நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் அதிக சவால்களை எதிர்கொள்வதோடு, எளிமைப்படுத்தப்பட்ட வரி முறைகளின் மூலம் வருமான வரி விலக்கு கோருகின்றனர்.
பணவீக்கம் குறைந்தாலும், நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருகிறது.
2025-ஆம் ஆண்டு பட்ஜெட்டின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. ரிசர்வ் வங்கியின் ₹2.1 டிரில்லியன் கணிசமான ஈவுத்தொகை பங்களிப்பால் பொருளாதாரத்தின் பலம் வலுப்பெற்று, நிதி நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது.
பிப்ரவரி 1, 2024-அன்று இடைக்கால பட்ஜெட்டில் திட்டமிடப்பட்ட நிதிப் பற்றாக்குறை 5.1%-க்கு பதிலாக, அடுத்த நிதியாண்டு, 2025-26 இறுதிக்குள் 4.5%-ஆகக் குறையலாம். மாதிரி நடத்தை விதிகளின் காரணமாக ஏப்ரல்-மே 2024-இல் அரசாங்க செலவினம் குறைவாக இருந்தது. இதன் விளைவாக மூலதனச் செலவு ஆறு மாதங்களில் குறைந்தது. இந்த காலகட்டத்தில் புதிய திட்டங்களுக்கு நிதி வழங்கப்படவில்லை. ஏப்ரல்-மே மாதங்களில் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதமாக இருந்தது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டின் 7.2%- ஐ விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2025-ஆம் ஆண்டில் $4.339 டிரில்லியன் எட்டும் என்று சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கிறது. இது ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான $4.310 டிரில்லியனை விட அதிகமாகும். 2027-ஆம் ஆண்டிற்குள், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது உலக வளர்ச்சியில் 15% இந்தியா பங்களிக்கிறது.
நடுத்தர வர்க்கத்தினர் சந்திக்கும் துயரங்கள்
பொருளாதாரம் நன்றாக வளர்ச்சியடைந்தாலும், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் அதிக சவால்களை எதிர்கொள்கின்றன. வரி கட்டங்களை (taxable slabs) எளிதாக்குவதன் மூலம் வருமான வரி விலக்கு மற்றும் சுகாதார காப்பீட்டிற்கான கூடுதல் ஆதரவை அவர்கள் விரும்புகிறார்கள். வட்டி விகிதங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நிலையான வைப்பு வட்டியில் மூலத்தில் வரி கழிக்கப்பட்டதிலிருந்து விலக்குகள் உதவியாக இருக்கும். குறைந்த பணவீக்கம் இருந்தபோதிலும், நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருகின்றன. நீண்ட ஆயுட்காலம் மற்றும் வயதானவர்களுக்கு சேமிப்புகள் அழுத்தம் கொடுக்கிறது. குறிப்பாக கூட்டு குடும்பங்களின் சதவீதம் குறைந்து வருகிறது.
பட்ஜெட் நேரம் என்பது பல்வேறு சமூக நலத் திட்டங்களுக்கு நிதியளிக்கும் நேரமாகும். அவற்றில் முக்கியமானவை - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், டிஜிட்டல் இந்தியா, திறன் மேம்பாட்டு திட்டம், தூய்மை இந்திய திட்டம் (Swatch Bharat Mission), பாரத் மாலா (Bharat Mala), பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (PM Gram Sadak Yojana), மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PM Awas Yojana) ஆகியவை 4 கோடி வீடுகள் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு, 3 கோடி புதிய வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சமூகத் திட்டங்களை மேம்படுத்துவது சவாலானதாக இருக்கும். ஏனெனில், பட்ஜெட் ஒதுக்கீடுகள் இந்தத்திட்டங்களுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். உற்பத்தி மற்றும் வளர்ச்சியை அதிகரிக்க குறைக்கடத்திகள், சூரிய ஒளி, மின்சார வாகனங்கள், பச்சை ஹைட்ரஜன், பேட்டரிகள் மற்றும் விமான போக்குவரத்து போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட கால உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்தும் அதே வேளையில் இந்தத் துறைகளுக்கு இடையே பட்ஜெட்டை சமநிலைப்படுத்துவதற்கு கவனமாக திட்டமிடல் மற்றும் முன்னுரிமை தேவை.
அரசாங்க வளங்கள் மீதான கோரிக்கைகளுடன் நிதிப் பொறுப்பை (fiscal prudence) சமநிலைப்படுத்துவதற்கு குழுப்பணி மற்றும் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
எழுத்தாளர் ஹைதராபாத் காப்பீடு மற்றும் இடர் மேலாண்மை துறையில் துணைப் பேராசிரியராக உள்ளார்.