அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை திட்டத்தில் உள்ள சிக்கல்கள் -பினய் பாண்டா

     அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (Anusandhan National Research Foundation’s (ANRF)) நிர்வாகக் குழு  அமைப்பு வழக்கமான அரசாங்கத் துறையைப் போல செயல்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2023-ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (Anusandhan National Research Foundation’s (ANRF)) மசோதா நிறைவேற்றப்பட்டது. இது, குறிப்பாக, இந்தியாவின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முயற்சியின் தொடக்கத்தை குறிக்கிறது. 


2019-ஆம் ஆண்டு தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (National Research Foundation  (NRF)) திட்ட அறிக்கையின் படி, அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை திட்டத்தின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று, மாநிலப் பல்கலைக்கழகங்களில் இருக்கும் ஆராய்ச்சிப் பிரிவுகளை மேம்படுத்துவதாகும். அறிவியலாளர்கள் இந்த மசோதாவை வரவேற்கின்றனர். அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை கல்வியாளர்களுக்கு ஆராய்ச்சிக்கான அதிகாரத்துவத்திலிருந்து அதிக சுதந்திரத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கிறது. மேலும், அதிக நிதியுதவி மற்றும் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. 


தொழில்துறை பிரதிநிதித்துவம் இல்லாதது


அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை ஒரு வருடம் கழித்து, பின்னடைவை சந்தித்துள்ளது. அறக்கட்டளை சமீபத்தில் 15-உறுப்பினர் ஆட்சிக் குழு (Governing Board) மற்றும் 16-உறுப்பினர் செயற் குழுவை (Executive Council) உருவாக்கியது. உதவி மற்றும் ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு  நிறுவனங்களின் பிரதிநிதித்துவம் இல்லாதது பின்னடைவாக மாறியுள்ளது.


உதாரணமாக, அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை பல்கலைக்கழக ஆராய்ச்சி வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 95%-க்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வந்தாலும், வாரியம் மற்றும் நிர்வாகக் குழுவில் இந்த நிறுவனங்களின் உறுப்பினர்கள் யாரும் இல்லை. முதன்மை அறிவியல் ஆலோசகரைத் தவிர, அவர்கள் பொதுவாக இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரம் கொண்ட குழுக்களில் உள்ளவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள். அனைத்து அறிவியல் துறைகளின் செயலாளர்கள் (அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (Department of Science and Technology (DST)), உயிரி தொழில்நுட்பத் துறை (Department of Biotechnology (DBT)), அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறை (Department of Scientific and Industrial Research (DSIR)), புவி அறிவியல், விவசாயம், சுகாதார ஆராய்ச்சி, அணு ஆற்றல், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்), உயர் கல்வி மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, இந்திய அறிவியல் கழகம் மற்றும் டாடா நிறுவனத்தின் அடிப்படை ஆராய்ச்சியின் இயக்குநர்கள், இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர், பிரின்ஸ்டன் கணிதப் பேராசிரியர், அறிவியல் நிர்வாகி மற்றும் பிரவுன் பல்கலைக்கழகத்தின் அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளையின் முன்னாள் இயக்குனர் மற்றும் சிலிக்கான் வேலி தொடர் தொழில்முனைவோர் உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர்.


 எவ்வாறாயினும், தற்போதைய அமைப்பில், குறிப்பாக பல்கலைக்கழக அமைப்பில் உள்ள இடையூறுகளைப் புரிந்துகொண்டு, ஆலோசனை வழங்குவதை காட்டிலும்  விஷயங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பதற்கான வழிமுறைகள் பிரதிநிதிகள் வாரியத்திற்கும் கவுன்சிலுக்கும் தேவை.

 

பல குழப்பங்களை தடுக்க, தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு ஒரு குழுவை நிறுவுவது மிகவும் முக்கியமானது. குழு உறுப்பினர்களிடையே நடைமுறை நிபுணத்துவத்தில் கவனம் செலுத்துவது, தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் முடிவுகள் நன்கு அறியப்பட்டதாகவும், திறமையாகவும், சரியான நேரத்தில் இருக்கும் என்றும் ஆராய்ச்சி சமூகம் மற்றும் பங்குதாரர்களுக்கு உறுதியளிக்க வேண்டும்.


தற்போதுள்ள வாரியத்தில் தொழில் மற்றும் பன்முகத்தன்மையில் இருந்து போதுமான பிரதிநிதிகள்  இல்லை. ஏனெனில், அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை அதன் நிதியில் 70%-க்கும் மேல் அரசு சாரா தொழில்துறையில் இருந்து வருமானம் பெற விரும்புகிறது. அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள இந்திய-அமெரிக்க தொழிலதிபர் ரொமேஷ் டி. வாத்வானி மட்டுமே தொழில்துறை பிரதிநிதி. ஆணையத்தின் ஒரே பெண் பிரதிநிதி அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி துறை செயலாளர் மட்டுமே. இந்தக் குழுவில் இந்தியத் தொழில்துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள், தொழில்முனைவோர் அல்லது ஒன்றிய மற்றும் மாநிலப் பல்கலைக்கழகங்களின் முக்கிய கல்வியாளர்கள் யாரும் இல்லை.


ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான குறைந்த நிதி


ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான நிதியுதவியை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4%-ஆக அதிகரிக்கவும், ஆராய்ச்சியை மேம்படுத்தவும், இந்திய கண்டுபிடிப்புகளை உலக அளவில் போட்டித்தன்மையடையச் செய்யவும் தற்போதைய நிதி பகிர்வு முறையை இந்திய மாற்றியமைக்க வேண்டும். அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை இதை அடைய, இது போன்ற நடவடிக்கைகள் அவசியம். செயல்பாடுகளை போதுமான அளவு பணியாளர்கள்; வலுவான மானிய மேலாண்மை அமைப்பை நிறுவுதல்; மதிப்பாய்வாளர்களுக்கான ஊக்கத்தொகையுடன் உள்ளக சக மதிப்பாய்வு செயல்முறையை செயல்படுத்துதல்; விண்ணப்பித்த ஆறு மாதங்களுக்குள் ஆராய்ச்சி மானியங்கள் மற்றும் மாணவர் கூட்டுறவை  சரியான நேரத்தில் விநியோகிக்க உறுதி செய்வது, நிதியளிப்பு அமைப்பு மற்றும் மானிய நிறுவனங்களில் அதிகாரத்துவ செயல்முறைகளை ஒழுங்குபடுத்துதல், அரசாங்க நிதி விதிகளை (general financial rules (GFR)) கண்டிப்பாக கடைபிடிக்காமல் செலவு செய்வதில் நெகிழ்வுத்தன்மையை அனுமதித்தல்; அரசாங்க மின்-சந்தை (Government e-marketplace (GeM)) வலைத்தளத்த பயன்படுத்தாமல் சேவை பெறுவதை  அனுமதிக்க வேண்டும்.


தற்போதுள்ள அரசு அறிவியல் துறைகளில் இருந்து அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை வித்தியாசமாக செயல்பட வேண்டும். அதன் குழுக்களில் அதிகமான பெண்கள் மற்றும் இளம் தொழில்முனைவோர் உட்பட, பல்கலைக்கழகங்களில் இயற்கை மற்றும் சமூக விஞ்ஞானிகளை பயிற்சி செய்வதில் இருந்து அதிக மாறுபட்ட பிரதிநிதித்துவம் தேவைப்படுகிறது. அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின்  எதிர்கால தலைமை நிர்வாக அதிகாரி தொழில் மற்றும் கல்வித்துறை இரண்டிலும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நிதி திரட்டும் திறன் மற்றும் உலகளாவிய கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்பைப் புரிந்து கொள்ள முடியும். அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு வழக்கமான அரசாங்கத் துறைகளை போல் இல்லாமல், பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலை சிறப்பாக இணைக்கவும் ஒரு முழுமையான மறுசீரமைப்பு தேவைப்படுகிறது.




Share: