கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட பிறகு, சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறை பெரும் பிரச்சினையாக மாறியது. இந்தியாவில் உள்ள மருத்துவ வல்லுநர்கள் இப்போது அவர்களைப் பாதுகாக்க ஒரு தேசிய அளவிலான மத்திய சட்டம் (Central law) தேவைப்படுவதாகக் கருதுகின்றனர். 2019-ல், ஒன்றிய அரசு ஒரு வரைவு மசோதாவை உருவாக்கியது.
ஆனால், அது இப்பொது வரை நிறைவேற்றப்படவில்லை. வேலையில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை ஒரு தேசிய சட்டம் உறுதிப்படுத்த முடியுமா? ஆர்.வி. அசோகன் மற்றும் சாந்தி ரவீந்திரநாத் இந்த கேள்வியை சி.மாயா நடத்தும் உரையாடலில் விவாதிக்கின்றனர்.
இந்தியா முழுவதும் சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறை ஏன் அதிகரித்து வருகிறது?
ஆர்.வி.அசோகன்: கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதுகலை பயிற்சி மருத்துவர் எதிர்கொண்ட பாலியல் வன்முறை பொதுவாக மருத்துவர்கள் எதிர்கொள்ளும் வன்முறையிலிருந்து மிகவும் கடுமையானது. பொதுவாக, எதிர்பாராத மரணம் நிகழும்போது, உறவினர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் வன்முறை நிகழ்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் கடந்த 20-30 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இந்த வன்முறைகளை தடுக்கும் விதமாக, 25 மாநிலங்கள் மருத்துவ நிபுணர்களைப் பாதுகாக்க சட்டங்களை இயற்றியுள்ளன. ஆனால், பாதுகாக்க சட்டங்கள் இருந்தாலும் மிகக் குறைவான தண்டனைகள் உள்ளன. நோயாளிகளின் அதிக எதிர்பார்ப்புகள், விலையுயர்ந்த மருத்துவச் செலவுகள் மற்றும் மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையில் சரியான தகவல் தொடர்பு இல்லாதது ஆகியவற்றால் வன்முறை உருவாகிறது. இது சிக்கலான பிரச்சனையாக உள்ளது.
சாந்தி ரவீந்திரநாத்: ஒவ்வொரு நாடும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (gross domestic product (GDP)) குறைந்தது 6% சுகாதாரத்திற்காக செலவிட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு (World Health Organization (WHO)) பரிந்துரைக்கிறது. இருப்பினும், சில நாடுகளே இந்த பரிந்துரையை பூர்த்தி செய்கின்றன. இந்தியா 2%-க்கும் குறைவாகவே செலவிடுகிறது. மக்களுக்கு இலவச, எளிதில் அணுகக்கூடிய, சரியான மற்றும் முழுமையான சிகிச்சை தேவைப்படுகிறது. அவர்கள் மருத்துவமனையை சிகிச்சை பெற்றாலும், மன உளைச்சலில் அடிக்கடி கோபப்படுகிறார்கள். இது வழக்கமாக சிகிச்சையை வழங்கும் மருத்துவர் மீது இந்த கோபம் திரும்புகிறது. அவசர சிகிச்சை அறையில் இது அதிகமாக நடக்கிறது.
உலகளவில் சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறை 8% முதல் 38% வரை உள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இத்தகைய வன்முறைகளைக் குறைக்க, சுகாதாரத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் மற்றும் பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்த வேண்டும். இதன் மூலம் மக்கள் மருத்துவமனைக்குச் செல்லும்போது முறையான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்து, இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க முடியும்.
மருத்துவமனைகளில் சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் கூடுதல் பாதுகாப்பு (infrastructure and additional security) நடவடிக்கைகள் உதவுமா?
சாந்தி ரவீந்திரநாத்: பெரும்பாலான மருத்துவமனைகள், குறிப்பாக அரசு மற்றும் மருத்துவக் கல்லூரிகள், செயல்பாடுகளை நிர்வகிக்க பயிற்சியாளர்கள், முதுகலை மாணவர்கள் மற்றும் சூப்பர் தனிக்கூறு மாணவர்களை நம்பியுள்ளனர். இந்த நபர்கள் நீண்ட நேரம் வேலை செய்கிறார்கள் மற்றும் பெரும்பாலும் உணர்வுரீதியான மற்றும் வாய்மொழி பேச்சுகளால் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். சுகாதார அமைப்பை மேம்படுத்த, வசதிகளை மேம்படுத்துவதை விட நாம் அதிகம் செய்ய வேண்டும். மருத்துவர்களின் வேலை நேரத்தை ஒரு நாளைக்கு எட்டு மணி நேரமாக குறைக்க வேண்டும். முதுகலை மாணவர்கள் கற்றுக் கொள்ளவும் உதவவும் இருக்கிறார்கள். தேசிய மருத்துவ ஆணையத்தின் (National Medical Commission (NMC)) சமீபத்திய ஆய்வில், பல முதுகலை மாணவர்கள் மனநலப் பிரச்சினைகளுடன் போராடுகிறார்கள், இது ஒரு முக்கியமான கவலையாக உள்ளது. சமீபத்தில், தேசிய மருத்துவ ஆணையம் ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டது. பெரும்பாலான முதுகலை மாணவர்கள் மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இந்த முடிவு காட்டுகிறது. இது மிகவும் கவனிக்கப்பட வேண்டும்.
ஆர்.வி.அசோகன்: நோயாளி தொடர்பான வன்முறையைக் குறைக்க, மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துதல், பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துதல் மற்றும் அனைத்து மருத்துவமனைகளிலும், குறிப்பாக மருத்துவக் கல்லூரிகளிலும் பாதுகாப்பு நெறிமுறைகளை அமைக்க வேண்டும். தேசிய மருத்துவ ஆணையம் மாணவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களுக்கான பாதுகாப்புக் கொள்கைகளை உருவாக்கி பின்பற்றுமாறு மருத்துவக் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது மிகவும் உதவியாக இருக்கும்.
சாந்தி ரவீந்திரநாத்: ஒவ்வொரு மருத்துவமனையிலும் பாதுகாப்பைக் கண்காணிக்க ஒரு பாதுகாப்புக் குழு இருக்க வேண்டும். மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் அனைவரையும், குறிப்பாக சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
2019-ஆம் ஆண்டில், 'சுகாதார சேவை பணியாளர்கள் மற்றும் மருத்துவ (The Healthcare Service Personnel and Clinical Establishments) நிறுவனங்கள் (வன்முறை மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தடை மசோதா, 2019 ((Prohibition of violence and damage to property,2019) என்ற மசோதாவை ஒன்றிய அரசு உருவாக்கியது. எவ்வாறாயினும், தற்போதைய மாநில மற்றும் ஒன்றியசட்டங்கள் ஏற்கனவே சுகாதாரப் பணியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்குகின்றன. மேலும், மருத்துவமனை பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு முடிவு செய்தது. கேள்வி என்னவென்றால்: வன்முறையில் இருந்து சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாக்க தேசிய சட்டம் (Central Act) தேவையா?
ஆர்.வி.அசோகன்: இப்போது புதிய சட்டத்தை உருவாக்குவது சாத்தியமில்லை என்று அரசாங்கம் கூறுகிறது. COVID-19 தொற்றுநோய்களின் போது, ஹைதராபாத்தில் மருத்துவர்களுக்கு எதிராக நிறைய வன்முறைகள் நடந்தன. இந்திய மருத்துவ சங்கம் “வெள்ளை எச்சரிக்கை” (‘white alert’) விடுத்து மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டம் நடத்தப்பட்டது. மறுநாள், ஒன்றிய உள்துறை அமைச்சர் இந்திய மருத்துவ சங்கத்தினரை சந்தித்தார். மேலும், அதே நாளில், மாலை 4 மணிக்கு, 1897-ன் தொற்றுநோய் நோய்கள் (Epidemic Diseases) சட்டத்தை மாற்றுவதற்கான அவசரச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது விரைவில் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. அப்படியென்றால் தேசிய சட்டம் சாத்தியமில்லை என்று அரசாங்கம் இப்போது கூறுவது ஏன்?
உச்ச நீதிமன்றம், சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்புக்கு தீர்வு காண தேசிய பணிக்குழுவை (national task force) உருவாக்கியுள்ளது. இந்திய மருத்துவ சங்கம் இதை எப்படி பார்க்கிறது?
ஆர்.வி.அசோகன்: தேசிய பணிக்குழு அமைக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். உச்சநீதிமன்றம் அனைத்துக் கட்சிகள், மதங்கள் மற்றும் தொழில்கள் முழுவதும் மதிக்கப்படுகிறது மற்றும் நம்பப்படுகிறது, எனவே இந்த பணிக்குழுவுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இருப்பினும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பாதுகாப்பு, மற்றும் பணிச்சூழல்களில் கவனம் செலுத்துகிறது. ஆனால், வன்முறை நடந்தால் அதை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி நீதிமன்றம் குறிப்பிடவில்லை.
25 மாநில சட்டங்கள் உள்ளன. ஆனால், தண்டனைகள் காலதாமதமாக கிடைக்கிறது. உதாரணமாக, தமிழகத்தில் கடந்த ஆண்டு பல வழக்குகள் இருந்தும் ஒரே ஒரு வழக்கிற்கு மட்டுமே தண்டனை கிடைத்தது. 2023-ல் வந்தனா தாஸ் கொலைக்குப் பிறகு சட்டம் கடுமையாக்கப்பட்ட கேரளாவில், வன்முறை குறைந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களை நிர்வகிக்க கேரளாவும் சாம்பல் நெறிமுறைக் குறியீட்டை (Code of Grey Protocol) அறிமுகப்படுத்தியது. இந்த நெறிமுறையையும் அரசு ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.
சாந்தி ரவீந்திரநாத்: சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறையைக் குறைக்க உதவும் தேசியச் சட்டம் எங்களுக்குத் தேவை. ஆனால், அது மாநிலங்கள் அல்லது நோயாளிகளின் உரிமைகளை குறைக்க கூடாது. ஒரு சட்டம் உதவ முடியும் என்றாலும், இந்த சம்பவங்கள் ஏன் நிகழ்கின்றன என்பதை கொள்கை வகுப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏழை நோயாளிகளுக்கு இலவச, நியாயமான மற்றும் முழுமையான மருத்துவம் கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். இதைச் செய்ய, பொது சுகாதார அமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும், மேலும், வரவுக்கு மீறிய செலவினங்களைக் (out-of-pocket expenditure) குறைக்க வேண்டும்.
ஒன்றிய சட்டம் இயற்றும் முந்தைய நோக்கத்தில் இருந்து ஒன்றிய அரசு ஏன் திரும்பிச் சென்றது என்று நினைக்கிறீர்கள்?
ஆர்.வி.அசோகன்: இந்தியாவில் சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகள் நடப்பதை ஒப்புக்கொள்வதில் அரசுக்கு சிக்கல் இருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், பிரச்சனை பார்ப்பதற்கு தெளிவாக உள்ளது. தனியார் மருத்துவமனைகள் பொதுவாக பாதுகாப்பானவை, ஏனெனில் அவை சிறந்த பாதுகாப்பைக் கொண்டுள்ளன. அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறிய தனியார் மருத்துவமனைகள்தான் அதிக வன்முறையை எதிர்கொள்கின்றன.
நாட்டில் ஏற்கனவே பல சட்டங்கள் உள்ளன. சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க கேரளா 2012-ல் ஒரு சட்டத்தை உருவாக்கியது. ஆனால், அது போதுமானதாக இல்லை. நாங்கள் ஒரு புதிய சட்டத்தைப் பெற்றால், அதைச் செயல்படுத்துவதில் என்ன சவால்களை எதிர்பார்க்கிறீர்கள்?
ஆர்.வி.அசோகன்: 2012- கேரள சட்டம் முதலில் செயல்படவில்லை. சட்டத்திற்கான விதிகள் பின்னர் உருவாக்கப்பட்டன. இந்திய தண்டனைச் சட்டம் (இப்போது பாரதிய நியாய சன்ஹிதா என்று அழைக்கப்படுகிறது) அல்லது குற்றவியல் நடைமுறைச் சட்டம் (தற்போது பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என்று அழைக்கப்படுகிறது) இந்தச் சட்டத்தை ஆதரிக்கவில்லை. இந்த சட்டம் பற்றி போலீசாருக்கு தெரியவில்லை. மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறையைத் தீர்ப்பதற்கு சட்டம் உள்ளது என்பதை நாங்கள் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டியிருந்தது.
வந்தனா தாஸ் கொலைக்குப் பிறகு நிலைமை மாறியது. இப்போது கேரளாவில் வலுவான சட்டம் உள்ளது. இந்தப் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டதில் இருந்து, குறைந்தது நான்கைந்து வன்முறைச் சம்பவங்களில் காவல்துறை விரைவாகச் செயல்பட்டிருக்கிறது. காவல்துறையினரால் முறையாக அமல்படுத்தப்பட்டு, பொதுமக்களால் புரிந்து கொள்ளப்படும் வலுவான சட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆர்.வி. அசோகன். இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் (Indian Medical Association) ஆவார்.