அணுசக்திக்கு முன்னுரிமை கொடுங்கள் -அமித் ராய்பால்ராம் பார்கவா

     அணு சக்திக்கு முன்னுரிமை வழங்குவது சுத்தமான மற்றும் செலவு குறைந்த  ஆற்றல் பாதுகாப்பைப் பலப்படுத்தும்.


மே 18-அன்று, இந்தியா 1974-ஆம் ஆண்டு அமைதியான அணு வெடிப்பு (Peaceful Nuclear Explosion (PNE)) தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்த நிகழ்வு அணுசக்தியில் இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. எதிர்காலத்தில் முக்கியமான தாக்கங்களைக் கொண்ட ஆற்றல் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை நோக்கிய இந்தியாவின் பயணத்தை இது காட்டுகிறது.  


ஆரம்பத்தில், அணுசக்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் இந்தியா பல சவால்களை எதிர்கொண்டது. 1998-ல் அதன் இரண்டாவது அணுகுண்டு சோதனைக்குப் பிறகு, மேற்கத்திய நாடுகள் அணுசக்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்த தடைவித்தன. இந்தத் தடைகள் அணுசக்தி திட்டத்தின் வளர்ச்சியை கடுமையாக பாதித்தது.  


இருப்பினும், இந்தத் தடைகள் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது.  கட்டுப்பாடுகள் இந்திய விஞ்ஞானிகளுக்கு உத்வேகத்தை அளித்தது. அவர்கள் இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களைக் கொண்டு அணுஉலை தொழில்நுட்பத்தை உள்நாட்டில் உருவாக்கி, இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்தனர். 


இன்று, இந்தியா 22 மின் உலைகளை இயக்கி வருகிறது. இவற்றில் பதினெட்டு அழுத்தப்பட்ட கன நீர் (heavy water reactors) உலைகள்  உள்ளன. சில உலைகள் நீண்ட காலமாக இயங்கி வருகின்றன.


இந்தியா மேலும் 19 அணு உலைகளை உருவாக்கி வருகிறது. இந்த புதிய உலைகள் 2031-ஆம் ஆண்டளவில் நாட்டின் அணுசக்தி உற்பத்தி திறனை சுமார் 22 ஜிகாவாட் உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.  


முதலீடுகளை அதிகரிக்கவும் 


புதிய அரசாங்கம், அணுசக்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கடுமையான வெப்ப அலைகள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டிய அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகின்றன. சுற்றுச்சூழலுக்கும், பொருளாதார நிலைத்தன்மைக்கும், பொது சுகாதாரத்துக்கும் சுத்தமான எரிசக்தியில் முதலீடு செய்வது முக்கியம்.


தூய்மையான எரிசக்திக்கான இந்தியாவின் உந்துதல் 2000-களின் முற்பகுதியில் இருந்து வேகத்தைப் பெற்றது. 2070-க்குள் நிகர-பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை இலக்காகக் கொண்டு இந்தியா செயல்பட்டு வருகிறது. இந்த அர்ப்பணிப்பு மக்கள்தொகை மற்றும் பொருளாதாரத்தின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய சுத்தமான எரிசக்தியின் அவசியத்தை வலியுறுத்துகிறது. 2024-ஆம் ஆண்டுக்குள் 193 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனையும், 2030-ஆம் ஆண்டுக்குள் 500-ஜிகாவாட்டையும் எட்டுவதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது. 


இருப்பினும், தொழில்துறை வளர்ச்சி மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கு அத்தியாவசியமான அடிப்படை மின் தேவையை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியால் மட்டும் பூர்த்தி செய்ய முடியாது. அணுசக்தி ஒரு செலவு குறைந்த மற்றும் முக்கியமான மாற்று சக்திகளில் ஒன்றாகும். சூரிய மின்சக்தி போன்ற சில புதுப்பிக்கத்தக்க மின்சக்திகளுடன் ஒப்பிடும்போது, ​​உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் ஒரு யூனிட்டுக்கு குறைவான செலவாகும். 


சிறிய மட்டு உலைகள் (modular reactors) மற்றும் உருகிய உப்பு உலைகள் (molten salt reactors) போன்ற புதுமையான தொழில்நுட்பங்கள் அணு ஆற்றல் திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துகின்றன. 


இந்தியாவின் பெரிய தோரியம் இருப்பு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. நீண்ட கால ஆற்றல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தோரியத்தை யுரேனியம்-233-ஆக மாற்றுவதற்காக 500 மெகாவாட் திறன் கொண்ட வேகமான பிரீடர் உலைகளில் (fast breeder reactor) நாடு செயல்பட்டு வருகிறது. தோரியம் பயன்பாட்டிற்காக மேம்பட்ட கனரக நீர் உலையை உருவாக்குவதும் முக்கியமானது.


இருப்பினும், இந்த தொழில்நுட்பங்கள் விரிவடைய நேரம் தேவைப்படுகிறது 2070-ஆம் ஆண்டிற்கு இன்னும் நாற்பது ஆண்டுகள் உள்ள நிலையில், மேம்பட்ட அணுசக்தி தொழில்நுட்பங்களை விரைவுபடுத்துவது முக்கியமானது. புதிய அமைச்சரவை, உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், நீண்ட கால நிலைத்தன்மை மற்றும் காலநிலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இந்தியாவின் அணுசக்தி முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.


இந்தியாவின் அணுசக்தி முன்னேற்றம், சவால்களை சமாளித்து தன்னிறைவை அடைவதற்கான தேசத்தின் திறனைக் காட்டுகிறது. எதிர்கால எரிசக்தி பாதுகாப்பு மற்றும் காலநிலை பின்னடைவுக்கு, நாம் நமது வளங்களைப் பயன்படுத்தி அணுசக்தி தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். அணுசக்தியில் முதலீடு செய்வது நிலையான மற்றும் வளமான எதிர்காலத்திற்கு அவசியம்.


ராய் இந்தியாவின் தேசிய அறிவியல் அகாடமியின் துணைத் தலைவராகவும், பார்கவா தேசிய அறிவியல் அகாடமியின் தலைவராகவும் உள்ளார். 



Share: