குறைந்த கார்பன் காலநிலை நெகிழ்திறன் வளர்ச்சியைப் பற்றிய ஒரு சட்டம் -நவ்ரோஸ் கே. துபாஷ், ஆதித்யா வலியாதன் பிள்ளை, ஷிபானி கோஷ்

     காலநிலை சட்டத்தை உருவாக்க எம்.கே. ரஞ்சித்சிங்கின் தீர்ப்பு பயன்படுத்தப்பட வேண்டும். இந்த சட்டம் இந்திய சூழலுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.


 இந்திய உச்ச நீதிமன்றம் சமீபத்தில் எம்.கே. ரஞ்சித்சிங் மற்றும் பிறர் vs யூனியன் ஆஃப் இந்தியா (M.K. Ranjitsinh and Others vs Union of India.)  வழக்கில் வழங்கிய முக்கிய தீர்ப்பில், “காலநிலை மாற்றத்தின் பாதகமான தாக்கங்களிலிருந்து விடுபட்டுவதற்கான உரிமை”  வாழ்வதற்கான உரிமை மற்றும் சமத்துவத்திற்கான உரிமை ஆகியவற்றிலிருந்து பெறப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டது. இந்த நாளிதழின் முந்தைய கட்டுரையில், "காலநிலை உரிமை மற்றும் இந்தியா அதை எவ்வாறு செயல்படுத்த முடியும்" (ஜூலை 1, 2024) என்ற தலைப்பில், இந்தியாவில் காலநிலைச் சட்டத்தை நிறுவுவது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் விவாதித்தோம், ஆனால் இந்த உரிமை எப்படி என்ற முக்கியமான கேள்வியையும் எழுப்புகிறது.  


முன்னதாக, காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க தேவையான முறையான அணுகுமுறைக்கு நீதித்துறை தலையீடுகள் போதுமானதாக இருக்காது. எனவே, காலநிலை சட்டத்திற்கு வலுவான வழக்கு உள்ளது. ஆனால், அது இந்திய சூழலுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது புதிய அரசாங்கத்திற்கு ஒரு வாய்ப்பையும் சவாலையும் வழங்குகிறது.   


வளர்ச்சித் தேர்வுகளைத் தெரிவிப்பதற்கான சட்டம்


காலநிலை மாற்றத்தின் அபாயங்களைக் குறைப்பதற்கும், அதன் தாக்கங்களை நிவர்த்தி செய்வதற்கும் இந்தியாவைத் தயார்படுத்துவதற்கு, குறைந்த கார்பன் மற்றும் காலநிலை-எதிர்ப்பு நிலையை நோக்கி வளர்ச்சியை மறு-மதிப்பீடு செய்ய வேண்டும். இதை முயற்சிக்கும் எந்தவொரு சட்டமும் நோக்கங்கள் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் வழக்கமான முடிவெடுக்கும் பகுதியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். காலநிலை மாற்றம் பாதிக்கப்படக்கூடியவர்களைத் தேர்வு செய்கிறது. எனவே, ஆற்றல் மாற்றம் என்பது சமூக நீதியை முன்னெடுப்பதில் நியாயமானதாகவும் சமத்துவமாகவும் இருக்க வேண்டும்.  


காலநிலைச் சட்டத்தின் கருத்து பெரும்பாலும் இலக்குகளை நிர்ணயம் செய்து அடைவதற்கான மேல்-கீழ் அணுகுமுறையுடன் தொடர்புடையது. இருப்பினும், வளர்ந்து வரும் நாட்டில், இந்த அணுகுமுறை வரம்புக்குட்பட்டது. ஏனெனில், காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வது உமிழ்வைக் கட்டுப்படுத்துவதை விட அதிகமானதாகும்.  


மாறாக, காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கு ஒவ்வொரு வளர்ச்சித் தேர்வு மற்றும் அதன் நீண்ட கால திட்டங்கள் மற்றும் குறைந்த கார்பன் மற்றும் காலநிலை-எதிர்ப்பு எதிர்காலத்துடன் பரிமாற்றங்கள் தொடர்ந்து பரிசீலிக்கப்பட வேண்டும். இதை அடைவதற்கு, காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளிலிருந்து பாதுகாப்பதற்கான உரிமையை சட்டத்தில் நன்கு வரையறுக்கப்பட்ட நடைமுறைகள் மூலம் செயல் படுத்த வேண்டும். இந்த நடைமுறைகள் அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் பொருந்த வேண்டும். நன்கு வடிவமைக்கப்பட்ட நிறுவனக் கட்டமைப்பானது அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் செயல்திட்டம் வகுத்தல், முன்னுரிமை அளித்தல், சரிசெய்தல் மற்றும் மதிப்பீடு செய்யும் போது காலநிலை நடவடிக்கை மிகவும் நம்பகமானதாக இருக்கும். 


பல நாடுகள் ‘கட்டமைக்கப்பட்ட காலநிலை சட்டங்களை’ பரிசோதித்துள்ளன. ஒரு மதிப்பீட்டின்படி, 67 நாடுகள் இதைச் நடைமுறைபடுத்தியுள்ளன. இந்தச் சட்டங்கள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நிர்வாக திறனை உருவாக்குகின்றன. இம்மாதிரியான சட்டங்கள் அரசாங்க அளவிலான இலக்குகளை வரையறுக்கின்றன. அவர்கள் இந்த இலக்குகளை செயல்முறைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளின் தொகுப்பு மூலம் உறுதிப்படுத்துகின்றனர். இந்த முறையானது காலநிலை நடவடிக்கையை அரசாங்கத்தின் கவனத்திற்க்கு கொண்டு வருவதற்கான அறியப்பட்ட மற்றும் பிரபலமான வழியாகும்.  


இருப்பினும், இந்த சட்டங்களில் சில வேறுபாடுகள் உள்ளன. இந்தியாவின் அணுகுமுறை அதன் சூழலுக்கு ஏற்ப அமைய வேண்டும். தனிநபர் உமிழ்வின் குறைந்த அடித்தளத்தில் இருந்து இந்தியா தொடங்குகிறது. இந்த உமிழ்வுகள் உலக சராசரியை விட பாதிக்கும் குறைவானது. இருந்தபோதிலும், இந்தியாவின் உமிழ்வு இன்னும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு டன் கார்பனிலிருந்தும் வளர்ச்சியை அதிகரிப்பதே நோக்கமாக இருக்க வேண்டும்.  இந்தியா காலநிலை விளைவுகளுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியது. எனவே, புதிய சட்டத்தின் இன்றியமையாத அங்கமாக காலநிலை நெகிழ்திறன்தன்மை இருக்க வேண்டும். இரண்டு நோக்கங்களையும் பூர்த்தி செய்வதில், சமூக சமபங்கு பரிசீலனைகள் மையமாக இருக்க வேண்டும். இதன் விளைவாக, இந்தியாவின் சட்டம் குறைந்த கார்பனை எட்டுவதற்கான நோக்கத்தை மற்றும் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும். இது அதிகரித்து வரும் காலநிலை தாக்கங்களுக்கு தாங்கும் திறனையும் உருவாக்க வேண்டும்.  


வளர்ச்சித் தேர்வுகளுக்கு வழிகாட்டும் சட்டம் உள்ளது. குறைவான கார்பனைப் பயன்படுத்தி மற்றும் சவால்களை நன்கு கையாளக்கூடிய சமுதாயத்தை உருவாக்க கவனமாக முடிவெடுப்பதை ஊக்குவிக்க வேண்டும். உதாரணமாக, இந்திய நகரங்கள் விரைவாக வளர்சியடையும் போது, ​​எதிர்கால நகரங்கள் குறைந்த கார்பன் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்க்கும் தன்மை கொண்டவையாக இருக்கும்? இந்த நகரங்களை நாம் எவ்வாறு பாதுகாக்கலாம்? நகர திட்டமிடல் வெள்ள அபாயங்களையும் வெப்ப அலை தாக்கங்களையும் குறைக்கும். வாழ்க்கை முறை மாற்றங்களுடன் மின்சார வாகனங்கள் மற்றும் சிறந்த பொதுப் போக்குவரத்துடன் கூடிய போக்குவரத்தையும் நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


குறைந்த கார்பன் மேம்பாட்டு அமைப்பை நிறுவ வேண்டும் 


ஒரு கட்டமைப்பின் காலநிலை சட்டத்திற்கு முக்கியமான கேள்விகளுக்கு பதிலளிக்க தெளிவான அமைப்பு தேவை. நிலையான எதிர்கால கூட்டுப்பணியில் சில யோசனைகளை பரிந்துரைக்கலாம். ஒரு முக்கிய படி, ஒரு சுதந்திரமான 'குறைந்த கார்பன் மேம்பாட்டு ஆணையம்' (‘low-carbon development commission’) போன்ற ஒரு புதிய அரசாங்க அமைப்பை நிறுவுவதாகும். நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களைக் கொண்ட இந்தக் குழு, குறைந்த கார்பன் வளர்ச்சி மற்றும் கார்பன் குறைப்பை அடைவதற்கான நடைமுறை வழிகளைக் கண்டறிய தேசிய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு உதவும்.   


இந்த ஆணையம் கவனமாக முடிவெடுக்கும் இடமாகவும் இருக்கலாம். இதில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் உள்ளீடு இருக்க வேண்டும். அவர்களின் குறைகளைக் கேட்டு, அவர்களின் யோசனைகளைச் சேர்ப்பதன் மூலம், நீண்ட காலம் நீடிக்கும் கொள்கைகளை நாம் உருவாக்க முடியும். உதாரணமாக, தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி காலநிலை ஆணையத்தின் (South Africa’s Presidential Climate Commission) உறுப்பினர்கள் எவ்வாறு நியாயமான மாற்றத்திற்கு வழிகாட்ட முடியும் என்பதைக் காட்டுகிறது.


காலநிலை நிர்வாகத்தை மேம்படுத்த, வழிகாட்டுதல்களை வழிநடத்துவது, இராஜதந்திர திட்டங்களை உறுவாக்குவது மற்றும் அமைச்சகங்களில் குறைந்த கார்பன் விருப்பங்கள் மற்றும் காலநிலை மாற்றக் கருத்தாய்வுகளை ஊக்குவித்தல் ஆகியவை முக்கியமானதாகும். முக்கிய அமைச்சர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் அடங்கிய ஒரு 'காலநிலை அமைச்சரவையை' (climate cabinet)அமைப்பது, அரசாங்க உத்திகளை  அர்ப்பணிப்புடன் செயல்படுத்துதலே ஒரு சிறந்த தீர்வாகும். உலகளவில், காலநிலை கொள்கைகள் தனிப்பட்ட முறையில் முடிவெடுப்பதன் காரணமாக பெரும்பாலும் தோல்வியடைகின்றன, இந்த அணுகுமுறை தீர்க்கப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 


கூடுதலாக, ஒரு விரிவான அரசாங்க அணுகுமுறையை செயல்படுத்த ஒருங்கிணைந்த வழிமுறைகள் தேவை. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் (Ministry of Environment, Forest, and Climate Change) ஒரு முக்கிய நிலைப்பாட்டை எடுக்கும் அதே வேளையில், மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பு மூலம் அது ஆதரிக்கப்பட வேண்டும். தெளிவான சட்டப்பூர்வ அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் கொண்ட பல்வேறு அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகளைக் கொண்ட குழு, தற்போதுள்ள காலநிலை மாற்றத்திற்கான நிர்வாகக் குழுவை புத்துயிர் அளிப்பது ஒரு நடைமுறை மாதிரியாக செயல்படும். 


கூட்டாட்சி கட்டமைப்பை செயல்படுத்துதல் 


மின்சாரம், விவசாயம், நீர், சுகாதாரம் மற்றும் மண் போன்ற பல முக்கிய பகுதிகள் மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களால் நிர்வகிக்கப்படுவதால், சட்டம் இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும். உள்ளூர் மட்டங்களில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் மிகவும் வலுவாக உணரப்படுகின்றன.


நீதிமன்றத்தின் புதிய காலநிலை உரிமையைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட எந்தவொரு கட்டமைப்பு அல்லது விதிகளும் மாநில அரசாங்கங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். முதலாவதாக, இந்த அரசாங்கங்கள் தேசிய அறிவியல் நிபுணத்துவத்தை அணுகுவதற்கான வழியை சட்டம் உருவாக்க வேண்டும். ஒருவேளை, குறைந்த கார்பன் மேம்பாட்டு ஆணையம் (low-carbon development commission) மூலம். இது வரையறுக்கப்பட்ட உள்ளூர் காலநிலை மாற்ற விளைவின் சிக்கலை தீர்க்கலாம்.  


இரண்டாவதாக, உள்ளூர் முயற்சிகளுக்கு நிதியளிப்பதற்கான வழிகளை இது கோடிட்டுக் காட்டலாம், அதாவது, மத்திய அரசின் நிதியுதவி திட்டங்களை காலநிலை இலக்குகளுக்கு ஏற்ப உருவாக்குவது அல்லது உள்ளூர் காலநிலை பின்னடைவை ஆதரிக்க தேசிய செலவினங்களைக் குறிப்பது போன்றவை.  

      

‘நல்ல ஆரோக்கியத்திற்கான’ பூமியின் உரிமையை மீட்டெடுத்தல்


மூன்றாவதாக, முக்கிய காலநிலை முடிவுகளில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆலோசனை ஏற்க அனுமதிக்கும் ஒருங்கிணைப்பு வழிமுறைகளை சட்டம் நிறுவ முடியும். ஒருங்கிணைக்கப்பட்ட இலக்குகளைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்ட நடுத்தர கால காலநிலை  சட்டங்களை அவ்வப்போது புதுப்பிக்க மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் தேவை ஏற்படலாம். மாநில அரசு குறிப்பிட்ட தீர்வுகளின் வளர்ச்சியை செயல்படுத்த, மாநிலங்கள் தங்களுக்கென சொந்த சட்டங்களை உருவாக்க, அவர்கள் மத்திய அரசில் உள்ளதைப் போன்ற நிறுவனங்களை உருவாக்கலாம். இந்த நிறுவனங்கள் அறிவு, உத்தி, ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு செயல்பாடுகளைக் கையாளும்.


தேசிய அமைச்சகங்கள் (national Ministries) மற்றும் கூட்டாட்சி அமைப்பு (federal structure) முழுவதும் நடவடிக்கையை ஊக்குவிக்கும் முன்மொழியப்பட்ட கட்டமைப்பு சட்டம், நாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரே சட்ட கருவியாக இருக்க முடியாது. கூடுதல் துறை சார்ந்த சட்டங்கள் மற்றும் திருத்தங்கள் தேவைப்படலாம். செயல் திட்டப்பணி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளால் வழிநடத்தப்படும்.


பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களைத் தீர்ப்பதற்கான உரிமையை நிறுவக்கூடிய சட்ட மற்றும் நிர்வாக மாற்றங்களை M.K.ரஞ்சித்சிங் வழக்கு அனுமதிக்கிறது. இந்த சாத்தியத்தை பூர்த்தி செய்ய, இந்தியா தனது தேவைகளுக்கு ஏற்ப காலநிலை சட்டத்தை இயற்ற வேண்டும். இந்தச் சட்டம் இந்தியாவின் வளர்ச்சியை எதிர்காலத்தில் குறைவான கார்பன் உமிழ்வுகள், காலநிலை சவால்களுக்கு சிறப்பாக தயார் செய்து, நீதியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.


நவ்ரோஸ் கே. துபாஷ் Sustainable Futures Collaborative அமைப்பின் மூத்த ஆராய்ச்சியாளர்.  ஆதித்ய வலியாதன் பிள்ளை அவ்வமைப்பில் உறுப்பினராகவும்,  ஷிபானி கோஷ்  வருகை ஆராய்ச்சியாளராகவும் உள்ளார்.  


Share: