சுதந்திரத்தின் (liberty) பாதுகாவலராக உச்ச நீதிமன்றம் -அஷ்வானி குமார்

 மணீஷ் சிசோடியா வழக்கு ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. ஒரு நபரின் சுதந்திரத்தை குறிப்பிட்ட சில நபர்கள் கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


முன்னாள் டெல்லி துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா  நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் உச்ச நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த முடிவு தனிநபர் சுதந்திரங்களின் பாதுகாவலராக நீதிமன்றத்தின் பங்கை எடுத்துக்காட்டுகிறது. அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்  கூறியது. சுதந்திரம் (liberty) என்பது சட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.


சுதந்திரம் என்பது அடிப்படை மற்றும் நிலையான உரிமை என்பதை சுட்டிக்காட்ட நீதிமன்றம் அர்னாப் மனோரஞ்சன் கோஸ்வாமி எதிர் மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் மற்றவர்கள், 2020 (Arnab Manoranjan Goswami vs The State of Maharashtra and Ors) என்ற தீர்ப்பை மேற்கோள் காட்டியது. பிணை என்பது விதியாகவும், சிறை என்பது விதிவிலக்காகவும் இருக்க வேண்டும் என்ற 1977-ஆம் ஆண்டு நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயரின் தீர்ப்பை நீதிமன்றம் மீண்டும் சுட்டிக்காட்டியது. நியாயமான மற்றும் விரைவான விசாரணைக்கான உரிமை அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் வாழ்வதற்கான உரிமையின் (right to life) ஒரு பகுதி என்று நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. சிசோடியாவுக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டது என்று நீதிமன்றம் முடிவு செய்தது.


முந்தைய குறிப்புகள்


அக்டோபர் 30, 2023 முதல் மனிஷ் சிசோடியா மற்றும் ஒன்றிய  புலனாய்வுப் பிரிவுக்கு எதிரான வழக்கில் முதல் உத்தரவைப் பார்த்து நீதிமன்றம் அதன் முடிவுகளை எட்டியது. 56,000 பக்க ஆவணங்கள் மற்றும் வழக்குகளில் தொடர்புடைய 456 சாட்சிகளை ஆய்வு செய்த பின்னர், முன்வைக்கப்பட்ட வாதங்களையும்  நீதிமன்றம் பரிசீலித்தது. இந்த காரணிகள் விசாரணை மற்றும் வழக்கின் முடிவை கணிசமாக தாமதப்படுத்தும் என்று நீதிமன்றம் நம்பியது. இது காஷ்மீர் சிங் (1977), ப. சிதம்பரம் (2020), மற்றும் சதேந்தர் குமார் அண்டில் (2022) ஆகியோரின் விரைவான விசாரணைக்கான உரிமை தொடர்பான பல கடந்தகால தீர்ப்புகளை மதிப்பாய்வு செய்தது. கூடுதலாக, 2024 முதல் ஷேக் ஜாவேத் இக்பால் வழக்கின் தீர்ப்பையும் நீதிமன்றம் பரிசீலித்தது.


மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் தொடர்ந்த வழக்கில், யாரேனும் நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டு, அவர்களின் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டால், அவர்களுக்கு ஜாமீன் வழங்க உரிமை உண்டு என்று  உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த உரிமை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (Code of Criminal Procedure (Cr.PC)) பிரிவு 439 மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act (PMLA)) பிரிவு 45-ல் சேர்க்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


கடுமையான சட்டங்கள் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கடுமையான அமலாக்கம் பற்றிய தற்போதைய கவலைகளை இந்த தீர்ப்பு  நிவர்த்தி செய்கிறது. கடந்த 10-ஆண்டுகளில் 5,000-க்கும் மேற்பட்ட பணமோசடி வழக்குகளில் 40 வழக்குகள் மட்டுமே தண்டனைக்கு உறுதியாகின என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.  ஒன்றிய நிதியமைச்சரின் கூற்றுப்படி, அமலாக்க இயக்குநரகம் 2019-ல் 15 வழக்குகளையும், 2020-ல் 28, 2021-ல் 26, 2022-ல் 34, 2023-ல் 26, மற்றும் 2024-ல் 3 ஜூலை 31 வரை 3 வழக்குகளையும் பதிவு செய்துள்ளது. 2020ஆம் ஆண்டு இந்த வழக்குகளில் ஒருவருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


நமது குற்றவியல் அமைப்பு பெரும்பாலும் நீண்ட கால தாமதங்களை ஏற்படுத்துகிறது. அது சில நேரங்களில் தண்டனையாகவே கருதப்படுகிறது. சிக்கலான நடைமுறைகள் சில நேரங்களில் நீதி வழங்கப்படுவதைத் தடுக்கின்றன. சுஷில் குமார் சென் (1975) மற்றும் ராணி குசும் (2005) போன்ற கடந்தகால நீதிமன்ற வழக்குகளில் இந்தப் பிரச்சினை ஏற்ப்பட்டது. இந்த சூழலை "சட்ட விதிகளால் நீதி பாதிக்கப்படுகிறது" (‘the mortality of justice at the hands of law’ ) என்று நீதிமன்றம் விவரித்தது.



ஒரு எச்சரிக்கை


இந்த தீர்ப்பு அரசியலமைப்பு ரீதியாக சரியானதாக இருந்தாலும், இது தொடர்பான கேள்வியை எழுப்புகிறது. விசாரணை ஆறு முதல் எட்டு மாதங்களில் முடிவடையும் என்று வழக்கறிஞரின்  வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் வைக்க ஒரு காரணமா? அல்லது ஜூலை 3, 2024-க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்ற வழக்கறிஞரின் வாக்குறுதியின் அடிப்படையில் காவலை நீட்டிப்பதா? இந்த அணுகுமுறை வழக்கறிஞரை ஒரு நீதிபதி போல் செயல்பட அனுமதிக்கலாம், இது நியாயமான விசாரணை மற்றும் நீதியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது என்று நீதிமன்றம் தனது கவலைகளை வெளிப்படுத்தியது.


சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான ( civil liberties) உத்தரவாதங்கள் 


நமது அரசியலமைப்புச் சட்டம், ஒருவரின் சுதந்திரம் என்பது வழக்கறிஞரின்  வாதத்தை மட்டும் சார்ந்து இருக்கக்கூடாது என்று கூறுகிறது.  இது பிறப்பு முதல் இறப்பு வரை அனைவருக்கும் இருக்கும் நீதி மற்றும் அடிப்படை உரிமைகளின் வலுவான கொள்கைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். அடிப்படை உரிமைகள் சட்டத்திற்கு மிகவும் முக்கியமானவை,  சட்ட செயல்முறைகள் அல்லது சட்டங்கள் நியாயமற்றவை மற்றும் தேவையான நீதியை வழங்கவில்லை என்றால், அவை மாற்றப்பட வேண்டும். ஒருவரின் சுதந்திரத்தைப் பறிப்பது என்பது அவர்களின் மனித நேயத்தைப் பறிப்பதாகும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. 


அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளில் சுதந்திரத்தைப் பாதுகாப்பது உச்ச நீதிமன்றத்தின் உயர் பொறுப்பாகும். மக்களின் நம்பிக்கையும் உரிமையயும் உறுதி செய்வதில் முக்கியமாக இருந்தாலும், இந்த உரிமைகளைப் பாதுகாப்பதில் நீதிமன்றங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. நீதிபதி ராபர்ட் ஜாக்சன் டக்ளஸ் vs சிட்டி ஆஃப் ஜீனெட்,1943-ல் (Douglas vs City of Jeannette (1943)) கூறியது போல், நீதிமன்றங்கள் மனித உரிமைகளை எவ்வளவு சிறப்பாகப் பாதுகாக்கின்றன என்பது ஜனநாயகத்தின் வலிமையைக் காட்டுகிறது.



சிசோடியாவின் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே அவருக்கு பிணை அளித்ததன் மூலம், பிணைக்கு சட்டப்பூர்வ அடிப்படை இருந்தபோதிலும், உச்சநீதிமன்றம் அதன் முடிவுகள் குறித்த முந்தைய சந்தேகங்களை நிவர்த்தி செய்துள்ளது. எந்தவொரு இழப்பீடும்  இன்றி, குறிப்பிட்ட சில நபர்கள் நீண்ட காலம் காவலில் வைக்கப்பட்டு, அவர்களின் சுதந்திரம், தனியுரிமை மற்றும் கண்ணியத்தை இழப்பதைத் தடுத்தால் இந்த தீர்ப்பு முக்கியமானதாக பார்க்கப்பட்டது. நமது ஜனநாயகத்தை வலுப்படுத்த, தனிப்பட்ட வெறுப்புகளை விலக்கி வைத்துவிட்டு அனைவருக்கும் நீதி மற்றும் கண்ணியத்தை  பாதுகாப்பதில் நாடு கவனம் செலுத்த வேண்டும். இந்த மாற்றம் நமது ஜனநாயகத்தை வலுப்படுத்த உதவும். 


அஷ்வானி குமார் இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஆவார்.



Original article:

Share: