வார்த்தைகளின்படி செயல்படுங்கள்

     மணிப்பூர் நெருக்கடியை இறுதியாக ஒப்புக்கொண்ட பிரதமர் மோடி, இப்போது  அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மணிப்பூர் நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் மௌனம் குறித்து காங்கிரஸ் எம்.பி பிமோல் அகோய்ஜாம் கேள்வி எழுப்பிய ஒரு நாள் கழித்து, திரு நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பதிலளித்தார். ஒரு வருடத்திற்கு முன்னர் தொடங்கிய இனக்கலவரம் குறித்து மோடி தனது முதல் கணிசமான கருத்தை தெரிவித்ததுடன் அதற்கான நெருக்கடியை ஒப்புக்கொண்டார். சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கவும், நிறுவனங்களின் இயல்பான செயல்பாட்டை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திரு நரேந்திர மோடி கூறினார். மாநிலத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், அரசியல் சார்ந்த சர்ச்சைகளுக்கு அப்பால் நாம் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கடந்த காலங்களில் இதேபோன்ற சம்பவங்களை காங்கிரஸ் கையாண்டதை   விமர்சித்தார். இதனுடன், மணிப்பூரில் கடுமையாக வேரூன்றிய சமூக நெருக்கடிகளைச் சுட்டிக்காட்டினார். இந்த சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களிடையே பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வுகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியதன் முக்கியத்துவத்தை நரேந்திர மோடி வலியுறுத்தினார். மேலும், இதுபோன்ற நெருக்கடிகளின் போது மௌனமாக இருப்பது அவரது வழக்கமான நடைமுறையாக இருந்தாலும், இந்த முறை அவரது பதில் தாமதத்தின் வெளிப்பாடாக இருந்தாலும் மணிப்பூரின் நெருக்கடிக்கு தீர்வு காண உதவும்.


நரேந்திர மோடியின் கூற்றுகள் ஒருபுறம் இருந்தாலும் மணிப்பூர் மாநிலம் இயல்பு நிலைக்கு மாற வெகு தொலைவில் உள்ளது. ஜெனீவாவைத் தளமாகக் கொண்ட உள்நாட்டு இடப்பெயர்வு கண்காணிப்பு மையத்தின் (Internal Displacement Monitoring Centre) அறிக்கையின்படி, கடந்த ஆண்டு, தெற்காசியாவில் இடம்பெயர்ந்த 69,000 பேரில் 67,000 பேர் மணிப்பூரைச் சேர்ந்தவர்கள் ஆவார். இம்பாலில் உள்ள குக்கி-சோ குடியிருப்பாளர்கள் (Kuki-Zo residents) மற்றும் சூரசந்த்பூரில் உள்ள மெய்தேய் குடியிருப்பாளர்கள் (Meitei residents) இன்னும் வீடு திரும்ப முடியவில்லை. இந்த சமூகங்களைச் சேர்ந்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் சட்டமியற்றுபவர்கள் கூட இடம்பெயர்ந்துள்ளனர். இது நிர்வாகம், நலன் சார்ந்த, பள்ளி மற்றும் சுகாதார சேவைகளை பாதிக்கிறது. 


"கிராம பாதுகாப்புப் படைகள்" (village defence squads) என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஆயுதமேந்திய கண்காணிப்பாளர்கள், பள்ளத்தாக்கு மற்றும் மலைப்பகுதிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஜிரிபாம் (Jiribam) போன்ற அமைதியான மாவட்டங்களுக்கு இந்த மோதலை பரப்புகின்றனர். மாநில அரசின் பணம் மத்திய நிறுவனங்களால் மாற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு-355 ஆனது விதிக்கப்பட்டாலும், இந்த நடைமுறை மத்திய ஆட்சியை மீண்டும் உருவாக்கியுள்ளது. N. பிரேன் சிங் தலைமையிலான அரசாங்கத்தின் "ஒத்துழைப்புடன்" (cooperation) இது நடந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகிறார். இருப்பினும், சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த அவரது சொந்தக் கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கை திரு. N. பிரேன் சிங்குக்கு இல்லை. இதன் விளைவாக, தலைமை மாற்றம் இல்லாமல் சமாதான முன்னேற்றம் அல்லது நல்லிணக்கத்திற்கான எந்தவொரு வாய்ப்பும் கடினமாக உள்ளது. இருப்பினும், திரு மோடி அல்லது திரு அமித் ஷா அத்தகைய மாற்றங்களைச் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. குழப்பம் மற்றும் நெருக்கடியை ஒப்புக்கொள்வது மணிப்பூரின் பிரச்சினைகளைத் தீர்க்காது. மேலும்,  அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கொண்டு வரக்கூடிய மாற்றங்களை முன்னெடுத்துச் செல்ல முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.



Share: