டிஜிட்டல் பாரத் நிதியானது (Digital Bharat Nidhi), தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து உருவாக்கப்பட்ட நிதிகளின் தொகுப்பான உலகளாவிய சேவைக்கான பொறுப்பு நிதிக்கு (Universal Service Obligation Fund (USOF)) பதிலாக இருக்கும். இந்த நிதியை திட்டங்களுக்கு பயன்படுத்தாததால் கடந்த காலங்களில் விமர்சனங்களை எதிர்கொண்டது.
கிராமப்புறங்களில் தொலைத்தொடர்பு இணைப்பை அதிகரிக்கும் மத்திய அரசின் புதிய முயற்சியாக, தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications (DoT)) ஜூலை 4 அன்று டிஜிட்டல் பாரத் நிதியை (Digital Bharat Nidhi) செயல்படுத்துவதற்கான வரைவு விதிகளை (draft rules) வெளியிட்டது.
டிஜிட்டல் பாரத் நிதியானது, உலகளாவிய சேவைக்கான பொறுப்பு நிதிக்கு (usof) மாற்றாக இருக்கும். அனைவருக்குமான சேவைக்கான பொறுப்பு நிதி (Universal Service Obligation Fund (USOF)) என்பது 5% அனைத்து சேவைகளுக்கான வரிவிதிப்பு (Universal Service Levy) மூலம் சேகரிக்கப்பட்ட நிதிகளின் தொகுப்பாகும். இந்த வரியானது அனைத்து தொலைத்தொடர்பு இயக்குநர்களுக்கும் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (Adjusted Gross Revenue (AGR)) அடிப்படையில் வசூலிக்கப்படுகிறது.
இந்தத் தொகையானது தொலைதூர மற்றும் கிராமப்புறங்களில் தொலைத்தொடர்பு இணைப்புகளின் விரிவாக்கத்திற்கு நிதியளிக்கப் பயன்படும், தனியார் நிறுவனங்கள் வருமானம் ஈட்டும் சந்தைகளாக இல்லாததால் தங்கள் சேவைகளை வழங்குவதை எதிர்க்க வாய்ப்புள்ளது.
கடந்த மாதம் தொலைத்தொடர்புச் சட்டத்தின் சில பகுதிகளை ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிலையில், அனைவருக்குமான சேவைக்கான பொறுப்பு நிதி (USOF) டிஜிட்டல் பாரத் நிதியாக (Digital Bharat Nidhi (DBN)) இறுதி மாற்றத்திற்கான கூடுதல் விதிகளையும் அது முன்மொழிந்துள்ளது. இது உலகளாவிய சேவைக்கான பொறுப்பு நிதியை விட ஒப்பீட்டளவில் பரந்த நோக்கத்தைக் கொண்டிருக்கும்.
டிஜிட்டல் பாரத் நிதி எப்படி வேலை செய்யும்?
தொலைத்தொடர்பு சட்டத்தின்படி, டிஜிட்டல் பாரத் நிதிக்கான தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பங்களிப்புகள் மற்றும் அனைத்து அரசாங்க வருவாய்களும் முதலில் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியில் (Consolidated Fund of India (CFI)) வரவு வைக்கப்படும். இதில், திரட்டப்பட்ட கடன்கள் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் பெறப்பட்ட பணம் ஆகியவை இதில் அடங்கும். அரசும் இந்த நிதியை தனது செலவுகளுக்கு பயன்படுத்துகிறது.
சேகரிக்கப்பட்ட நிதியை அரசாங்கம் தொடர்ந்து டிஜிட்டல் பாரத் நிதியில் வைப்புத் தொகையாக செலுத்தும்.
டிஜிட்டல் பாரத் நிதியின் (DBN) கீழ் சேகரிக்கப்படும் நிதியானது, குறைந்தளவில் கிராமப்புற, தொலைதூர மற்றும் நகர்ப்புற பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகளை அணுகுதல் மற்றும் வழங்குவதன் மூலம் உலகளாவிய சேவையை ஆதரிக்கப் பயன்படுத்தப்படும். தொலைத்தொடர்பு சேவைகள், தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை இந்த நிதி ஆதரிக்கிறது. இது முன்னோடி திட்டங்களுக்கு (pilot projects) உதவுகிறது மற்றும் இணைப்பை மேம்படுத்த ஆலோசனை சேவைகளை வழங்குகிறது. கூடுதலாக, இது புதிய தொலைத்தொடர்பு சேவைகள், தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளின் அறிமுகத்தை ஊக்குவிக்கிறது.
ஒவ்வொரு சூழ்நிலையையும் தனித்தனியாகப் பார்த்து, டிஜிட்டல் பாரத் நிதி செயல்படுத்துபவர்களுக்கு எவ்வாறு பணம் வழங்குவது என்பதை இந்த நிர்வாகி முடிவு செய்வார். இது அனைத்துப் பணத்தையும், அதில் சிலவற்றையும், செலவினங்களைப் பகிர்ந்துகொள்வது, சந்தை அபாயங்களைக் குறைப்பது அல்லது இடர்களுக்கான மூலதனத்தை வழங்குவது எனப் பொருள்படும்.
வரைவு விதிகளில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் போன்ற குறிப்பிட்ட குழுக்களுக்கு தொலைத்தொடர்பு சேவைகளை சிறந்த முறையில் அணுகுவதற்கு டிஜிட்டல் பாரத் நிதியானது இந்த திட்டங்களுக்கு நிதியளிக்கும்.
டிஜிட்டல் பாரத் நிதி (DBN), போதுமான சேவை இல்லாத கிராமப்புற, தொலைதூர மற்றும் நகர்ப்புறங்களில் மேம்பட்ட தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களின் மூலம் அதன் இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் பிராந்தியங்களில் தொலைத்தொடர்பு சேவைகளை மிகவும் மலிவு விலையில் வழங்குதல், புதுமை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஆதரித்தல், அத்துடன் உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் சொத்துக்களை மேம்படுத்துதல், புதிய தொழில்நுட்பங்களை சோதிக்க ஒழுங்குமுறை சாண்ட்பாக்ஸ்களை (regulatory sandboxes) உருவாக்குதல், தேசிய தரங்களை மேம்படுத்துதல் மற்றும் சர்வதேச தரங்களுடன் அவற்றை சீரமைத்தல், தொலைத்தொடர்பு புத்தொழிலை (telecom start-up) ஊக்குவித்தல் மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்களின் உற்பத்தியை ஊக்குவித்தல் ஆகிய முயற்சிகள் இந்தியா முழுவதும் தொலைத்தொடர்பு இணைப்பை மேம்படுத்துவதற்கான டிஜிட்டல் பாரத் நிதியின் (DBN) உத்தியின் ஒரு பகுதியாகும்.
தொலைதொடர்பு இணையதளத்தை உருவாக்க, இயக்க, பராமரிக்க அல்லது விரிவுபடுத்த டிஜிட்டல் பாரத் நிதியால் நிதியளிக்கப்படும் எந்தவொரு நிறுவனமும் அதை வெளிப்படையாகவும் பாரபட்சமின்றி பகிர வேண்டும் என்று வரைவு விதிகள் கூறுகின்றன. இதன் நிர்வாகியின் அறிவுறுத்தல்களின்படி அவர்கள் இந்த இணை இணைப்புகளின் மூலம் தொலைத்தொடர்பு சேவைகளையும் வழங்க வேண்டும்.
அனைவருக்குமான சேவைக்கான பொறுப்பு நிதியின் ((Universal Service Obligation Fund (USOF)) குறைவான பயன்பாடு
2003 இல் நிறுவப்பட்டதிலிருந்து, அனைவருக்குமான சேவைக்கான பொறுப்பு நிதி (Universal Service Obligation Fund (USOF)) பற்றிய பொதுவான விமர்சனம் அதன் ஒப்பீட்டளவில் குறைவான பயன்பாடாகும்.
தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து 2017 முதல் 2022 வரை அனைவருக்குமான சேவைக்கான பொறுப்பு நிதிக்காக (USOF) அரசாங்கம் 41,740 கோடி ரூபாய் வசூலித்ததாக 2022 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் தகவல் தொடர்புகளுக்கான முன்னாள் அமைச்சர் தேவுசின் சவுகான் பகிர்ந்து கொண்டார். இந்தத் தொகையில் சுமார் 72 சதவீதமான ரூ.30,213 கோடியைப் பயன்படுத்தியுள்ளனர்.
2019-20ல் ரூ.7,962 கோடி வசூலித்தது. ஆனால், இதில் ரூ.2,926 கோடியை மட்டுமே பயன்படுத்தியது. அப்போது அரசு இதன் நிதியை முழுமையாக பயன்படுத்தவில்லை.
2023 நிதியாண்டில், அரசாங்கம் அனைவருக்குமான சேவைக்கான பொறுப்பு நிதியிலிருந்து செலவழித்ததை ரூ.3,010 கோடியாகக் குறைத்தது, இது வரவு செலவு திட்டமாக செய்யப்பட்ட ரூ.9,000 கோடியை விட 200% குறைவாகும். கிராமப்புறங்களுக்கு ஃபைபர் இணைப்பை (fibre connectivity) வழங்குவதை நோக்கமாகக் கொண்ட பாரத்நெட் திட்டத்திற்கு குறைவான பணம் பயன்படுத்தப்படுவதால், இந்த செலவினக் குறைப்பு பெருமளவில் உள்ளது.