சரக்கு மற்றும் சேவை வரி (goods and service tax (GST)) விகிதத்தை சீரமைத்தல் குறித்து… -ஆஞ்சல் இதழ்

 அமைச்சர்கள் குழு (Group of Ministers (GoM)) உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கூடுதல் தகவல்களைக் கேட்டுள்ளனர். செப்டம்பர் 9-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி ஆணையை கூட்டத்தில் விகிதங்களை சரிசெய்வது குறித்த தங்கள் யோசனைகளை முன்வைக்க இந்தத் தகவலைப் பயன்படுத்துவார்கள்.


சரக்கு மற்றும் சேவை வரியின் (goods and service tax (GST)) கீழ் விகித மாற்றங்கள் தொடர்பாக புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு  முதல் முறையாக வியாழக்கிழமை கூடியது. தற்போதைய வரி விகிதங்களை மாற்ற வேண்டாம் என்று அவர்கள் கூறினர். இந்த சந்திப்பின் போது, ​​சுகாதார மற்றும் ஆயுள் காப்பீட்டுத் தவணைத் தொகைக்கான (life insurance premiums) சரக்கு மற்றும் சேவை வரிவிகிதங்களை குறைப்பது குறித்தும் மாநில நிதி அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த சிக்கலை, பொருத்துதல் குழு (fitment committee) ஆய்வு செய்து வருகிறது.


அமைச்சர்கள் குழு பல்வேறு விவகாரங்களில் கூடுதல் தகவல்களைக் கேட்டுள்ளது. இந்தத் தரவை மதிப்பாய்வு செய்த பிறகு, செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் சரக்கு மற்றும் சேவை வரி ஆணைய கூட்டத்தில் வரி விகிதங்களைச் சரிசெய்வது குறித்த தங்கள் யோசனைகளை அவர்கள் முன்வைப்பார்கள். அதன் பிறகு அமைச்சர் குழு மீண்டும் செப்டம்பர் இறுதியில் கூடும். தற்போதுள்ள சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களை மாற்ற சில உறுப்பினர்கள் விரும்பவில்லை என்று அமைச்சர்கள் குழுவை வழிநடத்தும் பீகாரின் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கூறினார். அவர்கள் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்துள்ளனர் மற்றும் இறுதி முடிவு எடுப்பதற்கு முன் மேலும் விவாதங்களை நடத்துவர்.


‘காப்பீட்டுக்கான ஜிஎஸ்டியை  (insurance goods and service tax) குறைப்பது குறித்து பேசினோம். ஆனால், இன்னும் முடிவு எடுக்கவில்லை’ என்று சவுத்ரி கூறினார். பானங்கள் மற்றும் ஆன்லைன் கேமிங் போன்றவைகளுக்கு வரி குறைப்பு கோரிக்கைகளைப் பெறுவதையும் அவர் குறிப்பிட்டார். இவை மறு ஆய்வு செய்யப்பட்டு, சில பொருத்துதல் குழுவுக்கு அனுப்பப்படும்.


சரக்கு மற்றும் சேவை வரி அடுக்குகள் இப்போது மாறாமல் இருக்க வேண்டும் என்று அமைச்சர்கள் குழுவின் மற்ற உறுப்பினர்களும் ஒப்புக்கொண்டனர். தற்போதைய, சரக்கு மற்றும் சேவை வரியான 5%, 12%, 18% மற்றும் 28% ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை என்று மேற்கு வங்க நிதியமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தை சரக்கு மற்றும் சேவை வரி ஆணையம் மதிப்பாய்வு செய்யும். சாத்தியமான கட்டணக் குறைப்பு பற்றி கேட்டபோது, ​​​​அவர்கள் அதைப் பற்றி மட்டுமே விவாதித்தோம், ஆனால், எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை என்று அவர் கூறினார்.


ஜூன் கூட்டத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், அடுத்த சரக்கு மற்றும் சேவை வரி ஆணைய கூட்டத்தில், பீகார் துணை முதல்வர் தலைமையிலான அமைச்சர்கள் குழு அவர்களின் பணிகள் மற்றும் இன்னும் நிலுவையில் உள்ளவை பற்றிய புதுப்பிப்பை முன்வைக்கும் என்று கூறினார்.


சரக்கு மற்றும் சேவை வரியில் ஐந்து முக்கிய வரி விகிதங்கள் உள்ளன: பூஜ்யம், 5%, 12%, 18% மற்றும் 28%. 28% விகிதத்திற்கு மேல் ஆடம்பர மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு 1% முதல் 290% வரை கூடுதல் இழப்பீடு வரி உள்ளது. இந்த விகிதங்களில் சிலவற்றை இணைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. ஆனால் முறையான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.


மேற்கு வங்காளத்தின் நிதி அமைச்சர் பட்டாச்சார்யா உடல்நலம் மற்றும் ஆயுள் காப்பீட்டுத் தவணைத் தொகை மீதான சரக்கு மற்றும் சேவை வரியை குறைக்கும் யோசனையை குறிப்பிட்டார். இதை பொருத்துதல் குழு (fitment committee) பரிசீலனை செய்யும். காப்பீடு மீதான சரக்கு மற்றும் சேவை வரியை குறைப்பது பற்றி சுருக்கமாக விவாதிக்கப்பட்டதாக பைரே கவுடா குறிப்பிட்டார். 


ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுக் கட்டணங்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த மாற்றத்தைக் கோரி நிதியமைச்சர் சீதாராமனுக்கு பானர்ஜி கடிதம் எழுதினார். ஜூலை 28-அன்று, ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியும் சீதாராமனுக்கு கடிதம் எழுதினார், காப்பீட்டு பிரீமியங்களுக்கு வரி விதிப்பது என்பது வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு வரி விதிப்பது போன்றது என்று கடிதத்தில் குறிப்பிட்டார்.  சரக்கு மற்றும் சேவை வரிக்கு முன்பே காப்பீட்டுக் கட்டண தவணைத் தொகை மீதான வரிகள் இருந்ததாகவும், சரக்கு மற்றும் சேவை வரி  வருவாய் மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளப்படுவதாகவும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பதிலளித்தார்.


செப்டம்பர் 2021-ல் லக்னோவில் நடைபெற்ற சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் அதன் 45-வது கூட்டத்தில் வருவாய் நிலைமை குறித்து ஆலோசித்தது, அதன் பிறகு கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையின் கீழ் விகிதத்தை பகுத்தறிவு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. குழு ஜூன் 2022-ல் ஒரு இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது, சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணங்களில் மாற்றம் மற்றும் தலைகீழ் வரி கட்டமைப்பை திருத்தம் செய்ய பரிந்துரைத்தது.


வரி விகிதங்களில் மாற்றங்களைப் பற்றி விவாதிக்கும் போது, ​​வருவாய் நடுநிலையை பராமரிப்பது ஒரு முக்கிய கவலையாகும். வருவாய் நடுநிலை (Revenue neutrality) என்பது அரசாங்கத்தின் மொத்த வரி வருவாயை நிலையானதாக வைத்திருப்பதாகும். ரிசர்வ் வங்கியின் ஆய்வில், தலைமைப் பொருளாதார ஆலோசகர் 15.3% வருவாய் நடுநிலை விகிதத்தை பரிந்துரைத்தாலும், சராசரி சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் மே 2017-ல் 14.4% ஆக இருந்தது மற்றும் செப்டம்பர் 2019-ல் 11.6% ஆக குறைந்துள்ளது.



Original article:

Share: