சிறப்பு மாநில அந்தஸ்து பெரும்பாலும் அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது. சிறப்பு மாநில அந்தஸ்தின் (special category states (SCS)) நிகர நன்மைகளை ஒரு மாநிலம் அடைய முடியும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. அனுமதிக்கப்பட்ட திட்டங்களின் கீழ் நிதியை முழுமையாகவும் முறையாகவும் பயன்படுத்துவதன் மூலம் இதைச் செய்யலாம். கூடுதலாக, இந்த நன்மைகளைப் பெறுவதற்கு இருக்கும் வாய்ப்புகளை மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சிறப்பு மாநில அந்தஸ்து என்ற கருத்து 1969இல் அறிமுகப்படுத்தப்பட்டது. நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் திட்டக் கமிஷன் அதை அறிமுகப்படுத்தியது. இது நேர்மறையான தலையீட்டின் கருவியாக இருந்தது. அதன் நோக்கம் ஒரு சில மாநிலங்களுக்கு அதிக திட்ட உதவியை ஒதுக்கீடு செய்வதாகும். தேசிய வளர்ச்சி கவுன்சில் (National Development Council (NDC)) மூலம் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்கள் அவற்றின் இருப்பிடம் மற்றும் சமூக-பொருளாதார காரணிகளால் சவால்களை எதிர்கொண்டன. நாட்டில் சமச்சீர் பிராந்திய வளர்ச்சியை அடைவதே முக்கிய குறிக்கோளாக இருந்தது. ஆரம்பத்தில், மூன்று மாநிலங்கள் மட்டுமே இந்த நிலையைப் பெற்றன. இந்த மாநிலங்கள் ஜம்மு காஷ்மீர், அசாம் மற்றும் நாகாலாந்து. பின்னர், அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் சிறப்பு அந்தஸ்தைப் பெற்றன. உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்திற்கும் இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.
தேசிய வளர்ச்சி கவுன்சில் காட்கில் சூத்திரத்தைப் (Gadgil formula) பயன்படுத்தி மாநிலங்களுக்கு உதவி செய்தது, இது மக்கள் தொகை மற்றும் பொருளாதார பற்றாக்குறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இது 30% நிதியை சிறப்பு அந்தஸ்து மாநிலங்களுக்கு ஒதுக்கியது. 1969 இல், நிதி ஆணையம் (Finance Commission (FC)) ஜம்மு காஷ்மீர், அசாம் மற்றும் நாகாலாந்து ஆகியவற்றை சிறப்பு அந்தஸ்து மாநிலமாக ஆக நியமித்தது. இந்த மாநிலங்கள் பட்ஜெட் பற்றாக்குறையை நிர்வகிக்கவும், வரி விநியோகத்திற்கான அளவுகோல்களை அமைக்கவும் இந்த சூத்திரத்தை நிதி ஆணையம் (Finance Commission (FC)) பயன்படுத்தியது. 1969 இல் ஐந்தாவது நிதி ஆணையம் (Finance Commission (FC)) முதல் சிறப்பு மாநில அந்தஸ்து அதிக சலுகைகளைப் பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களுக்கான 60% அல்லது 75% மானியத்துடன் ஒப்பிடும்போது, மத்திய நிதியுதவி திட்டங்களில் 90% நிதியை சிறப்பு மாநில அந்தஸ்து மாநிலத்திற்க்கு வழங்குகிறது, மீதமுள்ள 10% கடனாக வழங்குகிறது.
கலால் (excise) மற்றும் சுங்க வரிகளில் சிறப்பு அந்தஸ்து மாநிலங்களுக்கு குறிப்பிடத்தக்க சலுகைகள் வழங்கப்பட்டன. வருமான வரி (excise), கார்ப்பரேட் வரி (corporate tax) ஆகியவற்றிலும் சலுகைகளைப் பெற்றனர். திட்டக் கமிஷனின் உயர் மத்திய திட்ட உதவியின் மூலம் உண்மையான பலன் கிடைத்தது. திட்டக் கமிஷனுக்குப் பதிலாக நிதி ஆயோக் வந்ததில் இருந்து இவற்றில் பெரும்பாலானவை இப்போது வரலாறாக உள்ளன. மத்திய அரசின் நிதியுதவித் திட்டங்களைத் தவிர, அனைத்து மையத்திலிருந்து மாநில நிதிப் பரிமாற்றங்களும் இப்போது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் மூலம் செய்யப்படுகின்றன.
இந்த மாற்றங்களுக்குப் பிறகும், சமீபத்திய ஆண்டுகளில் சிறப்பு மாநில கோரிக்கை அதிக அளவில் உள்ளது, குறிப்பாக பிராந்திய கட்சிகள் இதைப் பேரம் பேசும் கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பிரச்சினையை அமைதியாக தீர்க்க வேண்டும்.
பிப்ரவரி 2014ல், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், ராஜ்ய சபாவில், தெலங்கானாவைத் தவிர்த்து ஆந்திரா ஐந்து ஆண்டுகள் "சிறப்பு வகை திட்ட உதவியை" பெறும் என்று அறிவித்தார். ஆந்திரப் பிரதேசத்தை கூடுதல் சிறப்பு மாநிலமாக அறிவிக்காமல், தேவையான நிதி நடவடிக்கைகள், வரிச்சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கை அரசாங்கம் சிறப்பு மாநில அந்தஸ்தை பெறுவதில் ஒரு புதிய மாநிலத்தை சேர்ப்பதை ஆதரிக்கிறதா என்ற கேள்விகள் எழுப்பப்படுகிறது. அதன் அரசியல் சாசனம் சரியானதா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதன் நிதி சலுகைகள் குறித்தும் கேள்வி எழுப்புகின்றனர். கூடுதலாக, ஒரு பத்தாண்டிற்க்குப் பிறகு பதவியேற்கும் அரசாங்கத்தின் மீது ஒரு பிரதமரின் அறிவிப்பு கட்டுப்படுகிறதா என்பதில் சந்தேகம் உள்ளது.
14வது நிதிக் கமிஷன் (Finance Commission) தனது பரிந்துரைகளில் சிறப்பு அந்தஸ்து மாநிலங்களை சேர்க்கவில்லை. இருப்பினும், இந்த மாநிலங்களின் கோரிக்கைகள் மற்றும் வேறுபட்ட கண்ணோட்டங்களை அது முழுமையாக ஆய்வு செய்தது. இது இருந்தபோதிலும், வடகிழக்கு மாநிலங்கள், உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்திற்கு கணிசமான அளவு நிதி ஒதுக்கீடு செய்வதன் மூலம் முன்னுரிமை அளித்தது. மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய திட்டங்களுக்கான அதிக மானியங்கள் மற்றும் குறைக்கப்பட்ட செலவுப் பகிர்வு ஆகியவற்றை ஆணையம் பரிந்துரைத்தது. கூடுதலாக, இந்த மாநிலங்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களை எதிர்கொள்ள சிறப்பு மானியங்களுக்கு ஒப்புதல் அளித்தது.
பதினைந்தாம் நிதி ஆணையம் சிறப்பு அந்தஸ்து மாநிலங்களை குறிப்பிடவில்லை. இதற்குப் பதிலாக, எட்டு வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் உத்தராகாண்ட் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் (ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாறிய பிறகு தவிர்க்கப்பட்டது) ஆகிய மலைசார் மாநிலங்களுக்கு, அவை மொத்த மக்கள் தொகையில் 5.2% மட்டுமே பெற்றுள்ளதால் பகிர்ந்தளிக்கப்பட்ட வரிகளில் 10.5 சதவீத பங்கு ஒதுக்கப்பட்டது. இது தெற்குப் பிராந்திய மாநிலங்களுக்கும் மேற்குப் பகுதிகளுக்கும் குறைந்த பங்குகளை பெற வழி வகுத்தது.
14வது மற்றும் 15வது நிதிக் ஆணையங்கள் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் பகுதிகளைக் கொண்ட மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தன. இது இந்த மாநிலங்கள் வசூலிக்க கூடிய வரிகளில் அதிக பங்குகளைப் பெற வழிவகுத்தது. முந்தைய நிதி ஆணையத்துடன் ஒப்பிடுகையில், 15வது நிதி ஆணையம் குறிப்பாக கணிசமான காடுகளை கொண்ட மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தது. கூடுதலாக, 15வது நிதி ஆணையம் பழைய 1971 மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பதிலாக 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பைக் கருத்தில் கொண்டது, சிறப்பு வகை மாநிலங்களில் இமாச்சலப் பிரதேசத்தைத் தவிர, அதிக மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்களைக் கொண்ட மாநிலங்கள் பயனடைகின்றன.
இந்தியாவில், ஜனநாயகத்தின் அரசியல் தன்மை மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் செயல்பாடு காரணமாக, சிறப்பு மாநில அந்தஸ்து பட்டியலில் மாற்றங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. திட்டக் கமிஷன் முன்பு சிறப்பு மாநில அந்தஸ்தை அடையாளம் காண ஒரு குழுவை பரிந்துரைத்தது. ஆனால், இப்போது அதை புதுப்பிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
ஆர்வமுள்ள மாநிலங்களின் முதலமைச்சர்கள் அரசியல் காரணங்களுக்காக, அதன் ஒட்டுமொத்த பலன்களை சரியாக மதிப்பிடாமல், சிறப்பு வகை அந்தஸ்தை அடிக்கடிக் கோருகின்றனர். அனுமதிக்கப்பட்ட திட்டங்களிலிருந்து நிதியை முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலமும், மத்திய அரசின் நியாயமான தொகுப்பின் ஆதரவுடன் இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதன் மூலமும் ஒரு மாநிலம் இதே போன்ற பலன்களை அடைய முடியும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. 2018 ஆம் ஆண்டில், தேசிய ஜனநாயக அரசாங்கம் இராஜதந்திர தலையீடுகள் மற்றும் இலக்கு பட்ஜெட் ஒதுக்கீடுகள் மூலம் உள்ளடக்கிய வளர்ச்சியைத் (inclusive development) தொடர வலியுறுத்தியது, செலவுகள் மற்றும் நன்மைகள் தொடர்பான வெளிப்படைத்தன்மையை நோக்கமாகக் கொண்டது.
அமிதாப் குண்டு அகமதாபாத்தில் உள்ள எல் ஜே பல்கலைக்கழகத்தில் எமரிட்டஸ் பேராசிரியராக உள்ளார். பட்டாச்சார்ஜி, முன்னாள் இயக்குநர் ஜெனரல், இந்தியாவின் தலைமை கணக்குத் தணிக்கையாளர், அருண் ஜெட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்தில் பேராசிரியர்.