளிக்கவில்லை என்றால், மசோதா நிறைவேற்றப்பட்டதாக கருதப்படும்.


மசோதா  தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, சட்டப்பிரிவு-110 பண மசோதாவின் தெளிவான வரையறையை அளிக்கிறது. வரிவிதிப்பு, அரசாங்க நிதிப் பொறுப்புகள், ஒருங்கிணைந்த நிதி (அரசு வருவாய் மற்றும் கடன் வாங்கும் செலவுகள் நிர்வகிக்கப்படும் இடத்தில்), தற்செயல் நிதி (எதிர்பாராத செலவுகளுக்கு) அல்லது தொடர்புடைய விஷயங்கள் போன்ற தலைப்புகளை உள்ளடக்கியிருந்தால், ஒரு மசோதா பண மசோதாவாகத் தகுதி பெறும்.


சட்டப்பிரிவு 110(3)ன் கீழ், "ஒரு மசோதா பண மசோதாவா இல்லையா என்று ஏதேனும் கேள்வி எழுந்தால்,சபாநாயகரின் முடிவே இறுதியானது.


உச்சநீதிமன்றத்தில் உள்ள முக்கியமான வழக்குகள்


ஆதார் சட்டத்திற்கு சவால் : செப்டம்பர் 2018-ல், அரசுக்கு ஆதரவாக 4-1 முடிவில் ஆதார் சட்டத்தின் அரசியலமைப்புத் தன்மையை நீதிமன்றம் உறுதி செய்தது. சட்டப்பிரிவு 110-ன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள தலைப்புகளுடன் நேரடியாக தொடர்பில்லாத விதிகளை உள்ளடக்கியதால், சட்டமானது பண மசோதாவாக தவறாக நிறைவேற்றப்பட்டது என்று மனுதாரர்கள் வாதிட்டனர்.


ஆதார் சட்டத்திற்கு எதிரான வழக்கில், பெரும்பான்மையுடன் உடன்பட்ட நீதிபதி அசோக் பூஷன், இந்தச் சட்டத்தின் முதன்மை நோக்கம் தொகுப்பு நிதியில் இருந்து செலவழிக்கப்படும் மானியங்கள் மற்றும் பலன்களை விநியோகிப்பதாகும் என்று கூறினார். இந்த சட்டத்தை பண மசோதாவாக நிறைவேற்றுவது நியாயமானது என்று நீதிபதி அசோக் பூஷன் நம்பினார்.


இதற்கு மறுப்பு தெரிவித்த வகையில், இந்த நிகழ்வில் பண மசோதா வழியைப் பயன்படுத்துவது "அரசியலமைப்பு செயல்முறையை  தவறான வழியில் பயன்படுத்துவதாகும்" என்று  நீதிபதி டி ஒய் சந்திரசூட்குறிப்பிட்டார். ஒரு சாதாரண மசோதாவை பண மசோதா என்று கூறுவது சட்டங்களை உருவாக்குவதில் மாநிலங்களவைவையை கட்டுப்படுத்துகிறது என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.


நிதிச் சட்டம், 2017 : நிதிச் சட்டம், 2017, பல சட்டங்களில் திருத்தங்களை உள்ளடக்கியது, மற்றவற்றுடன், தீர்ப்பாயங்களின் உறுப்பினர்களின் சேவை நிலைமைகள் தொடர்பான விதிகளை அறிவிக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளித்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, மேல்முறையீட்டு தீர்ப்பாயம் மற்றும் பிற அதிகாரிகளுக்கு (உறுப்பினர்களின் தகுதிகள், அனுபவம் மற்றும் பிற பணி நிபந்தனைகள்) 2017-ஆம் ஆண்டில் (தீர்ப்பாய விதிகள்) விதிகளை ஒன்றிய அரசு உருவாக்கியது.

 

மெட்ராஸ் பார் அசோசியேஷன், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் உட்பட பல மனுதாரர்கள், 2017-நிதிச் சட்டம், 110-வது பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள தலைப்புகளுடன் தொடர்பில்லாத விதிகளை கொண்டிருப்பதால், அது நீக்கப்பட வேண்டும் என்று வாதிட்டனர்.


நவம்பர் 2019 இல், ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, நீதித்துறை சுதந்திரத்தில் தலையிடுவதற்கு அரசியலமைப்புக்கு எதிரான தீர்ப்பாய விதிகளை ரத்து செய்தது. ஆனால், பண மசோதா பற்றிய வழக்கை ஏழு நீதிபதிகள் கொண்ட முதன்மை அமர்விற்கு பரிந்துரைத்தது. ஆதார் வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பு செல்லுபடியாகும். பண மசோதா எது என்பதை விவரிக்கவில்லை என்று நீதிமன்றம் கவனித்தது.


2019 முதல் : 2019 தீர்ப்பிலிருந்து, ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கு நிலுவையில் உள்ளதால், பல்வேறு வழக்குகளில் பண மசோதா பிரச்சினையை தீர்ப்பதை நீதிமன்றம் தவிர்த்து வருகிறது. இந்த வழக்குகளில் பணமோசடி தடுப்பு சட்டத்தின்  (PMLA) கீழ் அமலாக்க இயக்குநரகத்தின் அதிகாரங்களுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. அங்கு பிரிவு 45-ன் கீழ் கடுமையான ஜாமீன் நிபந்தனைகள் பண மசோதா (நிதிச் சட்டம், 2018) மூலம் அறிமுகப்படுத்தப்பட்டன மற்றும் ஒன்றிய அரசின் தேர்தல் பத்திரத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. பண மசோதா வழியைப் பின்பற்றி ஒன்றிய அரசு கடந்த பத்தாண்டுகாலமாக பல்வேறு சட்டங்களை  இயற்றியது.

Original article:

Share: