கடந்த மூன்று நாட்களில் திரிபுராவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் இந்த பருவத்தில் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட தீவிர வானிலையால் தூண்டப்பட்ட பேரழிவுகளுக்கு தனித்துவமான ஒற்றுமையைக் கொண்டுள்ளன என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மத்திய-மாநில அரசுகள் இணைந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும்
திரிபுராவின் தலைநகரின் பெரும்பகுதிகளில் நான்கு நாட்களாக இடைவிடாத மழை பெய்து வெள்ளத்தில் மூழ்கியதால் அகர்தலாவில் கிட்டத்தட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மாநிலத்தின் பிற பகுதிகளில், குறிப்பாக அதன் தென் மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன.
இதனால் உயிர் இழப்பு எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். "முன்னறிவிப்பு இல்லாமல் ஏற்பட்ட மழை" மாநில நிர்வாகத்தை சீர்குலைத்து உள்ளது என்பது தெளிவாகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department(IMD)) கணித்திருப்பதால், பாதுகாப்பு மற்றும் வெள்ளத்தின் தாக்கத்தை தணிக்க முன்னுரிமையின்படி மாநில அரசு சரியானதைச் செய்துள்ளது.
50,000க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவசரநிலையை கையாள்வதில் திரிபுராவுக்கு எல்லா உதவியும் செய்யும் என்று ஒன்றிய அரசு உறுதியளித்துள்ளது. ஆனால், பெரும்பாலான மாநிலங்களைப் போலவே திரிபுராவிற்கும் பேரழிவை எதிர்த்துப் போராடுவதற்கு அதிக மத்திய ஆதரவு தேவைப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில் வடகிழக்கு மாநிலம் அனுபவித்த திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் இந்த பருவத்தில் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட தீவிர வானிலையால் தூண்டப்பட்ட பேரழிவுகளுடன் தனித்துவமான ஒற்றுமையைக் கொண்டுள்ளன என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. பருவநிலை மாற்றத்தை எதிர்க்கும் திறன் உருவாக்கத்தில் மத்திய-மாநில அரசுகள் இணைந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விஞ்ஞானிகள் நிலச்சரிவு குறித்து மக்களை எச்சரிக்கும் வழிமுறைகளில் பணியாற்றி வருகின்றனர். உதாரணமாக, ஐஐடி மண்டி, ஹிமாச்சலப் பிரதேசத்தின் கின்னவுர் மற்றும் காங்க்ரா மாவட்டங்களில் மழை, மண்ணின் ஈரப்பதம் மற்றும் ஈரப்பதத்தை அளவிட சென்சார்களை (sensors) நிறுவியுள்ளது. இந்த சாதனங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் நிலச்சரிவுகளை மூன்று மணி நேரத்திற்கு முன்பே கணிக்க உதவும். பேரிடரின் போது மக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல்கள் தெரிவிக்கப்படும்.
மாநில அரசுகளின் காலநிலை செயல் திட்டங்கள் அவற்றின் சூழலியல் விழிப்புணர்வை பிரதிபலிக்கின்றன. ஏனெனில், உள்ளூர் தனியார் அமைப்புகளின் தகவல்களை உறுதியாக நம்ப முடியாது. உதாரணமாக, திரிபுராவின் காலநிலை செயல் திட்டத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பற்றிய சில ஏற்பாடுகள் மட்டுமே உள்ளன. இது ஆறுகளின் வண்டல் நீக்கம் மற்றும் நகர்ப்புற வடிகால் அமைப்புகளை உயர்த்துவதன் கட்டாயத்தைக் குறிக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் வெறும் காகிதத்தில்தான் உள்ளன என்பதற்கு சமீபத்திய வெள்ளம் ஏற்படுத்திய அழிவுகளே சான்று.
வெள்ள நீர் திரிபுராவின் நெல் மற்றும் சணல் விவசாயிகளின் வயல்களை மூழ்கடித்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் சிறு விவசாயிகள். மே மாதத்தில் ரெமல் சூறாவளி மற்றும் ஒரு மாதத்திற்குப் பிறகு மற்றொரு சுற்று வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்திலிருந்து மாநிலத்தின் பண்ணைத் துறை இன்னும் மீளவில்லை. அப்போது திரிபுரா அரசு விவசாயிகளுக்கு நிதி உதவி திட்டத்தை அறிவித்தது. ஆனால் முன்னெச்சரிக்கை அமைப்புகள் அல்லது நகர்ப்புற உள்கட்டமைப்பைப் போலவே, வெள்ளத்தின் அழிவிலிருந்து வயலைக் காப்பாற்றுவதற்கான வழிகளை அரசாங்கங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இந்தப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.