அதிநவீன சிகிச்சைகளுக்கான மருத்துவ பரிசோதனை தேவைகளை நீக்குவது, தேவைப்படுபவர்களுக்கு அணுகலை அதிகரிப்பதற்கான முதல் படியாக இருக்கலாம்.
கடந்த வாரம், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள கட்டுப்பாட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஐந்து வகையான மருந்துகளுக்கான மருத்துவ பரிசோதனைகளுக்கான தேவையை ஒன்றியம் விலக்கு அளித்துள்ளது. இதற்கான விலக்கானது, தற்போதைய சிகிச்சையை விட குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை வழங்கும் மருந்துகள், மரபணு மற்றும் செல்லுலார் சிகிச்சை பொருட்கள், அரிதான நோய்களுக்கான மருந்துகள், தொற்றுநோய்களின் போது தேவைப்படும் சிகிச்சைகள், சிறப்பு பாதுகாப்பு நோக்கங்களுக்காக மருந்துகள் ஆகியவற்றிற்கு விலக்கு அளித்துள்ளது. தற்போது, வளர்ந்த நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மருந்து இந்திய சந்தைக்கு வர மூன்று முதல் 15 ஆண்டுகள் வரை ஆகும். இந்த விலக்கு இந்தியாவில் உள்ள மருத்துவர்களுக்கு அல்சைமர் (Alzheimer’s), மேம்பட்ட புற்றுநோய் (advanced stages of cancer) மற்றும் தன்னுடல் தாக்குநோய்களுக்கு (autoimmune disorders) விரைவில் புதிய சிகிச்சைகளைப் பயன்படுத்த உதவும். உலகளாவிய மருந்து நிறுவனங்கள் உள்ளூர் சோதனைச் செலவுகளைச் சேமிக்கும். இது இந்திய நோயாளிகளுக்கு குறைந்த விலைக்கு வழிவகுக்கும். இருப்பினும், தீவிர நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு அதிக நிதிச் சுமையை ஏற்படுத்தாமல், இந்திய மருந்தகங்களில் இந்த மேம்பட்ட சிகிச்சைகள் கிடைப்பதை உறுதிசெய்ய இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும்.
இந்தியா பாரம்பரியமாக அதன் பொதுவான தொழில்துறை மற்றும் விலைக் கட்டுப்பாடு மூலம் மருந்துகளை அணுகக்கூடியதாக மாற்றுவதற்கு வழிமுறை வகுத்துள்ளது. இந்த நடவடிக்கைகள் ஓரளவு பலனளித்துள்ளன. இருப்பினும், மரபணு சிகிச்சை போன்ற மேம்பட்ட மருத்துவ ஆராய்ச்சிகள் நாட்டில் பல நோயாளிகளுக்கு அணுக முடியாததாக இருப்பதற்கு சந்தை வழிமுறைகள் (market mechanisms) மீதான கட்டுப்பாடுகள் ஒரு முக்கிய காரணமாகும். மருத்துவ பரிசோதனை தேவையை தளர்த்திய பிறகு, வணிகத்தை எளிதாக்குவது மற்றும் கண்டுபிடிப்புகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த விவாதங்களை அரசாங்கம் தொடங்க வேண்டும். நோயாளியின் நலன்களை எதிர்மறையாக பாதிக்காமல் மருந்து கிடைப்பதை உறுதி செய்வதே இலக்காக கொண்டிருக்க வேண்டும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை (Ayushman Bharat) விரிவுபடுத்துதல் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு புதிய மருந்துகளை அரசு கொள்முதல் செய்வதைப் பரிசீலித்தல் போன்ற சுகாதார பாதுகாப்பு தொடர்புகளுடன் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருப்பது இதில் அடங்கும்.
சமீபத்திய ஒழுங்குமுறைக்கான தளர்வு நோயாளிகளின் தரவை முன்கூட்டியே அணுகுவதன் மூலம் உள்நாட்டு ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் என்று அரசாங்கம் நம்புகிறது. தொற்று நோய்களின் கவலையை நாடு எதிர்கொள்கிறது. இதற்கு தீர்வு காண, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள மருத்துவ ஆய்வகங்கள் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும். இதனுடன், அரசும் இத்தொழிலை ஆதரிக்க வேண்டும். மருந்து கண்டுபிடிப்பு ஒரு நீண்ட கால செயல்முறை மற்றும் அதிக செலவுகளை உள்ளடக்கியது. காப்புரிமை இல்லாத மருந்துகளை உருவாக்குவதில் நாடு முன்னணியில் இருந்தாலும், புதிய மருந்து மூலக்கூறுகளை உருவாக்குவதில் பின்தங்கியுள்ளது. உயிரி தொழில்நுட்பம் (biotech) மீதான குறைந்த முதலீட்டாளர் ஆர்வம் புத்தொழில்களுக்கான சூழலை கடினமாக்கியுள்ளது. சுகாதாரம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டு மருந்துத் துறையை அதிக போட்டித்தன்மை கொண்டதாக மாற்றுவதற்கான வழிகளை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும்.